கருஞ்சட்டை பேரணி – கழக தலைவர் அழைப்பு
டிச.23 திருச்சியில *கருஞ்சட்டைப் பேரணி* கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அழைப்பு : அன்பார்ந்த தோழர்களுக்கு, வணக்கம். தந்தை பெரியாரின் 45ஆம் நினைவுநாளை (24.12.1973) முன்னிட்டு வரும் திசம்பர் 23/2018 அன்று திருச்சியில் ‘காவி பயங்கரவாத்த்தை’ வீழ்த்த இலட்சம் பேர் பங்கேற்கும் கருஞ்சட்டைப் பேரணி- மாநாடு நடைபெற உள்ளது. பேரணியையும், மாநாட்டையும் வெற்றிபெற செய்யவேண்டியது நம்முடைய கடமையும், உரிமையும் ஆகும். குறிப்பாக காவி பயங்கரவாதம் தமிழகத்தையும், இந்திய மக்களையும் கார் இருளுக்குள் தள்ளிவிட்டது. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் மனிதனை மனிதன் அடித்துக் கொல்லும் கொடூரமான கொடுங்கோல் ஆட்சியை மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்வும், பிஜேபியும் நடத்திக் கொண்டு இருக்கின்றது. இதற்கு மேலும் பொறுமையாக கடந்து செல்வது. தன்மானமுள்ள தமிழனுக்கு அவமானம். தமிழினத்தை பாதுகாக்க தமிழ் இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டிய தருணம் இது. மேலும் மாக்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய , தமிழ்த்தேசிய, சனநாயக சிந்தனையாளர்கள் ஒரு குடையின் கீழ் திரள...