Tagged: கண்டன ஆர்ப்பாட்டம்

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 23072016 திருப்பூர்

நாளை 23.07.2016 அன்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ! டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், இக்கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். நாள் : 23.07.2016 சனிக்கிழமை மாலை 4 மணி. இடம் : மாநராட்சி அலுவலகம் முன்பு,திருப்பூர். கண்டன உரை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் துரை.வளவன், மாநில துணைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர் கனகசபை, வழக்கறிஞர் அணிச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை. தோழர் சு.மூர்த்தி. ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக்குழு. தோழர் மா.பிரகாசு, மாவட்ட செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை. நிகழ்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர் கழகம்.

தூத்துக்குடி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் கட்டாய சமஸ்கிருத திணிப்பை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் 8-7-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.பொறிஞர்.சி.அம்புரோசு அவர்கள் தலைமைதாங்கினார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் தோழர்.நாத்திகம் முருகேசனார், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் தோழர் சா.மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தோழர்.அம்புரோசு அவர்கள் தலைமையுரையாற்றினார். அவ்வுரையில் மோடி அரசின் பார்ப்பன இந்துத்துவ போக்கை கண்டித்து பேசினார். தோழர்.அம்புரோசு அவர்களின் உரையை தொடர்ந்து ஆதித் தமிழர் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர்.கண்ணன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். தோழர்.கண்ணன் அவர்களின் உரையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட திவிக துணைத் தலைவர் தோழர்.பால்ராசு அவர்கள் உரையாற்றினார். இதனை தொடர்ந்து தமுமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்.யூசுப் அவர்கள் தமது கண்டன உரையை பதிவு செய்தார். தோழரின் உரையைத் தொடர்ந்து தூத்துக்குடி...

மேட்டுபாளையத்தில் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! நடுவண் அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு 09.07.2016 அன்று மாலை 5 மணிக்கு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமை தாங்கினார், முன்னிலை- கள்ளகரை சுந்தரமூர்த்தி கண்டன உரை- தோழர்கள் நிர்மல்குமார், பன்னீர்செல்வம், சுதாகர் இயற்கை நல் வாழ்வு சங்கம், தோழர்மூர்த்தி தலைவர்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , sdpi நகர தலைவர் பாருக்அப்துல, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய நகர தலைவர் பீர் முகமது, நே்ருதாஸ், கலந்துக்கொண்ட தோழர்கள் கிருஷ்ணன், கணேஷ், இனியவன், அலெக்ஸ்,விஷ்ணுபிரசாந்த், தேவபிரசாத், வசந்தகுமார், தேவா ஆகியயோர் கலந்துகொண்டனர் முருகேஷ் நன்றி தெரிவித்தார்

சமஸ்கிருத திணிப்பை மோடி அரசு கைவிடவேண்டும் – மன்னார்குடி திவிக ஆர்பாட்டம்

மன்னார்குடி ஜூலை 9 மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துக்கள் ஏராளம் இருப்பதாக கூறி, ஐஐடிகளிலும், மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும், சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அலுவல் மொழிகள் பட்டியலில் எட்டாவது மொழியாக சமஸ்கிருதத்தை அறிவித்துள்ளது. இவற்றை கைவிட வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மனிதநேய ஜனநாயகட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜகபர்சாதிக், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் சேக்தாவூத், தொகுதி தலைவர் முகமது அலி தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறுநீலகண்டன், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாடசி சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தொகுதி துணை செயலாளர்...

திருப்பூர் சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் தலைமை தாங்கினார்.கழக பொருளாளர் தோழர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,பல்லடம் நகர தலைவர் கோவிந்த ராசு, பல்லடம் ஒன்றிய தலைவர் சண்முகம்,அகிலன், தனபால்,மாதவன், சங்கீதா,முத்து, ராமசாமி, பரிமளராசன் உள்ளிட்ட தோழர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்,பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமை தாங்கினார். ,அ.முத்துப்பாண்டி மாவட்டச் பொருளாளர், மு.சாமிநாதன் மாவட்ட தலைவர் ,மா வைரவேல் மாவட்ட அமைப்பாளர் ,நன்றியுரை மு சரவணன் நகரச் செயலாளர் ,ஆ.பிரகாஷ் நகரச் தலைவர்,வெங்கட் ,குப்புசாமி மற்றும் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்

சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி 08072016

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! மத்திய மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா திரையரங்க பாலம் அருகில் (நாகநாதர் டீ கடை எதிரில்), நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி தலைமை தாங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி,த.பெ.தி.க,ஆதித்தமிழர் பேரவை,சிந்தனையாளர் கழகம்,புதிய தமிழகம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,மா.பெ.பொ.கட்சி,பெரியார் பாசறை அமைப்புகளை சார்ந்த தோழர்கள் உள்ளிட்ட கழக தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

மத்திய மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும்,மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் 08-.07.2016 அன்று மாலை 4 மணிக்கு ,மயிலாடுதுறை.,சின்னக்கடை வீதி,நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. நகர அமைப்பாளர் G.R..செந்தில் குமார் தலைமை தாங்கினார்.மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் பேராசியர் ஜெயராமன் அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் சபீக் அகமது SDPI கட்சி, அப்துல் கபூர்,மனித நேய மக்கள் கட்சி.சுப்பு.மகேஷ்,தமிழர் உரிமை இயக்கம். வழக்குறைஞர் சங்கர்,கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்.வேலு.குணவேந்தன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்தை கட்டாய மொழி பாடமாக அறிவித்ததை கண்டித்து 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை: தோழர்: ப.திலிபன். வேலூர் மாவட்டம் அமைப்பாளர் தி.வி.க. தோழர்: அய்யனார். தலைமை செயர்குழு உறுப்பினர் தி.வி.க தோழர்: இரா.ப.சிவா. வேலூர் மாவட்ட அமைப்பாளர் தி.வி.க. தோழர்: பாபுமாசிலாமணி. பாவேந்தர் மன்றம் தோழர்: செவ்வேல் தா.ஒ.வி தோழர்: கஜேந்திரன் நன்றியுரை: தோழர்:நரேன்

சென்னை மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியாரியல் சிந்தனையாளர் வாலாசா வளவன்(மா.பெ.பொ.க), தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கரு அண்ணாமலை,தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன்,அன்பு தனசேகர்,மாவட்ட செயலாளட் இரா உமாபதி,வழக்கறிஞர் துரை அருண் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

குமரி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பு அருகிலுள்ள நகராட்சி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்  வே.சதா தலைமை தாங்கினார். தோழர்கள் தமிழ் மதி, சூசையப்பா, நீதி அரசர், தமிழ் அரசன், மஞ்சுகுமார், ஸ்டெல்லா, விஸ்ணு, ஜாண்மதி, மற்றும்கழக தோழர்கள், ஆதரவாளர்கள், மக்கள்அதிகாரம் அமைப்பினர், சமூகநீதிக்கான சனநாயக பேரவை அமைப்பினர், மதிமுகவினர் கலந்துக்கொண்டு மத்திய அரசைக் கண்டித்து எதிர்ப்பு முழக்கம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

உடுமலை சங்கர் படுகொலையை கண்டித்து பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் 25032016

இன்று (25.03.2016) மாலை 5 மணிக்கு பேராவூரணியில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஜாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தோழர் எவிடன்ஸ் கதிர்,தோழர் ஆறு.நீல கண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.

நீண்டகால முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 07.02.2016 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே அரசியலமைச்சட்டம் 161 அய் பயன்படுத்து ! 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அபுதாஹீர் உள்ளிட்ட முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய் ! பேரறிவாளன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய் ! என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மக்கள் கண்காணிப்பகம் தோழர் ஹென்றி டிபேன், தோழர் எவிடன்ஸ் கதிர், தமிழ் தேச மக்கள் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தோழர் புகழேந்தி, சி.பி.அய்( எம்.எல்) மக்கள் விடுதலை தலைவர் தோழர் அருண்சோரி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர் மம

குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தை காரணம் காட்டி சென்னையில் குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை தோழர் உமாபதி, சென்னை மாவட்ட செயலர் இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை நேரம் காலை 10 மணி நாள் 30122015

விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 21122015 மாலை பேருந்து நிலையத்தில் பூங்கா என்ற பெயரில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்க முற்ப்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் சாலை சீரமைப்பு கழிப்பறை வசதி சுகாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாக்ஸ்சிட் கட்சி ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ‎திராவிடர்‬ விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கலந்துகொண்டு திவிக சார்பில் தோழர்கள் பாலமுருகன் மாவட்ட அமைப்பாளர், சிலம்பரசன் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழக பாரி சிவக்குமார் மற்றம் மாவட்ட செயலாளர் பாலாஜி,அமைப்பாளர் தினேஷ், தர்மா, பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்