காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு

சகோதரர்களே !
நமது மகாநாடானது இவ்விரண்டு நாளாக அதிக உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நடைபெற்று முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு மிகவும் வந்தனம் செலுத்துகிறேன். இனி என்னு டைய முடிவுரையை மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆவலைத் திருப்தி செய்யத்தகுந்ததாக யான் விசேஷமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. இன்று முடிவு பெற்ற தீர்மானங்களைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லி இக்கூட்டத்தைக் கலைப்பதற்கு நீங்கள் எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்.

முதலாவது தீர்மானம் நமது பெரியார் சென்னை ஸ்ரீமான் பி.தியாக ராயரின் மரணத்திற்கு அனுதாபம் காட்டிச் செய்த தீர்மானமாகும். அதைப் பற்றி உங்களுக்கு அதிகமாய் யான் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய தன்னலத் தியாகத்தையும், அவர் தமது சமூகத்திற்காகச் செய்த தொண்டையும் போற்றாதாரில்லை. அவருடைய ராஜீய அபிப்பிராயங்களில் நமக்கும் அவருக்கும் வடகோடி தென்கோடி யென வித்தியாசமிருந்த போதிலும், வரவர அவர்களும் சுயராஜ்யம் அவசியமென்றும், சீக்கிரத்தில் வேண்டுமென்கிற நிலைமையில் வந்துவிட்டார்கள். நாமும் சுயராஜ்யம் பெறுவதற்கு இன்ன இன்ன வேலைகள் செய்தாக வேண்டுமென்று கண்டு பிடித்து விட்டோம். ஆனால், அதை அடைகிற வழியில் மாத்திரம்தான் இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. இவ்வித்தியாசங்கள் ராஜீயத் துறையி லுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் இருந்து கொண்டேதானிருக்கும். சமூக விஷயத்தில் அவருடைய உழைப்பினால் பிராமணரல்லாதார் எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கிறார்களென்பதை மறுக்க முடியாது. பிராமணரல்லா தாரின் சுயமரியாதைக் கதவைத் திறந்துவிட்டவர் அவர்தான். அப்பேர்ப் பட்டவருக்காக நாம் அனுதாபப்படுவது நமது கடமையேயாகும்.

இரண்டாவது தீர்மானம் மகாத்மாவிடம் அன்பு செலுத்துவது என்பதே. மகாத்மா அவர்கள் பிறந்து உயிரோடிருக்கிற இந்தக்காலத்தில் நாமிருந்தோம் என்கிற பெருமையே நமக்குப் பெரிய சொத்தாகும். நம் பின் சந்ததியார்கள் மகாத்மாவை நேரில் கண்ட நமது பெருமையைப் பற்றிப் பேசிப் பெருமையடைவார்கள். இப்பெரியார் வேறு தேசத்தில் பிறந்திருப் பாராயின் அத்தேசம் எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கும். அவர் நமது ராஜீயத் தலைவர் மாத்திரமல்ல, உலகத்திற்கே அவர் ஒரு பெரியவர். அவரைப் பூஜிக்கிறோம், புகழ்கிறோம், அவர் பெயரால் பெருமை பாராட்டிக் கொள்கிறோம். அவர் சொல்லுகிற வேலையை நாம் செய்வதில்லை. ஆனால் நமது சுயநலத்திற்கு அவருடைய பெயரை உபயோகப்படுத்துகிறோம். சட்ட சபைகளுக்கும், °தல °தாபனங்களுக்கும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு நுழையப் பார்க்கின்றோமே தவிர தியாகம் என்று சொன்னால் ஓடி விடுகின்றோம். அவருடைய நிர்மாண திட்டமென்பது தேசத்தின் முன்னேற் றத்திற்கான வேலைகள். அவருடைய அழிவு வேலையென்பது தேசத்திற்குக் கெடுதி தரும் காரியங்களை அழித்தல். இதை நன்றாய் அறிந்திருந்தும் ஆற்றலில்லாத காரணத்தாலும், சுயநலத்தாலும் அலட்சிய மாயிருக்கிறோம். மஹாராஷ்டிர தேசத்தில் மகாத்மாவைக் காங்கிரஸை விட்டு வெளியில் போகும்படி சொல்லுவதும், நூலையும் கதரையும் அவர்கள் அலட்சியம் செய்வதும் அத்தேசத்தில் உள்ள பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டை தான். எப்படியிருந்த போதிலும் மகாத்மாவின் கொள்கைகளால்தான் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்கப் போகின்றது. அன்னார் நீடித்திருக்க கடவுள் அனுக்கிர கம் செய்யப் பிரார்த்திப்பது நமது முக்கிய கடமை.

மூன்றாவது நூல் சந்தாவைப் பற்றியது. ஒவ்வொருவரும் நூல் நூற்க வேண்டு மென்று மகாத்மா சொல்வதின் தாத்பர்யம் ஒவ்வொருவரும் கைத் தொழில் செய்யவேண்டுமென்பது தான். உலகமே தொழிலாளிகளுடையது தான். காங்கிர° தொழிலாளிகளுடையதாகத்தான் இருக்க வேண்டும். இவ்வ ளவு நாள் காங்கிர° பணக்காரர்களுடையதாகவும், ஆங்கிலம் படித்தவர்களு டையதாகவும் இருந்தது. மகாத்மா சொல்லும் சுயராஜ்யம் தொழிலாளிகளுக் குத்தான் வேண்டுமே தவிர ஆங்கிலம் படித்தவருக்கும், பணக்காரர்களுக் கும் அல்ல. அதனால்தான் பேச்சும் பணமும் காங்கிரஸிற்குக்குத் தேவை யில்லையென்று சொல்லிவிட்டார். காங்கிரஸில் சேர இஷ்டப்படுகிற ஒவ் வொருவரும் குறைந்தது அரைமணி நேரமாவது தொழில் செய்ய வேண்டு மென்பது அவருடைய விருப்பம். படித்தவர்களும், பணக்காரர்களும் தொழிலாளிகள் அல்லவானாலும், தங்களுக்குத் தொழிலாளிகளிடத்தில் அன்பு இருக்கின்ற தென்பதைக் காட்டிக் கொள்ளவாகிலும் இதைச் செய்ய வேண்டுவது அவசியமென்று கருதுகிறார். அநேக தொழில்களில் நூல் நூற்பது தற்காலம் நமது தேசத்திற்கு இன்றியமையாதது என்று கருதுகிறா ராகையால் அந்தத் தொழிலையே எல்லோரையும் இப்போது செய்யும்படிச் சொல்லுகிறார். சுயநலக்காரர்களுக்குத் தொழிலாளிகளிடத்திலும், ஏழை களிடத்திலும் எப்படி அன்புவரும்? அப்படிப்பட்டவர்கள் ஒருக்காலும் நூல் சந்தாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏழைகளும், தொழிலாளிகளும் nக்ஷமமடைவதும் சுயநலக்காரர்களுக்கு விரோதமாகத்தானிருக்கும். அதனால் தான் சிலர் நூல் சந்தாவை எதிர்க்கிறார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டானாலும் நூல் சந்தாவை எதிர்ப்பதை நாம் கண்டிக்காமலிருக்க முடியாது. ஒவ்வொருவரும் நூல் நூற்று நூல் சந்தாச் செலுத்தி அங்கத்தின ராவதுதான் நமது தேசத்திற்கும் ஏழைகளுக்கும் தொழிலாளிகளுக்கும் நன்மை செய்ததாகும்.

You may also like...

Leave a Reply