துக்கம் கொண்டாடும் வகை

ஸ்ரீமான் வ.வெ.சு. அய்யர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் அய்யர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என் போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சி யில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள் முன் இருக்கக்கூடாது என்று நினைத்துப் போய்விட்டீர்களோ என்றும், பணம் எவ்வளவு வேண்டுமானா லும் சம்பாதிக்கலாம் ஒரு அய்யரை சம்பாதிக்க முடியுமா என்று வரதராஜுலு நாயுடுவைக் கேட்பது போலவும் எத்தனையோ விதமாய் பெண்கள் ஜாடை பேசுவதுபோல் பேசி மகிழ்கிறார்கள். இதே ஆசாமிகள், இதே சமயத்தில், வரதராஜுலு நாயுடும், ராமசாமி நாயக்கரும் பிரயாணத்தில் ரயில் எங்காவது விழுந்து ஒழிந்து போயிருப்பார்களானால் அப்போது என்ன பேசியிருப் பார்கள்?

டாக்டர் நாயர் லண்டனில் இறந்தபொழுது சிலர் பேசியதையும் பொது ஜனங்கள் நினைத்து பார்க்கட்டும். இவர்கள் இப்படிப் பேசி மகிழ்ந்தால் எதிர் கட்சியிலிருக்கிறவர்கள் என்ன பேசி மகிழ்வார்கள் என்பதையும், இப்படிப் பேசுகிறவர்கள் இறந்தவர்களுக்கு நன்மை செய்கிறார்களா? தீமை செய்கிறார் களா? என்பதையும் யோசித்துப் பார்க்கட்டும்.
குடி அரசு – கட்டுரை – 14.06.1925

You may also like...

Leave a Reply