நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், 17.09.2018 அன்று (திங்கள்) காலை 10 மணியளவில், எடப்பாடி ரோடு காவேரி நகரில், நகரத் தலைவர் தண்டபாணி பெரியாரின் பிறந்தநாள் விழா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காவேரி நகரில் தோழர் பரிமளம் கொடியேற்றினார். பாலம் அருகில், பெரியாரின் பொன்மொழி வாசக பலகையை சஜீனா திறந்து வைத்தார், மீனாட்சி கொடியேற்றினார். பேருந்து நிலையத்தில்  கலைசெல்வி  பொன்மொழி வாசக பலகையை திறந்து வைத்தார்.   கலைவாணி கொடியை ஏற்றினார். அங்கு தோழர்களால் கடவுள் மறுப்பு பாடல் பாடப்பட்டது. பின் நகர காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், தந்தை பெரியாரின் வாசகங்கள் அடங்கிய அட்டை மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது.

தண்டபாணி, செல்வி சைக்கிள் கடையின்  சின்ன நூலகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை ரேணுகா திராவிடமணி திறந்து வைத்தார், இனிப்பு வழங்கப்பட்டது. அங்கு, அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நகரில்  ரேணுகா திராவிடமணி கொடியேற்றினார். கோட்டமேடு பைபாஸில் சந்திரா வாசக பலகையை திறந்து வைத்தார். ஆட்டோ குமார் துணைவியார் கொடியேற்றினார். கம்பன் நகரில் உள்ள தேவி மாதேஷ் இல்லத்தில் தோழர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் கலை அறிவியல் கல்லூரி அருகில் மணியம்மை கழக கொடியேற்றினார், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. கத்தேரி பெரியார் சமத்துவ புரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. முருகாண்டி பெரியாரின் சிலையை சுற்றியுள்ள புற்கள் மற்றும் புதர்களை சுத்தம் செய்து வைத்திருந்தார். திமுக பிரமுகர் கலைச்செல்வன் பொன்மொழி வாசக பலகையை திறந்து வைத்தார். ஊர்வலத்தில்  30 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தோழர்கள் அணி வகுத்து வந்தனர். இரு சக்கர வாகனங்களுக்கு முன், ட்ரம்ஸ் இசைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. நிகழ்வில், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, காளிப்பட்டி பகுதியை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 15112018 இதழ்

You may also like...