Category: சேலம் மேற்கு

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

கழகத்தின் மாவட்ட செயலாளர் மேட்டூர் கி.கோவிந்தராஜ்-மு.கீதா இணையரின் மகள் கீ.கோ. தேன்மொழி – திருப்பூர் நா. பரமசிவம்-ப. மாலதி ஆகியோரின் மகன் கழகத் தோழர் ப. மணிகண்டன் ஆகியோர் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா ஜன. 3, 2019 பகல் 11 மணியளவில் மேட்டூர் அணை அரசப்பா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் ப.கு. சூரிய குமார் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) நா. முனியன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியும் பறை இசையும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். அனைவரும் ‘தமிழின உரிமைக்கு எதிரி யார்?’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

வாழ்க்கை இணையேற்பு விழா தேன்மொழி – மணிகண்டன் மேட்டூர் 03022019

வாழ்க்கை இணையேற்பு விழா தேன்மொழி – மணிகண்டன் மேட்டூர் 03022019

வருகின்ற 03-02-2019 ஞாயிறு காலை 11 மணியளவில் மேட்டூர் நகரில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு அவர்களின் மகள் கீ.கோ.தேன்மொழிக்கும் திருப்பூர் தோழர் ப.மணிகண்டன் அவர்களுக்கும் ஜாதி – சடங்கு மறுப்பு வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா மேட்டூர் அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் தலைமையேற்கவும்  கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை க.இராசேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.

கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

சேலம் மாவட்டம் கொளத்தூர் தார்காடு கிளை கழகத் தோழர் இரா.விஜயகுமார் (இராணுவ ஓய்வு) தாயார் ஆர்.என்.காசிமதி (71) உடல் நலக்குறைவுக் காரணமாக 09.01.2019 அன்று காலை 10.00 மணிக்கு அவர்களது இல்லத்தில் முடிவெய்தினார்.  கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் மறைந்த காசிமதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பெரியாரியல் சிந்தனையாளரும் காசிமதி கணவருமான இராமசாமி (ஆசிரியர் ஓய்வு), மகன்கள் விஜயகுமார், சசிகுமார் ஆகியோர் காசிமதியின் உடலை எந்தவித சடங்குகளும் இன்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக  கையளித்தனர். தோழர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு தனது தாயாரின் உடல் கொடைக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தோழர்களின் இச்செயல்களை  நிகழ்வுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர். பெரியார் முழக்கம் 17012019 இதழ்

காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் தந்தையார் முடிவெய்தினார்

காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் தந்தையார் முடிவெய்தினார்

கழகத் தோழர் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவை ஈசுவரன் தந்தையார் பொ. கந்தசாமி, (87) (காவலாண்டியூர் கிளைச் செயலாளர் அ.தி.மு.க.), 5.1.2019 அன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத் தோழர்கள் பலரும் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். எந்த சடங்குகளுமின்றி பெண்களே சுமந்து சென்றனர். 6.1.2019 அன்று காவலாண்டியூரில் பொ. கந்தசாமி உருவப்படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மேட்டூர் ஆர்.எஸ். சக்தி, ஈரோடு மாவட்டத்தலைவர் நாத்திக ஜோதி,  கொளத்தூர் பஞ்சாயத்து தலைவர் தா.செ. பழனிச்சாமி, திராவிடர் கழகப் பொறுப்பாளர் பிரகலாதன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன் (அதிமுக), கொளத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரத்தினம், கொளத்தூர்துணைத் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதையை செலுத்தினர். பெரியார் முழக்கம் 17012019 இதழ்

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் அய்யம் புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த  பெரியார் பெரும் தொண்டர் சி. சுப்பிரமணி அய்யம்புதூர் பகுதியில் கழகத்தின் கொடிக் கம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகக் கொடியை ஏற்றினார். பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண் விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர்  சூரியக்குமார் முன்னிலை வகித்தார்.  இரத்தினசாமி (அமைப்புச் செயலாளா) மற்றும் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர் இணையர்களை வாழ்த்தி வாழ்த்துரை...

தோழர் விஜயகுமார் தாயார் படத்திறப்பு நிகழ்வு 14012019 கொளத்தூர்

தோழர் விஜயகுமார் தாயார் படத்திறப்பு நிகழ்வு 14012019 கொளத்தூர்

படத்திறப்பு நிகழ்வு தோழர்களுக்கு வணக்கம். 09.01.2019 அன்று மறைவுற்ற பெரியாரியல் சிந்தனையாளர் திரு.இராமசாமி ( ஆசிரியர் ஓய்வு ) அவர்களின் மனைவியும் எனது தாயார் திருமதி ஆர்.என்.காசிமதி அவர்களின் படத்திறப்பு வரும் 14.01.2019 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெற உள்ளதால் அனைத்து தோழர்களும் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொள்ள அழைக்கின்றேன். எனது தாயார் விருப்பத்திற்கு ஏற்ப உடலை மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரிக்கு உடல்தானம் அளிக்கப்பட்டது. இடம் தார்காடு (தபால் நிலையம் அருகில்) கொளத்தூர், சேலம் மாவட்டம். தலைமை தோழர் கு.சூரியகுமார் தி.வி.க. சேலம் மேற்கு மாவட்ட தலைவர். படத்திறப்பாளர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி தலைவர் தி.வி.க. இவண் இரா.விஜயகுமார் ( இராணுவ ஒய்வு ) இரா.சசிகுமார் சன் டிராவல்ஸ் தார்காடு. 94430 30791

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம் கொளத்தூர் 30122018

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம் கொளத்தூர் 30122018

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம். திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் , கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த பெரியார் பெரும் தொண்டர் தோழர்.சி.சுப்பிரமணி அவர்கள் அய்யம்புதூர் பகுதியில் அமைப்பின் கொடிகம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் .தோழர்.விடுதலை.இராசேந்திரன் அமைப்புக் கொடியை ஏற்றினார். பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண்விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. திவிக பொருளாளர். தோழர்.துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர் தோழர்.சூரியக்குமார் முன்னிலை வகித்தார். தோழர்.ரத்தினசாமி மற்றும் தோழர்.சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர்...

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா !

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா !

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா ! இருசக்கர பேரணி,பெரியார் முழக்கம் நிமிர்வோம் சந்தா வழங்கும் விழா ! நாள் 30.12.2018 ஞாயிறு நேரம் : காலை 9.00 மணி பேரணி துவங்கும் இடம் : பெரியார் படிப்பகம், சோதனைச்சாவடி,கொளத்தூர். கருத்துரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்  பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக 06.12.2018 அன்று பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி யது. இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் உமா சங்கர் (வனவாசி நகர செய லாளர்) கண்டன உரையாற்றி னார். சேலம் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் கண்ணன், நகர துணைத் தலைவர் குமார், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

கொளத்தூர் புலியூரில் நவ.27 மாவீரர் நாள்

கொளத்தூர் புலியூரில் நவ.27 மாவீரர் நாள்

இளமை சுகங்களை எல்லாம் துறந்து எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும், தமிழ்ப் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி 27.11.2018 அன்று மாலை 5.00 மணிக்கு கொளத்தூர், புலியூர் பிரிவில், தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற இந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு ப. இரத்தின சாமி தலைமை வகித்தார். சேலம் மேவி.குமார், த.சரவணன், திருப்பூர் துரைசாமி, தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் வி.சேகர் (திரைப்பட இயக்குனர்), திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் மாவீரர் நாள் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 06122018 இதழ்

கொளத்தூர் தோழர்கள் அதிரடி நடவடிக்கையால் அரசு அலுவலகத்தில் ஆயுத பூஜை நிறுத்தம்

கொளத்தூர் தோழர்கள் அதிரடி நடவடிக்கையால் அரசு அலுவலகத்தில் ஆயுத பூஜை நிறுத்தம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது அரசாணைக்கு எதிரானது என்று கொளத்தூர் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தனர். கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நாங்கள் அப்படித்தான் கொண்டாடுவோம் என்று கூறவே தோழர்கள் கொளத்தூர் காவல்துறையில் அரசாணையைக் காட்டி புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்  கொளத்தூர் காவல்துறைக்கு கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார். பெரியார் முழக்கம் 29112018 இதழ்

மாவீரர் நாள் கொளத்தூர் புலியூர் 27112018

மாவீரர் நாள் கொளத்தூர் புலியூர் 27112018

27.11.18 அன்று மாலை 6.05 மணிக்கு சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் திரு. ரத்தினசாமி தலைமையில் திரு. தமிழ் ராஜேந்திரன், துரைசாமி, மேவி.குமார் முன்னிலையில் மாவீரர் நாள் சிறப்புடன் நடைபெற்றது. திரு.வி.சேகர் (திரைப்பட இயக்குனர்) தலைவர், உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் கொளத்தூர் தா.செ.மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். ஆகியோர் மாவீரர் நாள் உரையாற்றினார். ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மறைந்த மாவீரர்களுக்கும் தமிழ் பொதுமக்களுக்கும்  வீரவணக்கம் செலுத்தினர்.  இந்நிகழ்வை தமிழீழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படங்களுக்கு  

மாவீரர் நாள் 2018 கொளத்தூர் 27112018

மாவீரர் நாள் 2018 கொளத்தூர் 27112018

நவ.27 மாவீரர் நாள் – 2018 நேரம் : மாலை 5.00 மணி இடம்: தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர். மாவீரர் நாள் உரை : தோழர் வி.சேகர் (திரைப்பட இயக்குனர்) தலைவர், உலக திருக்குறள் கூட்டமைப்பு. தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் . நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, கொளத்தூர், சேலம் மாவட்டம்.

காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா

காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா

17.09.2018 அன்று காலை 9 மணிக்கு 20 இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் கொள்கை பாடல்களை ஒலிக்கச் செய்து ஊர்வலமாகச்  சென்று குருவ ரெட்டியூர் பகுதியிலுள்ள பெரியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு தி.க மற்றும் காவலாண்டியூர் பகுதி தி.வி.க. தோழர்கள் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறகு காலை சிற்றுண்டி குருவைப் பகுதித் தோழர்கள் ஏற்பாடு செய்தனர். காவலாண்டியூர் பகுதி தோழர்கள் சுமார் 50 பேர் ஊர்வலமாகச் சென்று மிளகாய் பொதை, கண்ணாமூச்சி, பாலமலை பிரிவு, செ.செ. காட்டுவளவு , செட்டியூர், மூலக்கடை பகுதிகளில் உள்ள அரசினர் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பெரியாரைப் பற்றி  காவை ஈஸ்வரன் உரையாற்றினார். பிறகு அனைத்து ஆசிரியர்களுக்கும் நிமிர்வோம் மற்றும் கழக வெளியீடுகள் அடங்கிய தொகுப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கண்ணாமூச்சி, செ.செ. காட்டுவளவு, காவலாண்டியூர், செட்டியூர்,...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா?  கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு என்பது எந்த விதமான ஜாதி,மதம்,இன அடையாளங்களோடு இருக்கக் கூடாது. அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுளின் படங்களோ அதற்கு வழிபாடோ நடத்தப்படக் கூடாது என்பது அரசாணை. அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டி 17.10.2018 காலை கொளத்தூர் ஒன்றிய அலுவலகம், கொளத்தூர் காவல்நிலையம், கண்ணாமூச்சி தொடக்க கூட்டுறவு வங்கி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அரசு அலுவலகங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கொளத்தூர் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று அதற்கான அரசாணையை கொடுத்தனர். அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதை மீறி 17.10.2018 மாலை கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியரான காவலாண்டியூர் சசிகுமார் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தோழர்கள் சென்று கேட்டதற்கு அது அவரவர் விருப்பம் , யார்...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

ஈரோடு தெற்கு : 17.09.2018 பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. காலை, ஈரோடு ப.செ. பூங்கா பெரியார் சிலை வளாகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின் தி.க., த.பெ.தி.க., தி.வி.க. அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் ஊர்வலமாக பெரியாரின் இல்லத்தை அடைந்து அங்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கருஞ்சட்டை தோழர்கள் பெரியாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இறுதியாக சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பேரணியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும்...

தமிழ்க் குரிசில் படத்திறப்பு

தமிழ்க் குரிசில் படத்திறப்பு

09.09.2018 அன்று மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடந்த தோழர் தமிழ்க்குரிசில்  படத்திறப்பு நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் தொடங்கி யது. தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்க மணி  வரவேற்புரையாற்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் நிர்வாகியாக இருந்து செயல்பட்ட வரும் தமிழ்நாடு தாய்த் தமிழ் கல்வி யின் செயலாளராக இருந்தவரும், பெரியாரிய சிந்தனையாளரும், குடிஅரசு வெளியீட்டில் தொகுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தலைமை யேற்று நடத்தியவருமாகிய தமிழ்க்குரிசில்  படத்தை பேராசிரியர் கல்விமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் ஏற்பாடுகளையும், உணவு ஏற்பாடுகளையும் மேட்டூர் நகர கழகத் தோழர்கள் செய்தார்கள். நிகழ்ச்சியில் நினைவேந்தல் உரையாக கோபி தாய்த் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் குமணன், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் மூர்த்தி, தமிழ்வழி கல்விக் கழகத்தின் சார்பாக வெற்றிசெழியன், பல்லடம் தாய்த் தமிழ்...

மேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார்

மேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார்

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி நிர்வாகியும், மேட்டூர் அனல் மின் நிலைய ஓய்வு பெற்ற முதுநிலை வேதியரும் பெரியாரியலாளருமான ப. தமிழ்க்குரிசில் (62) 3.9.2018 அன்று மேட்டூரில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பெரும் கவலை கொண்டு பணி ஓய்வுக்குப் பிறகு முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோது வெளியிட்ட போது தொகுப்புப் பணியில் பெரும் பங்காற்றிய பெருமைக்குரியவர் தமிழ்க்குரிசில். மேட்டூர் அருகே கொளத்தூரில் இரவு பகலாக பல வாரங்கள் தொகுப்புப் பணி நடந்த போது பணிகளை ஒருங்கிணைத்து ‘குடிஅரசு’ இதழ்களில் உள்ளது உள்ளவாறே அப்படியே வெளி வர வேண்டும். அப்போது தான் இது வரலாற்று ஆவணமாக எதிர்காலத்தில் நிற்கும் என்பதில் கவனம் செலுத்தி கவலையோடு பணியாற்றியவர் தமிழ்க் குரிசில். இறுதி வணக்கம் செலுத்திட கழகத்  தோழர்களும் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆதரவாளர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். கழகக்...

கழக வளர்ச்சிக்கு ரூ. 25,000 நன்கொடை: கோபி இராம இளங்கோவன்-க.ம. நாத்திகராணி புதிய இல்லம் திறப்பு

கழக வளர்ச்சிக்கு ரூ. 25,000 நன்கொடை: கோபி இராம இளங்கோவன்-க.ம. நாத்திகராணி புதிய இல்லம் திறப்பு

கழக வெளியீட்டு செய லாளர் கோபி இராம இளங் கோவன், க.ம. நாத்திக ராணி இணையரின் புதிய பெரியார் இல்லத் திறப்பு விழா, ஆகஸ்ட் 11ஆம் தேதி பகல் 12 மணியளவில் கொளப் பலூரில் சிறப்புடன் நிகழ்ந்தது. தா.செ. பழனிச்சாமி, கோ. இராமகிருஷ்ணன் ஆகியோர் புதிய இல்லத்தைத் திறந்து வைத்தனர். நிகழ்வையொட்டி மதுரை வேம்பனின் தந்திரவியல் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் ஆசைத்தம்பி வரவேற்புரையைத் தொடர்ந்து கோபி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.பா. வெங்கிடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். இல்லத் திறப்பு விழா மகிழ்வாக கோபி. இளங்கோ கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 பொதுச் செயலாளரிடம் வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கழகத் தோழர்கள் பெருமளவில் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30082018 இதழ்

மேட்டூர் பகுதியில்  விளக்கக் கூட்டங்கள்

மேட்டூர் பகுதியில் விளக்கக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தமிழர் கல்வி உரிமைப் பரப்புரை பயணம் வருகிற ஆகஸ்டு 20 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது. பரப்புரை பயணத்தின் நோக்கங் களையும், கோரிக்கைகளையும்  மக்களிடையே விளக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம் சார்பில் பயண விளக்க தெருமுனைக் கூட்டங்கள் 4.08.2018 சனிக்கிழமை மாலை 4 மணி, சேலம் மாவட்டம் பொட்டனேரி மற்றும் 6.30 மணி மேச்சேரி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.  மேட்டூர் டிகேஆர் இசைக்குழுவின் பறையிசை மற்றும் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அ.சக்தி வேல் (தலைமைக் குழு உறுப்பினர்),  பரத் ஆகியோர் பயணத்தின் நோக்கம் குறித்து மக்களிடையே விளக்க உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு கோ.தமிழரசன் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது

கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக் காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது.  பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது. பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் கிருஷ்ணன், மனோஜ், ராஜேந்திரன் ஆகியோருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக் கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,...

கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018

கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக்காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது.  பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது.பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். தோழர்.சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் , கிருஷ்ணன், மனோஜ்,ராஜேந்திரன் ஆகியோருக்கு கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி பயணாடை அனிவித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக்கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,சரஸ்வதி,சித்ரா ஆகியோரை வாழ்த்தி...

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து  கழகம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் : தூத்துக் குடி படுகொலைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம்  23.5.2018 அன்று மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சார்பில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்த ராசு தலைமை தாங் கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அப்துல்கபூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பண்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோ. சூரியக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், நாம் தமிழர்க் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, கழகத் தோழர் மா.சுந்தர் ஆகியோரின் கண்டன உரைகளைத் தொடர்ந்து இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். குமரேசன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்களும் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். காஞ்சியில்  : திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்...

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் 23, 24 தேதிகளில் ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், பால் பிரபாகரன், பேரா. சுந்தரவள்ளி, வீரா கார்த்திக், வகுப்புகளை எடுக்கிறார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ.100/-                      முன் பதிவு அவசியம். தொடர்புக்கு:  ஃபிடல் செகுவேரா, இராசிபுரம். பேசி: 9788593863 பெரியார் முழக்கம் 07062018 இதழ்

பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

ஜுன் 23 & 24 சனி,ஞாயிறு , #பெரியாரியல்பயிலரங்கம் இடம்- #ஏற்காடு நிகழ்ச்சி நிரல் : 23-06-2018 சனிக்கிழமை காலை 10:00 மணி- தோழர்கள் அறிமுகம் காலை 11:00 மணி- தோழர் #விடுதலை இராசேந்திரன் (பெரியார் அன்றும் இன்றும்) மதியம் 1:00 மணி-உணவு இடைவேளை மதியம் 2:00 மணி-தோழர் #வீராகார்த்திக் (கடவுள் மறுப்பு தத்துவம் – பெரியார்) மாலை 3:30 மணி தேனீர் இடைவேளை மாலை 3:45. பேரா- #சுந்தரவள்ளி (உலக மயமாக்கல்-தாராளமயமான இந்திய அரசியலும்) மாலை 6:00 மணி தனிதிறமை (பேச்சுபயிற்சி,வீதி நாடகம்) இரவு 8:30 மணி உணவு இரவு 9:15 மணி கலந்துரையாடல் 24-06-2018 ஞாயிறு காலை -7:00 மணி தோழர் #பால்பிரபாகரன் (இட ஒதுக்கீட்டு வரலாறு) காலை 9:00 மணி காலை உணவு காலை 10:00மணி தோழர் #கொளத்தூர்மணி (இந்துத்துவம்- பெரியார் அம்பேத்கர்) காலை 12:00மணி தோழர் விடுதலை இராசேந்திரன் (களத்தில் திராவிடர் விடுதலைக்கழகம்) மதியம் 2:00...

தூத்துக்குடி படு கொலைகள் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – மேட்டூர்  23052018.

தூத்துக்குடி படு கொலைகள் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – மேட்டூர் 23052018.

  தூத்துக்குடியில் மனித உயிர்களைப்பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,அறவழியில் போராடிய மக்கள் மீது அரச பயங்கர வாதத்தை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தி படு கொலைகள் செய்த மத்திய மாநில அரசுகளையும்,காவல்துறையையும் கண்டித்து 23.05.2018 அன்றூ மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச்செயலாளர் தோழர் சி.கோவிந்த ராசு தலைமை தாங்கினார்.இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரசெயலாளர் தோழர் அப்துல் கபூர்,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் தோழர் கருப்பண்ணன்,சேலம் மேற்கு மாவட்டத்தலைவர் தோழர் சூரியகுமார்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச்செயலாளர் தோழர் மோகன்ராஜ்,நாம் தமிழர் கட்சியின் நகரசெயலாளர் தோழர் மூர்த்தி,கழகத்தோழர் மா.சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தூத்துக்குடி சம்பவம் குறித்து விளக்கி கண்டன உரையாற்றினார்.தோழர் குமரேசன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிந்தது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

சேலத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலையை உடைக்கச் சொன்ன பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி 8.3.2018 அன்று மாலை 5 மணிக்கு மேட்டூர் பெரியார்  பேருந்து நிலையத் தில் மேட்டூர் நகர கழக ஒருங் கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவை இளவரசன் வரவேற்புரை யாற்ற மாவட்டத் தலைவர் சூரியக் குமார் தலைமை தாங்கினார். சு.கிருட் டிணசாமி (தி.மு.க.), எஸ்.பி.ராஜா (நகர அவைத் தலைவர் தி.மு.க.), வைகோ முருகன் (நகர செயலாளர் ம.தி.மு.க.), பாலு, தினேசு (நகர பொறுப்பாளர் நாம் தமிழர் கட்சி), ராசு குமார் (மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), சிவக்குமார் (மேட்டூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வி.சி.க.), மெய்யழகன் (மாவட்டச் செயலாளர் வி.சி.க), கருப்பண்ணன் (மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி), அ. சக்திவேல் (கழக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இ. கோவிந்தராசு (கழக மாவட்டச் செயலாளர்) ஆகியோர்...

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூர் நகர கழகத்தின் சார்பில் 13.3.2018 மாலை 5.30 மணிக்கு மேட்டூர் சதுரங்காடியில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓ. சுதா வரவேற்புரையாற்றினார். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் பறை முழக்கத்தோடு பெரியார், அம்பேத்கர் பாடல்களும், சமூக இழிவு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்களும் பாடினர். மு. கீதா தலைமையுரையாற்றினார். ‘சொத்து உரிமையில் பெண்கள்’ என்ற தலைப் பில் அனிதா, ‘விளம்பரத் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் ப. இனியா, ‘பெரியார் காண விரும்பிய விடுதலைப் பெண்’ என்ற தலைப்பில் கெ. ரூபா, ‘அலுவலகம் செல்லும் பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் இரண்யா உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினர். இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை காயத்திரி, சரசுவதி தொகுத்து வழங்கினர்.  கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளி லிருந்தும் பொது மக்களும் தோழர் களும் பெருமளவில் வந்திருந்து அறிவு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்வு...

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு !

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு !

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு ! தோழர் லெனின், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்கரட்டீஸ் பெரியார் ஆகியோர் சிலைகள் சேதப்படுத்திய மதவாத பிஜேபி கட்சியையும், எச். ராஜாவையும் கண்டித்து ஏற்காடு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 08.03.2018 அன்று ஏற்காடு அண்ணா சிலை அருகில் மதியம் 1.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது.

கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா

கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர், புலிகள் மின்கலப் பணி மையம் டைகர் பாலு – ஜோதிமணி இணையரின் மகள் ஜோ.பா. ஓவியா – கோபிச் செட்டிப்பாளையம் குணசேகரன்- உமா இணையரின் மகன் கோ.கு.முகிலன் ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா, 14-2-2014 அன்று காலை 11-00 மணிக்கு, கொளத்தூர் எஸ்.எஸ்.மகால் திருமண மண்டபத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடந்தேறியது. சேலம் மாவட்ட தி.வி.க. தலைவர் கொளத்தூர் சூரியகுமார் வரவேற்புரை ஆற்றினார். தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறச்செய்து நிகழ்த்திவைத்தார். த.பெ.தி.க. அமைப்புச் செயலாளர் கோவை. வெ. ஆறுச்சாமி, தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கோபி கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் (ஓய்வு) பேராசிரியர் செ.சு. பழனிசாமி, கோபி மாவட்ட தி.க. தலைவர் யோகானந்தம், திண்டுக்கல் சம்பத், தூத்துக்குடி பால் பிரபாகரன், கோபி ம.தி.மு.க....

மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

உலக காதலர் தின நாளில் இந்து மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் காதலர்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக காதலர்களை கண்டால் நாங்கள் தாலி கட்ட சொல்லுவோம் என்று அறிக்கை விட்டிருந்தனர்.  அதனால்  14.02.2018 அன்று தோழர்கள் திராவிடன் பரத் (கொளத்தூர்), கண்ணன், சந்திரசேகர் (நங்கவள்ளி) ஆகியோர் ஒருங்கிணைப்பில் மேட்டூர் அணைப் பூங்காவில் காதலர்கள் வரவேற்பு பதாகையுடன் நின்று பூங்காவிக்கு வந்த காதலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மலர், இனிப்பு மற்றும்  விழிப்புணர்வு துண்டறிக்கை ஆகியவை விநியோகித்தனர். நிகழ்வில் வைரவேல் மாரியப்பன் (நாமக்கல்  மாவட்ட  அமைப்பாளர்), கிருட்டிணன் (சேலம் மாவட்ட அமைப்பாளர்), முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்) உள்ளிட்ட 30 தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

மேட்டூரில் அண்ணா – காந்தி நினைவு நாள் கூட்டம்

மேட்டூரில் அண்ணா – காந்தி நினைவு நாள் கூட்டம்

மேட்டூரில் 5.2.2018 திங்கள் மாலை 6 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பறைமுழக்கத்துடன் கூட்டம் தொங்கியது. அதனைத் தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு நடைபெற்ற வீதி நாடகத்தில் சாமியார்களின் மோசடிகளை விளக்கியும், ‘ஆண்டாள்’ குறித்த கதைப் பற்றிய விழிப்புணர்வு நாடகமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, ம.தி.மு.க. சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் ந. மகேந்திரவர்மன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், ‘பகுத்தறிவாளர்கள் பார்வையில் அறிஞர் அண்ணா’ என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘திராவிடர் இயக்கப் பார்வையில் காந்தியடிகள்’ என்னும் தலைப்பில்...

கொளத்தூரில் மாட்டுக்கறி விருந்துடன் கழகம் நடத்திய ‘இந்துமதப் பெருமைகள்’ ஆய்வரங்கம்!

கொளத்தூரில் காவல்துறை, ஆண்டாள் ஆய்வரங் கத்துக்கு தடைபோட்டது; உடனே ‘ஆண்டாள் அருள்வாக்கு மகிமை’ என்ற தலைப்பில் கழகம், ஆய்வரங்கை பெயர் மாற்றி நடத்தி முடித்தது. இது குறித்த செய்தி விவரம்: 03.02.2018 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” எனும் கருத்தரங்கிற்கு காவல்துறை தடை விதித்தது. மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டுக் கதவுகளில் வருவாய்த்துறை அலுவர்கள் முன்னிலை யில்  31.01.2018 அன்று ஒட்டினர். இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது: இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள் ! வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண...

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவிகளின் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளித்து விழா நடத்துவதைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன்று மதியம் 2.00 மணிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 10.02.2018 சனிக்கிழமை. நேரம் : மதியம் 2.00 மணி. இடம் : கருப்பூர்,சேலம். சகோதரி நிவேதிதை 150 ரதயாத்திரை – 2018 எனும் பெயரில் மதவெறி காவிகள் கல்வி நிலையங்களில் நுழைவதை அனுமதிக்கலாமா?ஏற்கனவே விவேகனந்தர் பெயரை வைத்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்குள் நுழைந்த இந்துத்துவவாதிகள் இப்போது விவேகானந்தரின் சீடர் நிவேதிதா பெயரை கையில் எடுத்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்க்கு மற்ற மதத்தவருக்கு இப்படி வாய்ப்புகளை இவர்கள் வழங்குவார்களா? கல்வி நிலையமா?காவி நிலையமா?அதுவும் தந்தை பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ரதயாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஜ.கவின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் போன்ற காவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துவதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.மத சார்பின்மையை...

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமதிப்பு செய்த காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம். நாள்: 26-01-2018 மாலை 4.00 மணி இடம்: மேட்டூர் பேருந்து நிலையம்      எதிரில், தலைமை: தோழர் கு.சூரியகுமார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தி.வி.க. முன்னிலை: தோழர் செ.மார்ட்டின், மேட்டூர் நகர தலைவர் தோழர் காவை ஈசுவரன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கண்டன உரை: தோழர் அ.சக்திவேல், செயற்குழு உறுப்பினர் தி.வி.க. தோழர் டைகர் பாலன், மாவட்ட அமைப்பாளர் தி.வி.க. ஏற்பாடு: திராவிடர் விடுதலைக் கழகம், சேலம் மேற்கு மாவட்டம்.

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக்கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந்திரன் செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டது. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஆண்டாள் ஆய்வுக்குரியவளே – கருத்தரங்கம் 03022018

திராவிடர்_விடுதலைக்_கழகம் நடத்தும் “ஆண்டாள் ஆய்வுக்குறியவளே” கருத்தரங்கம். இடம் : பெரியார் படிப்பகம் ( செக்போஸ்ட், கொளத்தூர்) நாள்: 03022018 மாலை 6 மணி ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா ? காமக் காவியமா ? கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமனியில்’ (08.01.2018) அன்று வெளிவந்தது. யார் -அவர் எத்தகையவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார். ” Andal was herself a devadasi who lived and died in srirangam temple” ஆண்டாள் என்பவர் ஒரு தேவதாசியா ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள் . இதனைச் சொல்பவர் வைரமுத்துவல்ல அமெரிக்காவின் இண்டியான பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சுபாஸ் சந்திர மாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட “Indian movement some aspects of dissent protest and reform” என்ற நூலில் இது காணப்படிகிறது என வைரமுத்து ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு அவர் மீது...

சேலம் மேற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் 07012018

07.01.18 அன்று காலை 11.00 மணிக்கு மேட்டூர் தாய் தமிழ் தொடக்கப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட கழகத் தலைவர் கு.சூரிய குமார் செயலாளர் சி.கோவிந்தரா சு ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளில் தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகம், தமிழக நீதிமன்ற தீர்ப்புகளின் அவல நிலை, இன்றைய சமூக அவலங்களில் நமது கடமைகள் நாம் ஆற்றவேண்டிய பங்களிப்புகள் குறித்து கழகத் தலைவர் பேசினார். மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள் கழக வளர்ச்சி செயல் திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் பறிபோகும் வேலைவாய்ப்புகள், மீட்கப்பட வேண்டிய நமது உரிமை கள் குறித்து துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்ய முடிவெடுக்ககப்பட்டது. கழகத் தலைவரிடம் பெரியார் முழக்கம் ஆன்டு சந்தா 500 சந்தாவும், அய்ந்தாண்டு சந்தா ஒன்றும்,...

கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்

கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்

சேலம் தலைமைச் செயலவையில் சேலம் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஜி.பி. கோவிந்தராஜ், கொளத்தூர் சூரி உறுதி கூறியவாறு, சேலம் மேற்கு மாவட்டக் கழகம்,  ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு 500 சந்தாக்களை உடனடியாக சேர்த்து அதற்கான கட்டணத்தையும் அனுப்பி வைத்துள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு எப்போதுமே கூடுதல் சந்தாக்களை சேகரித்து, ஏட்டின் உயிர்ப்புச் சக்தியாகத் திகழும் மேட்டூர் பகுதி மீண்டும் தனது கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளது. இது முதற் கட்டம். தொடர்ந்து சந்தா சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என்று கழகப் பொறுப்பாளர் ஜி.பி.கோவிந்தராஜ் கூறியுள்ளார். மேட்டூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் இந்த செயல்பாட்டை ஏனைய மாவட்டக் கழகங்களும் செயல்படுத்துமா? பெரியார் முழக்கம் 11012018 இதழ்

இந்திய அளவிலான வில்வித்தை – கழக மாணவர்கள் சாதனை

மேட்டூர் 7 ஸ்டார் ஆர்ச்சரி கிளப் மாணவர்கள் சாதனை இந்திய ஊரக விளையாடுக் குழுமம் நடத்திய தேசிய (இந்திய) அளவிலான வில்வித்தைப் போட்டி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள கேள்காண் விளையாட்டரங்கில், 2017 டிசம்பர் 25,26 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டு அணியை சார்பாக கலந்துகொண்ட, சேலம் மாவட்டம், காவலாண்டியூரைச் சேர்ந்த மாணவன் மா. இ.எழிலரசு 14 வயதுக்குட்பட்டோருக்கான ரீ கர்வ் வில் அம்பு பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இவர் கழகத் தோழர் காவை இளவரசன் – மாதவி இணையரின் மகன் ஆவார். இந்தியன் ரவுண்ட் பிரிவில் க.ப.வளவன் இந்திய முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் பெற்றார். இவர் கழகத் தோழர் கொளத்தூர் கபிலன் புகைப்பட நிலையம் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரின் மகன் ஆவார். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவில் தோழர் கொளத்தூர் குமார் – தமிழரசி இணையரின் மகன்...

பெரியார் நினைவு நாள் சேலம் மேற்கு 24122017

24.12.17 இன்று காலை 9.30 மணி யளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பிபில் கோனூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் 11.00 மணியளவில் மேட்டூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் மாவட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் கு.சூரியகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வரும் செயலவைக் கூட்டத்தில் கழக வளர்ச்சி நிதி அளிப்பது, பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு சந்தா ஒப்படைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேட்டுர் நகர செயலாளர் தோழர் சுரேசுகுமார் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம் 07122017

07122017 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வடநாட்டாருக்கு தாரைவார்க்கும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் தலைமை ஏற்றார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் (திவிக) தோழர் இரா. டேவிட் அவர்கள் முன்னிலை வகித்தார். கண்டனஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்(சிபிஎம்)தோழர் பி. தங்கவேல் , மாவட்ட செயலாளர் (சிபிஐ) தோழர் எ. மோகன், த.மு.மு.க மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் தோழர் பி. யூனுhஸ் அகமத் , சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்(திவிக) சி. கோவிந்தராசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரை நிகழ்த்தினார். திவிக கிழக்கு மாவட்ட...

விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் நடந்த பகுதியில் ‘மாவீரர் நினைவகம்’ அமைகிறது

புலியூரில் உணர்ச்சிப் பெருக்குடன் ‘மாவீரர் நாள்’ சேலம் மாவட்டம், கொளத்தூர் ‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு’ சார்பில் நவம்பர் 27ஆம் தேதி, மாவீரர் நாள் புலியூர் பிரிவில் உணர்ச்சியுடன் நடந்தது. கொளத்தூர் – புலியூர் பிரிவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இந்தப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் 1983 முதல் 1986ஆம் ஆண்டு வரை நடந்தது. விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், வழிகாட்டுதலில் நடந்த இந்த முகாமில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் பயிற்சி பெற்றனர். மேதகு பிரபாகரன் பலமுறை முகாமுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அப்போது திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வந்தார். அவருக்கு உரிமையான தோட்டத்தில்தான் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் நடந்தன. பெரியார்  இயக்கத் தோழர்களின் முழு ஒத்துழைப் போடு இந்த முகாம் நடந்தது. உள்ளூர் பகுதி வாழ் மக்களின்...

தோழர் சுகுமார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ! படத்திறப்பு – கல்வெட்டுத் திறப்பு மேட்டூர் ஆர் எஸ் 27112017

தோழர் சுகுமார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ! படத்திறப்பு – கல்வெட்டுத் திறப்பு நாள் : 27.11.2017 நேரம் : காலை 10 மணி. இடம் : என்.எஸ்.கே நகர், மேட்டூர் அணை R.S., மேட்டூர். படத்திறப்பு : கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்கள். கல்வெட்டுத் திறப்பு : கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள். கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !” நாள் : 27.11.2017 திங்கட்கிழமை. நேரம் : மாலை 5.00 மணி. இடம் : தளபதி பன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர். சுடர் ஏற்றி வீரவணக்க உரை : பேராசிரியர் சரஸ்வதி, நாடாளுமன்ற உறுப்பினர்,நாடு கடந்த தமிழீழ அரசு. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்திட அணி திரள்வோம் ! நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு, கொளத்தூர்,சேலம் மாவட்டம். தொடர்புக்கு : 9443519234, 9443565503, 9003677717, 9842445964.

தோழர் சுகுமார் படத்திறப்பு விழா 27112017 மேட்டூர்

மேட்டூர் R.S. பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் சுகுமார் அவர்கள் 13.11.2017 மாலை 05.30 மணிக்கு உடல் நலக்குறைவின் காரணமாக முடிவெய்தினார் தோழரின் இறுதி நிகழ்வு 14.11.2017 மாலை 3.00 மணிக்கு மேட்டூர் R.S.பகுதியில் உள்ள N.S.K நகரில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. தோழரின் படத்திறப்பு 27112017 அன்று அவரின் இல்லத்தில் கழகத் தலைவரால் திறந்து வைக்கப்படும்