திருப்பூரில் ‘நிமிர்வோம்’ நூல் விற்பனை அரங்கிற்குப் பேராதரவு

திருப்பூர் மாவட்ட  கழகம் சார்பாக திருப்பூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’, புத்தக நிலையம் அரங்கு எண்.94 செயல்பட்டது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இளைய சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.

11 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரங்கின் முதல் நாள் விற்பனையைக் கழகப் பொருளாளர் சு. துரை சாமி, அறிவியல் மன்ற அமைப் பாளர் வீ. சிவகாமி,  தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புத்தகத் திருவிழாவின் ஆயத்தப் பணிகளான அரங்கு வடிவமைத்தல், புத்தகங்களைத் தருவித்தல் போன்ற பணிகளில் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், ஆசிரியர் சிவகாமி, மாவட்ட அமைப்பாளர் முத்து, சத்தியமூர்த்தி, சூரி ஆகியோர் கவனித்தனர்.

அரங்கின் விற்பனையை மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, சரசு, பார்வதி, வே. இராமசாமி ஆகியோர். காலை முதல் மாலை வரை புத்தக நிலையத்தின் விற்பனையையும், அரங்கிற்கு வருவோரிடம் கொள்கை உரையாடல்களையும் நிகழ்த்தினர். மாலை வேலைகளில் மாணவர் கழகத் தோழர்கள் கனல்மதி,  தமிழ்ச் செழியன், பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பூர் பதியம் இலக்கிய அமைப்பின் பாரதி வாசன் மகன் மதிவதனன் எழுதிய, ‘தாழப் பறக்கும் வானம்’ என்ற கவிதைத் தொகுப்பின் விற்பனைத் தொகை ரூ.1000/-த்தை புத்தக நிலையத்திற்கே நன்கொடையாக வழங்கியதோடு அல்லாமல் உடன் இருந்து சிறப்பித்தார். வே. இராமசாமி, புத்தக நிலையத்திற்கு தன்னுடைய படைப்புகளின் 10 பிரதிகளை நன்கொடையாக வழங்கினார்.

மொத்த விற்பனை ரூ.51,800/-.  ஆதரவாளர்கள் கொள்கை உணர்வாளர்களிடம் தொடர்புகளை உருவாக்க இந்த அரங்கு மிகவும் உதவியது.

அரங்கிற்கு நன்கொடை வழங்கியவர்கள் : முகில் இராசு – ரூ.2000; நீதிராசன் – ரூ.2000; முத்துக்குமார் – ரூ.2000; இணைய தள விஜயகுமார் – ரூ.1000; பதியம் பாரதிதாசன் – ரூ.1000; பரிமளம் – ரூ.1000; ராமசாமி – ரூ.1000; ஆதிரா, கலை – ரூ.1000; தனபால் – ரூ.500; வெள்ளியங்காடு மு. மணி – ரூ.500

பெரியார் முழக்கம் 15022018 இதழ்

You may also like...