தலையங்கம் – மீண்டும் குலக் கல்வி திட்டம்!

1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டு முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரி, பச்சைப் பார்ப்பன வெறியுடன் கொண்டு வந்த ‘குலக் கல்வித் திட்டம்’ இப்போது மீண்டும் உயிர் பெறுகிறது. ‘சூத்திரர்’களுக்கு கல்வி உரிமையை பார்ப்பன நீதி நூலான மனு சா°திரம் மறுத்தது. அவர்களுக்கு இழி தொழில்களை கட்டாயமாக்கியது. அந்த மனு சா°திர அடிப்படையில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து டாக்டர் எ°.ஜி. மணவாள இராமானுஜம் தலைமையில் மாநாடு கூட்டினார் பெரியார் (24.1.1954). கல்வித் திட்டத்தை திரும்பப் பெற 3 மாதக் கெடுவிதித்து, ஒற்றைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1954, மார்ச் 29இல் குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் ஆறுமுகம் தலைமையில் சென்னை நோக்கி புறப்பட்டது. படை சென்னை வரும் முன்பே ஆச்சாரியார் பதவி விலகினார். 13.4.1954இல் முதல்வராக பதவியேற்ற காமராசர், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.
இப்போது வரலாறு திரும்புகிறது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் தங்களது பாரம்பர்ய தொழிலில் விடுமுறை நாள்களில் ஈடுபடுத்தலாம் என்று குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் (1986ஆம் ஆண்டு சட்டம்) திருத்தம் கொண்டுவர மோடி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
6 வயது முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கட்டாய உரிமையாக்கி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்த மனுதர்மத்துக்கு எதிரான சட்டத்தில் ஓட்டைப் போட்டு மீண்டும் மனு தர்மத்தைத் திணிக்கிறது, மோடி ஆட்சி!
இந்தியாவின் “சமூகக் கட்டமைப்பு – சமூகப் பொருளாதார நிலை”யைக் கருதி, இத்திருத்தம் செய்வதாக ஆட்சி கூறுகிறது. பெற்றோருக்கு பாரம்பரிய தொழிலில் உதவி செய்வதால், குழந்தைகள் தொழில் குறித்த அறிவைப் பெறுகிறார்கள் என்றும் ஆட்சி நியாயம் பேசுகிறது. ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்தவர்கள் முன் வைத்த அதே வாதங்கள்தான் இவை.
‘சமூக நிலை’யை மாற்றியமைக்க வேண்டிய ஒரு ஆட்சி ‘சமூக நிலைக்கு’ ஏற்றவாறு ஒரு கொள்கையை உருவாக்குவதாகக் கூறுவது வெட்கக் கேடானதாகும். பெண் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்வதைக்கூட ‘சமூக நிலை’ என்று காரணம் கூறி, நியாயப்படுத்த முடியும். அதற்காக ‘பால்ய விவாகங்களை’ அனுமதித்து விட முடியுமா? என்று கேட்கிறோம்.
பள்ளி விடுமுறை நாள்களிலும் பள்ளி நேரம் முடிந்த பிறகும் பெற்றோருக்கு உதவுவது குற்றமா என்று பார்ப்பனர்கள் வாதிடுகிறார்கள். அவர்களுக்கு கூறுகிறோம்:
பள்ளிப் படிப்பு என்பது பள்ளிக்குச் செல்வது மட்டுமல்ல; விளையாட்டு, வீட்டுப்பாடம், குழந்தைகளின் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல அம்சங்களும் இணைந்திருப்பதே கல்வி பயிலும் பருவம். குழந்தைகளுக்கான பருவத்தை அவர்கள் முழுமையாக அனுபவிக்கும் உரிமைகள் வழங்கப்படும்போதுதான் ஆற்றலை வெளிப்படுத்தும் தகுதியைப் பெறுகிறார்கள் என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உலகம் முழுதும் குழந்தைகள் உரிமை இதே கண்ணோட்டத்தில்தான் கவலையோடு பாதுகாக்கப்படுகிறது.
குழந்தைகள் வேலை செய்யத் தொடங்கிவிட்டாலே படிப்பில் கவனம் செலுத்துவார்களா? அதுவும் ‘உலகமயம், தாராளமயம்’ வந்துவிட்ட பிறகு தொழில் நிறுவனங்கள் வேலைகளை நிறுவனங்களுக்கு வெளியே ஒப்பந்தக் கூலி (டீரவ ளடிரசஉiபே) அடிப்படையில் வழங்கி வருகின்றன. வேலைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து தரவேண்டும் என்ற கட்டாய நிபந்தனையில் குறைந்தக் கூலிக்காக குடும்பங்கள் உழைக்கின்றன. இந்தச் சூழலில் குழந்தைகள் படிப்பதைவிட இந்த உழைப்பில் பங்கேற்கச் செய்வதிலேயே பெற்றோர்கள் ஈடுபாடு காட்ட வேண்டியிருக்கிறது.
பெற்றோர்கள் செய்யும் பாரம்பர்யத் தொழிலையே செய்ய வேண்டும் என்று குழந்தைகள் மீது திணிப்பது, குழந்தைகள் உரிமைகளுக்கே எதிரானது! தனக்கான தொழிலை தேர்வு செய்யும் உரிமையை அவர்களிடமிருந்து பறித்து விடுகிறது.
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் தேசத்தின் சொத்துக்கள் என்று 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய கொள்கை கூறுகிறது. எந்த ஒரு சட்டமும் இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிடக் கூடாது.
இந்த சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படுவது யார்? பார்ப்பனர், வசதிப் படைத்தவர்கள் வீட்டுக் குழந்தைகளா? நிச்சயமாக இல்லை.
ஒருங்கிணைக்கப்படாத வேலைகளில் ஈடுபட்டுள்ள தலித், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய பிரிவைச் சார்ந்த குழந்தைகள்தான்.
தொலைக்காட்சி விவாதங்களில் இந்த திருத்தத்தை ஆதரித்துப் பேசுகிறவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குருகுலக் கல்வியையும், குலக்கல்வியையும் அவர்கள் வெளிப்படையாகவே நியாயப்படுத்துகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக் குறித்து மோடி ஆட்சி கவலைப்படவில்லை என்பதற்கு ஒரு உதாரணம் – குழந்தைகளின் மேம்பாட்டுக்கு முந்தைய ஆட்சி ஒதுக்கிய தொகை ரூ.18,588 கோடி. மோடி ஆட்சி ஒதுக்கியிருப்பது ரூ.10,382 கோடி மட்டுமே. பார்ப்பனர்கள் உண்மை முகத்தை இப்போதாவது அடையாளம் கண்டு, இந்த ஆபத்தான சட்டத்திருத்தத்தை முறியடிக்க தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்!

பெரியார் முழக்கம் 21052015 இதழ்

You may also like...

Leave a Reply