“தமிழன்”

முன்னர் காலஞ்சென்ற திரு. அயோத்திதாஸ் பண்டிதரவர்களால் ‘‘தமிழன்’’ என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத்திற்குப் பின்னர் அப் பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடாத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பா ரற்று நின்று போயிற்று. மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப்ஸ், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத்திருக்கும் திரு. பி. எம். இராஜ ரத்தினம் அவர்களால் ஜுலை மாத முதல் வெளியிடப்படுமென தெரிவிக் கப்படுகிறோம். திரு. இராஜரத்தினம் அவர்களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறுமென நம்புகிறோம்.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 04.07.1926

You may also like...

Leave a Reply