மோடியின் ஓராண்டு – கார்ப்பரேட் நலன் காக்கும் ஆட்சி
• கார்ப்பரேட் நலன்களுக்காகவே நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. ஏற்கெனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகக் கைப்பற்றப்பட்ட நிலங்களில் பாதியளவுகூட பயன்படுத்தாமல் கிடக்கின்றன. இப்போது மேலும், நிலங்களைப் பறிக்க ஏன் துடிக்கிறார்கள்? மன்னர்கள் ஆட்சி காலங்களில் ‘பிராமணர்’களுக்கு நிலங்களை ‘தானமாக’ வழங்கி பெருமைப்பட்டார்கள். இப்போது கார்ப்பரேட்டு களுக்கு மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி, ‘தானமாக’க் கொடுக்க அரசு துடிக்கிறது. பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்கும் பனியாக்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்தான் இப்போதும் நிலங்கள் கைமாறப் போகின்றன. ஆக, அன்று ‘சதுர்வேதி மங்களங்கள்’; இன்று நிலப் பறிப்புச் சட்டங்கள்! • பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதில் காங்கிரசுக்கு சற்றும் குறைந்தது அல்ல பா.ஜ.க. இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் ஒரே பாதையில்தான் பயணிக்கின்றன. அரசு பொதுத் துறை நிறுவனமான நிலக்கரி நிறுவன பங்குகளை காங்கிர°, தனியாருக்கு விற்க முயன்றபோது, தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்த்தன. இப்போது, மோடி ஆட்சியில்...
