Category: குடி அரசு 1936

ஈரோட்டில் சுயமரியாதை திருமணம்

ஈரோட்டில் சுயமரியாதை திருமணம்

  தோழர்களே! இன்று இங்கு நடந்த சுயமரியாதைத் திருமணம் பற்றி எனது தோழர்கள் ஈஸ்வரன், ரத்தினசபாபதி, அன்னபூரணியம்மாள் ஆகியவர்கள் பேசினார்கள். சுயமரியாதைத் திருமணம் என்பது ஒரு சீர்திருத்த முறை கொண்ட திருமணமேயாகும். சீர்திருத்தம் என்பது இன்று உலகில் திருமணம் என்கின்ற துறைமாத்திரம் அல்லாமல் மற்றும் உலகில் உள்ள எல்லாத் துறையிலும் யாருடைய முயற்சியுமில்லாமல் தானாகவே ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது. தொழில் முறையில் கையினால் செய்யப்பட்ட வேலைகள் யந்திரத்தினால் செய்வது என்பது எப்படி தானாகவே ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து அது நாளுக்கு நாள் செல்வாக்குப் பெருகிறதோ அதுபோலவேதான் இத்திருமண விஷயமும் நாளுக்கு நாள் மாறுதலடைந்து அந்த முறை ஒரு யந்திரம் போல் ஆகி வருகிறது. யந்திரத்தின் தன்மை என்ன? என்று பார்த்தால் சுருக்கமான நேரத்தில் சுருக்கமான செலவில் குறிப்பிட்ட காரியங்கள் நடைபெறுவதற்கு தான் யந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. அது போலவே இந்த சு.ம. திருமணமும் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் குறிப்பிட்ட காரியமான...

தொழிலாளருக்கு காங்கிரஸ்காரர் துரோகம்

தொழிலாளருக்கு காங்கிரஸ்காரர் துரோகம்

இந்திய சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் சம்பளப் பட்டுவாடா மசோதாவில், முதலாளிகள் பிரதிநிதி தோழர் மோடி கொண்டு வந்த திருத்த விஷயமாகக் காங்கிரஸ் அங்கத்தினர் நடந்து கொண்ட தோரணையினால் இந்தியத் தொழிலாளர் பிறப்புரிமை பறிமுதலாகியிருக்கும் உண்மையைத் தொழிலாளர் உணர்ந்து கொண்டு விட்டது பாராட்டத்தக்கதே. சென்னையிலும், கோவையிலும் நடைபெற்ற கண்டனக் கூட்டங்களினால் இவ்விஷயத்தில் தொழிலாளர் கொண்டிருக்கும் மனக்கொதிப்பு நன்கு வெளியாகிறது. தோழர்கள் சாமி வெங்கடாசலம் செட்டியாரும், தாசும் நடு நிலைமை வகித்ததினாலேயே, தோழர் மோடி திருத்தம் நிறைவேறிய தென்றும், மற்ற காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் எல்லாம் தோழர் மோடி திருத்தத்துக்கு விரோதமாகவே வோட்டுக் கொடுத்தார்கள் என்றும், சாமி வெங்கடாசலம் செட்டியாரும், தாசும் வியாபாரத் தொகுதியின் பிரதிநிதி களாதலால் அத்தொகுதி வாக்காளர்கள் விருப்பத்தின்படி நடக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றும், கோவை டவுன் ஹால் மைதானக் கூட்டத்தில், ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் ஒரு நொண்டிச் சமாதானம் கூறி, காங்கிரஸ்காரர் செய்த துரோகத்தின் கொடுமையை மறைக்க முயன்றிருப்பதாகத் தெரிகிறது....

சீர்திருத்தமும் கட்சிகளும்

சீர்திருத்தமும் கட்சிகளும்

புதிய சீர்திருத்தம் என்றால் பதவிகளும், உத்தியோகங்களு மல்லாமல் மற்றப்படி அதனால் ஏழைப் பொது மக்களுக்கு இன்றைய நிலைமையை விட கடுகளவு நன்மைகூட கிடையாது என்பது அறிவுள்ள மக்கள் எல்லாம் அறிந்ததும், நாணயமுள்ள மக்கள் எல்லாம் ஒப்புக் கொள்ளக்கூடியதுமாகும். புதிய பதவிகளுக்கும், உத்தியோகங்களுக்கும் தகுந்தபடி புதிய புதிய செலவுகளும் உண்டு என்பதையும் அறிஞர்கள் அறியாமலிருக்க மாட்டார்கள். இந்தச் செலவுகள் ஏழைமக்கள் தலையில்தான் விடியப் போகின்றனவே ஒழிய புதிய செலவுக்கு ஈடுகொடுக்க பழைய செலவைக் குறைத்துக் கொள்ள புதிய சீர்திருத்தத்தினால் ஒரு நாளும் முடியப் போவதில்லை. ஆகவே ஏழைப் பாமர மக்களுக்கு அதாவது விவசாயிகளுக்கும், தொழிலாளி மக்களுக்கும் மேலும் மேலும் தொல்லைகளும், ஏழ்மைத் தன்மைகளும் பெருகுவது தான் சீர்திருத்தம் என்றாலும் அதைப்பற்றி படித்த மக்களும் பிரபுக்களும் சிறிதும் லக்ஷ்யம் செய்யாமல் இன்னும் அதிகச் செலவில் புதிய புதிய “சீர்திருத்தங்களை” வரவேற்ற வண்ணமாயிருந்து வருகிறார்கள். இந்தப்படி வரவேற்பதில் புதிய சீர்திருத்தத்தினால் ஏற்படும் பதவிகளையும், உத்தியோகங்களையும் முழுவதையுமே...

காங்கிரசும் வாலிபர்களும்

காங்கிரசும் வாலிபர்களும்

இன்று, காங்கிரசு ஸ்தாபனம் தேசாபிமானச் சங்கமென்றும், ஜஸ்டிஸ் ஸ்தாபனம் வகுப்புவாத ஸ்தாபனமென்றும் பொதுமக்களுக்கு கற்பிக்கப் பட்டு வருகிறது. அது மாத்திரமல்லாமல் காங்கிரசில் உள்ளவர்கள் எல்லாம் விரிந்த நோக்கமுடைய தியாகிகள் என்றும், ஜஸ்டிசில் உள்ளவர்கள் எல்லாம் குறுகிய நோக்கமுள்ள சுயநலக்காரர்கள் என்றும் பிரசாரம் செய்யப்படுவதுடன் பொது நோக்குடைய அனேக வாலிபர்கள் உள்ளத்திலும் அம்மாதிரியான ஒரு அபிப்பிராயம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டுவித அபிப்பிராயங்களின் மீதுதான் இன்று சென்னை மாகாணத்தில், சிறப்பாக தமிழ்நாட்டில் அரசியல், சமூக இயல் போர் நடந்து வருகிறது. ~subhead நமது நிலை ~shend ஆனால் நம்மைப் பொறுத்தவரை நாம் இந்த 10, 12 வருஷகாலமாகவே காங்கிரசானது பார்ப்பனர்களுடைய நன்மைக்கு ஆக பயன்படுத்தப் படுகின்ற ஸ்தாபனம் என்றும், ஜஸ்டிசானது பார்ப்பனரல்லாதாருடைய நன்மைக்கு ஆக ஏற்படுத்தப்பட்டு பயன்பட்டு வருகிற ஸ்தாபனம் என்றும் சொல்லி வருவதை யாவரும் உணர்ந்திருக்கலாம். இப்படிச் சொல்லி வருவதாலேயே காங்கிரசில் அனுபோகமில்லாமலோ, காங்கிரசினிடம் ஏதாவது எதிர்பார்த்து ஏமாந்து போய்விட்டதினாலோ சொல்லி வருவதாக...

தியாகராய நகரில் சு.ம. பொதுக் கூட்டம்

தியாகராய நகரில் சு.ம. பொதுக் கூட்டம்

ஜஸ்டிஸ் கட்சியும் சு.ம. இயக்கமும் அடிப்படையான கொள்கையில் இரண்டும் ஒன்று எனவே சுயமரியாதைக்காரர் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கவேண்டும் சுயநலக்காரர்களுக்கு இனி ஜஸ்டிஸ் கட்சியில் இடமில்லை தலைவரவர்களே! தோழர்களே!! எங்கள் அறிக்கையைப்பற்றிப் பார்ப்பனப் பத்திரிகைகள் தங்களுக்கு அனுகூலமாக விஷமப் பிரசாரம் செய்து வருகிறபடியால் அதைப்பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டுமென்று தலைவர் கட்டளையிட்டதால் எனது காயலாவையும் கவனிக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து அனுமதி பெற்று வந்து நான் பேசவேண்டியதாயிற்று. எங்கள் அறிக்கையில் ஜஸ்டிஸ் கட்சியை குறைகூறியோ அல்லது வேறு கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றோ ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? ~subhead அறிக்கையின் கருத்து ~shend அவ்வறிக்கையின் உத்தேசமெல்லாம் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு முன்னுக்கு வந்தவர்களும், கட்சியின் பிரதான புருஷர்களாய் இருக்கின்றவர்களும் கட்சியினால் 1000, 10000 வீதம் சம்பளமுள்ள பதவி பெற்றவர்களும், பெற்றுக் கொண்டிருக்கிறவர்களும் தங்கள் சுயநலத்தையே பிரதானமாகக் கருதிக்கொண்டு கட்சியை மோசம் செய்துவிட்டார்கள் என்றும், சிலர் கவலையில்லாமல் இருந்து வருகிறார்கள் என்றும் நாங்கள் கருதி...

அரசாங்கத்தை காங்கிரசுக்காரர்கள் ஏமாற்றி விட்டார்களாம்

அரசாங்கத்தை காங்கிரசுக்காரர்கள் ஏமாற்றி விட்டார்களாம்

அரசாங்கத்தார் காங்கிரசுக்காரர்கள் திலகர் நிதி விஷயமாகவும், பீகார் பூகம்ப நிதி விஷயமாகவும் நடந்து கொண்ட நாணயத்தைப்பற்றி ரகசிய விசாரணை செய்து சம்பாதித்து வைத்து இருக்கும் புள்ளி விவரங்களை அசம்பிளி கூட்டத்தில் ஏதாவது சந்தர்ப்பம் பார்த்து காங்கிரஸ்காரர்கள் பேச்சுக்கு பதில் சொல்லு முறையில் வெளியாக்கி விடுவதாக ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்கள். இதைக்கண்டு நடுங்கிப்போய் “காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் உங்களுக்கு அந்த மாதிரி சந்தர்ப்பம் கொடுத்தால் தானே அரசாங்கத்தாராகிய நீங்கள் எங்கள் வண்டவாளங்களை வெளியிடுவீர்கள்” என்று சொல்லி அரசாங்கம் கோபித்து பதில் சொல்லும் படியான சந்தர்ப்பமே இல்லாமல் செய்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று சொல்லி அந்தப்படி தாங்கள் கொண்டுவர இருந்த தீர்மானங்களையும், பேச இருந்த பேச்சுக்களையும் நிறுத்திக்கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றி விட்டார்கள். இதற்குப் பெயர் தான், நிலைமையை சமாளித்துக் கொள்ளப்பட்டதாம். காங்கிரசின் நாணயமும் அரசாங்கத்தின் நாணயமும் எப்படி இருந்த போதிலும் திலகர் சுயராஜ்ஜிய நிதி மோசடியும், பீகார் பூகம்ப நிதி வண்டவாளமும் மறைபட்டுப்...

காரைக்குடி பிரதிநிதிகளை ராஜகோபாலாச்சாரியார் ஏமாற்றினாராம்

காரைக்குடி பிரதிநிதிகளை ராஜகோபாலாச்சாரியார் ஏமாற்றினாராம்

காரைக்குடி மகாநாட்டுக்கு வழக்கத்துக்கு மாறாக சில பிரதிநிதிகள் அதிகமாகவே வந்தார்களாம். காரணம் என்னவென்றால் சத்தியமூர்த்தியார் சகாப்தத்தை ஒருவிதத்தில் ஒழித்துவிட வேண்டும் என்கின்ற உணர்ச்சி, காங்கிரசிலுள்ள சில சுயமரியாதை உணர்ச்சி உள்ள வாலிபர்களுக்கும், பார்ப்பனரல்லாதார் சூடு ரத்த ஓட்டமுள்ள சில வாலிபர்களுக்கும் இருந்த ஆசையேயாகும். அதனாலேயே அவர்கள் தோழர்கள் முத்துரங்கமவர் களையாவது அவினாசிலிங்கமவர்களையாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவராக ஆக்கிவிடலாம் என்கின்ற ஆசைமீது வந்தார்கள். இந்த ஜபம் ராஜகோபாலாச்சாரி அல்லது ராஜாஜி என்பவரிடம் நடக்குமா? முத்துரங்க முதலியார் தலைவராய் வந்துவிட்டால் அந்த தலைமை ஸ்தானம் (ஏடிண் Mச்ண்tஞுணூ ஙணிடிஞிஞு) ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் மாதிரி, சீனிவாசய்யங்கார் வாய்ஸாக மாறிவிடும். அப்புறம் அது ராஜகோபாலாச் சாரியாரைப் பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டு விடும். அவினாசிலிங்கனார் தலைவரானால் அவர் தோழர் டி.ஏ. ராமலிங்கம் செட்டியாருக்குத் தம்பியானதால் ஏதாவது பல்டி அடிக்க வேண்டி வந்தாலும் வந்து விடும். அதனாலே தான் உட்காரு...

ரயில் பிரயாணமும் மோட்டார் பிரயாணமும்

ரயில் பிரயாணமும் மோட்டார் பிரயாணமும்

மோட்டார் பஸ்கள் எங்கும் தாராளமாய் ஏற்பட்டுவிட்டதின் பயனாக ரயிலில் பிரயாணம் செய்யும் மக்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தென்னிந்திய ரயில்வேக் கம்பெனியாருக்கு வரும்படி நாளுக்கு நாள் குறைந்தும் போகிறது. இதற்காக வேண்டி மோட்டார் பஸ் நடத்துகிறவர்களுக்கு எவ்வளவு தொல்லையும், நஷ்டமும் ஏற்படுத்தலாமோ, அவ்வளவு தொல்லையும், நஷ்டமும் பலவித தந்திரங்களினாலும் யார் யாரோ செய்து பார்த்தும் மோட்டார் பஸ் பெருக்கத்தை தடைப்படுத்த முடியவில்லை. பஸ்காரர் போலீஸ் இலாக்காவினால் அடையும் தொல்லைகளை அளவிடவே முடியாது. ஜில்லா போர்டார் தொல்லையோ சொல்ல வேண்டியதில்லை. சர்க்கார் சட்டப்படி ஜில்லா போர்டுக்கும், கவர்ன்மெண்டுக்கும் செலுத்தும் வரிக்கு சமமான அளவு போலீஸ் அதிகாரிகளுக்கும், பிரசிடெண்டுகளுக்கும், கான்ஸ்டேபிள்களுக்கும் பலவழிகளிலும் செலுத்த வேண்டியிருக்கிறது. இது தவிர போலீஸ் அதிகாரிகளையும், கான்ஸ்டேபிள்களையும் இவர்களது சொந்தக்காரர்களையும் வாடகை இல்லாமல் பிரயாணம் செய்ய அனுமதிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு கஷ்ட நஷ்டம் அனுபவித்தாலும் கூட சில சமயங்களில் அடிக்கடி போலீசாரால் சார்ஜ் செய்யப்பட்டு அபராதம் வகையரா தண்டனை...

பாண்டியன், இராமசாமி அறிக்கை

பாண்டியன், இராமசாமி அறிக்கை

  சென்ற வாரம் குடி அரசில் வெளியிடப்பட்ட “பாண்டியன், ராமசாமி” அறிக்கையைப்பற்றி இதுவரை சுமார் 100 தோழர்களிடம் இருந்து ஆதரவுக் கடிதங்கள் வந்திருக்கின்றன. இன்னமும் பல இடங்களில் இருந்து ஆமோதித்து ஆதரவளிப்பதாகக் கடிதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகவே பிப்ரவரி மத்தியில் அல்லது பிற்பகுதி வாரங்களில் ஒரு நாள் குறிப்பிட்டு திருச்சியிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம். பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர்களில் மிகுந்த தியாக புத்தியுடன் உழைத்து வரும் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இவ்வியக்கத்துக்கு ஆக தனது சம்பளம் 4500 ரூ. தவிர மேல்கொண்டு 1க்கு 4000, 5000 ரூபாய் வீதம் செலவு செய்கிறார் என்பதையும், சிற்சில சமயங்களில் அவர் சென்னையில் இருந்துகொண்டே இரண்டு நாள் மூன்று நாள் கூட தனது மனைவியாரையும், குழந்தைகளையும் பார்க்கக்கூட சௌகரியமில்லாமல் இயக்கத்துக்கு ஆக வேலை செய்கிறார்கள் என்பதையும் நேரிலேயே அறிவோம். இவை இயக்கத்தில் அவருக்குள்ள ஊக்கத்தைக் காட்டுகின்றன என்று மாத்திரம் சொல்லலாமே தவிர...

பிரார்த்தனை

பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது. பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை, முதலிய காரியங்களும் பெயர்களும் சொல்லுவதுண்டு. இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுவதேயாகும். தனக்கு வேண்டியவற்றை எல்லாம் அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவை களும், மறுமையில் மேல்லோகத்தில் பாவமன்னிப்பு, மோக்ஷம், நல்ல ஜன்மம் முதலியவைகளும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும்...

சோதிடத்தின் வண்டவாளம்

சோதிடத்தின் வண்டவாளம்

தோழர் லெய்லா என்னும் பெயருடையவரும், மேனாட்டுப் பிரபல சோதிட பண்டிதையுமான ஓர் அம்மையார் அவர்கள் சென்னைக்கு வந்து “தமிழ்நாடு” நிருபரிடம் பலவகையான எதிர்கால நிகழ்ச்சிகளைப்பற்றி தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறாரென்றும், அவர் சில நாளைக்குமுன் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகள் யாவும் தவறாது நடந்திருக்கின்றனவென்றும் தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. அச்சோதிட பண்டிதை இப்பொழுது சென்னையிற் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகளில் ஜார்ஜ் மன்னர்பிரான் உடல் நிலையைப்பற்றியது ஒரு செய்தியாகும். அவர், ஜார்ஜ் மன்னர் நோய் நீங்கி உடல் நலம் பெறுவா ரென்றும், இன்னும் சில வருடங்கள் உயிர்வாழ்வாரென்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறி இரண்டு தினங்கள் ஆவதற்குள் மன்னர்பிரான் மரணமடைந்துவிட்டார். இதிலிருந்து சோதிடத்தின் உண்மையை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். “காக்கையேறப் பனம்பழம் விழுந்தது” என்னும் (காகதாளி) நியாயம்போல் ஒருவர் கூறினபடியே தற்செயலாய் ஏதோ சில சமயங்களில் வாய்ந்து விடுவதுண்டு. இதனைக்கொண்டே அவ்வாறு கூறியவர்களை தீர்க்கதரிசிகளெனவும், சோதிடவல்லவரெனவும் கூறிப் பெருமைப்படுத்துகின்ற நம்மக்களின் பேதமைத் தன்மையை என்னென்பது?...

சத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்

சத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கர்ப்பத்தடையைப்பற்றி ஆட்சேபித்துப் பேசுகையில் விளைபொருள்கள் எல்லா மக்களுக்கும் சரி சமமாகப் பங்கிட்டுப் பிரித்துக் கொடுப்பதானால் ஜனங்களுக்கு உணவுப்பஞ்சம் இருக்காதென்றும், ஆதலால் கர்ப்பத்தடையோ, கர்ப்ப ஆட்சியோ கூடாதென்றும் எடுத்துச்சொன்னார். அடுத்த ஓர் இடத்தில் பேசும்போது செல்வங்களை மக்களுக்கு சரிசமமாகப் பங்கிட்டுக் கொடுப்பது என்பதை தாம் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளமுடியாது என்று சொன்னார். ஆகவே இப்படிப்பட்ட நிலையில் கர்ப்பத்தடையோ, கர்ப்ப ஆட்சியோ அவசியமா இல்லையா? என்று தான் நாம் கேட்கின்றோம். குடி அரசு செய்திக் குறிப்பு 26.01.1936 ~cstart

சத்தியமூர்த்தியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்

சத்தியமூர்த்தியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்

பார்ப்பனரல்லாதார் கட்சியாரின் முக்கிய கொள்கையானது, இந்தியாவில் மக்கள் பல்வேறு மதக்காரர்களாய் மாத்திரமல்லாமல், பல்வேறு ஜாதிகளாய் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சமூக வாழ்வில் பிறவியின் காரணமாகவே உயர்வு தாழ்வு கற்பித்து அந்தப்படியே வெகு காலமாய் நடத்தப்பட்டு வந்ததால் மேல் நிலையில் இருப்பவன் எப்போதும் மேல் நிலையிலேயே இருக்கவும், கீழ்நிலையில் இருப்பவன் எப்போதும் கீழ் நிலையிலே இருக்கவுமான சமூக வாழ்க்கை அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது என்பதை அறிந்து, அவற்றை அடியோடு ஒழித்து சமூக வாழ்விலும் மற்றும் கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றிலும் சகல மக்களுக்கும் சமசந்தர்ப்பம் ஏற்படும்படியாகச் செய்ய வேண்டுமென்பதேயாகும். இக்கட்சியை இந்த முக்கிய கொள்கையோடு 1916ல் ஆரம்பித்து இன்று 1936ம் வருஷம்வரை சிறிதும் பின்னடையாமல் எவ்வளவோ எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் இடையில் கஷ்டப்பட்டு வேலை செய்து வந்ததின் பயனாய் கொள்கை ஒரு அளவு வெற்றி பெற்று இருக்கிறது என்றாலும் இன்னும் வெற்றி பெற வேண்டிய அளவு எவ்வளவோ இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது....

பார்ப்பனரல்லாத சமூக அபிமானிகளுக்கு விண்ணப்பம்

பார்ப்பனரல்லாத சமூக அபிமானிகளுக்கு விண்ணப்பம்

அன்புள்ள தோழர்களே! பார்ப்பனரல்லாதார் கக்ஷிக்கும் அதன் கொள்கைக்கும் நாட்டில் நல்ல ஆதரவும் செல்வாக்கும் இருப்பது தாங்கள் அறியாததல்ல. ஆனால் அதற்கு கவலையும், நாணயமும், திறமையும் கொண்ட தலைவர்கள் இல்லை என்று சொன்னால் அதை அடியோடு நீங்கள் ஆக்ஷேபிக்க மாட்டீர்கள். இன்று அக்கக்ஷிக்கு தலைவர்களும், பாதுகாப் பாளர்களும் மந்திரிமார்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே கருதும்படி ஆகி விட்டது. அக்கக்ஷியின் பேரில் இன்று சொல்லப்படும் தவறுதல்களுக்கும், பழிகளுக்கும் காரணம் போதிய பிரசாரமின்மையும் அதன் தலைவர்கள் என்போர்களுக்குள் இருந்து வரும் அசிரத்தையின் பயனுமேயாகும். மற்றும் அக்கக்ஷிக்குத் தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டு வருவதாய் கருதவேண்டி இருப்பதும், சொல்லப்பட்டு வருவதும், தலைவர்களாய் இருப்பவர்கள் என்பவர்களுள் இருக்கும் கட்டுப்பாடற்ற தன்மையும், ஒற்றுமை இன்மையும், அவநம்பிக்கையும், கவலையற்ற தன்மையும், சுயநல உணர்ச்சியும் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறதே தவிர மற்றபடி பொது ஜன ஆதரவில்லாததால் தோல்வி ஏற்பட்டது என்று சொல்லிவிடும்படியாக இல்லை. என்றாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் உண்மையான பற்றுதலும் கவலையும் கொண்டு...

சக்லத்வாலா சாய்ந்தார்

சக்லத்வாலா சாய்ந்தார்

சக்லத்வாலா சாய்ந்தார் என்பதைக் கேட்ட ஏழைமக்கள் பரிதவிக்காம லிருக்க மாட்டார்கள். அவர் எப்படியும் ஒரு நாளைக்காவது செத்துச் சாய்ந்து தான் தீரவேண்டும். அதை தடுக்க யாராலும் முடியாது. அன்றியும் சக்லத்வாலா இந்திய மக்கள் சராசரி வாழ்வுக்கு ஒன்றுக்கு இரண்டு பங்கு காலம் வாழ்ந்து விட்டார் என்றாலும், அவரது தொண்டு ஏழை மக்களுக் கென்றே பாடுபட்டு உழைத்துப் பட்டினியால் வாடும் மக்களுக்கென்றே இருந்து வந்த படியால் அம்மக்களின் பரிதாபகரமான வாழ்வுக்கு முடிவு ஏற்படும் வரை சக்லத்வாலாவின் வாழ்க்கையை தங்கள் தங்கள் ஜீவவாழ்க்கையைவிடப் பெரிதாக மதித்திருப்பார்கள் என்பதைப்பற்றி நாம் குறிப்பிட வேண்டியதில்லை. சக்லத்வாலா ஒரு சிம்மம் போன்றவர். அவர் பேச்சு எதிரிலிருக்கும் எவரையும் லட்சியம் செய்து பேசக்கூடியதாய் இருக்காது. அவர் கொண்ட கொள்கையொன்றையே லக்ஷியம் செய்ததாக இருக்கும். அவர் பேசும் கூட்டத்தில் அவரது கொள்கைக்கு எதிரிகள் வீற்றிருக் கிறார்கள் என்று கண்ட மாத்திரத்தில் அவருடைய உபன்யாசங்கள் கொள்கை களின் உருவங்களாகவே நிற்கும். அப்பொழுது தான்...

மன்னர் முடிவெய்தினார்

மன்னர் முடிவெய்தினார்

இந்திய சக்கரவர்த்தி ஜார்ஜ் மன்னர் தமது 71 வது வயதில் முடிவெய்தினார். எட்வர்ட் மன்னர் முடி புனைந்தார். “முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு, பிடி சாம்பலாவது” என்பது இயற்கையே யாகும். இதில் எவ்வித அதிசயமோ தனி விஷயமோ என்பது சிறிதும் கிடையாது. மனிதனாகப் பிறந்தால் மாத்திரம் அல்ல, கல்லாகவோ வைரக் குன்றமாகவோ பிறந்தாலும்கூட கால பேதத்தில் இந்த முடிவையேதான் அடைந்து தீர வேண்டும். தோன்றின அழியும், அழிந்தன தோன்றும் என்பதே உலக இயற்கை. ஆதலால் விசனப்படுவது பயன்தரக் கூடியதன்று. நமது சக்கரவர்த்தியார் என்னப்பட்ட ஜார்ஜ் அரசர் இந்தியாவின் நல்ல ஆட்சிக்கோ தீமை ஆட்சிக்கோ சம்மந்தப்பட்டவரன்று. பிரிட்டிஷ் ஆட்சி அரசருக்கு கொடுத்துள்ள ஏதோ இரண்டொரு பாதுகாப்பு அதிகாரம் போக, பாக்கி அதிகாரங்கள் அவ்வளவும் ஜனப்பிரதிநிதி சபை என்று சொல்லப்படும் பார்லிமெண்டு சபையின் ஆட்சிக்கு உட்பட்டதாகும். ஆதலால் ஆட்சி சம்பந்தமான குற்றங்குறைகளை அரசருக்குப் பொருத்தி அவரது குணா குணங்களைப்பற்றி நாம் பேச நமக்கு...

ஜில்லா போர்டும் பொப்பிலியும் சென்னை அரசாங்கமும்

ஜில்லா போர்டும் பொப்பிலியும் சென்னை அரசாங்கமும்

சில ஜில்லா போர்டுகளை ஸ்தல ஸ்தாபன மந்திரி இரண்டாகப் பிரித்ததாலும், மற்றும் சிலவற்றை இரண்டாகப் பிரிக்க ஏற்பாடு செய்து வருவதாலும் காங்கிரஸ்காரர்கள் 2, 3 ஜில்லா போர்டு தேர்தல்களில் தங்களுக்கு வெற்றி ஏற்பட்டது என்கின்ற பெருமை எங்கு வீணாய்ப் போய் விடுமோ என்கின்ற பயத்தால் பார்ப்பனர்கள் எல்லோரும் பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாமுமே பொப்பிலி ராஜா மீது வீண் பழி கூறி பெரியதொரு கூப்பாடுகள் போட்டு மாய அழுகை அழுதன. ஜஸ்டிஸ் மந்திரிகள் மீது எவ்விதக்குற்றம் கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்த வெள்ளைக்காரர்களும் அவர்களது மெயில் பத்திரிகையுங்கூட இக்கூப்பாடுகளுக்கும் அழுகைக்கும் ஒத்து ஊதினார்கள். பொது ஜனங்களும் இந்த விஷமப் பிரசாரத்தைக் கண்டு உண்மை உணரமுடியாமல் திண்டாட வேண்டியவர்களாகி விட்டார்கள். தாலூகா போர்டுகள் கலைக்கப்பட்ட காலத்திலேயே ஜில்லா போர்டுகள் பிரிக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதும், சென்ற வருஷத்திலேயே இரண்டொரு ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டதும் யாரும் அறியாததல்ல. அந்த அவசியத்தையும், முறையையும் கருதியே இனியும் சில ஜில்லா...

சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின்  மூன்றாவது ஆண்டுவிழா  வாலிபர்களும் பொதுசேவையும்  ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம்  ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?

சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் மூன்றாவது ஆண்டுவிழா வாலிபர்களும் பொதுசேவையும் ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம் ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?

ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம் ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்? தோழர்களே! இந்த சுயமரியாதை வாலிப சங்க ஆண்டு விழாவுக்கு நானே தலைமை வகிக்க வேண்டுமென்று விரும்பியழைத்த எனது வாலிப தோழருக்கு முதல் நன்றி செலுத்துகிறேன். இப்போது என்னை இங்கு தலைமை வகிக்க பிரேரேபித்த தோழர் இ.ஈ. நாயகம் அவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள். அப்புகழ்ச்சி சகிக்கமுடியாததும் எனக்கு வெட்கத்தை உண்டாக்கக் கூடியதாகவுமே இருந்தது. நான் செய்திருப்பதாகச் சொல்லப்படும் காரியங்களில் எதிலும் தோழர் நாயகம் பின்னடைந்தவரல்ல. அவர்களது ஆசை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை எதுவும் எவ்வகையாலும் குறைந்ததல்ல. ஆதலால் அப்படிப்பட்ட பெரியார் என்னைப் புகழ்வது என்றால் அது அதிகம் என்று சொல்லாமலிருக்க முடியவில்லை. அன்றியும் நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் புகழ்வது என்பதும் பரிகாசத்துக்கு இடமானதேயாகும். ஆனாலும் அவர்களுடைய அன்புக்கு நான் பாத்திரனாக ஆக்கிக் கொள்ளப்பட்டேனே என்கின்ற முறையில் நன்றி செலுத்துகிறேன்.   வாலிபர்கள் பெருமை தோழர்களே இன்று...

முனிசிபல் நிர்வாகம்

முனிசிபல் நிர்வாகம்

நம் வீட்டுக் காரியங்களை நாமே நமது இஷ்டப்படி நடத்த உரிமை இருக்கவேண்டும். வீட்டுக் காரியங்களில் பிறர் தலையிடுவதை ஒருவரும் ஆதரிக்கமாட்டார்கள். இது பொதுவிதி. ஆனால் வீட்டுக் காரியங்களை நடத்த நமக்கு சக்தியில்லாமல் குடும்பம் பாழானால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டியது அறிவாளிகள் கடமையல்லவா? வீட்டையோ, குடும்பத்தையோ பாழாக்க, வீட்டு முதலாளிக்கோ குடும்பத் தலைவருக்கோ உரிமையு மில்லை; அதிகாரமுமில்லை. குடும்ப நிர்வாகம் நடத்த ஆற்றலில்லாத தலைவர்களைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி ஏனைய குடும்பத்தினர் குடும்ப நிர்வாகம் நடத்துவதையும் நாம் கண் கூடாகக் காண்கிறோம். இந்தியர்களை சுய ஆட்சியில் பழக்கும் நல்ல நோக்கத்துடன் 1856ல் இந்தியாவில் முனிசிபல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1930ல் அது திருத்தப்பட்டது. ஜனங்களுக்கு வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களை ஜனப் பிரதிநிதிகளே கவனித்து நடத்தினால் பொதுஜன க்ஷேமம் விருத்தியடையும் என்பது முனிசிபல் சட்டம் நிறைவேற்றி யவர்களின் கருத்து. ஆனால் தற்காலம் ஸ்தல ஸ்தாபனங்களின் நிலைமை என்ன? கட்சிப் பிணக்கும் சூழ்ச்சிகளும் இல்லாத ஸ்தல...

தமிழ்த் திருநாள்

தமிழ்த் திருநாள்

கடவுள் வணக்கம் இல்லை மதத்தில் இருந்து தமிழ் விலகினாலொழிய தமிழுக்கும் தமிழருக்கும் சுயமரியாதை உண்டாகாது புராணங்களில் இருந்து தமிழுக்கு இலக்கியம் எடுப்பது மலத்திலிருந்து அரிசி பொறுக்கும் மாதிரி திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும் கா.நமச்சிவாய முதலியாரும் தென்னாட்டின் இன்றைய தமிழ்ப் பெருமைக்குக் காரணஸ்தராவார்கள் அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! நீங்கள் இவ்வளவு பெரிய கரகோஷமும் ஆரவாரமும் செய்து என்னை இப்பொழுது வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்ய மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் பாஷைக்கு வாழ்த்துக்கூறும் வேலை இலேசானதல்ல. அதிலும் என்போன்ற அதாவது தமிழ் பாஷைக்கு வல்லின இடையின எழுத்து பேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண இலக்கியமும் அறியாதவனும், தமிழ் பாஷையையே கெடுத்து கொலை செய்து வருபவன் என்கின்ற பழியைப் பெற்றவனுமான நான் தமிழ் வாழ்த்துக்கு தகுதி உடையவனாவேனா என்று பாருங்கள். அன்றியும் தமிழைப்பற்றி அபிப்பிராயங்களிலும் பண்டிதர்களுக்கும் எனக்கும் எவ்வளவோ துறையில் நேர்மாறான கருத்துக்கள் இருந்து வருவதும்...

உலகில் முஸ்லீம்கள் ஜனத்தொகை விபரம்

உலகில் முஸ்லீம்கள் ஜனத்தொகை விபரம்

– ஒரு உண்மை சுதந௯�திர வாதி (கோடி) ஆப்பிரிக்காவில் 41 ஜாவா போர்னியோ, மலேயா ஆகிய நாடுகளில் 10 இந்தியாவில் 9 சைனாவில் 3 ரஷ்யா கிழக்கு ஐரோப்பாவில் 2 மத்திய கிழக்கு ஆசியாவில் 3 ஆக 68 இந்திய ஆதிதிராவிடர்களும் முஸ்லீம்கள் ஆகிவிட்டால் 75 கோடி ஆகிவிடும். இந்துக்கள் வகுப்புக்குள் வகுப்பு உற்பத்தி செய்து “அவன் பார்ப்பானுக்கும் சூத்திரச்சிக்கும் பிறந்தவன்” இவன் சூத்திரனுக்கும் பார்ப்பாத்திக்கும் பிறந்தவன். இவன் நாடாராய் இருந்து அய்யங்கார் ஆனவன். அவன் அம்பட்டனாய் இருந்து அய்யங்கார் ஆனவன். இவன் வைசியச்சிக்கும் சூத்திரனுக்கும் பிறந்தவன். அவன் சூத்திரனுக்கும் க்ஷத்திரியச்சிக்கும் பிறந்தவன். அவனோடு போனால் இவ்வளவு பாவம். இவனோடு போனால் அவ்வளவு பாவம். பார்ப்பனத்தியுடன் சூத்திரன் போனால் அவன் ஆண் குறியை அறுத்து வாயில் வைக்கவேண்டும். சூத்திரச்சியுடன் பார்ப்பான் போனால் அவன் ஆண் குறிக்கு தங்கத்தில் உறைபோட வேண்டும். என்றெல்லாம் சாஸ்திரம் எழுதி கூடுமானவரை அமுலில் கொண்டு வருவதும் அதற்காகவே...

பொப்பிலி பெருந்தன்மை

பொப்பிலி பெருந்தன்மை

  பொதுப்பணத்தை பொன்விழாக் கொண்டாட்டத்துக்குச் செலவு செய்யக்கூடாதென்றும் ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்றக்கூடாதென்றும் சர்க்கார் உத்தரவு பிறப்பித்ததினால் ஜஸ்டிஸ் கட்சியாரெல்லாம் துரோகிகள் என்று காங்கிரஸ் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். இதற்காக, அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு தேச மக்கள் ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் ஒரு பார்ப்பன வக்கீல் “ஹிந்து” பத்திரிகையில் எழுதியிருக்கிறார். ஆனால் இதர மாகாண நிலைமையை கவனித்தால் சென்னை சர்க்கார் மிக்க கௌரவமாக நடந்திருப்பதாகவே தோற்றுகிறது; பொதுப் பணச்செலவில் பொன்விழாக் கொண்டாடக்கூடாதென்று சென்னை சர்க்கார் தடுத்தார்களேயன்றி கொண்டாடியவர்களை தண்டிக்க எண்ணவில்லை. பாஞ்சாலத்தைச் சேர்ந்த ஷெக்புராவிலோ, பொன்விழாக் கொண்டாடிய நகரசபை மெம்பர்களைத் தண்டிக்கப் போவதாக டெபுடி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். டிசம்பர் 23ந்தேதியன்று கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் பொன்விழாவையொட்டி முனிசிபல் கட்டிடத்தில் தேசீயக் கொடியை உயர்த்துவதென்றும் தீபாலங்காரம் செய்வதென்றும் அதற்காக 100 ரூபாய் செலவிடுவதென்றும் தீர்மானம் செய்து தலைவர் உட்பட எட்டுப் பேர் முடிவு செய்து...

திருவிதாங்கூர் ஹைக்கோர்ட்டு  முதல் ஈழவ நீதிபதி  வைக்கம் சத்தியாக்கிரக பலன்

திருவிதாங்கூர் ஹைக்கோர்ட்டு முதல் ஈழவ நீதிபதி வைக்கம் சத்தியாக்கிரக பலன்

  திருவனந்தபுரம் ஜனவரி 9 வைக்கம் சத்தியாக்கிரகத்தின் பயனாக திருவாங்கூரில் ஒடுக்கப் பட்டவர்கள் நிலை முன்னேற்றமடைந்து வருகிறது. இப்பொழுது ஈழவ சமூகத்தைச் சேர்ந்த தோழர் என். குமாரன் திருவிதாங்கூர் ஹைக்கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். – குடி அரசு பெட்ம�ிச் செய்தி 12.01.1936

முஸ்லீம்கள் தேசத் துரோகிகளா?

முஸ்லீம்கள் தேசத் துரோகிகளா?

  தனித்தொகுதி வேண்டும், வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தேசத்துரோகப் பட்டம் சூட்டுவது ஒரு கூட்டத்தாரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்தக்கூட்டத்தார் யார்? பார்ப்பனர்களும் பார்ப்பன சோதியில் கலந்த ஒரு சில பார்ப்பனரல்லாதாருமே. ஜனநாயகக் கொள்கைக்கு தனித்தொகுதியும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவமும் முரண்பட்ட தென்று சொல்லப்பட்டாலும் இந்தியாவின் விசேஷ நிலைமைக்கு அவை இன்றியமையாதனவாகும். இந்திய நிலைமைக்கு சமதர்மக் கொள்கை பொருந்தாதென்று கூறும் காந்தியாரும் காங்கிரஸ் வாலாக்களும் அந்தந்த தேச நிலைமைக்குத் தக்கபடி கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஜாதிகளும் பாஷைகளும் உடைய இந்தியாவிலே தேசீய உணர்ச்சி என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது; அப்படித்தான் இருக்கவும் முடியும். ஊன்றிப்பார்த்தால் இந்திய நிலைமைக்கு ஜனநாயக ஆட்சி பொருத்தமானதே அல்ல. ஜனநாயக ஆட்சியை விட ஹிட்லர் ஆட்சியே இந்தியாவுக்குப் பொருத்தமானதென்றும்கூடச் சொல்லி விடலாம். இருந்தாலும் “ஜனநாயகமுறையில்” உருவாக்கப்பட்ட ஒரு அரசியல்திட்டம் இந்தியர்களுக்கு வரப்போவதால் அந்தத் திட்டத்தினால் எந்த வகுப்பாருக்கும் பாதகம் ஏற்படாத முறையில் தேவையான...

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்  இலங்கை மந்திரிக்கு உபசாரம்

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் இலங்கை மந்திரிக்கு உபசாரம்

  மந்திரி பதில் தலைவர் அவர்களே! கொழும்பு மந்திரியார் கனம் தோழர் பெரி சுந்திரம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இலங்கை நமக்கு ஒரு நல்ல படிப்பினையான நாடாகும். நாம் இன்று எதற்கு ஆகப் பாடுபடுகின்றோமோ அதே காரியத்துக்கு ஆக பழங் காலத்திலிருந்தே பெரியதொரு முயற்சி நடத்திருப்பதாக இலங்கை சம்மந்தமான புராணம் (ராமாயணம்) கூறுகிறது. அப் புராணம் எவ்வளவுதான் கற்பனையாக இருந்தாலும் பார்ப்பனர் தொல்லையையும் அதோடு தமிழ் மக்கள் போர் செய்ததையும், அதில் பார்ப்பனர்கள் கையாண்ட சூக்ஷியையும் நன்றாய் விளக்குகிறது. இலங்கை ” சரித்திரம்” தமிழ் மக்களின் பெருமைக்கும் சிறுமைக்கும் உதாரணமாகத் திகழும் கதையென்றே சொல்லவேண்டும். தமிழ் மக்களில் இராவணன் போன்ற சுத்த சுயமரியாதை வீரர்கள் இருந்தார்கள் என்பதையும், விபீஷணன் போன்ற துரோகிகள் இருந்து சகோதரத் துரோகம் செய்து பயனடைந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இக்கதையை நாம் வெறுத்துவிட முடியாது. ஏனெனில் நம்...

தீண்டப்படாதாருக்கு தனித்தொகுதி

தீண்டப்படாதாருக்கு தனித்தொகுதி

காங்கிரசுக்காரர்கள் தீண்டப்படாத மக்களை ஏமாற்றவும், அவர் களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தவுமான காரியங்களில் லஞ்சம் கொடுப்பது போன்ற முறைகளால் வெற்றிபெற்று வருவதால் அரசாங்கத்தார் எப்படியாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஸ்தல ஸ்தாபனங் களில் தனித் தொகுதி முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல் மந்திரியார் இதை கவனித்து ஸ்தல ஸ்தாபன சட்டங்களில் இம்முறைகளை புகுத்த புதிய திருத்த மசோதா கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். குடி அரசு பெட்டிச் செய்தி 05.01.1936

அரசாங்கமும் மந்திரியும் கவனிப்பார்களா?

அரசாங்கமும் மந்திரியும் கவனிப்பார்களா?

முனிசிபல் நிர்வாகம் முனிசிபல் நிர்வாகங்களில் இருந்துவந்த சகிக்க முடியாத ஊழல் களையும், மோசடிகளையும் நன்றாய் அறிந்த பிறகே முனிசிபாலிட்டிக்கு கமிஷனர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். கமிஷனர்கள் ஏற்பட்டும் அனேக முனிசிபாலிட்டிகளின் பணங்கள் கொள்ளை போகின்றன பாழாகின்றன. பல முனிசிபாலிட்டிகளின் கமிஷனர்கள் சேர்மென் எச்சை துப்புவதற்கு எச்சைக் கிண்ணம் ஏந்தி நிற்பதை நேரில் பார்க்கிறோம். இன்னும் மற்ற விஷயங்கள் வெளியிட பரிதாபகரமாய் இருக்கிறது. இதைப் போல ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் ஒரு மோச நாடகம் வேறு இல்லை. ஆதலால் முனிசிபல் நிர்வாகத்தை உத்தேசித்தும் முனிசிபல் வரி கொடுப்போர் பணம் நல்ல வழியில் பயன்பட உத்தேசித்தும் கமிஷனர்கள் சுயமரியாதையோடு இருக்கவேண்டும் என்பதைக் கருதியும் முனிசிபல் சட்டத்தில் தக்கதொரு சீர்திருத்தம் செய்யவேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். குடி அரசு துணைத் தலையங்கம் 05.01.1936

புகையிலை வரி

புகையிலை வரி

அரசாங்கத்தார் இவ்வருஷத்தில் புகையிலைக்கு வரி போட வேண்டு மென்பதாக உத்தேசித்து அதற்காக ஒரு மசோதா தயாரித்து இருக்கிறார்கள். இவ்வரியானது புகையிலைக்காக வரி போடவேண்டுமென்பதாக இல்லாமல் 1936 வருஷத்து அரசியல் வரவு செலவு திட்டத்தைச் சரி செய்வதற்காகப் போட்டுத் தீரவேண்டியதாய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. காரணம் என்னவெனில் நிலவரியில் 100க்கு 12லீ விகிதம் குறைக்கப்பட்டதில் சர்க்காருக்குக் குறைந்து போன வரி வருவாய்க்கு வேறு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கவேண்டியதாக ஏற்பட்டு விட்டதாம். நில வரி குறைத்ததில் நிலம் உடையவர்களுக்கு லாபம். அதற்கு பதிலாக என்று புகையிலை வரி போடுவதில் விவசாயிகளுக்கும், சிறிய வியாபாரிகளுக்கும் புகையிலை உபயோகிக்கும் ஏழைமக்களுக்கும் நஷ்டம். ஆகையால் நிலவரியை பழையபடி உயர்த்தியாவது புகையிலைவரி போடாமல் விட்டுவிடுவதே நியாயம் என்றால் அது தவறாகாது. அரசாங்கத்தார் ஏதாவது ஒரு வரியைக் குறைத்தால் குறைத்தவுடன் அந்தக் கணக்குச் சரிக்கட்டும்படி செலவையும் குறைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டால் இரண்டு கிளர்ச்சிக்கு இடம்...

சுயமரியாதைத் தோழர்களும் காங்கிரசும்

சுயமரியாதைத் தோழர்களும் காங்கிரசும்

சுயமரியாதைத் தோழர்கள் சிலர், ஜஸ்டிஸ் கட்சியானது இரண்டொரு சட்டசபைத் தேர்தலிலும், சில ஸ்தல ஸ்தாபன தேர்தலிலும் தோல்வி அடைந்து விட்டது என்றும் பாமர மக்களிடம் ஆதரவை இழந்துவிட்டது என்றும் பார்ப்பனப் பத்திரிகைகளில் காணும் சேதிகளை நம்பி காங்கிரசினிடத்தில் மோகம் ஏற்பட்டு காங்கிரசைத் தழுவ மேல் விழுந்து போகிறார்கள். ஆனால் அதற்காகத் தாங்களாகவே நேரே போய்ச் சேருவதற்குப் போதிய தைரியமில்லாமல் “சுயமரியாதை இயக்கம் இப்படிக் கெட்டுப் போய் விட்டது” “அப்படிக் கெட்டுப் போய்விட்டது”, “மந்திரிகள் பின்னால் வால் பிடித்துத் திரிகிறது” “பணக்காரர்களை ஆதரிக்கிறது” என்கின்றது போன்ற பாட்டிப் பேச்சுக்களைச் சொல்லிக் கொண்டு போவதன் மூலம், தங்களை வீரர்கள் என்று கருதுவார்கள் என்று நினைத்துக் கொண்டு செல்லுகிறார்கள். சுயமரியாதை இயக்கம் மந்திரிகளைக் கவிழ்த்துப் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கவோ, பணத்தை “வெறுத்து” கண்டவர்களிடம் பல்லைக் கெஞ்சி வாழவோ ஒரு நாளும் ஒப்புக் கொள்ளவில்லை, ஒரு நாளும் ஒப்புக் கொள்ளப் போவதுமில்லை. ஆதலால் பணக்காரர்கள் “அல்லாதவர்களும்”, மந்திரிகள்...

எனக்கு வீரசொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது”

எனக்கு வீரசொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது”

110க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் இடம் பெற்றுள்ள தொகுதி இது. ஜஸ்டிஸ் கட்சி சட்டசபை தேர்தலிலும் சில உள்ளாட்சி தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியதால், சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் காங்கிரசில் சேர துடித்த காலத்தில், ஒருவன் “வெற்றி பெற்ற” காங்கிரஸ் என்பதில் இருக்கும் அவமானத்தைவிட “தோற்றுப்போன” ஜஸ்டிஸ் கட்சி என்பதில் இருப்பது அவமானமாகாது பெரியார் இடித்துரைக்கிறார். இத்தொகுதியில் அடங்கியுள்ள “ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கமும்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பெரியாரின் சொற்பொழிவில்,சுயமரியாதை இயக்கத்தின் மீது சில ஜஸ்டிஸ் கட்சியினர் முன் வைத்த குற்றச்சாட்டு களுக்கு பெரியார் தெளிவாக பதில் அளிக்கிறார். “ஜஸ்டிஸ் கட்சியில் பட்ட துன்பம் கொஞ்சமல்ல. இந்த மாகாணத்திலே எனக்கு மாத்திரம் தான் சி.அய்.டி. தொல்லை. கடிதங்களை உடைத்துப் பார்ப்பது, பத்திரி கையை ஒழிக்க நினைத்து அடிக்கடி ஜாமீன் கேட்பது முதலிய காரி யங்கள் நடக்கின்றன. இவைகள் அக்கட்சியை குறைகூறக் காரணங்க ளாகாது. அக்கட்சித் தலைவர்கள்,...