கழகத் தோழர் பாரூக் அவர்களின் சார்பாக கழகத் தலைவர் அறிவுரை கழகத்தில் வாதம் சென்னை 09112016
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரண ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் நடத்திய கலவரத்தின் போது, காவல்துறை சில இந்து முன்னணியினரை கைது செய்ததோடு, இந்து முன்னணியினரை சமாதானப்படுத்தும் நோக்கில் சில இஸ்லாமியரை கைது செய்தது . அதில் கோவையை சேர்ந்த பெயரில் மட்டுமே இஸ்லாமிய அடையாளம் உடைய இறை மறுப்பாளரான திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் “பாரூக் ” கையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தது. இந்து அமைப்புகள் தந்த அழுத்தத்தால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிந்தது காவல்துறை. அவருக்கு வழங்கப்படும் சட்ட வாய்ப்பான அறிவுரை கழகத்தின் ( Advisory board) முன்பு ஆஜர் படுத்த , இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ” பாரூக் ” சார்பாக அவர் பக்க நியாயங்களை அறிவுரை கழகத்தில் உள்ள முன்னாள் நீதிபதிகள் முன்பு எடுத்துரைக்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி “பாரூக் “கால் கோரப்பட்டார். கழகத் தலைவரும் அதற்கான ஆவணங்களை, ஆதார கோப்புகளை தயார் செய்துக் கொண்டு சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் நண்பகல் (1:00 )ஒரு மணி முதல் காத்திருந்தார். 3:00 மணியளவில் பாரூக் அழைக்கப்பட, தலைவரும் சென்றார். அப்போது அங்கிருந்த காவலர் தலைவர் காலிலுள்ள செருப்பை கழட்டிவிட்டு வரச் சொன்னார். தலைவர் செருப்பை கழட்ட மறுத்துவிட்டு, செருப்போடுதான் வருவேனென்று அந்த காவலரிடம் சொன்னார். அந்த காவலரும் அவரின் உயரதிகாரியிடம் போய் சொல்ல அவர் மறுப்பேதுமின்றி தலைவரை அனுமதித்தார். அறிவுரை கழகத்திற்குள் சென்று பாரூக் காக அவர் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்துவிட்டு வந்தவர், பிறகு பாரூக்கையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதலையும், நம்பிக்கையையும் தரும் வகையில் உரையாடினார். 3:30 மணியளவில் பாரூக்கை சேலம் சிறைக்கே கொண்டு சென்றனர். தலைவருடன் தோழர் நேருதாஸ், வழக்கறிஞர் திருமூர்த்தி, தோழர் தபசி குமரன், தோழர் அன்பு தனசேகரன், தோழர் இரா. உமாபதி, தோழர் அய்யனார், தோழர் வேழவேந்தன் மற்றும் சென்னை மாவட்ட தோழர்கள் அனைவரும் திரன்டு வந்திருந்தது பாரூக்குக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆறுதலாய் அமைந்தது.