தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது!
மோடியின் ஆட்சி நாட்டை மீண்டும் வேத காலத்துக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்றிருப்பதாகவே தெரிகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 14,135 பார்ப்பனர்கள் மட்டுமே தாய்மொழியாகப் பதிவு செய்துள்ள சமஸ்கிருதத்தை இந்தியாவின் அனைத்து மாநில சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் வார விழாக்களாகக் கொண்டாடி போட்டிகள் நடத்தி அனைத்து மொழிகளுக்குமே ‘சமஸ்கிருதமே தாய்’ என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித வளத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஜ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஜூன் 6, 2014இல் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில், தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ‘சமஸ்கிருத மேம்பாட்டுச் சட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, மத்திய, மாநில அரசுப் பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்குவதோடு, செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு...
