சத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கர்ப்பத்தடையைப்பற்றி ஆட்சேபித்துப் பேசுகையில் விளைபொருள்கள் எல்லா மக்களுக்கும் சரி சமமாகப் பங்கிட்டுப் பிரித்துக் கொடுப்பதானால் ஜனங்களுக்கு உணவுப்பஞ்சம் இருக்காதென்றும், ஆதலால் கர்ப்பத்தடையோ, கர்ப்ப ஆட்சியோ கூடாதென்றும் எடுத்துச்சொன்னார்.
அடுத்த ஓர் இடத்தில் பேசும்போது செல்வங்களை மக்களுக்கு சரிசமமாகப் பங்கிட்டுக் கொடுப்பது என்பதை தாம் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளமுடியாது என்று சொன்னார்.
ஆகவே இப்படிப்பட்ட நிலையில் கர்ப்பத்தடையோ, கர்ப்ப ஆட்சியோ அவசியமா இல்லையா? என்று தான் நாம் கேட்கின்றோம்.
குடி அரசு செய்திக் குறிப்பு 26.01.1936
~cstart