பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை – எட்வின் பிரபாகரன்
வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 11 கட்சிகளின் 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.மோடிக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருதி, பதாகைகளை ஏந்தி வந்ததற்காக இந்த அக்கிரம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. INDIA கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், சங்கிகள் செய்த வெறிச்செயல் இதுவாகும். இனி நம்முடைய நாடாளுமன்றம் வடகொரிய நாடாளுமன்றத்தைப் போல இருக்கப் போகிறது என கார்த்தி சிதம்பரம் (காங்) விமர்சித்துள்ளார். எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு பல்வேறு சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஒன்றிய சனாதன அரசு, எந்த எதிர்ப்புக்கும் இடமின்றி நிறைவேற்றி உள்ளது. இதை மணிஷ் திவாரியும் (காங்) குறிப்பிட்டுப் பேசியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இரங்கல் உரை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறோம் என சசி தரூர் (காங்) கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையை பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக சுஷில் குமார் ரிங்கு (ஆம்ஆத்மி) கண்டித்துள்ளார். தன்னுடைய கூர்மையான கேள்விகளால் பாஜகவினரை துளைத்து வந்த,...