தீண்டப்படாதாருக்கு தனித்தொகுதி
காங்கிரசுக்காரர்கள் தீண்டப்படாத மக்களை ஏமாற்றவும், அவர் களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தவுமான காரியங்களில் லஞ்சம் கொடுப்பது போன்ற முறைகளால் வெற்றிபெற்று வருவதால் அரசாங்கத்தார் எப்படியாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஸ்தல ஸ்தாபனங் களில் தனித் தொகுதி முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல் மந்திரியார் இதை கவனித்து ஸ்தல ஸ்தாபன சட்டங்களில் இம்முறைகளை புகுத்த புதிய திருத்த மசோதா கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
குடி அரசு பெட்டிச் செய்தி 05.01.1936