புனைவுகளை அறிவியலாக்கும் நாட்காட்டி
கோரக்பூர் அய்.அய்.டி. வெளியிட்டுள்ள நாட்காட்டி – போலி அறிவியலை அறிவியலோடு இணைத்து குழப்ப முயற் சிப்பதை படம் பிடிக்கிறது இக்கட்டுரை. ஒரு பிரபல தமிழ் நாளிதழில் இந்திய அறிவுமுறை குறித்த நாட்காட்டி பற்றிப் பாராட்டி ஒரு கட்டுரை வந்திருந்தது. ஐஐடி காரக்பூரில் இயங்கும் நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பாக வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கும் பண்டைய அறிவு குறித்தும் அதனைப் பாராட்டும் விதமாக மேலைநாட்டு விஞ்ஞானிகளின் பாராட்டுக் கருத்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக சொல்ல முயற்சிப்பது, சமஸ்கிருதப் பெருமையும் சமஸ்கிருதம் சார் அறிவு முறையும் இந்தியாவின் உன்னத வரலாறாகக் கூறப்படு கிறது. இவை அனைத்தும் ஆதாரமற்ற புனைவு வகை அறிவு என்பதே முதல் கட்டப் பார்வையாகும். ‘சப்த ரிஷிகள்’ : ஜனவரி மாதத்தை காஸ்யபர், ஜமதக்னி, கௌதமா, பரத்வாஜா, விசுவா மித்திரர், வஷிஷ்டர், அட்ரி உள்ளிட்ட ஏழு ரிஷிகளை சப்த ரிஷிகள் எனக் குறிப்பிடுகிறது. டிசம்பர் மாதத்தை கண் முன்னே...
