* பட்டங் கூடாது

தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. எஸ். ஸ்ரீநிவாச ஐயங்காருக்கு திரு. கல்யாணசுந்திர முதலியார் காங்கிரஸ் கமிட்டிக் குதான் கொண்டுவர இருக்கும் தீர்மானத்தைப்பற்றி எழுதுவதாவது.-
அன்பார்ந்த தலைவரே, வணக்கம். வரப்போகுஞ் சென்னைச் சட்ட சபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சித் தொடர்பு கொண்டு அபேட்சகராக நிற்கும் சகோதரருள் சிலர் பட்டஞ் சுமப்பது பற்றியும், அரசாங்கத்தார் தயவால் நியமனம் பெற்றிருப்பது பற்றியும், கதருடையில் பற்றிழந்திருப்பது பற்றியும், தமிழ்நாட்டு அன்பர் சிலர் கடிதம் விடுத்திருக் கிறார். அதைப்பற்றிப் பொது ஜனங்கட்கு ( 11 – 6 – 26 ) “நவசக்தி” வாயி லாகப் பதிலிறுத்தேன். அப் பதிலை நோக்குமாறு தங்களை வேண்டுகிறேன்.

தங்களைப்போல மற்ற அபேட்சகர்களுமிருந்தால் ஐயப்பாட்டிற்கு இடம் ஏற்படல் அரிது. சில அபேட்சகர்கள் பட்டதாரிகளாகவும், அரசாங்கத் தார் தயவால் நியமனம் பெற்றவர்களாகவும், கதரில் பற்றில்லாதார்களாகவும் இருத்தல் உண்மை. இவர்கள் நாளை பதவி ஏற்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி? இவர்கள் பட்ட முதலியவற்றைத் துறந்து, கதருடையில் பற்றுக் காட்டினாலன்றி என் போன்றார்க்கு நம்பிக்கை ஏற்படாது.

இப்பொழுது நாம் வழ வழவென்று இருப்போமாயின் பின்னே வருந்த நேரும். இப்பொழுதே எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும். கட்டுப் பாடுகளைத் தளர விட விட நமது கட்சியின் ஆக்கங் குன்றுவது திண்ணம்.

காங்கிரசில் ஒத்துழைப்பு நுழையாதவாறு காத்தல் வேண்டுமென்னும் குறியோடு தங்களுடன் சேர்ந்து உழைக்கின்றேனேயன்றி வேறு எக்குறி யோடும் உழைக்கின்றேனில்லை என்பது தங்கட்குத் தெரியும். பட்டத்தை இழித்து இழித்துக் கூறி பட்டதாரிகளை ஆதரிப்பது அறமாகத் தோன்ற வில்லை. கூர்த்த மதியுடைய தங்கட்கு நிலையை இன்னும் விரித்தோத வேண்டுவதில்லை.

தமிழ் நாட்டுக் காங்கிரஸ் காரிய நிர்வாகக் கூட்டத்திலாதல், பொது கூட்டத்திலாதல் கீழ்வரும் தீர்மானங் கொணர உறுதி கொண்டிருக்கிறேன். அதற்குத் தாங்கள் துணை புரிவீரென நம்புகிறேன். அத்தீர்மானத்தை வரப் போகுந் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் காரிய அல்லது பொதுக்கூட்டத்தில் கிளத்துமாறு வேண்டுகிறேன்.

தீர்மானம்
கான்பூர் காங்கிரஸ் தீர்மானத்துக்கிணங்கிச் சென்னைச் சட்டசபை அபேட்சகராக நிற்பவருள் எவரேனும் பட்டதாரியாகவும், அரசாங்கத்தார் தயவால் எவ்வமைப்பிலாதல் நியமனம் பெற்றவராயும், கதருடையில் பற்றில்லாதவராயு மிருப்பரேல் அன்னார் முறையே பட்டத்தையும், நியம னத்தையும் துறக்குமாறும், கதருடையில் பற்றுக் கொள்ளுமாறும் இக்கூட்டந் தீர்மானிக்கிறது.

13-6-26. திரு.வி.கலியாணசுந்தரன்

* * டாக்டர் வரதராஜுலு நாயுடு மாகாண காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டியிலிருந்து விலகுகிறார்

தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டியிலிருந்தும், கான்பூர் காங்கரஸ் தீர்மானப் பிரகாரம் அமைக்கப்பட்ட செலக்டு கமிட்டியிலிருந் தும் தம்முடைய பதவிகளை டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அவர்கள் இராஜி நாமாச் செய்துவிட்டார். தேசீயவாதியாக இருக்கும் தாம் காங்கரஸ் பெயரால் தலைவர்கள் செய்யும் பற்பல தவறுதல்களுக்கு அனுமதித்துக் கொண்டு இருக்கமுடியாதெனக் கூறுகிறார். சமூகச் சண்டைகள் அதிகரிப் பதும், பட்டதாரிகளுக்கு காங்கரஸ் அபேட்சகர்களாக நிற்க அனுமதி கொடுத்ததும் இவர் இராஜிநாமா செய்ததற்குக் காரணங்களென்று கூறப் படுகின்றது.

You may also like...

Leave a Reply