சூளுரைத்தார், கவிஞர் வைரமுத்து வடமொழி எதிர்ப்போடு தமிழின விடுதலையை முன்னெடுப்போம்
“வடமொழி எதிர்ப்பும் இனவிடுதலை இயக்கமும் மீண்டும் புத்துயிர் பெறச் செய்வோம்” என்று சூளுரைத்தார் – கவிஞர் வைரமுத்து. ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று ஓர் ஆய்வாளர் கருத்தை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, கவிஞர் வைரமுத்துவை பார்ப்பனர்கள் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். எச். ராஜா என்ற பார்ப்பனர், வைரமுத்துக் குடும்பத்தினரை இழிவுபடுத்தினார். அய்யங்கார் பார்ப்பனர்கள், வைரமுத்து, திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திறந்தமேனியுடன் வீதிக்கு வந்து போராடினார்கள். ‘தினமணி’ ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் வைத்தியநாதனுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கம் காட்டி வந்தார் வைரமுத்து. கட்டுரை வாசிப்பு நிகழ்ச்சிகளை பா.ஜ.க.வின் ஊதுகுழலான ‘தினமணி’யே ஏற்பாடு செய்து அந்தக் கட்டுரைகளை முழுமையாக ‘தினமணி’ வெளியிட்டு வந்தது. தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், திருக்குறள் பெருமை பேசினார் என்பதற்காக அவருக்கு தமிழகத்தில் மேடை அமைத்துக் கொடுத்தார் வைரமுத்து. பா.ஜ.க.விடம் வைரமுத்து காட்டிய ‘நேசக்கரம்’ நீண்ட நாள் நிலைக்கவில்லை. ‘ஆண்டாள்’...