வரலாறு ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியானது இந்தி

 

மத்திய பா.ஜ.க ஆட்சி இந்தித் திணிப்பை தீவிரமாக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுப் பின்னணியை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களை விளக்குகிறது. இந்தக் கட்டுரை;

கட்டுரையை படிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்தியா “சுதந்திரம்“ பெறும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பே 1946ம் ஆண்டிலேயே அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்? 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக ஒரு அரசியல் கூட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை கிடையாது சொத்து-கல்வி அடிப்படையில் நூற்றுக்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அப்படியே அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது.

இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; 1946ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபை அரசியல்சட்டத்தைதயாரித்து -1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் நிர்ணயசபையின் தலைவர் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக இருந்த இராஜேந்திரபிரசாத் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியிலிருந்து அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்படாத இந்த சட்டத்தில் ஜாதிப் பாதுகாப்பு அடிப்படை உரிமையாக்கப்பட்டதை எதிர்த்த பெரியார் அந்த அரசியல் சட்டப் பகுதிகளை தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை 1957ம் ஆண்டு நடத்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் அரசியல் நிர்ணயசபை சட்டத்துக்கு ஒப்புதல் தந்த நவம்பர் 26ஆம் தேதி ஆகும். அரசியல் நிர்ணயசபை அரசியல் சட்டப் பிரிவுகளை உருவாக்கும் வரைவுக்குழு தலைவர் பதவியை டாக்டர் அம்பேத்கருக்கு வழங்கியது.

அந்தக் குழுவில் முகம்மது சாதுல்லா, கே.எம். முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அம்பேத்கர் மற்றும் முகம்மது சாதுல்லா என்ற ஒரு இஸ்லாமியர் தவிர, வரைவுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் அனைவரும் பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எவரும் இடம் பெறவில்லை. அம்பேத்கர் தனது முற்போக்கு சிந்தனை வழியில் வரைவுகளைத் தயாரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அரசியல் சட்டத்தை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன; அதில் வரைவுக் குழுவிற்கு மட்டுமே அம்பேத்கர் தலைவர்; வரைவுக்குழு உள்ளிட்ட 10 குழுக்களில் இடம்பெற்றவர் கே.எம்.முன்ஷி எனும் பார்ப்பனர்.

அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் நிலை வருமானால், அதை எரிப்பதில் முதல் நபராக நான் இருப்பேன் என்று அறிவிக்கவும் செய்தார் அம்பேத்கர். (“I Dare say that if anybody comes forward to burn the constitution of india, I will be the first person to burn it (மாநிலங்களவை விவாதங்கள் 2-9-1953)

 

தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டம் அதன் முகப்புரையில் “இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பு சபையில் இந்த அரசமைப்பை இயற்றி, அங்கீகரித்து அதனை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்’’ என்று அறிவிக்கிறது. இந்திய மக்கள் ஏற்போடு இந்தச் சட்டம் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான கருத்தைப் பதிவு செய்திருக்கிறது; ‘சுதந்திரம்’ பெற்ற பிறகும்கூட இந்த ‘ அரசியல் சட்டத்துக்கு’ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு ஏதும் நடத்தப் படவில்லை;

இதுவே -அரசியல் சட்டம் உருவாகிய சுருக்கமான வரலாற்றுப் பின்னணி.

இந்தப் பின்னணியோடு இந்தி ஆட்சி மொழியானது குறித்து அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களை இளைய தலைமுறையினர் முன் இக்கட்டுரை முன் வைக்கிறது. கு.ச.ஆனந்தம் எழுதிய மலர்க மாநில சுயாட்சி நூலிலிருந்து இது எடுக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சபையில், கட்சிக் கட்டுப்பாட்டினைக் கடந்து நின்ற ஒரு பிரச்சினை, ஆட்சி மொழிப்பிரச்சினையாகும். காங்கிரஸ் கட்சி சார்ந்த இந்தி வெறியர்களுக்கும் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில், ஆட்சி மொழியைப் பற்றி தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

“இந்தி” வேண்டும் என்ற தீவிரவாதிகளில் கூட, இருவகை இருந்தனர். “இந்தி” தான் வேண்டுமென்றனர் பலர்; “இந்துஸ்தானி” தான் வேண்டுமென்றனர் இன்னெரு பகுதியினர். இந்தியாவின் ஆட்சி மொழி “இந்தியா”? அல்லது “இந்துஸ்தானியா” என்பதைப் பற்றி ஆழ்ந்த கருத்துச் சிக்கல்கள் இருந்தன. (சமஸ்கிருதம்  இந்தி ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என வற்புறுத்தப்பட்டால்

“இன்னொரு நாட்டுப் பிரிவினை தவிர்க்க முடியாததாகி விடும்’’ என டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்றவர்கள் 1948-ஆம் ஆண்டிலேயே அரசமைப்புச் சபையில் வாதிட்டனர். கலந்தது இந்தி, உருது கலந்தது இந்துஸ்தானி) அரசமைப்புச் சபை, தொடக்கத்திலிருந்து இறுதி வரை இந்தி பற்றி விவாதம் வரும் போதெல்லாம் அதன்உறுப்பினர்கள்உணர்ச்சிப்பிழம்பானர்கள். அரசியலமைப்புச் சபை எவ்வகையில் நடைபெற வேண்டும் என்பது பற்றிய “சபை நடைமுறை விதிகளைத்”( Rules of Procedure) தொகுப்பதற்காக ஒரு தனிக் குழு நியமிக்கப்பட வேண்டிய தாயிற்று.

ஆர்.வி.துளேகர், என்ற நிர்ணய சபை உறுப்பினர்

“அந்தக் குழு, இந்துஸ்தானியாலேயே சபை விதிகளை எழுத வேண்டும்.’’ என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அரசியல் அமைப்புச்சபைத்தலைவர்,துளேகரைஇந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுமாறு பணித்தார். அதற்கு துளேகர் அவர்கள் மறுமொழி கூறும் போது,“இந்துஸ்தானியைத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்; அவர்கள் அரசமைப்புச் சபை உறுப்பினராக இருக்கவும் தகுதியற்றவர்கள்” என வாதாடினர்.

“திருத்தம் முறையற்றது” எனத் தீர்ப்புக் கூறி, மேற்கொண்டு அதைப் பொறுத்த விவாதங் களைநடத்தக்கூடாதுஎன்றும்தலைவர்ஆணை யிட்டார். பின்னர் அரசியலமைப்புச் சபை “நடைமுறை விதிகளைப் பற்றிய அறிக்கை” விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. அப்போது மறுபடியும் இந்திப் பிரச்சினை தலை நீட்டியது.

“அரசமைப்புச் சபையின் நடவடிக்கைகள் இந்துஸ்தானியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம்; அந்த இருமொழிகளும் தெரியாதவர்கள் அவர்தம் தாய்மொழியிலேயே பேசுவதற்குத் தலைவர் அனுமதிக்கலாம். அரசமைப்புச் சபையின் அதிகாரப்பூர்வமான ஏடுகள்,குறிப்புகள்,ஆணைகள்முழுவதும்இந்தி, உருதுமற்றும்ஆங்கிலம்ஆகியமும்மொழிகளிலும் இருக்கலாம்.” என நடைமுறை விதிக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், அரசமைப்புச் சபையின் நடவடிக்கைகள் இந்துஸ்தானியில் தான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திலோ அல்லது உருது மொழியிலோ நடைபெறலாகாது எனவும்,இந்தி தெரியாதவர்கள் மட்டும் ஆங்கிலத்திலேயோ அல்லது தாய்மொழியிலேயோ பேசலாம் எனவும் கோரும் ஒரு திருத்தத்தை, திரு. சேத் கோவிந்ததாஸ் கொண்டு வந்தார். அந்தத் திருத்தத்தை முன்மொழிந்து அவர் உரையாற்றும் போது, “காந்தியினுடைய 25 ஆண்டுகால முயற்சிக்குப் பின்னரும் கூடத் தென்னகத்தைச் சார்ந்த வர்கள் இந்துஸ்தானியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தால், அது அவர்கள் குற்றம் தான் என்பதை நான் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

சென்னையைச் சார்ந்த சிலருக்கு இந்துஸ்தானி தெரியாத காரணத்தினல், விடுதலை பெற்ற இந்தியாவிற்குரிய ஓர் அரசமைப்பை உருவாக்கு வதற்குக் கூடியிருக்கும் இறைமை பொருந்திய அரசமைப்புச் சபையில் ஆங்கிலம் தான் கோலாச்சுவது என்று சொன்னால், அது எங்கள் பொறுமையைச்சோதிக்கிறது.”எனக்குறிப்பிட்டு, சேத் கோவிந்ததாஸ் “நமது” அரசமைப்புச் சபையில் இந்தி பேசா மக்களின் “குற்றத்தை” இடித்துக் காட்டினர்.

வரைவு அரசமைப்புச் சட்டத்தின் (Draft Constitution) பேரில் பொது விவாதம் நடைபெறும் போது , இந்திப் பிரச்சினை முழுத் தீவிரத்துடன் மீண்டும் தலையெடுத்தது.உணர்ச்சி கொப்பளிக்கும் பலவிவாதங்கள் நடைபெற்றன. சேத் கோவிந்த தாசும், அவர் குழுவைச் சார்ந்த சில இந்தி ஆதரவாளர்களும், “நாட்டினுடைய ஆட்சி மொழியாக தேவநாகிரி எழுத்தைக் கொண்ட இந்தி தான் அரசியல் அமைப்பில் இடம் பெற வேண்டும்; ஆனால் இடைக்கால ஏற்பாடாக ஆங்கிலமும் தொடரலாம்“ என்றார்கள்.

 

இன்னொரு சாரார், “ தேவநாகிரி மற்றும் உருது எழுத்து வடிவத்தில் உள்ள இந்துஸ்தானியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’’ என்றார்கள். அப்போது இந்திமொழி பேசாத பகுதியைச் சார்ந்தவர்கள், தாங்கள் இந்திக்கு எதிரிகள் அல்லர் என்றும், இந்திமொழி தெரியாத பல கோடி மக்களின் மேல் ஆட்சி மொழி என்ற பெயரால் ஒரே ஒரு மொழியைத் திணிப்பது நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் என்றும் மெத்தப் பணிவோடும் அடக்கத்தோடும் எடுத்தியம்பினர்.

இந்தி ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என வற்புறுத்தப்பட்டால் “இன்னொரு நாட்டுப் பிரிவினை தவிர்க்க முடியாததாகி விடும்’’ என டி.டி.கிருஷ்ணமாச்சாரி (தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நேரு அமைச்சரவையில் நிதியமைச்சராகஇருந்து ஊழல் புகாரில் பதவி விலகியவர்) போன்றவர்கள் 1948-ஆம் ஆண்டிலேயே அரசமைப்புச் சபையில் வாதிட்டனர், “நாட்டுப் பிரிவினை (திராவிட நாட்டுப் பிரிவினை) வேண்டும் என்ற முழக்கத்தைச் செய்பவர்கள், (தந்தை பெரியார் அவர்கள் தலைமையில்) ஒரு பெரும் சக்தியாய் தென்னகத்தில் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கையை நான் செய்ய விரும்புகிறேன்.

நமது முழு வலிவைப் பயன்படுத்தி அப் பிரிவினைச் சக்தியை அடக்க வேண்டுவது நமது கடமை உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த மாண்புமிகு நமது நண்பர்கள், “இந்தி ஆதிக்கத்தை”த் திணிக்க முயற்சிக்கும் மனப் பான்மை எந்த வகையிலும் நமக்கு உதவி புரிவதில்லை. முழு இந்தியா வேண்டுமா? அல்லது இந்தி-இந்தியா மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? அவர்களே முடிவு செய்யட்டும்; இந்த இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அந்த முடிவை அரசமைப்பில் ஏற்றி வைப்பதும் அவர்களுடைய முடிவைப் பொறுத்ததே. நாங்கள் வெளியே தனியே விடப்பட்டால், எங்களது தலையெழுத்தைநொந்து கொண்டுஇனிவரக்கூடியநல்லகாலத்தைநம்பி இருப்போம்“. என ‘நமது’ இந்திய அரசமைப்புச் சபையில் ‘நமது’ (அகில இந்தியத்) தமிழ் தலைவர் ஒருவர், வீரத்தோடு முழங்கி பின்னர், சோகத்தோடு புலம்பினார்.

அந்த நாளிலே கூட தமிழகத்தின் தன்மானத் தலைவரும் சீர்திருத்தச் செம்மலுமான தந்தை பெரியார் அவர்களின் நிழலடியைக் காட்டியே டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள், இந்தி வெறியர்கள் நிரம்பிய அரசமைப்புச் சபையில் “ இந்திஆட்சி மொழி ஆகக் கூடாதுஎனக் கூறித் தம் தன்மானத்தைக் காத்துக் கொண்டார். பெரியார் அவர்களின் தன்மான இயக்கமும், தீவிரமான இந்தி எதிர்ப்பும் இல்லாமல் இருந்திருந்தால், தென்னகத்தைச் சார்ந்த மக்களின் மொழி உரிமைகள் அன்றே முழுமையாகப் பறி போயிருந்திருக்குமன்றோ?

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய விவாதம் 1949-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாளில் நடந்தது. மாநிலச் சட்டமன்ற நடவடிக்கை மொழி பற்றிய பிரச்சினை 1949-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 11-ஆம் நாளில் அரசமைப்புச்சபையில் எழுந்தது. இந்த இரு விவாதங்களிலும் மாநில சுயாட்சி உணர்வும் மொழி உணர்வும் பொங்கி எழுந்தது. எனவே, நாட்டின் “ஒருமைப்பாடு” (?) கருதி அவ்விவாதங்கள் வசதியாகஒத்தி வைக்கப்பட்டு விட்டன. அனந்த சயனம் ஐயங்கார் உட்பட 82 பேர் கையெழுத்திட்டு அரசமைப்புச் சபையில், “தேவநாகிரி எழுத்து வடிவத்தைக் கொண்டஇந்தி மொழிதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டும் என்ற அரசமைப்பு அமுலுக்கு வந்த பின்னர் 10 ஆண்டுக் காலம் வரை, ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாயிருக்கும். அரசின் நடவடிக்கைகளுக்கு, இரு மொழிகளையும் பயன்படுத்திக் கொள்ள நாடாளுமன்றம் பின்னர் சட்டம் இயற்றிக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்காக, எந்த ஒரு வட்டார மொழியையும் ஏற்றுக் கொள்ளலாம்.” என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

சேத் கோவிந்ததாஸ் அவர்களாலும் அதே திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதற்கோர் எதிர்த் திருத்தம் கொடுக்கப் பட்டது.

அதாவது, ‘‘இந்தி மொழி” ஆட்சி மொழியாக இருக்கலாம். ஆனால் அதுகாறும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்ட அரசுக் காரியங்களில் எல்லாம் மேலும் 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஆங்கிலமே பயன்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் நாடாளுமன்றம் எத்துணைக் கால அளவிற்கு ஆங்கிலத்தை நீட்டிப்பு செய்கிறதோ அதுவரைக்கும் ஆங்கிலமே தொடர்ந்து நீடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கத்தினர்களால் வாக்குச் செய்யப்பட்டு அந்த 15 ஆண்டு இடைக்காலத்தில் ஆங்கிலத்துடன் இந்தியையும் அரசு நடவடிக்கைகளில் பயன்படுத்தலாம் என மசோதா நிறைவேறினால் சில குறிப்பிட்ட காரியங்களுக்காக மட்டும் ஆங்கிலத்துடன் இந்தியையும் பயன்படுத்தலாம். எல்லா அரசு நடவடிக்கைகளிலும், அரேபிய எண்களே பயன்படுத்தப்பட வேண்டும்’’.

இந்த எதிர்த் திருத்தத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த, சந்தானம் அவர்களும் தென்னகத்தின் பல உறுப்பினர்களும் சேர்ந்து மொத்தம் 43 பேர்கள் கையப்பமிட்டு அரசமைப்புச் சபையில் கொண்டு வந்தனர். இதில்அவலநிலை என்னவெனில், இந்தி ஆட்சிமொழி என்பதைப் பொறுத்த அளவில் இருசாராரும் ஏற்றுக்  கொண்டனர். ஆனால் ஆட்சி மொழித் தகுதியுடன் ஆங்கிலம் எத்துணை (இடை)க்கால அளவிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பிரச்சினை தான் இதில் மிகுந்து நின்றது. நமது முன்னாள் உள்நாட்டமைச்சர். கோவிந்த வல்லபபந்து அவர்கள் ஆங்கிலத்தை அகற்றுவதற்கு உண்டான கால அளவை நிர்ணயிக்கும் உரிமையை இந்தி மொழிபேசாத மக்களுக்கேவிட்டுவிடலாம் என யோசனை கூறினார்.

அவலநிலை என்னவெனில், இந்தி ஆட்சிமொழி என்பதைப் பொறுத்த அளவில் இருசாராரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஆட்சி மொழித் தகுதியுடன் ஆங்கிலம் எத்துணை (இடை)க்கால அளவிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பிரச்சினைதான் இதில் மிகுந்து நின்றது.

இந்நிலையில் 5-8-1949 ஆம் நாளில் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் “ஆட்சி மொழி” எது என்பதைக் குறிப்பிடாமலேயே, “ மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையில் நடைபெறும் அரசாங்க நடவடிக்கைகளுக்காகவும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்காகவும் “ஒரு மொழி” பயன்படுத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் 15 ஆண்டு காலத்திற்கு மத்திய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையே நடைபெறும் அரசாங்க அலுவல்களிலும் நடவடிக்கைகளிலும் ஆங்கில மே பயன்ப டுத்தப்படலா ம். ஆங்கிலத்தினுடைய இடத்தை, “அந்த மொழி” வகிக்கத் தக்க தகுதியைப் பெறும் வரை மெல்ல மெல்ல, “அந்தமொழி” யும் பயன்படுத்தப்பட வேண்டும்.” என்று அத்தீர்மானம் கூறிற்று.

 

 

அந்த மொழி, எந்த மொழி?

இந்தி மொழி தான்; வேறெந்த மொழி?

இதற்கிடையில் 1949-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6, 7 நாள்களில் அகில இந்திய மட்டத்தில் “தேசிய மொழி அறிஞர்கள் மாநாடு” என்ற ஒரு மாநாட்டை, சேத் கோவிந்ததாஸ் கூட்டினார். பல மொழிகளில் துறை போன வல்லுநர்களை யெல்லாம் அழைத்து அம்மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்வித்ததாகக் கூறி இறுதியில் அம்மாநாடு, இந்தி தான் இந்தியாவின் “தேசிய மொழியாக “(National Language -ராஷ்டிரபாஷா) ஆகவேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியிருப் பதாகவும் அவர் அறிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது, “ உண்மையில் ஆட்சிமொழிப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசாங்கம் நினைத்தால் , நமது அரசமைப்பில் இந்தியைத் தான் ஆட்சிமொழியாக இடம் பெறச் செய்யவேண்டும்.அரசிற்குஅதில்ஐய்மேற்படின், வேண்டுமென்றால் அதற்கொரு பொது ஜன வாக்கெடுப்பும் நடத்தலாம். 100-க்கு 90 மக்கள் இந்தியை ஆதரித்தே வாக்குச் செய்வார்கள்” என்றும் சேத் கோவிந்ததாஸ் மத்திய அரசிற்குச் சவால்விட்டார்.

11-8-1949 ஆம் நாளில் “அரசமைப்புச் சபைக் காங்கிரஸ்கட்சி”ஆட்சி மொழி பற்றி விவாதித்தது. “இந்தியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்“ என அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அதனைச்சார்ந்தபலதுணைப்பிரச்சனைகளில் ஒரு முகமான முடிவு ஏற்படவில்லை.

‘இந்தி ஆட்சி மொழியாக ஆகுமா’ என்ற விவாதம்,1949ஆகஸ்டு22,23,24ஆகியதேதிகளில் தொடர்ந்து நடைபெற்றன. காங்கிரஸ் கமிட்டிக் கூட்டங்களிலும், இந்தி தான் ஆட்சி மொழி என்பதைப் பரவலாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால், ‘ஆங்கிலம் எதுவரை நீடிப்பது?’ என்ற பிரச்சனையில் தான் இறுதி முடிவு ஏற்படவில்லை.

ஆட்சி மொழி பற்றிய விவாதம் அரசமைப்புச் சபையில் நடந்த பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்குகள் 74-க்கு 74 என்று சமமாகப் பிரிந்து நின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது 75 வாக்குகள் இந்திக்கே ஆதரவாகக் கிடைக்கும் என இந்தி வெறியர்கள் கூறினார்கள். காரணம் -அரசமைப்புச் சபைத் தலைவர் , இராசேந்திரப் பிரசாத் அவர்கள் தனக்கிருக்கும் இரண்டாவது வாக்கையும் இந்திக்குஆதரவாகப்போடுவார்எனக்கருதினார். எனினும் சம வாக்குகள் கிடைத்திருப்பதால் சபை அதை நிறைவேற்றவில்லை. அதற்காக முப்பெரும் தலைவர்களைக் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டுமென உறுப்பினர்கள் யோசனை கூறினார்கள்.

 

இறுதியாக, 1949 -ஆம் ஆண்டு செப்டம்பர் 12, 13,14 ஆகிய நாட்களில் அரசமைப்புச் சபையில் ஆட்சி மொழி பற்றிய விவாதம் கட்சிக் கட்டுப்பாட்டினையும் கடந்து நின்று உணர்ச்சி பொங்க மீண்டும் நடைபெற்றது. அரசியல் அமைப்புச்சபை வரலாற்றிலேயே முதன்முறையாக 290 உறுப்பினர்களில் 210 பேர் அரசமைப்புச் சபையில்கூடியிருந்தனர். “இந்தி வேண்டுவோர்”, மற்றும்“இந்தி வேண்டாமென்போர்”ஆகிய இரு தரப்பினரும் இறுதியாக இந்தி விவாதத்திற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே அவரவர் கொரடாக்களை நாடு முழுவதும் அனுப்பி, அரசமைப்புச் சபை உறுப்பினர்களைப் பிடித்து வந்து டெல்லியில் சேர்த்தனர். 300-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் அரசமைப்புச் சபையில் தாக்கல் செய்யப்பட்டன. மொழித் தேசியத்தால் உந்தப்பட்ட உறுப்பினர்கள், தீவிர உணர்ச்சியோடு இயங்கிக் கொண்டிருந்தனர்.

அபுல்கலாம் ஆசாத், இராசேந்திர பிரசாத், பண்டித நேரு போன்ற பெருந் தலைவர்கள், உறுப்பினர்களின் மொழி உணர்வை அரசமைப்புச் சபையில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டு மென்றுஅடிக்கடிஎடுத்துக்கூறினர்கள். ஆனால் உறுப்பினர்களின் மொழித் தேசிய உணர்விற்குத் தடைபோட அவர்களால் முடியவில்லை.

ஆட்சிமொழி பற்றிய விவாதம் 12.09.1949, 13.09.1949 ஆகிய இருநாட்களிலும் தொடர்ந்து நடந்தேறியது. தமிழகத்தைச் சேர்ந்த, கோவை. இராமலிங்கம் செட்டியார் அவர்கள் வடபுலம் தென்னகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது, “இந்தி பேசும் மக்கள் தங்கள் ஆதிக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று மீண்டும் நான் வேண்டிக் கொள்கிறேன்… தென்னகம் மனமுடைந்து போயிருக்கிறது. விடுதலையையும், தன்னுரிமைகளையும் பெற்று விட்டதாக இங்குள்ளவர்கள் உணர்கிறார்கள். ஆனால், தென்னகத்தில் அந்த உணர்வு தென்படவில்லை.

நாட்டின் வடகோடியிலுள்ள தலைநகருக்கு நாங்கள் வந்தால் இந்த நாட்டுப் பகுதிக்கு, முற்றிலும் அயல் நாட்டவர்களைப் போல நாங்கள் உணர்கிறோம். நாம் எல்லாரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணமும் இந்த நாட்டிலிருப்பதெல்லாம் நமக்கும் சொந்தமானவை என்ற மனப்பான்மையும் இந்த முழுநாடே நமது நாடு என்ற உணர்வும் எங்களுக்கு ஏற்படவில்லை. தென்னகத்தைச் சார்ந்தவர்களும் நாட்டுப் பணிகளோடு தொடர்பு கொண்டவர்கள் தான் என்ற உணர்வினைத் தென்னகத்திற்கு உணர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டா லொழிய, தென்னக மக்கள் திருப்தியடைய மாட்டார்கள். ஒரு கசப்புணர்ச்சி நிலவுகிறது. அது எதில் கொண்டு போய் விடும் என்று என்னால் தற்போது சொல்வது எளிதல்ல’’ என்று தென்னகத்தின் உண்மை நிலையைப் படம் பிடித்துக்காட்டினார்.

14-09-1949-ஆம் நாள் மாலை 5 மணிக்கு ‘இறுதி வாக்கெடுப்பு’ நாள். இதற்கிடையில், அன்று மாலைப் பொழுதில் ஆட்சி மொழி பற்றிஇரு வேறு பிரிவினர்க்குமிடையில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனால் அரசமைப்புச் சபையை 30 மணித்துளிகள் ஒத்தி வைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. எனவே, அன்று மாலை 6 மணிக்கு மீண்டும் சபை கூடியது. இந்தி வேண்டும் என்பாருக்கும் ஆங்கிலம் தொடர வேண்டும் என்பாருக்கும் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் தரப்பட்ட பல திருத்தங்கள் அரசமைப்புச் சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. வாக்கெடுப்பும் நடைபெற்றவில்லை. இறுதியில் “இந்தியும்’’ அரியணை ஏறிவிட்டது. அந்தச் சமரசத்தின் சாரம் தான் இன்றைய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ம் பகுதியின் 343 முதல் 351 வரை உள்ள சட்டவிதிகளாக வரையப்பட்டன.

அரசியலமைப்புச் சபையில் ஆட்சி மொழியைப் பற்றி நடைபெற்ற இத்துணை நடவடிக்கைகளும் இந்தி ஆட்சி மொழி ஆவதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வதற்காக நடைபெற்றவை யல்ல. இந்தி தான் ஆட்சிமொழி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஆங்கிலம் எதுவரை நீடிக்க வேண்டும் என்பதில் தான் கருத்து வேற்றுமைகள். அதனை முடிவெடுக்கத் தான் இத்துணை நிகழ்ச்சிகளும், கோரிக்கைகளும் திருத்தங்களும், அரசமைப்புச் சபையில் நடைபெற்று முடிந்தன. இந்தி பற்றிய அரசியலமைப்புச் சபை விவாதம் வாக்கெடுப் பில்லாமல் சமரசமாய் முடிந்த பின்னர், அரசமைப்புச் சபைத் தலைவரான பாபு இராசேந்திர பிரசாத் ,“பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நமது வரலாற்றிலேயே முதன் முறையாக இப்போது தான் இந்திய நாடு முழு வதிலும் எல்லா அரசு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்து வதற்காக ஒரே மொழியை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்’’ என அகம் மகிழ்ந்து, முகம் மலர்ந்து கூறினார். இந்தியத் துணைக் கண்டம் முழுவதற்குமாகப்பயன்படுத்தக் கூடிய ஒரு (தேசிய) ஆட்சி மொழி இந்திய வரலாற்றில் எக்காலத்தும் இருந்ததில்லை என்பது இதிலிருந்தே புரியவில்லையா?

ஆனால் சுகந்திர இந்தியாவின் அரசமைப்பில் தான் அகில இந்தியாவிற்கு உரிய ஒரே ஒரு தேசியமொழி, அதாவது “இந்தி மொழி” ஆட்சி மொழி என்ற தகுதியைப் பெற்றுக்கொண்டதால் அரியணையில் அமர்த்தப்பட்டுவிட்டது.

ஆட்சி மொழி பற்றிய விவாதம் அரசமைப்புச் சபையில் நடந்த பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.வாக்குகள் 74-க்கு 74 என்று சமமாகப் பிரிந்து நின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது 75 வாக்குகள் இந்திக்கே ஆதரவாகக் கிடைக்கும் என இந்தி வெறியர்கள் கூறினார்கள். காரணம்- அரசமைப்புச் சபைத் தலைவர் , இராசேந்திரப் பிரசாத் அவர்கள் தனக்கிருக்கும் இரண்டாவது வாக்கையும் இந்திக்கு ஆதரவாகப் போடுவார் எனக் கருதினார்.

அரசமைப்புச் சபை நிகழ்ச்சிகளை ஆய்ந்து பார்த்தால் இந்தி ஆட்சி மொழியாக்க கூடாது என்று பொதுவாக யாருமே வலியுறுத்திப் போராடவில்லை என்பது புலனாகிறது. ஆனால் ஆங்கிலத்தை சில காலம் இடைக்கால ஏற்பாடாக நீடித்து வைப்பதற்காகவே இத்துணை வேதனைகளையும் விரக்தியையும் அரசமைப்புச் சபையிலிருந்த தென்னகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள்தாங்கவேண்டியிருந்த தென்றால் -அதற்காகத் தங்கள் வலிமை முழுவதையும் பயன்படுத்திப் போரிட வேண்டியநிலைஇருந்த தென்றால் -அரசமைப்புச் சட்டத்தில், “ மாநில சுயாட்சி’’மற்றும்“மத்திய மாநில உறவுகள்“பற்றிய சட்டவிதிகள், யாராலும் எதிர்க்க இயலாத நிலையில் எவ்வளவு எளிதாக ஏற்றப்பட்டிருக்கும் என்பதை நமது உள்ளுணர்வுகள் தெளிவாக எடுத்து உணர்த்துகின்றன. சுருங்கக் கூறின் மத்திய அரசு ஆண்டானாயிற்று; மாநிலங்கள் அடிமைகள் ஆயின. தாய் மொழி உரிமை பறிபோனதால் முழுமாநில சுயாட்சியும் வெறும் கானல் நீர் ஆகிவிட்டது.

நேருவின் உறுதிமொழி

ஆய்வுக் குழு செய்த சில பரிந்துரைகள்

அரசமைப்புச் சட்டவிதிகளுக் கேற்ப ஆட்சி மொழி ஆணைக் குழுவால் செய்யப்பட்ட பரிந்துரைகளைப் பரிசீலனை செய்வதற்காக, ‘‘நாடாளுமன்ற ஆய்வுக்குழு” (Parliamentary committee) தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  20 பேரும், மாநிலங்களவையைச் சேர்ந்த உறுப்பினர்கள் 10 பேரும் ஆக மொத்தம் 30 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். ஆட்சி மொழி ஆணைக் குழு செய்த எல்லாப் பரிந்துரைகளையும் “நாடாளு மன்ற ஆய்வுக் குழு” அப்படியே ஏற்றுக் கொள்ள வில்லை

(1) மத்திய அரசின் பொது ஊழியருக்கான அதிகாரிகளைப் பொறுக்கி யெடுக்கும் தேர்வுகள் (U.P.S.C.Examinations) ஆங்கிலத்திலேயே நடைபெற வேண்டும்.

(2) ஆங்கிலத்தை இப்போதைக்கு அகற்றக் கூடாது; இன்னும் சில காலம் கழித்து வேண்டு மெனில் இந்தியைக் கொண்டு வரலாம்.

(3)அத்தேர்வுகள்,மற்றத் தேசிய மொழிகளால் எழுதப்படக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு, “வல்லுநர் குழு’’(Expert committee) ஒன்றை அமைக்கவேண்டும்.

(4)மாநிலஉயர்நீதிமன்றங்களில்,அந்தந்தமாநில மொழிகளோ அல்லது இந்தி மொழியோ இடம் பெற வேண்டும். எவ்வகையான எதிர்ப்பும் இல்லாதசூழ்நிலைஏற்பட்டபின்னால்மட்டுமே இந்தியத் தலைமை நீதி மன்ற நடவடிக்கைகளில் ஆங்கிலத்திற்கு மாறாக இந்தியை மெல்ல மெல்லப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

(5) ஆட்சி மொழி ஆணைக்குழு பரிந்துரைத்த இந்தி பற்றிய வேறு பல திட்டங்களை, நாடாளுமன்ற ஆய்வுக்குழு கைவிட்டுவிட்டது. “நாடாளுமன்ற ஆய்வுக் குழு” கொடுத்த அறிக்கையை 1959-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் மத்திய நாடாளுமன்றம் விவாதித்தது. அப்போது பண்டித நேரு அவர்கள் நாடாளு மன்றத்தில் இந்தி வெறியர்களுக்குப் புரியும் வகையில் தந்நிலை விளக்கம் கொடுத்தார்,

“தமிழ்,தெலுங்கு,மராத்தி,குசராத்தி போன்ற மாநில மொழிகளே தற்போதுள்ள பள்ளிகளில் பயிற்றுமொழிகளாக உள்ளதென்பதை நாம் மறுக்க முடியாது. இந்தப் புதிய ஏற்பாடு நமது தலைமுறைக்கு முழுவதும் மாறானதோர் எதிர் காலத்தலைமுறையைப் படைக்கப் போகின்றது. தற்போதுள்ள சிக்கல் இந்திமொழியா?அல்லது ஆங்கிலமா? என்பதல்ல, என்பதை நாம் உணர வேண்டும். அது14தேசிய மொழிகளைப் பற்றிய பிரச்சனை; அல்லது 14-க்கும் மேற்பட்ட அரசியல் சட்டத்தில் சொல்லப்படாத பல மொழிகளையும் சார்ந்த ஒரு பிரச்சனை. அந்த மொழிகளாலேயே தற்போது கல்வி கற்பிக்கப் படுகிறது. எனவே, தவிர்க்க முடியாத நிலையில் ஆங்கிலம்இரண்டாம்மொழியாகஆகிவிடுகிறது. இனி அது முதன்மை தகுதியை பெற முடியாது … இந்தியைக் காட்டிலும் நிறைந்த வளத்தையும் இலக்கியங்களையும் பல இந்திய மொழிகள் பெற்றுள்ளன என்பது என்னுடைய திடமான நம்பிக்கையாகும்.

ஆனால், நமதுநாட்டில், எல்லோருக்கும் தெரியக்கூடிய மொழியாயிருப்பதாலும் நமது நாட்டு மொழிகளில், ஏதோ ஒரு மொழி ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என்பதாலுமே இந்தி மொழி, ஆட்சி மொழியாகிறது … ஆனால் அது திணிக்கப்படக் கூடாது … இந்தி திணிப்பு-கூடாது என்று நான் சொல்வதனுடைய பொருள் அதுதான். ‘சென்னையோ,ஆந்திரமோ, கேரளமோ அல்லது வேறு மாநிலமோ தங்கள் மேல்இந்திதிணிக்கப்படுகிறதுஎனக்கருதக்கூடிய வகையில் ஒரு மொழியை அம்மாநிலங்களின் மேல் திணிக்க நான் விரும்பவில்லை.

தங்கள் மேல் அழுத்தம் செலுத்தப்படுகிறது அல்லது திணிக்கப்படுகிறது என்று அம் மாநிலங்கள் கருதினால் அம்மொழியை நான் மாநிலங்கள் மேல் திணிக்க விரும்பவில்லை. திணிக்கப்பட்ட அம்மொழியினை எதிர்த்து அவை செயல்படுகின்றன. தமிழகம் எங்களுக்கு கட்டாய இந்தி திணிப்பு வேண்டாம் எனக் கூறினால் அம்மாநில பள்ளிகளில் கட்டாய இந்தி தேவையில்லை … அவ்வகையில் நாம் சற்று வளைந்து கொடுக்க வேண்டும். அந்த காரியங்களில் காலக்கெடு குறிப்பிடப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் சில இயக்கங்களையும் வழிமுறைகளையும் தொடங்குகிறோம். அவைகள் ஒரு துறையில் செயல்பட வேண்டுமெனவும் முயலுகிறோம். ஆனால், அவை வளரும் போது, நமது குறியீடுகளைக் கணக்கில்எடுத்துக்கொண்டு, அவற்றை சரிக்கட்டி கொள்ளுகிறோம்.

என்றுகூறிஇந்திவெறியர்களின்கொட்டத்தை நேரு அடக்கினார்.

7-8-1959-ஆம் தேதியில் இந்திய நாடாளு மன்றத்தில் பண்டித நேரு அவர்களின் வரலாற்றுப் புகழ் பெற்ற வாக்குறுதி தரப்பட்டது.

“நான் இரண்டு காரியங்களை யோசனையாகக் கூறவிரும்புகிறேன். முதலாவதாக; நான் ஏற்கனவே கூறியபடி, (இந்தி) திணிப்பு இருக்கக் கூடாது. இரண்டாவதாக, முடிவில்லாதகால அளவிற்கு-எவ்வளவு நீண்ட காலம் என்று எனக்குத் தெரியாது-அரசுக் காரியங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு துணை -இணை-மொழியாக ஆங்கிலம் இருக்கும்… மக்கள் எத்துனைக் காலம் விரும்புகிறார்களோ அதுவரை ஆங்கிலம் மாற்று மொழியாக இருக்கும் . அதனைப் பற்றி முடிவெடுப்பதை, இந்தி பேசும் மக்களுக்கு நான் விடமாட்டேன். இந்தி பேசாத மக்களே அந்த இறுதி முடிவை மேற்கொள்வார்கள்.’’

“இந்தி பேசா மாநில மக்களின் அனுமதியைப் பெறாமல், ஆங்கிலத்தை அகற்ற மாட்டோம்’’ எனவும் ‘‘அதுவரை இந்தியை ஒரே ஆட்சி மொழியாகஆக்கமாட்டோம்’’ எனவும் பண்டித நேரு அவர்கள் உறுதியளித்தார். ஆனால் அந்த உறுதி சட்ட வரையறையாக ஆக்கப்பட வில்லை.

இந்திவெறியர்களைச் சார்ந்திருந்த குடியரசுத் தலைவரான இராசேந்திரப்பிரசாத், பண்டித்நேரு அவர்களின் உறுதியைப் புறக்கணிக்கும் வகையில், இந்தி பற்றிய சில ஆணைகளைப் பிறப்பித்தார். “ஆட்சி மொழி ஆணைக்குழு” தந்த ஒரு தலைப் பட்சமான அறிக்கையின் நிழலில் இந்தி வெறியர்கள், தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ள முயன்றனர். இந்தி வெறியர்களின் ஆதிக்கத்திற்குள் செயல்பட்ட குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் “இந்தி ஆட்சி மொழியாக வந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளைத் துவக்க வேண்டும்.”என அறிவித்தார்.

ஆட்சி மொழிச் சிக்கல் குறித்து, இப்படி முன்னுக்குப் பின் முரணாக நடைபோட்டுக் கொண்டிருந்த மத்திய அரசின் நிலையற்ற கொள்கையைக் கண்ட தமிழக மக்கள் தமிழ் மாநில உரிமைகளும் மொழி உரிமைகளும் பறி போவதை எதிர்த்துப் போராடத் துணிந்தனர்.

1960-ஆம் ஆண்டு சூன் திங்கள் 18, 19 ஆகிய இருநாட்களிலும் குமார பாளையத்தில் கூடிய திராவிட முன்னேற்றக்கழகப் “பொதுக்குழு”, குடியரசுத் தலைவரின் அறிவிப்பை வன்மையாய்க் கண்டித்ததுடன், ஆகஸ்டு30-ஆம் நாளுக்குள்,

அந்த அறிவிப்பைக் குரயரசுத் தலைவர் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், இந்தி பேசா மாநில மக்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தி பற்றி முடிவெடுப்ப தில்லை என்று அவர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், இவ்வித மாய்க் குடியரசுத் தலைவர் செய்யத் தவறினால், தென்னகத்தில்விடுதலைப் போரை, திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கிவிடும் எனவும் தீர்மானித்தது. அதற்கான போராட்டக்குழு ஒன்றும் தி.மு.கழகத்தால் அமைக்கப்பட்டது.

1960ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30_ஆம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் நடைபெற்ற தலைமைச் செயற்குழுவில், குடியரசுத்தலைவருக்குக் கருப்புக் கொடி காட்ட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் தலைமையமைச்சர் பண்டித நேருவும் குடியரசுத் தலைவரும், மத்திய உள் துறை அமைச்சரும், “இந்தி பேசாத மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக இந்தியைத் திணிக்க மாட்டோம். ஆங்கிலமே ஆட்சி மொழியாய் நீடிக்கும், அதற்கான மசோதாவை அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம், என்று அறிவிக்கக் கூடிய பண்டித நேரு அவர்களின் கடிதம் போராட்டக் குழுவிற்குக் கிடைக்காததால், திராவிட முன்னேற்றக் கழகம் இந்திப் போராட்டத்தைப் பற்றிப் புனர் பரிசீலனை செய்தது. பண்டித நேருவும் பந்த் அவர்களும் குடியரசுத் தலைவரும், நேருவின் வாக்குறுதி கைவிடப்படாது என்ற உறுதியினை வெளிப்படையாக அறிவித்தாலும் “மொழிப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்பட அரசியல் சட்டம் நிச்சயம் திருத்தப்பட வேண்டும் அது தான் சிறந்த வழி.” என்ற கோரிக்கையை முன்வைத்தது -திராவிட முன்னேற்றக் கழகம். அப்போதைக்குப் போராட்டத்தையும் நிறுத்திக் கொண்டது.

ஆட்சிமொழி ஆணைக் குழுவினால் செய்யப் பட்ட பல பரிந்துரைகள் பண்டித நேரு அவர்களின் வாக்குறுதியினாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்ட அறிவிப் பினாலும், முழுமையாகக் கைவிடப்பட்டன.

(‘நன்றி’ வழக்கறிஞர் கோபி கு.ச.ஆனந்தம் எழுதிய 1975இல் வெளியிட்ட மலர் ‘மாநில சுயாட்சி’ நூலிலிருந்து)

 

நிமிர்வோம் மே 2017 இதழ்

You may also like...