இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!
கறுப்பினப் போராளி, இன விடுதலை இயக்கங்களின் நாயகர், சிறைப் பறவை மண்டேலா, அம்பேத்கர் முடிவெய்திய அதே டிசம்பர் 6 ஆம் நாளில் விடைபெற்றுக் கொண்டுவிட்டார். “வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதியான வழியில்தான் எங்கள் போராட்டங்களை தொடங்கினோம். ஆனால், அரசு வன்முறையை ஏவியது. வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பதால் நாங்களும் எங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொண்டோம். நாங்கள் தேர்ந் தெடுத்தது வன்முறையைத் தானே தவிர, பயங்கரவாதத்தை யல்ல” என்று கூறிய மண்டேலா, பிறகு அந்த வன்முறைப் போராட்டத்தையும் கைவிட் டார். வரலாறாகிப் போன அந்த விடுதலை வீரர் பற்றிய சுருக்கமான வரலாறு இதுதான்: (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்) 18 ஜூலை 1918 அன்று தென்னாப்பிரிக்காவின் வெஸோ என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ரோலிலாலா மண்டேலா. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் காட்லா. பள்ளி ஆசிரியருக்கு ரோலிலாலா வாயில் நுழையவில்லை போல. “இனி உன் பெயர் நெல்சன்” என்று சொல்லி விட்டார். கருப்பின மக்களை...