சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா
கழகப் போராளி பத்ரி நாராயணன் 15ஆவது நினைவு நாள் ஏப்.30, 2019 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ‘வெளிச்சத்துக்கு வராத தொண்டர்கள்’ விழாவாக நடத்தப்பட்டது. சென்னை இராயப்பேட்டைப் பகுதியை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிய களப் போராளி பத்ரி நாராயணன், சமூக விரோத சக்திகளால் 2004, ஏப். 30 அன்று பட்டப் பகலில் படுகொலைச் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த இராயப்பேட்டை வி.எம். தெரு பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. பல இளைஞர்களை அந்தப் பாதையி லிருந்து விடுவித்து பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லி பெரியார் கொள்கைப் பாதைக்குத் திரும்பியவர் பத்ரி நாராயணன். அப்பகுதியில் அவரால் உருவாக்கிய 120 இளைஞர்களைக் கொண்டுதான் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் 1996, ஜூலை 16ஆம் நாள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி உறுதியேற்றுத் தொடங்கியது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புடன் இணைந்து பார்ப்பனியத்தில் மூழ்கி...