பெருமாள் மலையில் சட்ட எரிப்பு போராளிகள் வீரவணக்க பொதுக் கூட்டம்

பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு ..பெரியாரியல் தொண்டர்களால் நடந்தேறிய சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற, சிறையிலும்.. சிறைவாசத்திற்குப் பின்னும் ஜாதியொழிப்பு கொள்கைக்காக உயிர்கொடை தந்தப் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் விதமாக தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பொதுக் கூட்டம் பெருமாள்மலையில் 26.11.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் உள்ளரங்குக் கூட்டமாக மாற்றப்பட்டடது. நிகழ்ச்சிக்கு பெருமாள் மலை இராசண்ணன் தலைமை வகிக்க மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலைமதி, இராசிபுரம் சுமதி, பெருமாள் மலை கழக ஆதரவாளர் பாரதிதாசன், புரட்சிகர இளைஞர் முன்னணி அற்புதராஜ் உரைக்குப் பின், பரப்புரைச் செயலாளர்  பால். பிரபாகரன். சட்ட எரிப்புப் போராட்டத்தின் வரலாற்றையும், அச் சமகாலத்தில் நிலவிய ஜாதீயக் கொடுமைகள் குறித்தும் தரவுகளோடு உரையாற்றினார். ஈரோடு மாவட்ட மாணவர்கள் கழகத்தின் சார்பாக  அரங்கம்பாளையம் பிரபு மற்றும் சௌந்தர் பரப்புரைச் செயலாள ருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் வேல்முருகன்,

ப. குமார்,  ஜெயகோபால், ஜெய பாண்டி, பிடல் சேகுவேரா, சத்தியராஜ், தம்பிராஜ்,  செந்தில் குமார், ஜெயபாரதி, ஜீவிதா, வேணுகோபால், பொ.பிரபு, முருகன், இந்தியப் பிரியன், சத்ரு, யாழினி, கமலக்கண்ணன், எழிலன் இறுதியாக தோழர் பி. கிருஷ்ண மூர்த்தி நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.

பெரியார் முழக்கம் 06122018 இதழ்

You may also like...