Category: குடி அரசு 1926

பார்ப்பனரல்லாதார்களுக்கு                                  ஓர் வேண்டுகோள் 0

பார்ப்பனரல்லாதார்களுக்கு ஓர் வேண்டுகோள்

தற்காலம் நமது நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல்களில் வெற்றி பெறுவோர்களில் பலருக்கு மந்திரி, தலைவர் முதலிய கொழுத்த சம்பளமுள்ள உத்தியோகங்களும், தங்களுக்கு வேண்டிய பலருக்கு 1,000, 500 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் கொடுக்கக் கூடிய அதிகாரங்களும் கிடைக்க வசதியிருப்பதால், இத்தேர்தலுக்குப் பெரிய மதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, இவ்வுத்தியோகங்கள் அடைய எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சட்டசபையில் ஆள் பலமும் கட்சிப் பெயர்களும் வேண்டியிருக்கிறபடியால் தேசத்தின் பெயராலும் சமூகத்தின் பெயராலும் பலர் பல கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொன்றிற்கும் ஜனங்கள் ஏமாறத்தக்க வண்ணம் ஒவ்வொரு பெயரை வைத்துத் தங்களைப் போன்ற சுயநலவாதிகளாகப் பலரைச் சேர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளை அடிப் பது போல் பலவித மோச வார்த்தைகளையும், பொய் வாக்குத் தத்தங்க ளையும் ஓட்டர்களிடம் சொல்லி அவர்களை ஏமாற்றி ஓட்டுப் பெற பலவித முயற்சி செய்து வருகிறார்கள். நாட்டில் எங்கு பார்த்தாலும் சில வகுப்பினர் இதே வேலையாகத் திரிந்து வருகின்றனர். இதனால் தேசத்திற்கும் ஏழை...

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம் 0

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம்

ஜுலை µ 16 ² “மித்திர”ன் “இந்து மத தர்ம ஸ்தாபனங்கள் சரியாக நடக்கும்படி செய்யத்தக்க சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டு மென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்” என்று எழுதியிருக் கிறான். மதவிஷயத் தில் அரசாங்கத்தார் பிரவேசிக்கக் கூடாது என்று எழுதி இதுவரை பாமரர்களை ஏமாற்றி வந்த பார்ப்பன மித்திரனுக்கு இப்போதா வது சர்க்காரால் சட்டம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்று சொல்லும் படியான புத்தி வந்ததற்கு நாம் மகிழ்கிறோம். ஆனால் இந்தப்புத்தி தானாகத் தோன்ற வில்லை. ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுகாரும், ஈ.வெ.இராமசாமி நாயக் கரும் தேவஸ்தானச் சட்டத்தை ஆதரித்தும் அதை எதிற்கும் பார்ப்பனர்களின் சூழ்க்ஷியைப் பொது ஜனங்கள் அறியும்படி செய்ததின் பலனாகவும் இதை ஒப்புக்கொள்ளாவிட்டால் தங்களுக்கு ஓட்டுக்கிடைக்கா மல் போகுமோ என்கிற பயமும் பார்ப்பன மித்திரனான “சுதேசமித்திர”னை “இந்துமத ஸ்தாபனம் சரியாக நடக்க ஒரு சட்டம் அவசியம்” என்று சொல்லும்படி செய்து விட்டது. ஆனால் “மித்திரன்” அதின் கீழாகவே “இந்த சட்டமானது...

தமிழ் ‘சுயராஜ்யா’ 0

தமிழ் ‘சுயராஜ்யா’

பார்ப்பனர்களின் நயவஞ்சக ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்பனரல்லா தார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிற தென்பதைப் பலரும் அறிவர். அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படு பாவிகளைப்போல பார்ப்பனரல்லாதாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்ப னரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்ப னரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல் லாதாரின் க்ஷீனத்தைக் கோரி பார்ப்பனரல்லாதாருடன் போர் புரிந்து வரு வதை உலகமறியும். சின்னாட்களுக்கு முன் பார்ப்பனரல்லாத கட்சியின் கூட்டம் சென்னை சௌந்தரிய மகாலில் நடைபெற்றது. ‘சுயராஜ்யா’ பத்திரிகை அக்கூட்டத்தில் கூடியிருந்தோர் அனைவரையும் “உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள்” என்று மானங்கெட்டத்தனமாய் பெயரிடுகிறது. ஊரூராய்த் திண்டாடித் தெருவில் நின்று பார்ப்பனரல்லாதார் வீடுதோறும் அலைந்து திரியும் “உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள்” ‘சுயராஜ்யா’ பத்திரிகை ஆசிரியரின் இனத்தைச் சேர்ந்த பார்ப்பனக் கூட்டமேயன்றி, சௌந்தரிய மகாலில் அன்று குழுமி யிருந்த பார்ப்பனரல்லாதவர்களன்று. இதைப்பற்றி ‘திராவிடன்’ கூறியுள்ள முத்து போன்ற...

மலையாளக் குடிவார மசோதா 0

மலையாளக் குடிவார மசோதா

மலையாளக் குடிவார மசோதா என்கிற ஒரு மசோதாவின் பேரில் சென்னை சட்டசபையில் இவ்வாரம் வாதம் நிகழ்ந்து வருகிறது. இம்மசோதா வின் தத்துவம் பிராமணர் பிராமணரல்லாதார் என்கிற வகுப்பின் நன்மை தீமைகளை அஸ்திவாரமாகக் கொண்டது. எப்படியெனில், மலையாள தேசத்தில் உள்ள பூமிகள் பெரும்பாலும் அத்தேசத்திய பிராமணர்களுக்குச் சொந்தமானது. அத்தேசத்துப் பிராமணர்களில் பெரும்பாலோர் நம்பூதிரிகள் என்னும் மலையாளப் பிராமணர்கள். இவர்களுடைய சொத்துக்கள் பாதிக்கப் படுவதேயில்லை. இந்தப் பிராமணர்கள் தங்களுக்கு அதிகக் குழந்தைகள் பிறந்து விட்டால் குடும்பத்திற்கு அதிகச் செலவாகி விடுமென்றும், பங்கு போட்டுக் கொண்டே போனால் சொத்துக்களின் அளவு குறைந்து போகு மென்றும் எண்ணியே தங்கள் குடும்பங்களில் தலைவனாக உள்ளவன் (மூத்த வன்) மாத்திரந்தான் கல்யாணம் செய்து கொள்வது என்றும் மற்றவர்களெல் லாம் “சூத்திர ஸ்திரீ”களை அதாவது நாயர் ஸ்திரீகளை சம்பந்தம் செய்து (தமிழ் நாட்டு தாசி வேசிகளைப் போல் ) ஒவ்வொரு பிராமணரல்லாத ஸ்திரீ யை வைப்பாட்டியாக வைத்துக் கொள்வதென்றும், அவர்களுக்குத் தாங்கள்...

“தொட்டது துலங்காது”  கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் சம்பாஷனை 0

“தொட்டது துலங்காது” கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் சம்பாஷனை

அர்ஜுனன் : ஏ, கிருஷ்ணா! சுயராஜ்யக் கக்ஷி காங்கிரசில் சேராமல் தனித்திருந்த போது அதற்குக் கொஞ்சம் மரியாதை இருந்தாப் போல் தெரிந்ததே. இப்பொ ழுது காங்கிரசில் சேர்ந்து சுயராஜ்யக் கக்ஷியே காங்கிர சாக மாறி மகாத்மா காந்தியும் ஆசீர்வாதம் பண்ணியும் அவர் சிஷ்யர்களும் எவ்வளவோ அதற்கு வெளிப்படையாயும் இரகசியமாயும் உதவி செய்தும் இப்படி துள்ளத் துள்ள செத்துப் போய் விட்டதே அதன் காரணம் என்ன? கிருஷ்ணன் : ஓ , அர்ஜுனா! இது உனக்குத் தெரியவில்லையா? கலியுக பத்மா சூரன் கை வைத்தால் எதுதான் வாழும்? அர்ஜுனன்: அது யார்? எனக்குத் தெரியவில்லையே. கிருஷ்ணன் : உண்மையாய் தெரியாதா? அர்ஜுனன் : ஆம், தெரியாது. கிருஷ்ணன்: அதுதான் நமது ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் . அர்ஜுனன்: ஓஹோ! அவர் தலைவரானதினால்தான் போய்விட்டதோ? சரி, சரி, அதனால்தான் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட செத்துப் போய்விட்டது. இப்பொழுது எனக்குப் புரிந்தது. கொஞ்ச காலத்திற்கு...

ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு                ஒரு புது யோகம் – சித்திரபுத்திரன் 0

ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புது யோகம் – சித்திரபுத்திரன்

கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை. அழைப்புக் கடிதம் அனுப்பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப்பாளி யா, அல்லது அய்யங்காரின் கூட்டு அபேக்ஷகர்களில் எவராவது பொறுப் பாளியா, அல்லது கூட்டப்பட்டவர்கள் பொறுப்பாளியா என்பது அவ்வளவு சுலபமாய் வெளியில் சொல்லக்கூடிய விஷயமல்ல. இதனால் நமது அய்யங்காருக்கு ஒரு புது யோகம் பிறந்து விட்டது. அதாவது தன்னை அக்கூட்டத்திற்கு அழைக்காத காரணத்தைக் கொண்டு ஒவ்வொரு பார்ப்பனர்கள் வீட்டுக்கும் போய், பார்ப்பனரல்லாதார் எல்லாம் தன்னைத் தள்ளிவிட்டதாகவும், இந்தக் காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் எல்லாம் கட்டுப்பாடாக பார்ப்பனர்களுக்கே தனி ஓட்டு (சிங்கிள் ஓட்டு) போட வேண்டுமென்றும், ஒரு பார்ப்பனனாவது பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுச் செய்யக்கூடாது என்றும் சொல்லி ஒவ்வொரு பார்ப்பன ஓட்டரிடத்திலும் பிரமாணமும் வாக்குத் தத்தமும் வாங்கி கட்டுப்பாடு செய்து வருகிறா ரென்றும், பார்ப்பனர்களும் கூட்டம் கூட்டமாகப் போய் அய்யங்காருக்குப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களென்றும்...

எவரை பாதிக்கும்?  சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு 0

எவரை பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சியின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகுமும்மு ரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்பவற்றிற்குப் பெருகி வருகின்றன. எனவே, இப்பொழுது நடக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் தலை சிறந்து மிளிர்வது ஜஸ்டிஸ் கட்சியினருடையதே. ஆதலால் கூட்டங் கூடக் கூடாதென உத்திரவு ஏதேனும் கிடைக்குமேல் அது ஜஸ்டிஸ் கட்சியின் கூட்டத்தை பாதிப்பதாகவேயிருக்கும். ஏனெனில் முற்கூறியது போன்று சுயராஜ்யக் கட்சியின் கூட்டத்தைக் கண்டு மதிப்பாருமில்லை மகிழ்வாரு மில்லை. இவ்வாறிருக்க, சென்னை நகர போலீஸ் கமிஷனர், “சென்னை நகர எல்லைக்குட்பட்ட எந்தத் தெருவிலும், வீதியிலும், தெரு மூலையிலும், ரஸ்தா மூலையிலும், பொதுமக்கள் நடமாடும் எந்த ராஜ பாட்டையிலும், பொதுஜன நடமாட்டத்திற்குத் தடையாயிருக்கக் கூடிய வேறெந்த பொது இடத்திலும் தேர்தல் கூட்டங்களோ ஊர்வலங்களோ நடத்த இனி அனுமதிக்க முடியாது.” என்றதொரு தடை உத்திரவை...

கிறிஸ்தவ மதப் பிரசாரமா? 0

கிறிஸ்தவ மதப் பிரசாரமா?

“கிறிஸ்தவ மதப் பிரசாரமா?” என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப்பொன்றெழுதி, சென்னைக் கடற்கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரஹ ஆராதனையைப் பற்றியும் தூஷித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத்தகைய கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிரசிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ளவில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான். இக் குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வடிகிறது. யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசு ரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி “தூஷித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்?’’ என்று எழுதி பொதுவாகக் கிறிஸ்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களி டையே துவே ஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்யத் தனமும் சூழ்ச்சி...

இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம் “பயித்தியம் தெளிந்து போய்விட்டது                  உலக்கை எடு கோவணங் கட்ட” 0

இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம் “பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடு கோவணங் கட்ட”

5. 7. 26 – தேதி ‘மித்திரன்’ தன் தலையங்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு புது வழி கண்டுபிடித்ததாக சாமர்த்தியம் காட்டி விஷச் சிரிப்பு சிரிக்கிறான். அதாவது, சட்டசபைகளிலோ மற்றும் பொது ஸ்தாபனங் களிலோ சமூக சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போது அந்தந்த சமூகத் தைச் சேர்ந்த அங்கத்தினர்களில் முக்கால் வாசிப்பேர் ஆnக்ஷபித்தால் அந்த பிரச்சினைகள் கொண்டு வரக்கூடாதாம். இந்த மாதிரி ஒரு தீர்மானம் செய்து விட்டதால் முஸ்லீம்களுக்கு பத்திரம் ஏற்பட்டு போய்விட்டதாம். இனி முஸ்லீம்கள் சுயராஜ்யக் கட்சியாரோடு இரண்டறக் கலந்துபோக வேண்டியது தானாம். இது “பைத்தியம் தெளிந்து போய்விட்டது, உலக்கை கொண்டு வா கோவணம் கட்டிக் கொள்ள” என்று ஒருவன் தனது பைத்தியம் தெளிந்து போனதற்கு அடையாளமாகப் பேசினது போல் இருக்கிறது. மகமதிய மெம்பர்களில் முக்கால் வாசிப்பேர் ஆnக்ஷபித்தால் இந்து முஸ்லீம் சம்பந்த மான பிரச்சினை சபைகளில் வரக்கூடாது என்பது சரிதான். உதாரணமாக, ஒரு முனிசிபாலிட்டியில் ஒரு பள்ளிவாசலை இடித்து...

பார்ப்பனப் பத்திரிகைகள் 0

பார்ப்பனப் பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதி பர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரையும் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷீ’ ‘பிர்ம ரிஷீ’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட இருவர்களையும் இன்று என்னமாய் நடத்துகிறார் கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினாமாக் களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை. எங்கோ ஒரு மூலை யில் ஒன்றரை அங்குலத்தில் பொது ஜனங்கள் ராஜினாமாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்டவில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுதவில்லை. ஒரு வயிற்றுச் சோத்து பார்ப்பனன் ஒரு உத்தியோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பியிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டுபோய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்த தாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்....

எதிர்பார்த்த வண்ணமே! 0

எதிர்பார்த்த வண்ணமே!

நாம் எதிர்பார்த்த வண்ணமே திருவாளர் திரு. வி.கலியாணசுந்தர முதலியாரவர்களும் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்த தன் தொடர்பை விலக்கிக் கொண்டார். “இது முடிந்த மொழியன்றி மீண்டு முன்னு மொழி யன்று” என்னும் சொற்களால் இனி மீண்டும் புனராலோசனை செய்வதில்லை எனவும் கூறிவிட்டார். இவரது இராஜினாமாவைப் பிரிதொரு பக்கம் பிரசுரித்துள்ளோம். டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரவர்களும் திரு. முதலியாரவர்கட்கு முன்னரே விலகி விட்டார். அவரும் இனி புனராலோசனை செய்ய முடியாது என்பதாக தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகக் கூட்டமும் பொதுக் கூட்டமும் நிகழ்ந்த 29-ந் தேதியில் தலைவருக்குக் கிடைக்கும்படியும் அதைக் கூட்டத்தில் படித்துக் காட்டுமாறு கடிதம் அனுப்பியிருந்தும், நமது பார்ப்பனத் “தலைவர்” அதைப் படித்துக் காட்டாமலும் விஷயத்தையே வெளியிடா மலும் மூடிவைத்துவிட்டு புனராலோசனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக திருட்டுத் தீர்மானம் செய்து ஏமாற்றினார். திரு. முதலியார், திரு. நாயுடுகார் ஆகிய இருவரும் காங்கிரஸ் காரியக் கமிட்டியினின்று விலகியே விட்டார்கள். இதன் தத்துவம் என்ன? இது போழ்து இவர்களுக்கு...

இனியும் ஆதாரம் வேண்டுமா? 0

இனியும் ஆதாரம் வேண்டுமா?

சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பன ஆதிக்கத்திற்கென சுயராஜ்யக் கட்சியின் சார்பாக காங்கிரசின் பெயரால் ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் கம்பெனியார் நிறுத்தும் அபேக்ஷகர்களைப் பற்றி அப்போதைக்கப்போது எழுதி வந்திருக்கிறோம். அவற்றுள் ஒரு சந்தர்ப்பத்தில் “ஜில்லாவிற்கு இரண் டொரு பார்ப்பனரல்லாதாரை நிறுத்தி பொது ஜனங்களுக்குப் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பெயரைத் தெரியும்படியாகச் செய்து கடைசியில் ஒவ்வொரு ஜில்லாவிற்கும் ஒவ்வொரு பார்ப்பனர் பெயரைப் போட்டுவிட் டார்கள்” என்று எழுதியிருந்தோம். அது இப்போது நிஜமாகவே போய் விட்டது. திருநெல்வேலி ஜில்லாவிற்கு ஒரு பார்ப்பனர் பெயரை நுழைத் தார்கள். அது ஸ்ரீமான் சாது கணபதி பந்துலுவின் பெயரேயாகும். மதுரை ஜில்லாவிற்கு இப்போது இரண்டு பார்ப்பனர்களை நிறுத்தத் தீர்மானித்து விட்டார்கள். அதாவது, ஸ்ரீமான் முத்துராமலிங்கய்யரை ஒரு ஸ்தானத்திற்கு. மற்றொரு ஸ்தானத்திற்கு இப்பொழுதுதான் மெள்ள வேறொரு பார்ப்பனர் தலையை நீட்டப்படுகிறது. அதாவது, ஸ்ரீ கே. ஆர். வெங்கட்டராமய்யரேயா கும். திருச்சி ஜில்லாவிற்கும் ஒரு பார்ப்பனர் பெயர் நுழைந்து விட்டது. இன்னும் மற்றொரு ஆசாமியின் பெயரும்...

டாக்டர் கிச்சுலுவின் உபதேசம் முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது           நிர்மாண திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும் 0

டாக்டர் கிச்சுலுவின் உபதேசம் முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாண திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும்

டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம் கலவரத்தைப் பற்றி சமா தானம் செய்யப் பிரசாரம் செய்வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். 1. “இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது”. 2. “முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்”. 3. “முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது”. என்று பேசியிருக்கிறார். ( இது 5.7.26 ² ‘மித்திரன்’ 4 – வது பக்கம் 5 – வது கலத்தில் காணப்படுகிறது) இப்படியிருக்க, டாக்டர் கிச்சுலு அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார், மகமதியர்களை காங்கிரசில் சேரச் சொன் னார் என்று எழுதுவதின் பொருள் என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ராஜதந்திரமாய்ப் போய் விட்டது. ஒன்றா நிர்மாணத்திட்டம் அல்லது வகுப்புக் கட்டுப்பாடு; இரண்டி லொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல் ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம் செலுத்த...

இந்து முஸ்லீம் அபிப்பிராய பேதங்களும் கலகங்களும் ஏற்படக் காரணம் என்ன? 0

இந்து முஸ்லீம் அபிப்பிராய பேதங்களும் கலகங்களும் ஏற்படக் காரணம் என்ன?

தேசத்தின் விடுதலைக்காகவென்றும் சுதந்திரத்திற்காகவென்றும் படித்த வகுப்பார்களால் (பார்ப்பனர்களால்) கிளர்ச்சி ஏற்படும் போதெல்லாம் இந்து முஸ்லீம் கலவரங்களும் அபிப்பிராய பேதங்களும் ஏற்படாமலிருப்ப தில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் ஏற்பட்டிருந்த ஒத்துழையாமையின்போது மாத்திரம் கலவரமும் அபிப்பிராய பேதமும் இல்லாமல் இருந்ததோடல்லாமல் நாம் அறிய இதுவரை நமது நாட்டில் ஏற்பட் டிராத இந்து முஸ்லீம் பரஸ்பர நம்பிக்கையும் அபிப்பிராய பேத மின்மையும் ஒற்றுமையும் சகோதரத் தன்மையும் தலைசிறந்து விளங்கிற்று. ஆனால் இதற்கு சில பொறுப்பற்றவர்கள், அது சமயம் மகமதியர் களுக்குக் கிலாபத் சங்கடம் இருந்ததால் அவர்கள் இந்துக்களோடு ஒத்திருந் தார்கள் என்ற உள் எண்ணம் கற்பிக்கிறார்கள். அதற்கு ஒரு சிறிதும் ஆதார மில்லை என்றே சொல்லுவோம். ஒத்துழையாமை மகாத்மாவினால் அமுலில் ஆரம்பிக்கும் காலத்திலேயே கிலாபத்து விஷயம் பெரும்பாலும் முடிவ டைந்து விட்டது. அதோடு துருக்கி நாட்டில் கமால் பாஷாவின் ஆதிக்கம் ஏற்பட்ட தும் கிலாபத்து விஷயம் வெளிநாட்டு மகமதியர்களால் கைவிடப்பட்டும் போய் விட்டது....

“தமிழன்” 0

“தமிழன்”

முன்னர் காலஞ்சென்ற திரு. அயோத்திதாஸ் பண்டிதரவர்களால் ‘‘தமிழன்’’ என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத்திற்குப் பின்னர் அப் பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடாத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பா ரற்று நின்று போயிற்று. மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப்ஸ், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத்திருக்கும் திரு. பி. எம். இராஜ ரத்தினம் அவர்களால் ஜுலை மாத முதல் வெளியிடப்படுமென தெரிவிக் கப்படுகிறோம். திரு. இராஜரத்தினம் அவர்களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறுமென நம்புகிறோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 04.07.1926

திரு. சக்கரையும் திரு. ஆரியாவும் – சித்திரபுத்திரன் 0

திரு. சக்கரையும் திரு. ஆரியாவும் – சித்திரபுத்திரன்

திரு. சக்கரைச் செட்டியார் அவர்கள் ஹிந்துவாயிருந்து கிறிஸ்துவராக மதம் மாறியவர்; அவர் சென்னை திருவாளர்கள் ஒ. தணிகாசலம் செட்டியார், ஒ.கந்தசாமி செட்டியார் ஆகியவர்களுக்கு நெருங்கின உறவினராயிருந்தவர். பி.ஏ.,பி.எல்.,பட்டம் பெற்ற வக்கீல். 1906-ல் அதாவது ஏறக்குறைய 20 வருஷங் களுக்கு முன்னிருந்தே அரசியல் துறையில் இறங்கினவர். வங்காளப் பிரிவினையின் காரணமாக இந்தியா வெங்கும் ஏற்பட்ட “சுதேசி”க் கிளர்ச்சி யின் போதே திரு. சக்கரைச் செட்டியாரும் திரு. சுரேந்திரநாத் ஆரியாவும் சென்னை மாகாணத்தில் – தமிழ்நாட்டில் – மேடை மீதேறி தைரியமாய்ப் பிரசங்கம் செய்த பார்ப்பனரல்லாத வீரர்கள். தேசத்தின் உழைப்பிற்காகவும், உழைத்ததின் பலனாகவும், தங்கள் தங்கள் வரும்படிகளை விட்டவர்கள். உண்மைத் தேசாபிமானம் என்பது இவ்விரு கனவான்களுக்கும் இல்லா திருந்து பார்ப்பனர்கள் போலும் மற்றும் இரண்டொரு பார்ப்பனரல்லாதாரைப் போலும் வயிற்றுப் பிழைப்பு தேசாபிமானிகளா யிருந்திருந்தால் திரு. சக்கரைச் செட்டியார் வயிற்றுப் பிழைப்பு தேசாபிமானத்தால் ஜட்ஜி ஸ்தானம் பெற்ற பார்ப்பனர்களுக்கு முன்னாலேயே, ஹைக்கோர்ட் ஜட்ஜியாக இருப் பார்....

“சுதேசமித்திர”னின் பித்தலாட்டம் 0

“சுதேசமித்திர”னின் பித்தலாட்டம்

சென்ற இதழ் ‘குடி அரசி’ல் திரு.டி.எ. இராமலிங்கம் செட்டியார் அவர்கள் சுயராஜ்யக் கட்சியிலிருந்து விலகுகிறார் என்பதாக வரைந்திருந்த விஷயத்தை வாசகர்கள் கண்ணுற்றிருக்கலாம். அதைப் பார்த்தவுடன் பார்ப்ப னர் கக்ஷியாய சுயராஜ்யக் கட்சிக்குப் பேராபத்து வந்து விட்டதெனக் கருதி “குடி அரசின் கட்டுக்கதை – ஸ்ரீமான் இராமலிங்க செட்டியாரின் மறுப்பு” என்ற தலைப்பில் ‘சுதேசமித்திரன்’ ஒரு மறுப்பு எழுதியிருக்கிறது. அதில் திரு.டி.எ. இராமலிங்கம் செட்டியாரவர்கள் ‘மித்திரன்’ நிரூபரி டம் கூறுவதாக எழுதியிருக்கும் விஷயங்களைக் கவனித்துப் பார்த்தால் ‘குடி அரசு’ விஷயம் கட்டுக்கதையா, ‘சுதேசமித்திரன்’ விஷயம் அயோக்கியத் தனமா என்பது புலனாகும். திரு. செட்டியார் மறுபடி கூறுவதாவது:- “என்னுடைய அபிப்பிராயம் எதுவும் மாறவில்லை. நான் சுயராஜ்யக் கட்சி அங்கத்தினராக இருந்ததே இல்லை. ‘பார்ப்பன ரல்லாத கட்சி’ என்பது ஜஸ்டிஸ் கட்சியைக் குறிப்பிடுவதானால் அதன் சார்பாக நான் தேர்தலுக்கு நிற்கப் போவதாக எவரிடமும் சொல்லவே யில்லை. உத்தியோகங்களை ஏற்றுக் கொள்ளுவதன் சம்பந்தமாக நான் எவ்வித அபிப்பிராயம்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் வீட்டில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கூட்டத்தின் நடவடிக்கைகள் இவ்வாரப் பத்திரிகைகளில் வெளியானதை நண்பர்கள் வாசித்திருக்கலாம்.  ஆனால் அதில் நடந்த விஷயங்களை ஒவ்வொரு பத்திரிகை ஒவ்வொரு விதமாய் தத்தம் சௌகரி யப்படி பிரசுரித்திருக்கின்றன. ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரின் தீர்மானமானது ஒரே அடியாய் தூக்கி அடிக்கப்பட்டு உயிர் வாங்கப்பட்டுப் போயிற்று, அதாவது ‘‘காங்கி ரசால் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட அபேக்ஷகர்கள் பட்டதாரியாகவாவது அரசாங்க நியமனம் பெற்றவர்களாகவாவது இருப்பரேல், பட்டத்தையும் நியமனத்தையும் விட்டுவிடும்படியும் கதருடையில் பற்றுக் கொள்ளும் படியும் தீர்மானிக்கிறது’’ என்பதே ஸ்ரீமான் முதலியார் தீர்மானத்தின் தத்துவம்.  அப்படியிருக்க திருத்தப் பிரேரேபணையாக ஸ்ரீமான் சத்திய மூர்த்தியால் இம்மாதிரி தீர்மானமே கொண்டுவர ஒழுங்கில்லையென்றும், ஆனால் ஸ்ரீமான் முதலியார் தங்களுக்கு ஓட்டுப் பிரசாரம் செய்யவும் முதலியார் பெயரை விற்று தாங்கள் ஓட்டுப் பெறவும் அவருடைய தயவு வேண்டியிருப்பதால் அவரை ஏமாற்று முகத்தான் ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டுமே யென்றும், இல்லாவிட்டால் முதலியார் தனக்கு ஏதாவது...

சட்டசபையை விட்டு வெளிவந்த               ‘வீரர்’களின் செய்கை 0

சட்டசபையை விட்டு வெளிவந்த               ‘வீரர்’களின் செய்கை

சட்டசபையில் ஒரு பலனும் இல்லை என்றும், சட்டசபையிலிருந்து கொண்டு சர்க்காரை எவ்வளவு கெஞ்சிக் கூத்தாடியும் சர்க்கார் மனம் கொஞ்ச மாவது இளகவில்லை என்றும், ஆதலால் இனி சட்ட சபையிலிருப்பது அவ மானம் என்றும், இந்த சர்க்காரின் யோக்கியதையை எடுத்து வெளியில் சொல்லப் போகிறோம் என்றும் வீரப்பிரதாபம் பேசிவிட்டு வெளியில் வந்த ‘வீரர்கள், என்ன செய்கிறார்களென்று பார்த்தால், மறுபடியும் சட்டசபைக்குப் போக ஓட்டர்களிடம் போய் எங்களை சட்டசபைக்கு அனுப்பினால் நாங்கள் உங்களுக்கு சாதித்து விடுகிறோம் என்று ஓட்டுப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். இம்மட்டோடு நிற்கிறார்களா வென்று  பார்த்தால், வீரப்பிரதாபம் பேசி, விட்டு விட்டு வந்த சட்டசபைக்கு அடுத்த கூட்டத்திற்கே போகிறார்கள். ஒரு கூட்டத்தின் பிரயாணப் படியை வாங்காமல் இருப்பதற்கு நமது ‘வீரர்(?)’ களுக்கு மனம் வரவில்லை. இதை அறிந்து “அகில இந்திய ஒப்பற்ற தலைவர்(?)” திரு. சீனிவாசய்யங்கார் போகும்படி உத்திரவு கொடுத்துவிட்டார்; அகில இந்திய காங்கிரஸ் காரியதரிசி திரு. எ.ரெங்கசாமி ஐயங்கார்...

முஸ்லீம்கள்  “சுதேசமித்திர”னும் “ஸைபுல் இஸ்லா”மும் 0

முஸ்லீம்கள் “சுதேசமித்திர”னும் “ஸைபுல் இஸ்லா”மும்

தென்னாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை பொறுமையோடு ஜாக்கிரதையாய் கவனித்து வந்த “ஸைபுல் இஸ்லாம்” பத்திரிகையானது ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களைப் போலும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களைப் போலும் திடீரென்று ஒரு வெடிகுண்டைப் போட்டு விட்டது. அதாவது, “மாகாணச் சட்டசபைகள் இந்தியா சட்டசபைகள் முதலிய வற்றிற்கு முஸ்லீம் பிரதிநிதிகள் தங்களது சமூகத்தின் சார்பாக நிற்பது நலமா, அல்லது சுயராஜ்யக் கட்சியாரின் சார்பாக நிற்பது நலமா?”  என்றும் , திருச்சி மௌலானா ஸையத்  முர்த்தூஸா சாஹிபு அவர்கள், முதலில் சுயராஜ்யக் கட்சிக்கு எதிராக நின்று இந்தியா சட்டசபை ஸ்தானம் பெற்ற பிறகு சுயராஜ் யக் கட்சியில் சேர்ந்ததைப் பற்றியும், எல்லைப்புற முகமதியர்களுக்கு சீர்திருத்தம் வேண்டுமென்று மௌலானா தீர்மானம் கொண்டு வந்த காலத்தில் அதை சுயராஜ்யக் கட்சியார் எதிர்த்ததின் காரணமாய் சுயராஜ்யக் கட்சியை விட்டு விலக்கிக் கொள்ளும்படி மௌலானாவைக் கேட்டுக் கொண்டிருக்க இப்போது மறுபடியும் சுயராஜ்யக் கட்சியில் மௌலானா சேர்ந்திருப்பதின் காரணமென்ன வென்றும்  இம்மாதிரி சுயராஜ்யக்...

நமது பார்ப்பனர்                                                                 “இரட்டை ஆட்சி” யைக்                                     கொல்ல முயல்வதின் இரகசியம் 0

நமது பார்ப்பனர் “இரட்டை ஆட்சி” யைக் கொல்ல முயல்வதின் இரகசியம்

“இரட்டை ஆட்சி”யென்றால் என்ன என்பது நமது ஜனங்களில் அனேகருக்குத் தெரியாதென்றே சொல்லவேண்டும். இரட்டை ஆட்சியைத் தகர்க்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லும்போது பார்ப்பனரல்லாத பாமர மக்களும் அரசியல் நடை முறையினை அறியாத பல காங்கிரஸ்காரர், பிரசாரகர் என்று சொல்லிக் கொள்பவரும், இரட்டை ஆட்சி என்பதை ஒரு இராணுவ ஆட்சியென்றும் வெள்ளைக்காரரே நேரிலிருந்து செய்யப்படும் காரியமென்றும் இதை ஒழித்துவிட்டால் அரசாங் கம் நம் கைக்கே வந்துவிட்டதென்றும் நினைத்துக் கொண்டு, கூடவே ஒத்துப் பாடுகிறார்கள். இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிற பார்ப்பனர்கள் இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு என்ன செய்வதென்று இது வரையில் ஒரு வார்த்தையும் சொல்லவேயில்லை. பார்ப்பனர்களுக்கு விபூஷ ணாழ்வார் போல் விளங்கின தேசபந்து தாஸரவர்கள் இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு என்ன செய்வதென்று சொல்லவேண்டிய அவசியமேற்பட்ட காலத்தில் விண்ணவர்க்கு விருந்தினராகி விட்டார். ஆதலால் இரட்டை ஆட்சி என்ன வென்பதும், அதை அழித்த பிறகு என்ன செய்ய வேண்டு...

கோபியில் மா பெருங்கூட்டம் 0

கோபியில் மா பெருங்கூட்டம்

சகோதரர்களே! சில தினங்களுக்கு முன் இந்த இடத்தில் நடந்த மகாநாட்டில் பலர் என்னை வாயில் வந்தபடி திட்டியதாகக் கேள்விப்பட்டேன். அதைச் சகிக்காத சில பிராமணரல்லாதார் என்னை இங்கு வந்து உண்மை விஷயங்களைப் பற்றி பேசவேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் இன்று நாங்கள் வந்திருக் கிறோம். முன்னால் வந்தவர்கள் நடந்து கொண்டது போல் நாங்கள் இங்கு யாரையும் திட்டுவதற்கு வரவில்லை; அந்த எண்ணமுமில்லை. ஸ்ரீமான் தண்டபாணிப் பிள்ளையவர்கள் தமது பிரசங்கத்தில் நமது நாட்டிற்கு பிராமணர்களால் ஏற்பட்டிருக்கும் கொடுமையைக் குறிப்பிட்டார். அவர் எடுத்துக்காட்டிய வித்தியாசங்களைத் திருத்த வேண்டுமென்கிற ஆசையினா லேயே பிராமணர்களால் நமது சமூகத்திற்கு நேர்ந்த ஆபத்துகளைச் சொன் னார். மற்றவர்களெல்லாம் தன்னை நல்லவன் என்று சொல்ல வேண்டுமென் கிற சுயநலத்தோடு அவர் பேசவில்லை. எடுத்துக்காட்டிய குற்றங்கள் நீங்க வும், வகுப்புப் பிணக்குகள் ஒழியவுமே அவர் குறிப்பிட்டுப் பேசினார். வகுப்புப் பிணக்கு தற்காலத்தில் வகுப்புப் பிணக்குகள் இல்லையென்று மறைத்து வைத்துப் பேசுவதில் பலனில்லை. நம் திரேகத்தில்...

கோபியில் திரு. சீனிவாசய்யங்கார் நாடகக் கம்பெனி 0

கோபியில் திரு. சீனிவாசய்யங்கார் நாடகக் கம்பெனி

கோபிசெட்டிபாளையம் என்பது பல பிரபல குடியான மிராசுதாரர் களை யுடையது. அங்குள்ள பூமிகள் ஆதியில் அந்த தாலூகா பார்ப்பன ரல்லாத வேளாளர்களுக்கே யிருந்து வந்தது. இப்பொழுதோ அவை ஏறக்குறைய முழுவதும் அடமானம், போக்கியம், கிரயம் மூலியமாய் கோபி பார்ப்பனர்களைச் சேர்ந்திருப்பதுடன் மிகுதியும் சேலம், கோயமுத்தூர், சென்னை முதலிய ஜில்லாக்களில் இருக்கும் பார்ப்பன வக்கீல்களுக்கும், உத்தியோகஸ்தர்களுக்குமே சொந்தமாயிருக்கிறது. குடித்தனக்காரர்கள் இந்தப் பார்ப்பனர்களை ‘சுவாமிகளே’ என்று கூப்பிட்டுக்கொண்டு அவர் கள் பின்னால் சுற்றுகிறவர்களாகவேயிருக்கிறார்கள். அல்லாமலும் பெரும் பாலும் இந்தக் குடியானவர்களை தப்பு வழிக்குக் கூட்டிபோவதும் வக்கீல் வீட்டுக்குக் கூட்டிப் போவதும் சூதாடக் கூட்டிப்போவதும், அவர்கள் கலி யாண காலங்களில் அவர்களுக்கு வெளி ஊர்களில் இருந்து தாசி, வேசிகளையும் பார்ப்பன வித்வான்களையும் அழைத்துவரச் செய்து அவர் களுக்கு ஆயிரம் பத்தாயிரமாகச் செலவு செய்யச் செய்வதும் சிலர் அவர் களிடம் தரகு வாங்குவதுமாகிய இவைகளினால் குடியானவர்களைக் கடன் கரராக்கி சிலரைப் பாப்பராக்கி அவர்கள் பூமிகளை எழுதிவாங்குவதும் இந்த...

இது என்ன மானக்கேடு 0

இது என்ன மானக்கேடு

சென்னைக் கார்ப்பரேஷனில் சுயராஜ்யக் கட்சித்தலைவர் ஸ்ரீமான் சாமி வெங்கடாஜலம் செட்டியார் புளுகுவதில் கோவை ஸ்ரீமான் சி.வி.வெங் கட்டரமணய்யங்காரை ஜெயித்துவிட்டார். ஸ்ரீ ஐயங்கார் முதலில் தனது தென்னை மரத்தில் கள்ளுக்கு முட்டியே கட்டவில்லை என்றார். பிறகு தெளுவுக்கு மாத்திரம் முட்டி கட்டினதாய்ச் சொன்னார். “சென்ற வருஷம் கோபி மகாநாட்டில் தென்னை மரங்களை ஐந்து வருஷக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டேன். குத்தகைக்காரன் கட்டினால் நான் என்ன செய்யட்டும் என்று சொன்னீரே இப்பொழுது அடியோடு இல்லை என்கிறீரே இது என்ன பொய்” என்று கேட்க தலை குனிந்து கொண்டார். கடைசியாக வேறு வழி யில்லாத போது “நாயக்கர் என்னை மோட்டார் கார் கேட்டார், நான் கொடுக் காததற்காக என்னைக் கெடுக்கப் பார்க்கிறார்” என்று அழுதார். நமது சென்னைக் கார்ப்பரேஷன் தலைவர் சாமிவெங்கிடாசலம் செட்டியாரோ கார்ப்பரேஷன் பணத்தில் தன் வீட்டுக்கு டெலிபோன் வைத்துக் கொண் டதைப் பற்றி கேட்டால் சர்.பி.தியாகராய செட்டியார் வைத்துக் கொண்டார், அதனால் நானும் அப்படியே...

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் வெற்றி 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் வெற்றி

தாழ்ந்த வகுப்பாருக்கும் தொழிலாளர்களுக்கும் தனிப் பிரதிநிதித்து வம் ஏற்படுத்த வேண்டும் என்பதை நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ தங்கள் சூழ்ச்சியின் மூலம் எதிர்த்தும், ஸ்ரீமான் ஜயவேலு போன்றவர்களை விலைக்கு வாங்கி தங்களுடன் சேர்த்துக்கொண்டு தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று சத்தம் போடச்செய்தும், சர்க்கார் அவ் வகுப்புக்கென்று பிரதிநிதித்துவம் கொடுக்க பார்லிமெண்டில் சம்மதித்து விட்டார்கள். தொழிலாளர்களுக்கும் அதுபோலவே பார்ப்பனர்களின் எவ்வ ளவோ சூழ்ச்சிகளை மீறி தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கத் தீர்மானித்து விட்டார்கள். இதைப்பார்த்த பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் சூழ்ச்சிகளும் முட்டுக்கட்டைகளும் பலிக்காமல் போய்விட்டதை மூடிவைத்துவிட்டு தொழிலாளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பார்களுக்கும் நல்ல பிள்ளைகள் போல் “இனி சும்மாயிருக்கக் கூடாது; அந்தந்த வகுப்பார் வற்புறுத்த வேண் டும்” என்று “கோழி திருடியும் கூடக் குலாவுவது” போல் ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் எழுதுகின்றன. எப்படி இருந்த போதிலும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கிடைப் பதற்கு யார் எந்த வகுப்பார் உதவியாயிருந்தா லும், எந்த வகுப்பார் விரோதமாயிருந்தாலும், இனி...

* பட்டங் கூடாது 0

* பட்டங் கூடாது

தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. எஸ். ஸ்ரீநிவாச ஐயங்காருக்கு திரு. கல்யாணசுந்திர முதலியார் காங்கிரஸ் கமிட்டிக் குதான் கொண்டுவர இருக்கும் தீர்மானத்தைப்பற்றி எழுதுவதாவது.- அன்பார்ந்த தலைவரே, வணக்கம். வரப்போகுஞ் சென்னைச் சட்ட சபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சித் தொடர்பு கொண்டு அபேட்சகராக நிற்கும் சகோதரருள் சிலர் பட்டஞ் சுமப்பது பற்றியும், அரசாங்கத்தார் தயவால் நியமனம் பெற்றிருப்பது பற்றியும், கதருடையில் பற்றிழந்திருப்பது பற்றியும், தமிழ்நாட்டு அன்பர் சிலர் கடிதம் விடுத்திருக் கிறார். அதைப்பற்றிப் பொது ஜனங்கட்கு ( 11 – 6 – 26 ) “நவசக்தி” வாயி லாகப் பதிலிறுத்தேன். அப் பதிலை நோக்குமாறு தங்களை வேண்டுகிறேன். தங்களைப்போல மற்ற அபேட்சகர்களுமிருந்தால் ஐயப்பாட்டிற்கு இடம் ஏற்படல் அரிது. சில அபேட்சகர்கள் பட்டதாரிகளாகவும், அரசாங்கத் தார் தயவால் நியமனம் பெற்றவர்களாகவும், கதரில் பற்றில்லாதார்களாகவும் இருத்தல் உண்மை. இவர்கள் நாளை பதவி ஏற்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி? இவர்கள் பட்ட...

இனி தாமதம் வேண்டாம் 0

இனி தாமதம் வேண்டாம்

தற்கால காங்கிரஸையும் சுயராஜ்யக் கட்சியையும் பார்ப்பன ஆதிக்கத் திற்காக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களால் சிருஷ்டிக்கப்பட்ட சூழ்ச்சி ஸ்தாபன மென்று பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். ஆனால் அது சமயம் சிலர் நம்மீது காய்ந்து வந்தார்கள். எனினும் சீக்கிரத்தில் நாட்டிற்கு உண்மை நிலை வெளியாகுமென்றே அவற்றில் கவனம் செலுத்தாமல் நமது கருத்தை ஒளியாது வெளியிட்டு வந்தோம். இப்போது நமது கருத்தைத் தழுவி மற்றும் இரண்டொரு ஆதரிப்புகள் நேர்ந்திருப்பது பற்றி நாம் கழிபேருவகை அடைகின்றோம். அவ்விரு பெரும் ஆதரிப்புகளும் திருவாளர்களான திரு. வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் ஆகியவர் களின் உண்மை உணர்ச்சிகளினின்றி எழுந்தவைகளேயாகும். திரு. முதலியாரவர்கள் பார்ப்பனத் தலைவரான திரு. சீனிவாசப் பார்ப்பனருக்கு விடுத்துள்ள இறுதிக் கடிதத்திலும், பார்ப்பனக் கமிட்டியான காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியுள்ள தீர்மானத்திலும் * (தீர்மான நகலை மற்றோர் பக்கத்தில் காண்க) தொக்கியிருப்பது என்ன? தெளிந்த சிந்தையுடன் சுருக்கமாயும் Žநுட்பமாயும் நோக்குங்கால் அதன் உண்மை புலனாகும். அஃதாவது “தங்களது...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்                                     II 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் II

சென்ற வாரத்திற்கு முன் 5-ம் இதழ் தலையங்கத்தில் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஐ’ என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி லால்குடியில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி கூறின ஆnக்ஷபனைகளை 37 பாகங்களாக வகுத்து, அவற்றுள் முதல் 12 பாகங்களுக்கு மட்டிலும் தக்கவாறு பதில் எழுதியிருந்தோம். மிஞ்சிய 25 பகுதிகளுக்கும் இவ்வாரம் சில எழுத முற்பட்டுள்ளோம். அவையாவன:- 13 – வது, ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, தற்சமயம் நடக்கும் வகுப்பு மகாநாடு களைப் பார்த்தால் அரசாங்க விஷயமாக யார் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்கிறார். இதை தைரியமாய் ஒப்புக்கொண்டதற்கு நன்றி செலுத்துகிறோம். இவற்றிலிருந்து நாடெங்கும் வகுப்புணர்ச்சி மலிந்திருப்பதும் அக்காரணத் தால் அரசாங்கத்தைப் பற்றி ஜனங்களுக்கு அவ்வளவு கவலை இல்லை என்பதும் புலனாகிறது. ஆதலால் ‘இரண்டொருவர் தங்களது சுயநலத்திற்காக வகுப்பு துவேஷத்தைக் கிளப்பி விடுகிறார்களேயல்லாமல் பொது மக்களிடம் அவ்வுணர்ச்சி இல்லை’ என்று பிராமணப் பத்திரிகைகள் சொல்லுவது யோக்கியப் பொறுப்பற்றத்தனமென்பதும், நாடு பூராவும் அதே கவனத்தில் இருக்கிறதென்பதும்...

தமிழர் கடமை ஸ்ரீமான் எஸ்.சீனிவாச ஐயங்கார்  ராஜீனாமா செய்வாரா?  இல்லாதவரை அவரை ராஜீனாமா                 செய்யும்படி வற்புறுத்த வேண்டும்  	-சித்திரபுத்திரன் 0

தமிழர் கடமை ஸ்ரீமான் எஸ்.சீனிவாச ஐயங்கார் ராஜீனாமா செய்வாரா? இல்லாதவரை அவரை ராஜீனாமா செய்யும்படி வற்புறுத்த வேண்டும் -சித்திரபுத்திரன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் சீனிவாச ஐயங்கார் தமிழ் மக்களின் மதிப்பை இழந்து விட்டார். பார்ப்பனரல்லாதாரை எப்படியாவது ஒடுக்கி, பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் கொண்டு மகாத்மா காந்தியின் கருத்துக்கு விரோதமாகவும், காங்கிரஸின் அடிப்படையான கொள் கைகளுக்கு விரோதமாகவும், வேண்டுமென்றே சர்க்கார் பட்டதாரிகளையும். சர்க்கார் நியமன கௌரவ உத்தியோகம் பெற்றவர்களையும் காங்கிரசுக்குள் புகுத்திக் கொண்டு, அவர்களை சட்டசபைக்கு அபேக்ஷகர்களாக நிறுத்தியும், அவர்களுக்கு ஓட்டு வாங்கிக்கொடுக்க காங்கிரஸையும், காங்கிரஸ் பணத் தையும் உபயோகித்துக் கொண்டு வருவதின் நிமித்தம் காங்கிரஸின் மதிப்பும் யோக்கியதையும் குறைந்து வருவதோடு காங்கிரஸை திருத்த முடியாத நிலைமையில் கொண்டு போய் விட்டுக் கொண்டிருப்பதாலும், காங்கிரஸ் என்பதே பொது நலத்திற்கல்லாமல் ஒரு வகுப்பாரை அழித்து, மற்றொரு வகுப்பாரை ஆதிக்கம் பெறச்செய்ய நிரந்தரமான ஆயுதமாக ஆக்கப்படுகிற படியாலும், தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத பெரும்பான்மையோர்க்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் நம்பிக்கைக் குறைவு அதிகரித்துவிட்டது. ஆதலால் ஸ்ரீமான் அய்யங்கார் அவர்களைக் கண்ணியமாய்...

ஒரு சேதி  திருவாரூர் திருத் தியாகராஜரின்                            திருத்தேர் திருத் தீக்கிரையாயிற்று 0

ஒரு சேதி திருவாரூர் திருத் தியாகராஜரின் திருத்தேர் திருத் தீக்கிரையாயிற்று

தியாகராஜ பெருமானின் தேரானது 9.6.26 – ² தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக் கேட்க இந்துக்களில் பலர் மிகுதியும் துக்கப்படுவார்கள். ஆனால் நாம் அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும் விட மிகப் பெரியது திருவா ரூர் தேரேயாகும். இதை இழுத்துச் செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங் களும் 5000 த்துக்குக் குறையாமல் பதினாயிரம் ஆட்கள் வேண்டும். இவர் கள் படிச் செலவும் சுமார் 20,000 ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லலாம். தற்காலமுள்ள நிலைமையில் இவ்வளவு ஆர்ப்பாட்டம் எதற்கு? இதை நினைக்கும்போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது:- ஒரு குருவுக்கு நான்கு சிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குரு வானவர் கடையில் ஊசி வாங்கிக்கொண்டு வரும்படி தன் நான்கு சிஷ்யர் களிடம் கட்டளையிட்டார். அவர்கள் ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும் வாங்கிவர கட்டளையிட்டிருக்க ஒருவர் மாத்திரம் இதை எடுத்துப் போனால் கோபித்துக் கொள்ளுவார் என்று ஒரு...

ஞானோதயம் (உண்மை உணர்ச்சி) 0

ஞானோதயம் (உண்மை உணர்ச்சி)

சென்ற வாரம் தலையங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி லால்குடியில் செய்த பிரசங்கத்தை 37 பிரிவுகளாய்ப் பிரித்து அவற்றில் 12 பிரிவுகள் வரைக்கும் பதில் எழுதிவிட்டு மீதி 25 பிரிவுகளுக்கும் ‘நவசக்தி’க்கும் இவ்வாரம் பதிலெழுதுவதாயிருந் தோம். அல்லாமலும் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் கம்பெனியார் கோபிச் செட்டிபாளையத்தில் நடத்திய ஓட்டு வேட்டை நாடகத்தைப் பற்றியும் இவ்வாரம் எழுத நினைத்திருந்தோம். நாம் கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தனது ‘நவசக்தி’ தலையங்கத்தில் “பட்டம் கூடாது” என்கிற தலைப்பில் தனது கையொப்பத் துடன் எழுதியுள்ள விஷயமும், அதை அநுசரித்து ஸ்ரீமான் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்கள் பத்திரிகையாகிய ‘தமிழ்நாடு’ பத்திரிகையின் தலையங்கத்தில் ‘பட்ட வேட்டை’ என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள விஷயமும் இவ் வாரத்திய முக்கிய சம்பவமாகக் கருதி ‘நவசக்தி’க்கு பதில் எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து முன் குறிப்பிட்ட விஷயங்களை ஒத்தி வைத்துவிட்டு இவற்றைப்பற்றி எழுதவேண்டிய அவசரமும்...

பிராமணரல்லாதார் இயக்கத் தத்துவம்  தற்கால காங்கிரசால்                 பிராமணரல்லாதாருக்கு வந்த கெடுதி 0

பிராமணரல்லாதார் இயக்கத் தத்துவம் தற்கால காங்கிரசால் பிராமணரல்லாதாருக்கு வந்த கெடுதி

சகோதிரர்களே! இன்று கூட்டப்பட்ட கூட்டமானது பிராமணரல்லாதார் என்கிற ஒரு வகுப்பு சம்பந்தமான கூட்டம். இக்கூட்டத்தில் நான் இன்று பிராமணரல்லாதார் வகுப்பு முன்னேற்றம் என்கிற விஷயத்தைப் பற்றி பேசப் போகிறேன். மாறுதல் வேண்டாதார் வகுப்பைப் பற்றி பேசலாமா? மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை காங்கிரஸ்காரன், அதிலும் வைதீக ஒத்துழையாதாரரன், மாறுதல் வேண்டாதவன் என்று சொல்லப்பட்ட ஒருவன் வகுப்பைப் பற்றி பேசுவது பொருந்துமா என்று சிலருக்குத் தோன்ற லாம். வைதீக ஒத்துழையாமைக்காரன் என்றால், ஒருவன் கழுத்தை ஒருவன் அறுக்கும்போது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பவனல்ல, ஒருவன் சொத்தை ஒருவன் கொள்ளை அடித்துக்கொண்டு போனால் வழியைத் திறந்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்பவனல்ல என்பதை முதலில் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அல்லாமலும் மகாத் மாவின் காங்கிரஸும் அவரது ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்டமும் காங்கிரசிலிருந்து வெளிப்பட்டு மறைந்து கொண்டும் வருகிறது. நிர்மாணத் திட்டங்கொண்ட ஒத்துழையாமைக் காங்கிரஸின் போது வகுப்பு விஷயத் தைப் பற்றி எவரும் யோசிக்கவேயில்லை. அதில் உயர்வு-தாழ்வு என்கிற...

முஸ்லிம்களும் சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகளும் 0

முஸ்லிம்களும் சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகளும்

“படிக்கிறது பகவத்கீதை குடிக்கிறது குடக் கள்” என்னும் கதையாய் சுயராஜ்ஜியக் கட்சியாரும் அவர்களது பத்திரிகைகளும் நடந்து வருகின்றன. ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைப்பட வேண்டும், அதற்காகவே நாங்கள் பாடுபடுகிறோம் என வாய் வேதாந்தம் பேசி வரும் சுயராஜ்யக் கட்சியார், முஸ்மிம்களுக்கு முரணாய் நடந்து வருவதையும்; எல்லைப்புற மாகாண சீர்திருத்தத் தீர்மானத்தில் முஸ்லீம்களுக்கு விரோதமாய் நடந்து கொண்டதையும், கல்கத்தா நகர டிப்டிமேயராக இருக்கும் ஜனாப் எச்.எஸ். ஷுஹரவர்தி என்னும் முஸ்லீம், சுயராஜ்யக் கட்சி அங்கத்தினராயிருந்தும் அவரை டிப்டி மேயர் பதவியினின்று விலக்க வேண்டு மென்ற கருத்துடன் மற்ற சுயராஜ்யக் கட்சி ஹிந்துக்கள் ஐரோப்பியர்களை துணைக்கு அழைத் துக்கொண்டு செய் துள்ள தீர்மானத்தையும், சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகள் முஸ்லீம்களை மாற் றாந்தாய்க் குழந்தைகளைப் போல் பாவித்து எழுதி வரு வதையும் நாம் அறிவதைவிட முஸ்லீம்கள் நன்றாய் அறிவார்கள். நாட் டிலே வீறு கொண்டு முழங்கிய ஒத்துழையாமையை ஒடுக்குவதற்குத் தன்னால் ஏற்படுத்தப்பட்ட சுயராஜ்யக் கட்சியில் முகமதி யர்களையும் சேர்த்து...

எலெக்ஷன் தந்திரம் திருப்பூர் கால்நடைக் காட்சி – சித்திரபுத்திரன் 0

எலெக்ஷன் தந்திரம் திருப்பூர் கால்நடைக் காட்சி – சித்திரபுத்திரன்

திருப்பூர் கால்நடைக் காட்சியானது 2,3 வருஷங்களுக்கு முன்னால் சென்ற சட்டசபைத் தேர்தலின்போது நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு இப்போது இவ்வருஷ சட்டசபை எலெக்ஷன் போதுதான் கூட்டப்பட்டிருக் கிறது. அப்படிக் கூட்டப்பட்ட போதிலும் அதில் நடத்தப்பட்ட சடங்குகள் ஒவ் வொன்றும் சட்டசபை மெம்பர்களின் ஓட்டுப் பிரசாரத்தில் குறி கொண்டே நடத்தப்பட்ட மாதிரியாகவே யிருந்தது. அந்தக் குறியின் வேகத்தில் வழக்க மான ஒழுங்கு முறைகள்கூட சிதறப்பட்டு போனதோடு மக்களுக்கு இயற்கை யாய் இருக்கவேண்டிய அபிமானமும் பறந்தோடி விட்டது. விவசாயம் என்பது மாற்றப்பட்ட இலாக்காக்களில் ஒன்றான அபி விருத்தி இலாகாவைச் சேர்ந்தது. அதை நிர்வகித்து வருகிறவர் பிராமண ரல்லாதார் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீமான் சர்.டி.என். சிவஞானம் பிள்ளை அவர்கள். இப்படி இருக்க கவர்னர் அவர்களைக் கொண்டு கால்நடைக் காட்சி யைத் திறக்கச் செய்வதும் ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர் களைக் கொண்டு பரிசு வழங்கச் செய்வதுமான காரியங்கள் நடத்தப்பட்டி ருக்கிறது. முன் ஒரு சமயம் இதே...

பிராமணப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம் 0

பிராமணப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம்

நம் நாட்டு பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிராமண நிரூபர் களும் செய்து வரும் அயோக்கியத்தனங்களைப் பற்றி நமது பத்திரிகையில் கடுக ளவு சுத்த ரத்தம் உள்ளவர்களுக்கும் இனி இம்மாதிரி நடக்காமலிருக் கும்படியும், மானம், வெட்கம் வந்து தீரும்படியும் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். அநேகக் கூட்டங்களிலும் நன்றாய்ப் படும்படி பேசியும் வந்திருக்கிறோம். வேறொரு கூட்டத்தாராய் இருந்தால், ஒன்று யோக்கியர் களாகி இருப்பார்கள் அல்லது தற்கொலையாவது புரிந்து கொண்டிருப் பார்கள். ஆனால், என்ன சொன்னாலும் தங்கள் காரியமானால் போதும் என்கிற எண்ணத்தின் பேரில் மற்றவர்களை எப்படியாவது ஒழித்து வயிறு வளர்ப்பதற்கு மனுஷ சுபாவத்தையே உதறிவிட்டு மேலும் மேலும் அயோக் கியத்தனமான காரியங்களையே செய்து வருகிறார்கள். இந்த மானமற்ற, கூட்டத்தை நமது நாட்டில் இப்படியே வைத்துக் கொண்டு நாம் எப்படி விடுதலையடைய முடியும்? ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் நாகை தொழிலாளர் கூட்டத்தில் பேசியவற்றைப் பற்றி ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைகள் அதன் நிரூபர்கள் எழுதுகிறார்கள் என்று...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்                              I 0

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் I

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஸ்ரீமான் சத்தியமூர்த்தி திருச்சி – லால்குடியில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் தலைமையின்கீழ் ஒரு பிரசங்கம் செய்ததாக ஜூன் முதல் தேதி ‘மித்திரனில்’, ‘வகுப்பு வேற்றுமை யின் கேடுகள்’ என்ற தலைப்பியின் கீழ் பத்தி பத்தியாக எழுதப்பட்டி ருக்கிறது. அவற்றில் அவர் சொல்லும் ஆnக்ஷபனைகளாவன :- 1. இந்தியாவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமானது லார்ட் மிண்டோ, காலஞ்சென்ற கோகலே இவர்களுடைய ஆலோசனையால் ஏற்பட்டது. 2. முகமதியரைப் பிரீதி செய்ய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் இறங்கிவிட்டார்கள். 3. கோகலே ஒப்புக்கொள்ளாதிருந்தால் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் ஏற்பட்டிருக்காது. 4. வகுப்புவாரியை லார்ட் மிண்டோ ஒப்புக் கொண்டதற்கு லார்ட் மார்லி கோபித்துக் கொண்டிருக்கிறார். 5. இதனால் ஒவ்வொருவரும் தன் தன் வகுப்பு நலனை நாடுகிறார்களே அல்லாமல் சமஸ்தானத்தின் சார்பாக பற்றைக் காட்டுவதில்லை. 6. சில்லரை வகுப்பினர் கிராம žயூனியன் முதற்கொண்டு, ராஜாங்க சபை வரை ஒவ்வொன்றுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருகிறார்கள். 7. கவர்ன்மெண்ட் நிர்வாக சபையில் கூட...

தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள் 0

தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி ‘குடி அரசு’ பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன் னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்? தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதி யை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட் டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ , ‘மகமதியர்’, ‘கிறிஸ்தவர்’, ‘ஆங்கிலோ இந்தியர்’ என்கின்ற பிராமணரல்லாதவருக் கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவு வதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும், விளக்குமாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு,...

திருவாங்கூரில் பத்திரிக்கைச் சட்டம் 0

திருவாங்கூரில் பத்திரிக்கைச் சட்டம்

திருவாங்கூர் சமஸ்தானத்தில் கொஞ்ச காலமாக சில புதுமைகள் நடந்து வருகின்றன. அவற்றுள் அரசாங்கம் சமீபத்தில் பத்திரிகைகள் மீது தொடுத்துள்ள பாண முறையும் ஒன்றாகும். திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு தாய் அரசாங்கமாய் விளங்கும் இந்திய அரசாங்கத்தில் கூட இத்தகைய சட்டம் இது சமயம் இல்லையென்றே சொல்லலாம். இப்பொழுது செய்துள்ள சட்டப்படி திருவாங்கூர் சமஸ்தானத்தில் பத்திரிகை நடத்துவோர் ஜாமீனாக முதலில் ரூபாய் 500 கட்ட வேண்டும். பத்திரிகையில் ஏதாவது குற்றங் காணப்பட்டால் ஜாமீன் தொகையான ஐநூறு ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும். அதன் பிறகு அப்பத்திரிகை நடை பெற வேண்டுமானால், அரசாங்கம் சம்மதித்தால் ரூ. 2,500 ஜாமீன் கட்ட வேண்டும். மறுபடியும் குற்றங் காணப்பட்டால் அத்தொகை பறிமுதலாவ தோடு பத்திரிகையும் அழிந்தொழிய வேண்டியதுதான். இதுவே இப்பொழுது திவானாகயிருந்து லீவின் பேரில் சென்றிருக்கும் திவான் வாட்ஸ் துரை மகனா ரின் பெரு முயற்சியால் பிரயோகிக்கப்பட்ட அருமையான சட்டம். சுதந்திரத்தையும் உரிமையையும் நோக்காகக் கொண்டே பத்திரிகை நடத்தப்படுவதாகும். பத்திரிகை நடத்த...

சுயராஜ்யக் கட்சி – சித்திரபுத்திரன் 0

சுயராஜ்யக் கட்சி – சித்திரபுத்திரன்

தென்னாட்டு அய்யங்கார் பிராமணர்களால் சுயராஜ்யக் கட்சி ஆக்கப் பட்டிருந்தாலும் அதற்குப் பிறப்பிடமாகவும் முதல் பலியாகவும் கொடுக்கப் பட்டது வங்காளமும் பிராமணர் வலையில் சிக்கி ஏமாந்த தேசபந்து தாசருமே யாகும். எப்படியோ, தேசபந்து தாஸ் தனது குற்றத்தை உணர்ந்து வருத்தப் படுவதற்கு முன்னும் உலகத்தார் திட்டும் வார்த்தைகள் தன் காதுக்கு எட்டு வதற்கு முன்னும் பரமபதமடைந்துவிட்டார். தென்னாட்டு பிராமணர்களும் அவருக்கு தென்னாட்டில் கோவில் கட்டி, உருவம் வைத்து, பிரதிஷ்டை செய்துவைத்து விட்டார்கள். விபூஷணஆழ்வார் உருவத்திற்கு வைணவக் கோவில்களில் கிடைத்திருக்கும் இடத்திற்கு மேலாகவே நமது தாஸர் உருவத் திற்கு “சுதேசமித்திரன்” ஆபீசில் இடம் கிடைத்து விட்டது. அதுமாத்தி ரமல்லாமல் நம்நாட்டு பிராமணச் சூழ்ச்சிக்கும் நமது தாஸர் வாழ்க்கையே அடிக்கடி “வேதக் கட்டளையாக” எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் பிறந்த வங்காளத்தில் தாஸர் வாக்கு சிரிப்பாய் சிரிக்கிறது. அவர் சிஷ்யர்களும் அவருடைய உபதேசங்களைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார் கள். கல்கத்தா இந்து முஸ்லீம் ஒப்பந்தமும் இந்து...

திண்ணைப் பிரசாரம் 0

திண்ணைப் பிரசாரம்

ஸ்ரீமான் ஊ.ஏ. வெங்கிட்டரமணய்யங்காரின் தேர்தல் சூழ்ச்சிகளைப் பற்றியும் அது சம்பந்தமான அவரது தரும விளம்பரத்தைப்பற்றியும் பல விஷயங்கள் “குடி அரசில்” தோன்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். ஸ்ரீமான் அய்யங்காருக்கு பொது ஜனங்கள் திருப்தி அடையதக்கவண்ணம் இவைகளுக்கு பதில் சொல்ல கொஞ்சமும் சக்தியில்லாமல் போய்விட்ட தால் பிராமண தந்திரத்தை உபயோகித்து பொது ஜனங்களை ஏமாற்றப் பார்க்கிறார். அய்யங்கார் தென்னை மரத்தில் கள்ளு இறக்கப்படுகிறது என்று எழுதியதற்கு நாளதுவரை அய்யங்கார் திருவாக்கால் யாதொரு தகவலும் இல்லவே இல்லை. கூலிக்கு ஆள்களைப்பிடித்து, தென்னை மரத்தில் இப்போது கள்ளு முட்டிகள் இல்லை என்றும், இந்த ஒரு வருஷத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தோப்பில் கள்ளு கலயம் கட்டியதை ரூபிப்போருக்கு 100 ரூபாய் இனாம் கொடுக்கப்படும் என்றும் அய்யங்காரின் நடத்தைக்கு பொறுப்பில்லாத யாரையோ பிடித்து எழுதச்சொல்லுகிறாரே தவிற, ‘எனது தோப்புகளில் நான் கள்ளுக்கு மரம் விடவில்லை’ ‘அவற்றில் ஒன்றிலும் முட்டி கட்டினதில்லை’ என்று இதுவரை சொல்லவே இல்லை. அவரது தர்ம விளம்பரத்தைப்...

தொழிலாளர் சங்கம் தூய்மையுற வேண்டும் அரசியல் கட்சிக்குள் அடைக்கலம் புகலாகாது,             தன் கையே தனக்குதவி 0

தொழிலாளர் சங்கம் தூய்மையுற வேண்டும் அரசியல் கட்சிக்குள் அடைக்கலம் புகலாகாது, தன் கையே தனக்குதவி

சகோதரர்களே! நான் இதுவரை எந்த தொழிலாளர் சங்கத்திலும் பேசியதேயில்லை. டாக்டர் வரதராஜுலு நாயுடுவுடன் இரண்டொரு சங்கங்களுக்குப் போயிருக் கிறேன். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மகாநாட்டில் உபசரணைத் தலைவ ராக இருந்து இரண்டொரு வார்த்தைகள் பேசியிருக்கிறேன். தொழிலாளர் சங்கம் பொதுவாய் தொழிலாளர் சங்கம் என்றாலே எனக்கு அதனிடத்தில் விருப்பமிருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்று வதில்லை. சில வெறும் வெளி ஆசாமிகள் அதை தங்கள் நன்மைக்கும் கீர்த் திக்கும் ஏற்படுத்திக் கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம். அல்லாமலும் நமது நாட்டில் உண்மையான தொழிலாளிகளே கிடையாது. தொழிலாளர் யார்? நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோ ரெல்லாம் தொழிலாளிகளல்ல. அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தான் . தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்கான ஒரு தொழிலைக் கற்று அத் தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து, அதன் பலன் முழுவ தையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான முறையில் தொழில்...

மதமும் மததர்ம பரிபாலனமும் சென்னை ஹிந்துமத தர்ம பரிபாலனச்  சட்டமும் அதன் விரோதிகளும் 0

மதமும் மததர்ம பரிபாலனமும் சென்னை ஹிந்துமத தர்ம பரிபாலனச் சட்டமும் அதன் விரோதிகளும்

உங்களுடைய சங்கத்தின் ஐந்தாவது நோக்கம் மததர்ம பரிபாலனங் களை ஒழுங்காக நடைபெறச் செய்தல் என்பது. இது தற்காலம் நாடார் சமூகத் திற்கு மாத்திரமல்ல, இந்து மதத்திற்கே – இந்தியாவிற்கே – ஏன் உலகத்திற்கே மிகவும் அவசியமானது. கடவுள் என்றால் என்ன? குறிப்பாகவும் சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப் பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப் பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப் பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் இந்துக் கள் என்போர்களில் ஆயிரத்திற் கொருவருக்குக் கூட குறைந்த அளவு ஞானமுமில்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜன சமூகத்திற்கு கேடான காரியம் வேறெதுவும் இல்லை. நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்மைப் போல் மனித உருவத்தோடு இருப்பதாயும்; அதற்கு பெண்டாட்டி, பிள்ளை, தாய் , தகப்பன், வீடு வாசல், சொத்து சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது, சாந்தி, படுக்கை,...

ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவதாண்டு கொண்டாட்டம் 0

ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவதாண்டு கொண்டாட்டம்

அன்புள்ள வாலிப நாடார் சகோதரர்களே! தங்கள் சங்கத்தின் நோக்கங்களைக் காண எனக்கு மிகவும் சந்தோஷ மாயிருக்கிறது. முதலாவது நோக்கமாக “நாடார் சமூகம் அபிவிருத்தி அடை யும்படி செய்தல்” என்று வைத்திருக்கிறீர்கள். இதுதான் உண்மையான நாடாராய் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய காரியம். “நல்லாண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல்” என்று நாயனார் சொல்லியிருப்பதின் தத்துவம் இதுதான். ஒவ்வொரு சமூகமும் தன் சமூக முன்னேற்றத்தை சீர்திருத்திக்கொண்டு பிறகு எல்லாச் சமூகத்தின் நன்மை யையும் பொது நன்மையையும் கவனித்தால்தான் அது முறையாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் இருக்கும். அஃதில்லாமல் தங்கள் சமூகம் சுயமரியாதை அற்றதாகவும், தீண்டாத சமூகமாகவும் இருப்பதை லக்ஷியம் செய்யாமலும், அதைப் பற்றி உணர்ச்சியில்லாமலும், நான் தேசபக்தன், பொது ஜனசேவை செய்பவன் என்று சொல்லிக்கொண்டு பொது உரிமை, பொதுச் சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் பொருளற்றதும் அறியாமையும் தனது சுய நலத்திற்கும் சுயகீர்த்திக்கும் பாடுபடுவதுமே ஒழிய வேறல்ல. ஏனெனில் நமது நாடு எக்காரணம்...

பப்ளிக் சர்வீஸ் கமிஷன்  சர்க்கார் ஊழிய சம்மந்தமான விசாரணைச் சபை 0

பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சர்க்கார் ஊழிய சம்மந்தமான விசாரணைச் சபை

இந்தியாவில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் சம்பந்தமான விஷயத் தைப் பற்றி விசாரித்து அறிந்து தக்கபடி செய்வது என்ற பெயரை வைத்துக் கொண்டு அதற்காக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று ஒரு கமிட்டியை அரசாங் கத்தார் நியமித்து இருக்கிறார்கள். அக்கமிட்டிக்கு இந்தியர்களின் சார்பாய் – இந்துக்களின் சார்பாய் நியமிக்கப்பட்டிருக்கும் அங்கத்தினர் ஒரு தமிழ் நாட்டுப் பிராமணர். இந்தியாவிலிருக்கும் 33 கோடி ஜனங்களில் முக்கால் கோடி ஜனங்கள் கொண்ட வகுப்பார்களான ஒரு சிறு சமூகமான பிராமண கோஷ்டியில் இருந்து ஒருவரைப் பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர் இந்தியாவிலுள்ள மனிதவர்க்கத்திற்கே உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் ஜாதியைச் சேர்ந்தவர். அதிலும் ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்தவர். இந்தியர்களின் சர்க்கார் உத்தியோக சம்பந்தமான விஷயங்கள் இப்போது இவர் கையில்தான் அடங்கியிருக்கிறது. இனி இந்தியர்களின் தலை யெழுத்தையும் ஜாதகத்தையும் கணிப்பவர் இந்த பிராமணர்தான். சர்க்கா ராரும் எந்த ஆசாமியைப் பிடித்தால் தங்கள் சொல்படி ஆடுவாரோ, தாங்கள் எழுதி வைத்ததில் கையெழுத்துப் போடுவாரோ,...

மௌலானா முகமதலியின் மத பக்தி 0

மௌலானா முகமதலியின் மத பக்தி

மௌலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில் பேசும் போது இஸ்லாத்தை அழிக்க விரும்புவோரின் கையிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டுமென் றும் இதுசமயம் இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிறதென்றும் சொல்லி வருகையில் “நாம் இந்துக்களுடன் நேசபாவமாயிருக்கத் தயார். ஆனால் நம்மோடு சண்டைபோட இந்துக்கள் விரும்பும் பக்ஷத்தில் இந்தியாவிலுள்ள 7 கோடி முஸ்லீம்களும் 21 கோடி இந்துக்களைப் பணிய வைக்கமுடியும். நமது நபிகள் நாயகம் காலத்தில் 15 பேர் சேர்ந்து ஒரு சைனியத்தை ஜெயித்து விட்டார்கள். ஆகையால் 7 கோடி மகம்மதியர்கள் 21 கோடி இந்துக்களை ஜெயிப்பது கஷ்டமல்ல” என்று சொன்னாராம். இதை ‘சுதேசமித்திரன்’ இந்துக்களுக்கு மகம்மதியர்கள் பேரில் துவேஷம் உண்டாகும்படி ‘மௌலானா முகமதலியின் முழக்கம்’ என்கிற தலைப்பின் கீழ் இதை எழுதியிருக்கிறது. மௌலானா பேசியவைகளில் நமக்கொன்றும் ஆச்சரியமில்லை. மௌலானா கணக்கில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறோம். 21 கோடி இந்துக்களை அடக்க 7 கோடி முஸ்லீம்கள் தேவையில்லை. இதே 21 கோடி இந்துக்கள் என்போர்களை முக்கால் கோடிக்...

நிரூப நேயர்களுக்கு விண்ணப்பம் 0

நிரூப நேயர்களுக்கு விண்ணப்பம்

“குடி அரசு” பத்திரிகை மிகவும் குறைந்த அளவுள்ளது. அதில் 10 பக்கங்கள் விஷயங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் பல வர்த்தமானங் களும் நிரூபங்களும் வந்து குவிந்து பத்திரிகை ஏற்படுத்தியதின் கருத்தை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுத்துகிறது. நிரூபர்களும் வர்த்தமானம் தெரிவிப்பவர்களும் நமது பத்திரிகையை தினசரி என்று கருதிக்கொண்டிருக் கிறார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் நாம் உடனுக்கு டன் பிரசுரிக்கவில்லை என்று நிரூப நேயர்கள் நம்மீது வருத்தப்படாமல் இருக்கும்படி வேண்டுகிறோம். பல தேச வர்த்தமானங்களை நாம் பிரசுரிப்ப தில்லையென்றுகூட நம்மீது பல சந்தாதாரர்களுக்கு சலிப்பிருப்பதாய்த் தெரி கிறது. அவர்களும் நமது கருத்தையும் நிலையையும் அறிந்து மன்னிப் பார்கள் என்றே நம்புகிறோம். நமது பத்திரிகை வர்த்தமானப் பத்திரிகை அல்லவென்றும், பிரசாரப் பத்திரிகை என்றும் மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆதலால் நிரூபங்களாலும் வர்த்தமானங்களாலும் நமது பத்திரிகையின் உத்தேசத்தைக் கெடுக்காமலும் வர்த்தமானம் இல்லையே! என்று கருதி அலக்ஷியம் செய்யாமலும் இருக்கும்படி பிரார்த்திக்கிறோம். பத்திராதிபர் குடி அரசு – அறிக்கை –...

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 0

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப் பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத் திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற் கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டதுபோல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட்டு துரை மிகவும் நல்லவர். எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கரை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில் லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்க ளின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம். குடி அரசு – வேண்டுகோள் – 23.05.1926

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் 0

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்

ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் செங்கற்பட்டு ஜில்லாவில் பிராமணர்களுக்காக பிரசாரம் செய்து வருகையில் பல்லாவரத் தில் ஒரு பிராமணர் அக்கிராசனத்தின் கீழ் பிராமணர்களின் நற்சாக்ஷிப் பத்திரமான வரவேற்புப் பத்திரம் பெற்றுக்கொண்டு தனது திருவாக்கால் “மேல் நாட்டாருக்கு வயது 42, கீழ் நாட்டாருக்கு வயது 22; நமது நாட்டில் பஞ்சம் அதிகம்; ஆதலால் ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியாருக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள். அவர் அடாத செயல்கள் செய்வதால்தான் அவருக்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகிறேன். ஸ்ரீமான்கள் எம்.கே. ஆச்சாரியார் வகையறாக்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்று பேசினாராம். இவருக்கு ஆத்மா இருக்கிறதா என்பதே நமது சந்தேகம். ஐயோ! நமது முதலியாரின் புத்தி இப்படியும் சபலமாய்ப் போகுமென்று நாம் எந்தக் காலத்திலும் எதிர்பார்த்ததேயில்லை. ஸ்ரீமான்கள் எம்.கே.ஆச்சாரியார், சத்தியமூர்த்தி, எ.ரெங்கசாமி ஐயங்கார் வகையறாக்களைவிட – இவர்களது நாணயத்தைவிட – ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியார் எந்த விதத்தில் தாழ்ந்த வர்? நமது முதலியாருக்கு என்ன...

ஒத்துழையா நாற்றம் வீசும்               சுயராஜ்யக் கட்சி மெம்பர்களும் கோயமுத்தூர் ஜில்லா போர்டும் 0

ஒத்துழையா நாற்றம் வீசும் சுயராஜ்யக் கட்சி மெம்பர்களும் கோயமுத்தூர் ஜில்லா போர்டும்

கோயமுத்தூர் ஜில்லா போர்டின் கூட்டமொன்று பிரசிடெண்டு ராவ் சாஹிப் சி. எஸ்.இரத்தினசபாபதி முதலியார் அக்கிராசனத்தின் கீழ் கூடிற்று. இக் கூட்டத்திற்கு 40 அங்கத்தினர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில், ஸ்ரீமான் முதலியாரது நியமனம் பெற்ற பிரசிடெண்டு உத்தியோக காலத்தில் இந்தக் கூட்டம் கடைசி கூட்டமாகும். ஆதலால் ஸ்ரீமான் முதலியாருக்கு ஜில்லா போர்டு மெம்பர்களின் நன்றியறிதலைக் காட்டவும் வந்தனங் கூறவும் “சுயராஜ்யக் கட்சி அங்கத்தினர்கள்” உள்பட ஏறக்குறைய எல்லா மெம்பர் களுமே வந் திருந்தார்கள். அப்பொழுது இம்மாதம் 30- ²கோயமுத்தூருக்கு விஜயம் செய்யப்போகும் கவர்னர் துரை அவர்களுக்கு ஜில்லா போர்டின் சார்பாய் ஒரு உபசாரப் பத்திரம் படித்துக்கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் வந்துவிட்டது. அக்கூட்டத்தில் ஒத்துழையா நாற்றம் வீசும் சுயராஜ் யக் கட்சி மெம்பர்களான ஸ்ரீமான் ராவ் பஹதூர் டி.எ. இராமலிங்கஞ் செட்டியா ரும் ஜில்லா போர்டுக்கு சர்க்காரால் நியமனம் பெற்ற மெம்பரான ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரும் மெம்பர்களாய் ஆஜராகியிருந்தார்கள். உபசாரப் பத்திரத்தோடு போகாமல் உபசாரப் பத்திரத்திற்கு...

பட்டாபிஷேகம் மச்சான் இறந்தால் நல்லதாச்சு                          அவருடைய கம்பளி நமக்காச்சு – சித்திரபுத்திரன் 0

பட்டாபிஷேகம் மச்சான் இறந்தால் நல்லதாச்சு அவருடைய கம்பளி நமக்காச்சு – சித்திரபுத்திரன்

ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு எல்லா இந்தியத் தலைமைப் பட்டாபிஷேகம் ஆகிவிட்டது. ஆனால் அது இரண்டு மாதத்திற்கு என்று சொல்லப்பட்டாலும் காயமானதென்பதுதான் நமது அபிப்பிராயம். பண்டித நேரு இரண்டு மாதத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுகிறதாய்ச் சொல்லி, தனது விசேஷ அதிகாரத்தால் ஸ்ரீமான் ஐயங்காருக்குப் பட்டாபிஷேகம் செய்து தலைமைப் பதவியை அவர் தலையில் சூட்டிவிட்டுப் போய்விட்டார். இது மகாத்மா ஓய்வெடுத்துக் கொண்டது போலவேதான் முடியும். “வெற்றிமேல் வெற்றி ஏற்பட்டு, இரட்டை ஆட்சி மடிந்தவுடன்” அதற்குமேல் என்ன செய்வ தென்று தெரியாமல் ஸ்ரீமான் சி.ஆர்.தாஸ் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டார். சுயராஜ்யக் கட்சி வெற்றி அடைந்து காங்கிரசையே தனக்குள் ஐக்கியப் படுத்திக் கொண்டவுடன் இனி நமக்கு இங்கென்ன வேலை என்று மகாத்மா ஓய்வெடுத்துக் கொண்டார். அதோடு நிர்மாணத் திட்டங்களும் ஓய்வெடுத்துக் கொண்டன. இப்போது பண்டித நேரு ராஜி ஒப்பந்தம் முடிந்தவுடன் இனி எப்படி ஜனங்கள் முகத்தில் விழிப்பது என்று ஓய்வெடுத்துக் கொண்டார். இது எதற்காகவோ தெரியவில்லை. சட்டசபையை விட்டு...