ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவதாண்டு கொண்டாட்டம்
அன்புள்ள வாலிப நாடார் சகோதரர்களே!
தங்கள் சங்கத்தின் நோக்கங்களைக் காண எனக்கு மிகவும் சந்தோஷ மாயிருக்கிறது. முதலாவது நோக்கமாக “நாடார் சமூகம் அபிவிருத்தி அடை யும்படி செய்தல்” என்று வைத்திருக்கிறீர்கள். இதுதான் உண்மையான நாடாராய் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய காரியம். “நல்லாண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல்” என்று நாயனார் சொல்லியிருப்பதின் தத்துவம் இதுதான். ஒவ்வொரு சமூகமும் தன் சமூக முன்னேற்றத்தை சீர்திருத்திக்கொண்டு பிறகு எல்லாச் சமூகத்தின் நன்மை யையும் பொது நன்மையையும் கவனித்தால்தான் அது முறையாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் இருக்கும். அஃதில்லாமல் தங்கள் சமூகம் சுயமரியாதை அற்றதாகவும், தீண்டாத சமூகமாகவும் இருப்பதை லக்ஷியம் செய்யாமலும், அதைப் பற்றி உணர்ச்சியில்லாமலும், நான் தேசபக்தன், பொது ஜனசேவை செய்பவன் என்று சொல்லிக்கொண்டு பொது உரிமை, பொதுச் சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் பொருளற்றதும் அறியாமையும் தனது சுய நலத்திற்கும் சுயகீர்த்திக்கும் பாடுபடுவதுமே ஒழிய வேறல்ல. ஏனெனில் நமது நாடு எக்காரணம் பற்றியோ பல சமூகங்களாக அமைக்கப்பட்டு போனதோடு ஒவ்வொரு சமூகங்களுக்கும் நிரந்தரமான குறைகள் ஏற்பட்டு சமூகக் கொடுமைகளால் அழுந்திக் கிடக்கின்றதுடன் தேச நன்மை, பொது நன்மை, சுதந்திரம், விடுதலை என்று ஏற்படுவதெல்லாம் ஒரு சமூகத்திற்கு நன்மை, ஒரு சமூகத்திற்கு தீமை, ஒரு சமூகத்திற்கு அதிக சுதந்திரம், ஒரு சமூகத்திற்கு அதிகமான அடிமைத் தனம் என்பதான பலனைத்தான் கொடுத்து வருகிறதே யல்லாமல் எல்லாச் சமூகத்திற்கும் சமமான நன்மை, சுதந்திரம், விடுதலை ஏற்படுவதில்லை. ஏனெனில் சில சமூகம் எக்காரணம் பற்றியோ முன்ன ணியில் இருந்து, கிடைக்கும் நன்மைகளை அபகரித்துக் கொள்ளுகின்றன. பல சமூகம் பின்னணியில் இருந்து அன்னிய சமூகத்திற்கு உழைத்துவிட்டு தேய்ந்துகொண்டு வருகின்றன. உதாரணமாக, நமது நாட்டில் காங்கிரஸ் இல்லாதபோது பிராமணரல்லாத சமூகத்திற்கு அரசியலிலும் பொதுவியலி லும் இருந்த சுதந்திரமும் செல்வாக்கும் காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்துவிட்டது. அரசியலிலும் பொதுவியலிலும் இப்போது அதிகமான செல்வாக்கு பிராமணர்களுக்குத்தான் இருக்கிறது. பிராமணரல்லாதாரில் நாடார் சமூகத்திற்கு அதிக குறைவாய்த்தான் இருக்கிறது. இந்த நாடார் சமூகமும் தங்களுக்கென ஒரு சமூகத்தை வைத்துக் கொண்டு சமீபகாலமாய் அதற்கென்று உழைக்காமலிருந்திருந்து, வெறும் தேசபக்தியையும் சுதந்திரத்தையும் பேசிக்கொண்டு பொருளற்ற “தேச பக்தர்களாய்” “காங்கிரஸ்காரர்களாய்” இருந்திருந்தால் உங்கள் நிலை என்ன மாயிருந்திருக்கும். வழி நடை பாத்தியம் கூட அடைந்திருக்க மாட்டீர்கள். தீண்டாதவர்கள் கூட்டத்திலேயே இன்னும் இருந்திருப்பீர்கள். உங்கள் பெரியார்கள் சிலர் நாடார் மகாஜன சபை என்று ஒரு சபை ஏற்படுத்தி அதின் மூலம் உங்கள் சமூகத்திற்கு கொஞ்சம் சுயமரியாதை சம்பாதித்துக் கொடுத்த பிறகு இப்பொழுது உங்களில் பலர் ‘தேசபக்தர்களாய்’ வந்து விட்டார்கள். தனி சமூக முன்னேற்றத்திற்கு ஸ்தாபனமில்லாத, உழைப்பாளிகள் இல்லாத பல சமூகங்களின் கதி இப்போது என்னமாயிருக்கிறது? ‘சக்கிலி’ ‘பறையர்’ ‘பள்ளர்’ என்கிற பல பரம்பரையாய் பொதுஜன உழைப்பாளிகளாய் இருந்து வரும் சமூகங்களின் கதி எப்படி இருக்கிறது? இந்திய சமூகத்திற்கு அரசாங்கத் தாராலும் காலக் கிரமத்தாலும் பல ‘சீர்திருத்தங்கள்’ வந்தும் இந்தக் கூட்டத் தாருக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. சர்க்கார் தயவிருந்தால்தானே தெருவில் நடக்கலாம், மனிதர்கள் கண்களில் தென்படலாம் என்றிருக்கிறது. அவர்களுக்கும் தங்கள் சமூக முன்னேற்றச் சங்கங்கள் இருக்குமானால் கூடியவரை அவர்களும் குறைந்த பக்ஷம் உணர்ச்சியுள்ளவர்களாகவாவது ஆகி இருப்பார்கள். மகமதிய கிறிஸ்துவ சகோதரர்கள் தங்கள் சமூக முன்னேற்ற சங்கத்தின் மூலமாய் சுயமரியாதை பெற்றார்களே ஒழிய ‘காங்கிர சினாலும்’ ‘தேசபக்தியினாலும்’ அல்லவே அல்ல. ஆதலால் மற்ற சமூகத்தா ரிடம் சமஉரிமை பெற்றுக்கொண்டு பிறகு பொது நலத்திற்கு பாடுபட்டால் பிறகு பொது உரிமை சமமாய் அடைய முடியும். ஆதலால் நாடார் சமூக முன்னேற்றத்தை உங்கள் சங்க நோக்கத்தில் முதன்மையாய் வைத்திருப்பது பற்றி நான் மிகுதியும் சந்தோஷப்படுகிறேன். இது சரியான அளவு கைகூட எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்திக்கிறேன்.
இரண்டாவது நோக்கம் “நாடார் ஜன சங்கத்தின் நோக்கங்களை அமுலுக்கு கொண்டுவரல்.” இது மிகவும் முக்கியமான நோக்கமாகும். நோக்கங்களை அமுலுக்குக் கொண்டுவராத – கொண்டுவரமுடியாத சங்கங்கள் இருந்தாலும் ஒன்றுதான்; இறந்தாலும் ஒன்றுதான். வேஷத்திற்கும் பெருமைக்கும் வெறும் தீர்மானங்களைச் செய்வதில் பலனில்லை. பொது ஜனங்களை ஏமாற்ற பல தீர்மானங்களையும், சுயநலத்திற்காக அமுலுக்குக் கொண்டுவர சில தீர்மானங்களையுமுடைய தற்கால காங்கிரசின் கதி என்ன வாயிருக்கிறது. உண்மையிலேயே பொதுஜன நன்மைக்கான பல தீர்மானங் கள் ஏற்படுத்தி அதை அமுலுக்குக் கொண்டுவர பாடுபட்ட மகாத்மாவின் தலைமையின் கீழிருந்த காங்கிரசுக்கு தேசத்தில் எவ்வளவு யோக்கியதை இருந்தது. பொதுஜனங்களை ஏமாற்ற நிர்மாணத் திட்டத்தை எழுதி வைத்து விட்டு சுயநலத்திற்கான சட்டசபை உத்தியோகம் முதலிய தீர்மானங்களை அமுலுக்கு கொண்டுவரும் சபையாய் காங்கிரஸ் இருப்பதால் அதனிடம் பொதுஜனங்களுக்கும் மதிப்பில்லை; அதனால் பொதுஜன நன்மையும் ஏற்படப் போவதில்லை. இனியும் கொஞ்ச காலத்திற்கு இப்படியே இருக்குமா னால் காங்கிரஸ் என்பது ஒரு அருவருக்கத்தக்க சாதனமாய்ப் போய்விடும். அதுபோலவே நாடார் மகாஜன சங்கமும் தங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட திட்டங்களை அமுலுக்குக் கொண்டுவரப் பிரயத்தனப்படாமல், அச் சங்க வாலிபர்கள் தேசபக்தி என்றும் பொதுஜன நன்மை என்றும் சொல்லித் திரிவதானது சமூகத் துரோகமாவதோடல்லாமல் தாயைப் பட்டினி போட்டு வைத்துக்கொண்டு பிராமண சமாராதனை செய்தவனுக்குச் சமானமாவார்கள். ஆதலால் உங்களது இரண்டாவது நோக்கம் மிகவும் பாராட்டத்தக்கதும் ஓர் பரிசுத்தமான நாடார் வாலிபன் செய்யக்கூடியதுமாகும் என்றே சொல்லுவேன்.
மூன்றாவது நோக்கம் “நாடார்களுக்கும் இதர வகுப்பினருக்கும் ஐக்கிய உணர்ச்சியை உண்டுபண்ணுவது” என்பது. இது மிகவும் புத்திசாலித் தனமுடையதாகும். அதாவது முதலாவதாக உங்கள் சமூகத்தை முன்னேற்றிக் கொண்டு, இரண்டாவதாக உங்கள் ஜன சமூகத்தின் குறைவுகளுக்குச் செய்யப் பட்ட தீர்மானங்களை யெல்லாம் காரியத்தில் நிறைவேற்றிக்கொண்டு, மூன்றா வதாக மற்ற வகுப்பாரிடம் ஐக்கிய உணர்ச்சியை உண்டுபண்ணல் என்பது தான் காரியத்தில் ஆகக்கூடிய காரியம். அவனவன் வகுப்பு மற்ற வகுப்பாரால் தீண்டாத வகுப்பாகவும் சுயமரியாதை அற்ற வகுப்பாகவுமாய் இருக்கும் போது மற்ற வகுப்பாரிடம் ஐக்கிய உணர்ச்சி எப்படி உண்டாக முடியும்? மற்ற வகுப்பார்தான் எப்படி ஐக்கியமாயிருக்கச் சம்மதிப்பார்கள்? ஆதலால் இதை மூன்றாவதாக வைத்த நோக்கமும் பிரயத்தனமும் மிகவும் சரியானதே.
நான்காவது “வாசகசாலை ஏற்படுத்தல்” என்பது. இதுவும் முக்கிய மானதுதான். வெறும் க்ஷ.ஹ. பரீiக்ஷயிலாவது, ஆ.ஹ. பரீiக்ஷயிலாவது, பண்டித பரீiக்ஷயிலாவது, கனபாடி பரீiக்ஷயிலாவது, சிரோமணி, மஹாமஹோ பாத்தியாய பரீiக்ஷயிலாவது அறிவு வரவே வராது. இவ்வளவும் படித்து முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் வெகு பேர் இருக்கிறார்கள். இவைகள் ஒன்றும் படிக்காத கையெழுத்துக்கூட போடத் தெரியாதவர்களும் புத்திசாலிகளும் யோக்கியர்களும் பலர் இருக்கிறார்கள். புத்தகப் படிப்பு ‘வித்தை’ யாகுமே தவிர கல்வியாகாது. பல புத்தகங்களை வாசித்த ஒரு மனி தனும் சரி, பல புத்தகங்களை உடைய ஒரு அலமாரியும் சரி, இரண்டும் ஒன்றுதான். பெயரில் மாத்திரம்தான் வித்தியாசம். அதாவது முன்னையது நடை அலமாரி; பின்னையது நிலை அலமாரி . பல புஸ்தகங்களைப் படித்து அவைகளில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து பரீiக்ஷயில் தேறின மஹாமஹோபாத்தியாய – பண்டித பட்டம் பெற்றவனும் ஒன்றுதான்; பல வழிகளில் செருப்புத் தைக்கும் வழிகளை அறிந்து அதுசம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளித்து, பரீiக்ஷயில் தேறி அதில் பட்டம் பெற்றவனும் ஒன்றுதான். புத்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது மனப்பாட வித்தை, செருப் பைத் தைத்துக் காட்டுவது தொழில் வித்தை. இருவரும் ‘வித்தை’ யாளர்களே தவிர கல்வியாளர்கள், அறிவாளர்கள் ஆகமாட்டார்கள். உண்மையான கல்வி யாளர்களாக வேண்டுமானால் உலக அனுபவத்தையும் இயற்கை அனுபவத் தையும் அறியவேண்டும். இதை உத்தேசித்தேதான் “ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” என்றும் “உலகத்தோடொட்ட வொழுகல் பல கற்றும் கல்லாரறிவிலாதார்” என்றும் நாயனார் சொல்லியிருக்கிறார். ஆதலால் இவ்வித அறிவுப் பெருக்கத்திற்கும் கல்விக்கும் சங்கமும் யாத்திரையும் வேண்டும். உலக யாத்திரைக்குச் சக்தி யற்றவர்கள் பல தேச வர்த்தமானங்களையாவது அறிய வசதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குதான் வாசகசாலை என்பது.
( தொடர்ச்சி 30.05.1925 குடி அரசு )
குறிப்பு :- ஏழாயிரம் பண்ணையில் 16.5.26 – ஆம் தேதி நடைபெற்ற பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு கொண்டாட்ட தலைமை உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 23.05.1926