வினாக்கள்… விடைகள்…!

குடியரசுத் தலைவர் திருப்பதி வருகை: 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம். – செய்தி
இதுக்கெல்லாம், ‘ஆகம’ விதி அனுமதிச்சுடும் போல.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசிடம் தேவையான நிதி இல்லை. – நீதிமன்றத்தில் அரசு மனு
அப்படி, என்ன ‘ஆலிவுட்’ படமா எடுக்கப் போறீங்க!

உலகிலேயே குறுகிய காலத்தில் 11 கோடி உறுப்பினர்களை சேர்த்த ஒரே கட்சி பா.ஜ.க. – இல. கணேசன்
உலகத்திலேயே கார் வச்சிருக்கிற ஒரே கரகாட்ட கோஷ்டி இருக்குன்னா அது நாமதான்.

குரு பகவான் – கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பிவேசித்தார். – செய்தி
எதுலேங்க பிரவேசிச்சாரு? ‘மெட்ரோ’ இரயிலிலா?

உலகின் மிக உயரமான பசு – அமெரிக்காவில் இறந்தது. – செய்தி
சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புங்க! தேசிய சின்னம் வச்சுடலாம்!

திருச்சி டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் போலியானது. – பல்கலை மான்யக் குழு
இதுல படிச்சிட்டு புரோகிதத் தொழில் செய்யும் போலிகள் மீதும் நடவடிக்கை எடுப்பாங்களா?

பெரியார் முழக்கம் 09072015 இதழ்

You may also like...

Leave a Reply