முஸ்லிம்களும் சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகளும்

“படிக்கிறது பகவத்கீதை குடிக்கிறது குடக் கள்” என்னும் கதையாய் சுயராஜ்ஜியக் கட்சியாரும் அவர்களது பத்திரிகைகளும் நடந்து வருகின்றன. ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைப்பட வேண்டும், அதற்காகவே நாங்கள் பாடுபடுகிறோம் என வாய் வேதாந்தம் பேசி வரும் சுயராஜ்யக் கட்சியார், முஸ்மிம்களுக்கு முரணாய் நடந்து வருவதையும்; எல்லைப்புற மாகாண சீர்திருத்தத் தீர்மானத்தில் முஸ்லீம்களுக்கு விரோதமாய் நடந்து கொண்டதையும், கல்கத்தா நகர டிப்டிமேயராக இருக்கும் ஜனாப் எச்.எஸ். ஷுஹரவர்தி என்னும் முஸ்லீம், சுயராஜ்யக் கட்சி அங்கத்தினராயிருந்தும் அவரை டிப்டி மேயர் பதவியினின்று விலக்க வேண்டு மென்ற கருத்துடன் மற்ற சுயராஜ்யக் கட்சி ஹிந்துக்கள் ஐரோப்பியர்களை துணைக்கு அழைத் துக்கொண்டு செய் துள்ள தீர்மானத்தையும், சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகள் முஸ்லீம்களை மாற் றாந்தாய்க் குழந்தைகளைப் போல் பாவித்து எழுதி வரு வதையும் நாம் அறிவதைவிட முஸ்லீம்கள் நன்றாய் அறிவார்கள். நாட் டிலே வீறு கொண்டு முழங்கிய ஒத்துழையாமையை ஒடுக்குவதற்குத் தன்னால் ஏற்படுத்தப்பட்ட சுயராஜ்யக் கட்சியில் முகமதி யர்களையும் சேர்த்து பலந்தேடிக் கொள்ளு வதற்காக ஏற்பாடு செய்த “கல்கத்தா பாக்ட்” என்னும் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை உண்டாக்கியவரான தேசபந்து சித்தரஞ்சன் தாசரால் தோற்று விக்கப்பட்ட “பார்வர்டு” பத்திரிகை இப்பொ ழுது ஹிந்து -– முஸ்லீம் ஒற்று மைக்கு நேர்மாறாக எழுதி வருகின்றது. சமீபத்தில் நடந்த ஹிந்து -– முஸ்லீம் கலவரத்தின் போது ஹிந்து – முஸ்லீம் கலவரத்தை வளர்க்கக்கூடிய விதமாய் (முஸ்லீம்களுக்கு விரோதமாய்) “பார்வர்டு” பத்திரிகை எழுதிவந்ததால் அப் பத்திரிகை மீது அரசாங்கத்தார் வழக்குத் தொடர்ந்து அதன் ஆசிரியரிடம் 500 ரூபாய்க்கு ஜாமீன் வாங்கி யுள்ளார்கள்.

எனவே இவற்றினின்று விளங்கும் உண்மைதான் என்ன? இந்த சுயராஜ்யக் கட்சியாரால் ஹிந்து –முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுமா? ஏற்படவே ஏற்படாது. இந்தக் கட்சியாரை நம்பி அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் முஸ்லீம்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியோன் கதிக்கே வந்து சேருவார்கள்.

குடி அரசு – கட்டுரை – 13.06.1926

You may also like...

Leave a Reply