பேஷ்வா பார்ப்பனர்களை எதிர்த்து திரண்டனர் தலித் – ஒடுக்கப்பட்ட மக்கள்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே வட்டாரத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோரிகாவுன் கிராமத்தில் 1818 ஜனவரி 1ல் நடந்த, மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரின் இறுதிச் சண்டையில், அன்றைய பேஷ்வா பார்ப்பனர் படையை முறியடித்தனர். தலித் பிரிவைச் சார்ந்த மகர் வீரர்கள், கிழக்கிந்திய கம்பெனி படையில் இணைந்து போரிட்டனர். அந்த வெற்றியை ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனிலிருந்து வந்த வணிக நிறுவனம் பிற்காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசே, கம்பெனியின் கீழிருந்த பகுதிகளைத் தன் வசம் எடுத்துக் கொண்டது. பேஷ்வா ஆட்சி என்பது பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த மன்னராட்சி. அவர்களது படைப் பிரிவுகளில் ஆங்காங்கே மஹர் (தலித்) சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள். பேஷ்வா மன்னர் முதலாம் பாஜி ராவ் 1740ல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டிற்கு உள்ளேயும் படைப்பிரிவுகளிலும் மஹர் மக்கள் பல்வேறு அவமதிப்புகளைக் கூடுதலாகச் சந்திக்கத் தொடங்கினார்கள்.கொடூரமான ஜாதிய ஒடுக்குமுறைகள் தடைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தால்...