டிச.24-சேலத்தில் ‘வேத மரபு மறுப்பு மாநாடு’ தோழர்களே தயாராவீர்!
டிசம்பர் 24இல் பெரியார் நினைவு நாளில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒரு நாள் மாநாடு. “சித்தர்கள்-வள்ளலார்-பெரியார்-அடிச்சுவட்டில்… ‘வேத மரபு’ மறுப்பு மாநாடு காலை முதல் இரவு வரை கருத்தரங்குகள் – பேரணி – பொதுக் கூட்டம் – கலை நிகழ்ச்சிகள். கழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு நிதி – முதல் தவணை யாக கழகத் தலைவரிடம் வழங்கப்படுகிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு முதல் தவணையாக 5000 சந்தாக்கள் வழங்கப்படு கிறது. கழகத்தின் புதிய ‘மாத இதழ்’ வெளி வருகிறது. தமிழகத்தின் சிந்தனையாளர் கள் – பேச்சாளர்கள் – தலைவர் கள் பங்கேற்கிறார்கள். வேத மதமான பார்ப்பன மதத்தை பார்ப்பனர்கள் – பார்ப் பனரல்லாத மக்கள் மீது திணித்தார்கள். ‘இந்துக்கள்’ என்று பெயர் சூட்ட வைத் தார்கள். வேத மதத்துக்குள் வெகு மக்களை இழுத்துக் கொண் டவர்கள் அந்த மக்களின் சுய மரியாதையை மறுத்தார்கள். ஜாதிகளைத் திணித்து ஒடுக்கு முறை கட்டமைப்பை...