சேலம் செயலவையில் ‘மதிப்புமிகு வணக்கம்’

29.12.2017 அன்று சேலத்தில் நடந்த திவிக செயலவை கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, தன் உரையினூடே, இனி தோழர்கள் அனைவரும் தலைவர் கொளத்தூர் மணியை சந்திக்கும் போது குறைந்தது ரூ.100/- என நன்கொடை கொடுத்து வணக்கம் வைக்க வேண்டும் என்றும் அது மதிப்புமிகு வணக்கம் என்றும் வேண்டிக்கொண்டார்.

அதன் பின் பேச வந்த சேலம் மாவட்ட பொறுப்பாளர் சூரியகுமார், ரூ.500 கொடுத்து நானே இந்த மதிப்புமிகு வணக்கத்தினை தெரிவித்து ஆரம்பித்து வைக்கிறேன் என்றார். பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் ரூ. 100 கொடுத்தார்.

பெரியார் முழக்கம் 11012018 இதழ்

You may also like...