Category: குடி அரசு 1930

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா 0

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா

சகோதரர்களே! சகோதரிகளே! இந்தக் கண்ணனூரிலுள்ள பழமையானதும் மிக்க பொதுஜன சேவை செய்து வருவதுமான உங்களுடைய செவ்வாய் தரும சமாஜத்தின் தலைமை வகிக்கும் பெருமையை எனக்குக் கொடுத்ததற்காக முதலில் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமாஜத்தின் மூலமாக நீங்கள் செய்திருக்கும் பொது நல சேவைக்கும் உங்களை மிகவும் பாராட்டு வதோடு இங்குள்ள பொது ஜனங்களையும் இன்னும் அதிகமாக ஒத்துழைத்து உங்கட்கு வேண்டிய சகாயஞ் செய்து இச்சமாஜத்தால் மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும் படியாய் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகித்ததன் மூலம் எனது சொந்த அபிப்பிராயமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதோடு நானும் சொல்ல வேண்டியதும் எனது கடமையாக இருக்கிறது. அப்படிச் சொல்லுவதில் உங்களுடைய சமாஜத்தின் பெயராகிய தர்மம் என்பது பற்றியும் இரண்டு பெரியார்கள் உபன்யாசம் செய்த விஷயங் களாகிய பெண்கள் சுதந்தரம், தர்மம், கடவுள் என்பது பற்றியும் முறையே...

ருஷியா விடுதலை அடைந்த விதம் 0

ருஷியா விடுதலை அடைந்த விதம்

ருஷியா தேசம் விடுதலை அடைந்த விதத்தைப் பற்றி அமெரிக்கா விலுள்ள திரு. சுசீந்திர போஸ் என்னும் இந்திய கனவான் ஒருவர் எழுதி “ருஷிய மதப்புரட்சி” என்னும் வியாசத்தின் சுருக்கத்தை மற்றொரு புறம் பிரசுரித்திருக்கின்றோம். அதை வாசகர்கள் சற்று ஊன்றிப் படித்தால் மத சம்பந்தமாகவும், மதக்குருக்கள், மடாதிபதிகள், புரோகிதர்கள் ஆகியவர்கள் சம்மந்தமாகவும் நாம் 4, 5 வருஷ காலங்களாய் குடி அரசில் எழுதி வரும் விஷயங்களில் அநேகங்களை ஒத்து இருப்பதைக் காணலாம். பழய ருஷியாவில் உள்ள மத நிலைமை மத ஆச்சாரியார்கள் மடாதிபதிகள் ஆகியவர்கள் நிலைமையே தான் இன்றைய நமது இந்தியா விலும் இருந்து வருகின்றது. ஆகவே ருஷியாவின் அந்த பழய நிலை நீங்கிய பிறகு தான் எப்படி ருஷியா சுவாதீன நாடு ஆவதற்கு இடம் ஏற்பட்டதோ அது போலவே இந்தியாவும் மதக் கட்டுப் பாட்டிலிருந்தும் மத ஆச்சாரியர் கள் மடாதிபதிகள் ஆதிக்கத்தில் இருந்தும் புரோகிதர்கள் புரட்டில் இருந்தும் அடியோடு விடுபட்டால் ஒழிய...

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர் 0

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்

சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு “nக்ஷத்திர” ஸ்தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40-வது மயிலில் உள்ள நாகர்கோயி லுக்கு 2, 3 மயில் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னி யாக்குமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர் கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது. அந்த ரோட்டுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொது ஜனங்களின் வரிப்பணத் திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோட்டுகளுள்ள திருவாங் கூர் ராஜியமானது ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபஸ்வாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோட்டில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங் கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும் அந்த பத்பநாப சாமியின் பக்தர்களுமேயாவார்கள். மற்றபடி அந்த சாமியின் பக்தர்களல் லாதவர்களும் இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருஸ்தவர்களுக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு...

சுயமரியாதை மகாநாடு முடிவு 0

சுயமரியாதை மகாநாடு முடிவு

சகோதரி சகோதரர்களே! நான் மகாநாட்டில் அதிகமாக பேசக் கூடாது என்று கருதியிருந்தேன். ஆகிலும் இந்தக் காரியத்தை நானே செய்ய வேண்டுமென்று நண்பர் சு.மு. ஷண்முகம் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தியதால் சில வார்த்தைகள் சொல்லி எனது கடமையைச் செய்கிறேன். இந்த மகாநாட்டை பிப்ரவரி மாதத்திலேயே நடத்தியிருக்க வேண்டி யது. நானும் என் நண்பர்களும் மலேயா நாடு சுற்றுப் பிராயணஞ் சென்று இருந்ததால் அங்கிருந்து வந்த பிறகு போதிய சாவகாசத்தோடு இப்போது தான் நடத்த முடிந்தது. மலேயா நாட்டிலிருந்து வந்ததும், மகாநாடு நடத்த எண்ணி மகா நாட்டுக்கு யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று நண்பர்களோடு கலந்து பேசுகிற போதே முதலில் திரு. ஜயக்கர் அவர்கள் பெயர்தான் மனதுக்குப்பட்டது. உடனே திரு. ஜயக்கர் அவர்களைக் கேட்டு சம்மதிக்கும் படிச் செய்யும் படியாக திரு. ஷண்முகம் அவர்கட்கு டில்லிக்கு தந்தி கொடுத்தேன். அதற்கு திரு. ஜயக்கர் அவர்கள் ஊருக்குப் போய் விட்டார். எழுதியிருக்கிறேன் என்று பதில் வந்தது....

சேலம் வன்னியகுலக்ஷத்திரியர் மகாநாடு 0

சேலம் வன்னியகுலக்ஷத்திரியர் மகாநாடு

உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள் சகோதரர்களே! உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக் கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜனமுள்ள விவசாயத்தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக் கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மகாநாட்டைத் திறந்து வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஒரு பெருமையாகவும் கருதிக் கொள்ளுகிறேன். ஆனால் இதைத் திறந்து வைக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நான் சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். அதாவது புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி நான் உங்கள் குலப் பெருமையைப் புகழ்ந்து கூறி ஆகாயமளாவ உங்களை மகிழ்வித்து ஏமாற்றிவிட்டுப்போக நான் இங்கு வரவில்லை. மற்றபடி நான் எந்தத் துறையில் ஈடுபட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறேனோ எந்தக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்குச் சாதகம் ஆனவைகள் எனக் கருதி தொண்டாற்றுகின்றேனோ அதைப்பற்றியேதான் இப்பொழுதும் இந்த...

5  ரூபாய் இனாம் 0

5 ரூபாய் இனாம்

திருவாளர்கள் எஸ். சீனிவாச அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி சாஸ் திரிகள் இவர்கள் விலாசம் முதலில் தெரிவிப்பவர்கட்கு ஐந்து ரூபாய் இனாம் பரிசு அளிக்கப்பெறும். – சித்திரன் குடி அரசு – அறிவிப்பு – 25.05.1930

அறிவிப்பு 0

அறிவிப்பு

இரண்டு ஆண்டுகட்கு முன்னர் திருநெல்வேலி திரு. கே. சுப்ரமண் யம் என்பவர் இந்தியாவில் நமது இயக்கத்தின் பெயரையும் நம்முடைய பெயரையும் உபயோகப்படுத்தி அதன் பயனாய் அநேக தவருதல் செய்த தாக தெரியவந்து, அதை பத்திரிகையில் வெளிப்படுத்தி இருந்தோம். பின்னர் திரு. சுப்ரமண்யம் அவர்கள் இந்தியாவிலிருந்து மலாய் நாடு சென்று அங்கி ருந்து நமக்குதான் ஏதோ தவருதலாய் சில காரியம் செய்து விட்டதற்கு வருந்துவதாகவும், அதை மன்னிக்க வேண்டுமெனவும் இனி இந்த மாதிரி யான எந்த குற்றங்களும் செய்வதில்லை என்றும் நீண்டதொரு மன்னிப்புக் கடிதம் எழுதியிருந்தார். நாமும் அவர் இனிமேல் திருந்திவிடுவாரென நம்பியே இருந்தோம். ஆனால் நாம் மலாய் நாடு சென்று திரும்பிய பின் நமக்கு பினாங்கிலிருந்து ஒரு முக்கிய நண்பரிடமிருந்து வந்திருக்கும் கடித வாயிலாக திரு. சுப்ரமண்யம் அவர்கள் மீண்டும் மலாய் நாட்டில் தவறுத லானவும் மோசடியானதுவுமான குற்றங்கள் பல செய்துவிட்டு வேறு எங்கேயோ சென்று விட்டதாகத் தெரிய வருகிறது. ஆதலால்...

தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும் 0

தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும்

தேவஸ்தான போர்டு நிர்வாக கமிஷனர்கள் நியமனமும் சர்க்கிள் கமிட்டி அங்கத்தினர் நியமனமும் ஒருவாறு முடிவு பெற்றது. இந்த நியமனங் களை பொறுத்தமட்டில் ஏற்பட்ட விசேஷம் என்ன வென்றால் தேவஸ்தான போர்டு தலைவர்கள் ஐந்து பேரும் பார்ப்பனரல்லாதவராக நியமிக்கப்பட்டி ருக்கின்றனர். அதோடு நீலகிரி ஜில்லா தேவஸ்தான கமிட்டிக்கு ஒரு ஆதி திராவிட கனவானும் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் உறுதியாகி சர்க்கார் கெஜட்டிலும் பிரசுரமாகிவிட்டது. “தேவஸ்தானம்” என்னும் பதம் பார்ப்பனருக்கும் அவரைச் சுற்றித் திரியும் சில ஆஸ்தீகக் கூலிகளுக்குமே உரியது, மற்றையோர் குறிப்பாக ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பதத்தை நினைக்கவும் உச்சரிக்கவும் கூடாதென்ற கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்த காலத்தையும் ஒரு கூட்டத்தாரின் மனப்பான்மையும் விரட்டி அடித்து அவ்வித சுயநல துர் எண்ண ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்து மக்களில் உயர்வு தாழ்வு பேதம் ஒழிய வேண்டும் என்னும் சுயமரியாதைக்கு வழி காட்டியாக முன்வந்து ³ நியமனங்களைத் துணிகரமாகச் செய்துள்ள மந்திரி கனம்...

ஈரோடு மகாநாடு -II 0

ஈரோடு மகாநாடு -II

ஈரோடு மகாநாடு விஷயமாய் சென்ற வாரம் எழுதி இருந்த தலையங் கத்தில் அரசியல் விஷயமாய் நம்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு அடுத்த வாரம் சமாதானம் சொல்லுவோம் என்று எழுதி இருந்தோம். அதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை பல தடவைகள் சொல்லியும் எழுதியும் இருந்தாலும் மகாநாட்டின் நடவடிக்கை விஷயமாய் பொறாமை கொண்டவர்களுக்கும் வேறு மார்க்கம் இல்லாமல் இந்த சமயத்தில் அதாவது. “வெள்ளைக்காரர்கள் இந்திய ராஜ்ய பாரத்தை மகாத்மாவிடம் ஒப்பு வித்துவிட்டு மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு பெண்டு பிள்ளை களைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறுகின்ற சமயத்தில் சுய மரியாதைக் காரர்கள் அவர்களை (வெள்ளைக்காரர்களைப்) போகாதீர் கள்! போகாதீர்கள்!! என்று கையைப் பிடித்து இழுத்து தேசத் துரோகம் செய்கிறார்கள்”. என்று சுமத்தப்படும் குற்றத்திற்கு சமாதானம் சொல்ல வேண்டி இருக்கிறதால், சிலவற்றை அதாவது முன் சொல்லி வந்தவைகளையே திரும்பவும் சொல்லுகின்றோம். அதாவது இந்த சத்தியாக்கிரகமாகிய உப்புச் சட்டத்தை மீறுவது என்பதே அர்த்தமற்றதும் மூடத்தனமானதுமாகும் என்பது நமது...

ஒரு யோசனை 0

ஒரு யோசனை

ஈ.வெ.ரா. “குடி அரசி”ன் ஆறாவது வருஷ வேலை முறைகளைப் பற்றி வாசகர்களையும் அபிமானிகளையும் ஒரு யோசனை கேட்க விரும்பு கின்றேன். அது விஷயத்தில் வாசகர்களும் அபிமானிகளும் தயவு செய்து ஆர அமர நிதானமாய் யோசனை செய்து தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன். “குடி அரசு” ஆரம் பித்த இந்த ஐந்து வருஷ காலத்தில் அது இந்தியாவிற்கும் சிறப்பாக தென் இந்தியாவிற்கும் செய்திருக்கும் வேலை யைப் பற்றி பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை., சரியோ, தப்போ அது தனக்குத் தோன்றியதைத் துணிவுடன் வெளி யிட்டு வந்திருக்கின்றது என்பதையும், அதன் கொள்கைகள் ஒவ்வொன்றும் பொது ஜனங்களிடையில் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிப் படித்தவர்கள் என்பவர்கள் முதல் பாமரர்கள் என்பவர் வரையிலும் அவர்களது உணர்ச்சி களைத் தட்டி எழுப்பி இருப்பதுடன், பொது மக்களிடையில் பெரிய மன மாறுதலையும் ஏற்படுத்தி இருக்கிறது. “குடி அரசி”ன் கொள்கைகளால் பாதிக்கப்படும் சுயநலக்காரர்கள் கூடத் தைரியமாய் மறுக்கவோ...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற் கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். 2. கடவுள் ஒருவர் உண்டு அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்த்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமா யிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தான் இச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிரரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன். பார்ப்பன பிரசாரம் 3. ஆழ்வார்கள் கதைகளும் நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரசாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும். 4. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளா மல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள். 5. வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால் அவர்கள் படித்தது எல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பை யுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட...

ஈரோடு மகாநாடு – I 0

ஈரோடு மகாநாடு – I

இம்மாதம் 10, 11, 12, 13 தேதிகளில் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மகாநாடும் அதை அனுசரித்து வாலிபர் மகாநாடு, பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு ஆகிய ஐந்து மகாநாடுகள் முறையே திருவாளர்கள் பம்பாய் எம். ஆர். ஜயகர், நாகர்கோயில் பி. சிதம்பரம், டாக்டர் முத்துலட்சுமி அம்மாள், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், தஞ்சை பொன்னையா ஆகியவர்கள் தலைமையில் நடைபெற்றன. இம் மகாநாடுகளுக்கு வரவேற்புக் கழக அக்கிராசனர்களாக முறையே திருவாளர் கள் ஆர். கே. ஷண்முகம், ஜே. எஸ். கண்ணப்பர், லட்சுமி அம்மாள், கார்குடி சின்னையா, காரைக்குடி சொ. முருகப்பர் ஆகியவர்கள் இருந்து வரவேற்புக் கழக சார்பாய் வரவேற்று இருக்கின்றார்கள். இவை தவிர மேற்படி 4 நாட்களிலும் இரவு 9 மணி முதல் நடு ஜாமம் 2 மணி 3 மணி வரையில் கொட்ட கையில் சொற்பொழிவுகளும் நடைபெற்று வந்தன. மகாநாட்டு காரியங்களை நிர்வகிக்க திருவாளர்கள் ஈரோடு சேர்மென் கே. ஏ....

புரட்டு 0

புரட்டு

பாமர மக்களை ஏமாற்றப் படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது. கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல்வதுண்டு நாட்டில் செய்யப்படும் வஸ்துக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு. அவ்வாறாகவே “பஞ்சமர்கள்” என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறி யாத தலைவர்களும் கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன. இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்றுகிறோம். தீர்மானத்தை சபையின் முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை...

சிவகாமி – சிதம்பரனார் 0

சிவகாமி – சிதம்பரனார்

புனர் விவாஹம் தாலிகட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்தது.திருமதி ஈ.வெ.ரா நாகம்மையார் அவர்கள் நடத்திவைத்தனர். இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க் காதல் கொண்டு தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகு காலமாக வேரூன்றி கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும் பெண்ணை ஆண் அடிமையாக்குதற் கறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாம லும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது. பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையான கொள்கையுடைய சுயமரியாதை இயக்கம் தோன்றி யிற்றைக்கு 4, 5 வருஷங்களேயாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தேறியிருப்பது உங்களுக் குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப்...

திரு. காந்தியார் 0

திரு. காந்தியார்

திரு. காந்தி அவர்கள் சர்க்காரால் பந்தோபஸ்த்தில் வைக்கப்பட்டு விட்டார்கள். இதனால் திரு. காந்தி ஏமாற்றமடைந்தாரே தவிர எவ்விதத்திலும் திருப்தி அடைந்தார் என்று சொல்லமுடியாது. ஏனெனில் தான் உப்பு சட்டம் மீறுவது என்று கிளம்பியவுடன் தன்னை சர்க்கார் கைது செய்து விடுவார்கள் என்றும் இதனால் சர்க்காருக்கு ஏதோ பிரமாதமான கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்றும் கருதி வெளிக் கிளம்பினார். ஆனால் சர்க்காருக்கு இந்த விஷயம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டபடியால் அந்தப்படி செய்து விடாமல் திரு. காந்தியாரை அவரது இஷ்டப்படி செய்ய விட்டு, அவரது கொள்கைகளாலும் செய்கைகளாலும் ஏற்படும் பலன்களை உலகம் அறியும்படி செய்து தாங்கள் செய்யப்போகும் காரியத்திற்கு நியாயமும் தேடிக் கொண்டு பிறகு வெகு சாதாரணமாய் பிடித்து பந்தோபஸ்த்தில் வைத்து விட்டார்கள். “காந்தியைப் பிடிப்பார்கள்” “காந்தியைப் பிடிப்பார்கள்” என்று பொது ஜனங்கள் பிரமாதமாய்க் கருதி எதிர் பார்த்துக் கொண்டிருந்த காலத்தி லெல்லாம் பேசாமல் அசரப் போட்டு விட்டு பொசுக்கென்று பிடித்ததாலும், அவரைப்...

சிவகாமி – சிதம்பரனார் 0

சிவகாமி – சிதம்பரனார்

திருமண அழைப்பு திருவாளர் தமிழ்ப்பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்ப கோணம் திரு. குப்புசாமிபிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர்கட்கும் 5-5-30 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திரு. ஈ. வெ. ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுயமரியாதை மகா நாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும். திருமதி ஈ. வெ. ரா. நாகம்மாளவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார்கள். – ஈ.வெ.ராமசாமி குடி அரசு – அழைப்பிதழ் – 04.05.1930

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. பரம், ஆத்மார்த்தம், விதி, அல்லது கடவுள் செயல் – என்று சொல்லப் படும் இம்மூன்றையும் அழிக்க தைரியமும் சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள். ராஜ வாழ்த்தும் கடவுள் வாழ்த்தும் மனிதனின் அடிமைத்தனத்திற்கு அஸ்திவாரக் கல் நடுவதாகும். 2. திரு. காந்தியவர்கள் தனது சத்தியாக்கிரகம் தோல்வியுற்றால் “இந் தியா விடுதலை பெற கடவுளுக்கு விருப்பமில்லை போல் இருக்கின் றது” என்று ஒரு வார்த்தையில் ஜனங்களுக்கு சமாதானம் சொல்லி விடுவார். அல் லது உண்மையில் அப்படியே அவர் நினைத்தாலும் நினைப்பார். 3. தொட்டதெற்கெல்லாம் கடவுள் செயல் கடவுள் செயல் என்று சமா தானம் சொல்லுகின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணரா தவர்கள் அல்லது தங்கள் தவறுதல்களை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள். 4. எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப் பட்டாய் விட்டது. அவைகள் ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாய்...

சென்னையில் நிரபராதிகள் கொல்லப்பட்டனர் 0

சென்னையில் நிரபராதிகள் கொல்லப்பட்டனர்

திரு.காந்தியின் உப்பு சத்தியாக்கிரக குழப்பத்தின் பயனால் பல நிரபராதிகள் போலீசாரால் அடிபட்டும், சுடப்பட்டும் கஷ்டப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் நாம்மிக்க துக்கத்துடன் அநுதாபப்படுகின்றோம். இம்மாதிரியான சம்பவங்களில் சர்க்கார் தங்களுடைய புத்திசாலித்தனத்தை உபயோகித்துத் தக்க பொருப்பு எடுத்து நிரபராதிகளுக்குத் துன்பம் நேராமல் படிக்கு இயக்கத்தைச் சமாளிக்காமல் வெரும் துப்பாக்கி பலத்தையும், தடிப்பலத்தையும் கொண்டே அடக்க நினைத்ததானது கவலையற்ற தன்மை என்பதும், கடமையைச் சரியாய் உணராத தன்மை யென்பதும் நமது அபிப்பிராயம். இச்சம்பவத்திற்கு தேசீயவாதிகள் சர்க்காரை கண்டபடி வைது விடுவதினாலேயே பரிகாரம் தேடிவிட்டவர்களாகி பெரிய பெரிய தேசீய வாதிகளாகி விடலாம். சர்க்காராரும் சட்டத்தையும் அமைதியையும் காப் பாற்றுவதற்கு இதைவிட வேறு மார்க்கங்கள் பயன்படாமல் போய்விட்டது என்று சொல்வதினாலேயே “சர்வ வல்லமையுள்ள” அரசாங்கத்தாராகி விடலாம். இந்த இரண்டினாலும் கஷ்டப்பட்ட- மாண்ட- பரிகொடுத்த நிரபராதி களான மக்களுக்கு என்ன சமாதானம் ஏற்படும் என்று கேட்கின்றோம்? அரசியல் சாமார்த்தியம் இல்லாமல் இம்மாதிரியாக நிரபராதிகள் கஷ்டப்படும்படி தடியையும். துப்பாக்கியையும் உபயோகிப்பதின் மூலமே சட்டத்தையும்...

திரு. சி. ராஜகோபாலாச்சாரியாரின் சாமர்த்தியம் 0

திரு. சி. ராஜகோபாலாச்சாரியாரின் சாமர்த்தியம்

திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் சட்டத்தை மீறினாரென்று அரஸ்ட் செய்யப்பட்டு 6-மாத வெருங்காவல் தண்டனையும் 200 ரூ. அபராதமும் அடைந்தார். சிறைக்குப் போகும் போது தமது தலைமைஸ்த்தானத்தை வெகு ஜாக்கிரதையாக திரு.சந்தானஅய்யங்காரிடமே ஒப்புவித்து விட்டுப் போயி ருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் “திரு ஆச்சாரியர் சிறைசெல்லநேர்ந்தால் தான் அந்த ஸ்தானத்தை ஏற்று நடத்துகிறேன்” என்று ஒப்புக்கொண்டிருந்தும் கூட அவரிடம் தலைமை ஸ்த்தானத்தை ஒப்புவிக்காமல் ஒரு அய்யங்காரி டமே ஒப்புவித்து விட்டுப் போனது மிகவும் சாமர்த்தியமேயாகும். ஒத்துழையாமை காலத்திலும் கூட திரு. ஆச்சாரியார் தனது தலைமை ஸ்த்தானம் காலி செய்ய நேர்ந்தபோதெல்லாம் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரி டமோ திரு. ராஜனிடமோ தான் ஒப்புவிப்பதில் கவலையாகவே இருந்தவர். ஆதலால் இப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்தது பாராட்டத் தக்கதே, குடி அரசு – செய்தி விளக்கம் – 04.05.1930

கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள் 0

கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள்

இந்திய நாட்டில் இது சமயம் தேச விடுதலையின் பேரால் ஒரு குழப்பம் ஏற்பட்டு, அதனால் எங்கு பார்த்தாலும் கலவரமும் அடிதடியும் சிறைவாசமும் உயிர்ச்சேதமும் நடந்து வருவதாகத் தெரிகின்றது. பொது மக்களுக்குள்ளாகவும் பலருக்கு ஒரு வித உணர்ச்சி தோன்றி இக்குழப்பத்தில் கலந்து கொள்ள வேண்டியது பெரிய தேசாபிமானம் என்றும், இதனால் தங்களுக்கு பிற்காலத்தில் ஏதோ ஒரு பெரிய லாபமும், கீர்த்தியும் ஏற்படும் என்றும் கருதப்பட்டு வருகின்றது. இந்த நிலைக்கு பொதுவாக டாக்டர் சுப்பராயன் அவர்கள் சென்ற வருஷம் செங்கல்பட்டு முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் சொன்னது போல், அதாவது “மக்கள் மத விஷயத் தில் பெரிதும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தப் பட்டிருப்பதால் அது போலவே அரசியலிலும் ஆராய்ச்சியில்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் கண்மூடித் தனமாய் நடந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்” என்று சொன்னதும், மற்றும் சமீபத்தில் ஸ்ரீமதி பெசண்டம்மையும் “இந்தியர் களுக்குள் இருந்து வரும் மூட நம்பிக்கையின் பலனே இக்குழப்பத்திற்கு காரணமாயிருக்கின்றது” என்று சொன்னதும் மிகவும்...

ஆறாவது ஆண்டு 0

ஆறாவது ஆண்டு

நமது “ குடி அரசு” ஐந்து ஆண்டு நிறைவு பெற்று ஆறாவதாண்டு முதல் மலராய் இவ்வாரம் வெளியாகின்றது. “குடி அரசு” தான் ஏற்றுக் கொண்ட ஆரம்பக் கொள்கையில் இருந்து சிறிதும் பின் வாங்காமலும் விருப்பு, வெருப்புக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமலும் ஏதோ தன்னால் கூடிய தொண்டை மனப் பூர்வமாய் செய்து கொண்டு வந்திருக்கின்றது. அன்றியும் குடி அரசானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரை மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெற்று வந்ததுடன் நாளுக்கு நாள் முற்போக்கடைந்தும் வந்திருக்கின்றது. இவ்வாறாவது ஆண்டும் அந்தப்படி முடியும் என்கின்ற விஷயத்தில் நமக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஏனெனில் அது இனிச் செய்யக் கருதி இருக்கும் தொண்டானது கொஞ்ச காலத்திற்கு பாமர மக்களிடம் நமக்குள்ள செல்வாக்கையும் பணக்காரர்கள் பண்டிதர்கள் பெரிய அதிகாரிகள் பதவியா ளர்கள் என்பவர்களிடம் நமக்கு உள்ள செல்வாக்கையும் இழக்க நேரிடு வதுடன் “குடி அரசை” இது வரை ஆதரித்து வந்தவர்களாக காணப்பட்ட வர்களின் எதிர்ப்பையும்...

புதியமுறை விவாகம் 0

புதியமுறை விவாகம்

உலகத்தில் விவாகம் செய்து கொள்ளுவதில் ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு விதமான முறைகள் பார்த்து விவாகம் செய்து கொள்ளுவது வழக்கமாய் இருந்து வருகின்றதே ஒழிய எல்லா நாட்டிலும் எல்லா மதத்திலும் ஒரே விதமான சொந்தங்களை கையாளுவதில்லை என்பது யாவரும் அறிந்த தாகும். உதாரணமாக மகமதியர்களுக்குள்ளும் ஐரோப்பிய கிரிஸ்தவர் களுக்குள்ளும் தங்கள் தகப்பனுடன் பிறந்த சகோதரர்களான சிறிய தகப் பனார் பெரிய தகப்பனார் பெண்களை விவாகம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. இந்துக்கள் என்பவர்களில் தகப்பனுடன் பிறந்த சகோதரி களான அத்தை பெண்களையும், தனது சகோதரி பெண்களையும், தனது தாயுடன் பிறந்த மாமன் சிறிய தாயார் பெரிய தாயார் பெண்களையும் விவாகம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. சையாம் தேசத்தில் தன்னுடன் கூடப் பிறந்த சொந்த தங்கையை விவாகம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு. அந்த தேசத்தில் வேறு யார் செய்து கொண்டலும் செய்து கொள்ளா விட்டாலும் அந்த நாட்டு அரசன் கண்டிப்பாய் தனது...

சங்கீத மகாநாடு 0

சங்கீத மகாநாடு

ஈரோட்டில் மே மாதம் 24, 25 முதலிய தேதிகளில் நடக்கும் இரண்டா வது சுயமரியாதை மகாநாட்டின் ஆதரவில் வேறு பல மகாநாடுகளும் நடைபெறும் என்பது நேயர்கள் அறிந்ததாகும். அவற்றுள் சங்கீத மகாநாடு என்பதும் ஒன்றாகும். சங்கீத மகாநாடு கூட்டும் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது, சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையான தென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமூகத்துக்கு அது மிக்க இன்றியமையாத தென்றோ கருதியல்ல. உலகத்தில் மக்களுக்குள்ள அனேகவிதமான உணர்ச்சி தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையாதென்பதே நமதபிப்பிராயம். உதாரணமாக சங்கீதம் என்பது தேசத்திற்குத் தகுந்த படியும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடியும் அவரவர்களது அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தபடியும் இருப்பதே தவிர, ஒரே சங்கீத முறையானது உலகத்திற்கெல்லாம் பொறுத்த மானதென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டு சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாயி ருப்பது மற்றொரு நாட்டு வித்வானுக்கு புரியாததாகவே இருக்கும். மேல் நாட்டு...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது. 2. சுயமரியாதை இயக்கமானது வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான். 3. சுயராஜ்யம் கேட்பதற்குமுன் அது ஏன் நமக்கு இல்லாமல் போய் விட்டது என்பதை அறிந்தாயா? என்றைக்காவது இந்து அல்லது இந்தியன் என்கின்ற முறையில் நீ சுயராஜியத்துடன் வாழ்ந்திருக்கின்றாயா? 4. ராமராஜ்யமென்றால் அது இந்துக்கள் ராஜ்யமல்ல. கடவுள் ராஜ்யம் என்று திரு. காந்தி இப்போது புரட்டிக் கொண்டார். ஆனாலும் பரவாயில்லை. அது எந்தக் கடவுள்? அந்தக் கடவுளின் ராஜ்ஜிய தர்மம் எது? அன்றியும் அவர் “என்னுடைய ராமன் வேறு ராமாயண ராமன் வேறு” என்கின்றார். சரி யென்றே வைத்துக் கொள்ளுவோம், ஆனால் அந்த இராமனை அவர் எங்கிருந்து கண்டு பிடித்தார். ராமாயணத்திலா அல்லது வருணாச்சிரமத்திலா? 5. “தீண்டாமை விலகினால் ஒழிய இந்தியா சுயராஜ்யம் பெற முடியாது....

“கடைசிப் போரின்”முதல் பலன் 0

“கடைசிப் போரின்”முதல் பலன்

திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் “கடைசிப் போரினால்” இந்தியா வுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப் பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ரூஜுவு ஏற்பட்டு விட்டது. அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்திப் போரில் மிக்க அக்கரை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும். உப்பு சத்தியாக்கிரகத்திற்கு பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின் வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரால் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல. உப்பு சத்தியாக் கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதீகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது...

தமிழ் நாட்டில் உப்புக் காய்ச்சுதல் சத்தியாக்கிரகம் 0

தமிழ் நாட்டில் உப்புக் காய்ச்சுதல் சத்தியாக்கிரகம்

திரு. காந்தி “கடைசிப்போர்” துவக்கப்பட்டாய் விட்டது. மும்முரமாக ஆங்காங்கு வேலைகள் நடைபெறுவதாக பத்திரிகைகளில் காணப்படு கின்றன. தொண்டர்களும் வந்து குவிவதாக பத்திரிகைப் பிரசாரங்கள் பக்கம் பக்கமாய் பறக்கின்றன. பத்திரிகைப் பிரசாரங்களை பார்க்கும் வாலிபர்க ளுக்கு ரத்தம் துடிக்கின்றது. அவர்களுக்கு தாமும் போய்ச் சேர்ந்து கொள்ள லாமா என்கின்ற பதட்டம் நாக்கில் தண்ணீர் ஊறுகின்றது, “இந்த போர் சீக்கிரம் அடங்கிப் போகும்” “தோல்வி ஏற்பட்டு விடும்” என்று கருதி இதிலிருந்து விலகியவர்களும் பரிகாசம் செய்தவர்களும் இந்த பத்திரிகை ஆர்ப் பாட்டங்களைப் பார்த்து “ஜெயித்து விடும் போல் இருக்கின்றதே. நமக்கு நோகாமல் கிடைக்கக்கூடிய தேசபக்தன் பட்டமும் தேசீய வீரன் பட்டமும் வீணாய்ப் போய் விடும் போல் இருக்கின்றதே இனி எப்படியாவது உள்ளே புகுந்து கொள்ளலாமா” என்று பலர் மன விசாரத்துடன் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில், நமக்கும் பல மிரட்டுதல் மொட்டைக் கடிதங்களும் யோசனை கூறும் நண்பர்கள் கடிதங்களும் வந்த வண்ணமாய் இருக்கின்றன. இந்த இயக்கத்தில்...

விரதப் புரட்டு 0

விரதப் புரட்டு

உமாமகேஸ்வர பூஜை விரதம் “நைமிசாரண்ய வாசிகளைக்கு சூத புராணிகர் சொன்னது” – சித்திரபுத்திரன் ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப் பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து தனக்கு அந்த பெண்ணை இரண்டாவது பெண்ஜாதியாக விவாகம் செய்து கொண்டான். அந்த கிழப் பார்ப்பான் மணக் கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்த பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொருத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை “நீ புருடனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளை பெறக் கடவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை “பூர்வ ஜன்ம கருமத்தின் பல னாய் நான் விதவையாகி விட்டதால், தங்களின் ஆசீர்வாதம் பலியாமல்...

பூரண வெற்றி 0

பூரண வெற்றி

சாரதா சட்டம் அமுலுக்கு வந்து விட்டது. சாரதா சட்டம் என்பது: 14 வயதுக்குக் கீழ்பட்ட பெண்களுக்கும் 18 வயதுக்கு கீழ்பட்ட ஆண்களுக்கும் விவாகம் செய்யக் கூடாது. செய்தால் தண்டனை என்ற நிபந்தனையைக் கொண்டது. மற்றபடி இதைத் தவிர இந்த சட்டத்தில் வேறு எவ்வித ஆபத்தும் கிடையாது என்பது யாவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்தசட்டத்திற்கு இருந்துவரும் எதிர்ப்பு பெரிதாயிருந்தாலும், சிறிதாயிருந் தாலும் மதம் என்னும் பேரால் அல்லது வேறு எதையும் இது வரை யாரும் சொன்னதில்லை. மதத்தின் பேராலும் கூட ஆnக்ஷபணை சொல்லுகின்ற வர்களும் இருமதங்களின் பேராலேயே சொல்ல முன் வந்திருக்கிறார்கள். ஒன்று மகமதிய மதம். மற்றொன்று இந்து மதம், மகமதிய மதத்தின் பேரால் ஆnக்ஷபம் சொல்லுகின்றவர்கள் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை கலியாணம் செய்வது கூடாது என்றோ அல்லது அது மத விரோதம் என்றோ சொல்வதில்லை. அன்றியும் 14 வயதுக்குக் கீழ்பட்ட பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற மத...

இரட்டை வெற்றி 0

இரட்டை வெற்றி

பன்னீர்செல்வம் உயர் திருவாளர் றாவ் பகதூர் ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் முன்னமேயே வாசகர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம். ஆனால் அந்த தேர்தலின் மேல் சில சட்ட சம்மந்தமான ஆட்சேபனைகளைக் கிளப்பி எதிர் அபேட்சகர்கள் அரசாங்கத்திற்கு செய்து கொண்ட விண்ணப்பத்தால் இரண்டு மாத காலம் அந்த தேர்தல் முடிவை கிரமப்படி அரசாங்கத்தார் ஒப்புக் கொண்டு கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் காலம் கடத்தி வந்தார்கள். ஆனா லும் முடிவாக தேர்தல் செல்லுபடியானதை சென்ற வாரத்தில் பிரசுரம் செய்து விட்ட சேதி யாவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். இதனால் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உத்தியோகக் காலம் மற்றும் சிறிது காலம் வளர்வதற்கு இடமுண்டாகி இரட்டை வெற்றி ஏற்பட்டதே தவிர வேறொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் மேற்படி தேர்தலின் மீது அது செல்லத் தக்கதல்லவென்று எதிர் அபேக்ஷகர் கோர்ட்டில் ஒரு வியாஜியம் தொடுத்து இருக்கின்றார்கள். அதன்...

கர்ப்பத்தடை 0

கர்ப்பத்தடை

கர்ப்பத்தடை என்பது பற்றி சுமார் 2 வருஷங்களுக்கு முன் நாம் எழுதியது அநேகருக்கு திடுக்கிடும் படியான சேதியாயிருந்தது. ஆனால் இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும், ஒரு சாதாரண சேதியாய் விட்டது. வர வர அது செல்வாக்குப் பெற்றும் வருகின்றது. பெரிய உத்தியோகத்தில் இருந்த சர். பி. சிவசாமி அய்யரும் பெரிய உத்தியோகத்தில் இப்போதும் இருக்கும் ஜஸ்டிஸ் ராமேசம் அவர்களும் மற்றும் பலரும் இது விஷயமாய் அடிக்கடி பேசி வருகின்றதையும் எழுதி வருகின்றதையும் பத்திரிகையில் பார்த்தும் வருகின்றோம். சமீபத்தில் சென்னை சட்டசபை யிலும் கர்ப்பத் தடை விஷயமாய் பிரசாரம் செய்ய வேண்டுமென்று பிரஸ்தா பிக்கப் பட்டதையும் நேயர்கள் கவனித்து இருக்கலாம். ஆனால் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன. அதாவது பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்ற வர்கள் பெண்கள் உடல் நலத்தை...

பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம் 0

பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம்

டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மசோதா டாக்டர். முத்து லட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரி சிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது 1. ஹிந்துப் பெண்களை ஹிந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டு வதினால் அவர்கள் வியபிசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள். 2. பண ஆசையினால் தேவதாசிகள் வியபிசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த வியபிசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்குப் பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கிய மானதாகும். 3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் வியபிசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் வியபிசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். வியபிசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடைய வில்லை. வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்...

5 ரூபாய் இனாம் 0

5 ரூபாய் இனாம்

– சித்திரபுத்திரன் திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாக்கிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் பெரிதும் பார்ப்பனர்களே கலந்து அவர்களே முழுவதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன? திரு. காந்தி இந்த சத்தியாக்கிரகப் போருக்கு பணமே வேண்டிய தில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோபாலாச்சாரியார் பணம் வேண்டுமென்று கேட்பதின் இரகசியமென்ன? அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூட்சி யென்ன? இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார்களையே ஏற்படுத்தி பிரசாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன? இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்க காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையனுப்பியவர்களுக்கு குடி அரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனாமாகவும் அளிக்கப்படும். குறிப்பு : – முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான...

ஈரோட்டில் மகாநாடுகள் 0

ஈரோட்டில் மகாநாடுகள்

இரண்டாவது சுயமரியாதை மகாநாடு ஈரோட்டில் மே மாத முதல் வாரத்தில் கூட்டப்படுவதற்கு வேண்டிய முயர்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயத்தில் மற்றும் பல மகாநாடுகள்அதாவது பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு முதலிய மகாநாடுகளும், விவசாயம் கைத்தொழில் முதலிய பொருள் காட்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டிருப்பதற்கு இணங்க அவைகளையும் நடத்த வேண்டும் என்னும் உத்தேசத்துடன் வேலைகள் நடந்து வருகின்றன. மகாநாட்டிற்கு இதுவரை சுமார் 5000 ஐயாயிரம் ரூபாய்களே வாக்களிக் கப்பட்டிருக்கின்றது என்றாலும் ஒட்டு மொத்தம் சுமார் 10000 ரூ பதினாயிரம் ரூபா வரையில் வசூலில் எதிர்பார்க்கலாம் என்றே கருதி இருக்கின்றோம். மகாநாடுகள் அதிகமாய் இருப்பதாலும் குறைந்தது 4, 5 நாள்களுக்காவது நடத்த வேண்டுமென்று கருதியிருப்பதாலும் மேல்கண்ட பதினாயிரம் ரூ.போருமென்று சொல்வதற்கு இடமில்லை. ஆகவே வரவேற்பு கமிட்டி போஷகர்களுக்கு 25ரூ. என்றும் வரவேற்பு கமிட்டி அங்கத்தினர் களுக்கு 5ரூ. என்றும் பிரதிநிதிகளுக்கும் மூன்று ரூபா என்றும்...

ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ் 0

ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்

இவ்வார சென்னை சட்டசபை வரவு செலவு திட்டத்தில் திரு. வி.ஐ. முனுசாமி பிள்ளை அவர்கள் ஆதிதிராவிடர்களுக்கு அவர்கள் எண்ணிக் கைக்கு தகுந்தபடி உத்தியோகமளிப்பதில்லை என்று குறை கூறியதற்கு பதிலாக அரசாங்கத்தார் சார்பாக சீப் சிக்கர்ட்டரி அவர்கள் அந்தப்படி உத்தி யோகங்கள் கொடுக்கும் விஷயமாக அரசாங்கத்தாரால் யோசனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் உத்தியோகங்களைப் பெற்றுக்கொள்ள ஆதி திராவிடர்கள் முன் வரவேண்டுமென்றும் பதில் கூறினார்கள். இது மனப் பூர்வமாய் சொல்லப்பட்ட பதிலானால் இதிலிருந்து இப்போது எல்லா விதத் திலும் தகுதியுடன் இருந்து முன் வந்திருக்கும் திரு. ராவ் பகதூர் யம். சி. ராஜா அவர்களுக்கு சமீபத்தில் காலியாகும் நிர்வாகசபை மெம்பர் பதவி கிடைக் கக்கூடும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமாகாது என்று நினைக்கின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 23.03.1930

சாரதா சட்டம் 0

சாரதா சட்டம்

சாரதா சட்டம் இந்தியசட்டசபையில் திருத்தப்படும் என்றும் ஏப்ரல் முதல் அமுலுக்கு வருவது ஒத்திவைக்கப்படும் என்றும் ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னை சர்க்கார் அச்சட்டத்தின் பிரதிகளை பொது ஜனங்களுக்கு வினியோகித்திருப்பதுடன் பத்திரிகைகளிலும் வெளியிட்டி ருக்கிறார்கள். எனினும் எப்படி நடக்கும் என்று சொல்வது முடியாத காரியமா யிருந்தாலும் இவ்விஷயத்தில் சர்க்கார் ஏதாவது பின் வாங்கினார்களே யானால் அதன் பலனை கண்டிப்பாய் அடைவார்கள் என்பதை மாத்திரம் நாம் உறுதியாய் நம்பி இருக்கிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 23.03.1930

ஜஸ்டிஸ் கக்ஷி 0

ஜஸ்டிஸ் கக்ஷி

ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களை அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கின்ற தீர்மானம் ஒன்றை நிர்வாகக்கமிட்டி தலை வருக்கு திருவாளர்கள் பி.எஸ். குருசாமி நாயுடு அவர்களும் எம்.தாமோதர நாயுடு அவர்களும் அனுப்பியிருக்கின்றார்கள். அதாவது “தற்கால நிலைமை மாறுதல்களை உத்தேசித்து பார்ப்பனர்களை தென்இந்திய நலவுரிமைச்சங்கத்தில் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஒரு விசேஷ மகாநாடு (ஸ்பெஷல் கான்பரன்ஸ்) கூட்டவேண்டுமென்றும் இக்கமிட்டி தீர்மானிக்கின்றது” என்பதாகும். இப்பொழுது மேல்கண்ட இந்த தீர்மானத்தை அனுப்பியிருக்கும் கனவான்களே நெல்லூரில் பார்ப்பனர்களை சட்டசபை நடவடிக்கை கட்சி யில் சேர்த்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்கின்ற தீர்மானத்தை எதிர்த்தவர்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இப்போது பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியிலேயே சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்திருப்பதற்குக் காரணம் “தற்கால நிலைமையை உத்தேசித்து” என்று தான் சொல்லுகின்றார்கள். பார்ப்பனர்களைச் சேர்த்துத் தான் ஆக வேண்டும் என்கின்ற அளவுக்கு தற்கால நிலைமை எப்படி மாறுதல் அடைந் திருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. சென்ற சட்டசபை தேர்தலில் ஜஸ்டிஸ்...

ஓர் மறுப்பு 0

ஓர் மறுப்பு

சுயமரியாதை இயக்கத் தலைவர் திரு. ஈ.வெ. இராமசாமி அவர்கள் கீழ்க்கண்ட மறுப்பை பத்திரிகைகளுக்கு தந்தி மூலம் அனுப்பியிருக்கிறார். அதாவது :- இருபதாந்தேதி வெளிவந்த சென்னை தினசரிப் பத்திரிகைகளில் ஆயிரக்கணக்கான சுயமரியாதைச் சங்க அங்கத்தினர்கள் உப்பு வரியை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யப் போவதாக ஒரு செய்தி வெளி வந்திருப் பதைப் பார்த்தேன். யாராவது தன் சொந்த ஹோதாவிலோ அல்லது வேறு ஹோதாவிலோ உப்புச் சட்டத்தை மீறுவதைப் பற்றி எனக்கு ஆட்சேப மில்லை. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பெயரால் யாராவது உப்புச் சட்டத்தை மறுப்பு செய்யத் தொடங்கினால் அம்முயற்சி சுயமரியாதை இயக்கத்தாரால் ஆதரிக்கப்பட்டதாகாது. அவ்வியக்கத்தின் முக்கிய அங்கத்தி னர்களில் ஒருவர் என்கின்ற முறையில் எனக்காவது சுயமரியாதை சங்கத் தலைவருக்காவது அதில் சம்பந்தமே கிடையாது. உப்புச் சட்டத்தை மீறுவ தென்பதை இது சமயம் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உப்புச் சட்டத்தை மீறுவதனால் சுயமரியாதை இயக்கத்துக்கு எத்தகைய நன்மையும் உண்டாகாது. குடி அரசு – அறிக்கை –...

தேவதாசி ஒழிப்புச் சட்டம் 0

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

கோயில்களில் பெண்களை பொட்டுக்கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திரு. முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தை சர்க்கார் நமக்கு அனுப்பி அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள். இதற்காக சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களையே பொது மகளீர்களாக்கி நாட்டில் விவசாரித்தனத்திற்கு செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய ஸ்தானங்களில் தாராளமாய் இடமும் அளித்து வரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றி யும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கையு டன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ, கோரின அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக் கம் கடவுள் பேராலும் மதத்தின்...

காந்திப் போர் 0

காந்திப் போர்

இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கும் படியானதும் ஏதோ ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணப் போகின்றது என்று பாமர மக்களுக்குள் பிரமாதமாகப் பிரசாரம் செய்யப் படுவதற்கு உபயோகித்துக் கொண்டிருப்பதும், திரு. “காந்தியின் கடைசிப் போர்” என்று சொல்லப்படும் சத்தியாக்கிரக சட்ட மறுப்பு கிளர்ச்சியேயாகும். இந்த சத்தியாக்கிரக சட்ட மறுப்பு என்பதை உப்புக் காய்ச்சுவதன் மூலமும் உப்பளத் தில் இருந்து உப்பை அள்ளிக் கொண்டு போவதன் மூலமும் செய்து பார்ப் பதாக சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இம்மாதிரி திரு. காந்தியவர்கள் செய்வது இந்தியாவில் இது இரண்டாவது தடவையாகும். அதாவது, இதுபோலவே 1920, 21 – ம் வருஷத் தில் ஒரு தடவை பஞ்சாப் அநீதியைச் சொல்லிக் கொண்டு மது பானத்தின் பேரால் ஒரு கோடி ரூபாய் கை முதலாக வைத்து கள்ளுக்கடை மறியல் மூலமாய் ஒரு சட்ட மருப்பும் சத்தியாக்கிரகமும் தொடங்கப்பட்டு சுமார் நாலு மாத காலம் வெகு மும்முரமாய்...

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை 0

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை

– சித்திரபுத்திரன் மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்:- அடீ என் அறுமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும் மேல் உலகத்திலும் உள்ளவர்களுக் கெல்லாம் ஐசுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா? லட்சுமியான ஸ்ரீரங்க நாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தைரும் சாப்பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம் கூட கை வைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மை சாப்பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது? விஷ்ணு:- ஐய்யய்யோ அதனாலா இப்படி  செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படி செய்வதும் ஒரு லட்சுமிகடாக்ஷம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்கு கோபமாயிருந்...

பட்ஜட் என்னும் வரவு செலவு திட்டம் 0

பட்ஜட் என்னும் வரவு செலவு திட்டம்

சமீபத்தில் சென்னை சட்ட சபையில் நிகழப்போகும் பட்ஜட் வரவு செலவு திட்ட நடவடிக்கையில் மூன்று காரியம் செய்ய பணம் ஒதுக்கி வைக்கவேண்டும் என்னும் விஷயத்தில் கவலை எடுத்து அனுகூலப் படுத்திக் கொடுக்க வேண்டுமாய் சட்டசபை அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம். அதாவது, 1. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புஸ்தகம் துணி சாப்பாடு ஆகியவைகள் சாக்கார் பணத்திலிருந்து செலவு செய்து கல்வி கற்றுக் கொடுப்பது. 2. மாகாணத்தில் சென்னையை விட்டு வெளியில் தமிழ்நாட்டில் ஒன்றும் ஆந்திர நாட்டில் ஒன்றுமாக விதவைகள் ஆச்சிரமம் வைத்து அவர்களுக்கு சௌகரியப்பட்ட பெற்றார் உற்றார்கள் இடமிருந்து செலவுக்கு துகை பெற்றும் முடியாதவர்களானால் சர்க்காரிலிருந்தே செலவு செய்தும் சாப்பாடு துணி கொடுத்துக் கல்வியோ தொழிலோ கற்றுக் கொடுத்து ஜீவனத்திற்கு வழியேற்படுத்திக் கொடுப்பது. 3. இப்போது மது விலக்குப் பிரசாரம் செய்வதுபோலவே சர்க்கார் செலவில் மாகாணமெங்கும் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்வது. இம் மூன்று காரியங்களுக்கும் பணம் ஒதுக்கிவைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஆகவே...

காங்கிரஸ் 0

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் தலைவரும் சென்னையில் நடந்த காங்கிரசின் போது வரவேற்புத் தலைவராய்  இருந்தவரும் பார்ப் பனர்களின் தாசானுதாசராய் இருந்தவருமான திரு. முத்துரங்க முதலியாரும் மற்றும் அதன் காரியதரிசியாய் இருந்த திரு. கே. பாஷ்யம் ஐயங்காரும் மற்றும் நிர்வாக அங்கத்தினர்களான திருவாளர்கள்  எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரி ஆர்.சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் நிர்வாக சபையில் ராஜீனாமா செய்து விட்டார்கள். காங்கிரஸின்  நிலைமை  எங்கு பார்த்தாலும் இதே கதியாகத்தான் இருந்து வருகின்றது. ஏனெனில் கொஞ்ச காலமாய் காங்கிரசில் இந்த மாதிரி ஆள்கள்தான் அதில் இருக்க முடிந்தது. அதாவது சட்டசபை மந்திரி முதலிய ஸ்தானங்களுக்கு அபேட்சை உள்ளவர்கள்  மாத்திரம் அதில் இருக்கும்படி இருந்தது. இப்போது அதற்கு இடமில்லாமல்  ஒரு சமயம் ஜெயிலுக்கும் போகும் படியான சந்தர்ப்பம் ஏற்படக் கூடும் என்று தெரிவதால் அப்படிப் பட்ட ஆள்கள் அதை விட்டு ஓடி வேறு கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வாழவேண்டியதாய் விட்டது. இதனாலேயே காங்கிரசை பார்ப்பனர் கள்...

சென்னை அரசாங்க உள் நாட்டு மெம்பர் பதவி 0

சென்னை அரசாங்க உள் நாட்டு மெம்பர் பதவி

உள் நாட்டு மெம்பர் பதவி சென்னை அரசாங்க நிர்வாக சபையில் இம்மாதக் கடசியில் ஒரு மெம்பர் ஸ்தானம் அதாவது கடந்த 5 – வருஷ காலமாக டாக்டர் கனம் சர் மகமது உஸ்மான் அவர்கள் வகித்து வந்த உள்நாட்டு மெம்பர் ஸ்தானம் 5 வருஷ காலாவதியின் காரணமாக காலி ஆகக் கூடுமென்பதாய் தெரிய வருகின்றது. அதை உத்தேசித்து அநேக கனவான்கள் அதை அடைய முயற்சி செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது. அரசாங்கத்தாரும் அந்தப் பதவியை யாருக்குக் கொடுக்கலாம் என்பதாக யோசனை செய்து கொண் டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தாருக்கு இது விஷயமாக நாம் நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட வேண்டியது நமது கடமை என்று நினைக் கின்றோம். ஆதியில் அதாவது சுமார் 20 வருஷத்திற்குமுன் மேன்மை தங்கிய கவர்னரவர்களின் நிர்வாக சபையில் இரண்டு அங்கத்தினர்கள் இருந்ததை மூன்றாக மாற்றியதின் முக்கிய காரணமே இந்தியர்களுக்கும் அதில் இட மிருக்க வேண்டும் என்கின்ற...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

எந்த மதத்தில் இருப்பதினால் ஒரு மனிதன் தீண்டப்படாதவனாய் கருதப் படுகின்றானோ அவன் தனக்கு ஒரு சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் அவன் தான் எந்த மதத்தைச் சார்ந்தால் உடனே தீண்டப்படாதவனாக கருதப்பட மாட்டானோ அந்த மதத்தை சார வேண்டி யது அவனது முதற்கடமையாகும். * * * ஏதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான் “ கடவுள் அருளோ” “மோக்ஷமோ” கிடைக்கும் என்கிற விஷயத்தில் எனக்குச் சிறிதும் ஒப்புதலும் நம்பிக்கையும் கிடையாது. அவ்விரண்டு வார்த்தைகளும் அர்த்தமற்றதும் மோசமும் பரிகாசத்திற்கு இடமானதும் என்பதே எனது அபிப்பிராயம். * * * மனுதர்ம சாஸ்திரத்தையும் அதற்கு ஆதாரமான வேதத்தையும் (மத ஆதாரத்தையும்) ஒரு கடவுள் சிருஷ்டித்திருப்பாரானால் முதலில் அந்தக்கட வுளை ஒழித்து விட்டுத் தான் தாகசாந்தி செய்ய வேண்டும். * * * மனுதர்ம சாஸ்திரத்தையும் அதை ஆதரிக்கும் வேதத்தையும் ஒரு மதம் ஆதாரமாய்க் கொண்டிருக்குமானால் முதலில் அம்மதத்தை அழித்து விட்டுத் தான் மனிதன்...

“சித்திரபுத்திரன்” 0

“சித்திரபுத்திரன்”

ஆஸ்த்திகப் பெண்:- என்ன அய்யா நாஸ்த்திகரே, மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றிய ஆட்சேபனைகள் எப்படி இருந்தாலும் பெண்களை கடவுளே விவசாரிகளாய் பிரப் பித்து விட்டார். ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன். நாஸ்திகன்:- அம்மா, அப்படித் தாங்கள் சொல்லக் கூடாது. மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மனுதர்ம சாஸ்திரம் சொல் வதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆ.பெண்:- அதென்ன அய்யா, நீங்கள் கூட அப்படிச் சொல்லுகின் றீர்கள்? இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கி யதை? எல்லாப் பெண்களுமா விவசாரிகள்? நா:- ஆம் அம்மா, எல்லாருமே தான் “விவசாரிகள்”. இதற்காக நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. ஆ. பெண்:- என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரை யுமா...

இரண்டு வைத்தியர்கள் 0

இரண்டு வைத்தியர்கள்

– சித்திரபுத்திரன் பார்ப்பன ஆயுர்வேத வைத்தியருக்கும் பார்ப்பனரல்லாத சித்த வைத்தியருக்கும் சம்பாஷனை ஆ. வே. வை:- ஓய் சித்த வைத்தியரே; இந்த சட்ட சபைக்குள் திரு. முத்துலட்சுமி அம்மாள் போன பின்பு நமது வைத்தியத் தொழில்களுக் கெல்லாம் ஆபத்து வந்து விட்டது போல் இருக்கின்றதே. இதைப்பற்றி கேள்வி கேப்பாடு இல்லையா! சி. வை:- என்ன ஆபத்து? ஆ. வே. வை:-  என்ன ஆபத்தா! இவ்வளவுதான் சித்த வைத்தியத்தின் புத்தி. சி. வை:- சரி, ஆயுர்வேத வைத்தியர்களே மகா புத்திசாலிகளாய் இருக்கட்டும். அந்த அம்மாளால் என்ன ஆபத்து வந்துவிட்டது? ஆ. வே. வை:- பொட்டுக்கட்டக் கூடாதாம், தேவதாசிகள் கூடாதாம். இந்த இரண்டும் நின்றுபோய் விட்டால் நமது ஜீவனம் எப்படித்தான் நடக்கும். சி.வை:- அடேயப்பா இதுதானா பெரிய ஆபத்து. இதற்கும் நமக்கும் என்னய்யா சம்மந்தம். தாசிகள் இல்லாவிட்டால், கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குத்தான் ஜீவனம் கெட்டுப்போகும். ஏனென்றால் கோவி லுக்கு தாசிகள் வராவிட்டால் ஜனங்கள் கோயிலுக்குப்...

திரு. ஈ. வெ. ராமசாமியாருக்கு “ஸ்ரீ ஜக்த்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீமுகம்’’ 0

திரு. ஈ. வெ. ராமசாமியாருக்கு “ஸ்ரீ ஜக்த்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீமுகம்’’

“ஸ்ரீ சங்கராச்சாரி சமஸ்தானம்” நிஜசிருங்கேரி க. நெ. 53. ( முகாம் புஷ்பவனம் ) “அஸ்மத் பிரிய முக்கிய சிஷ்யரான கோயமுத்தூர் ஜில்லா ஈரோடு கஷ்பா வெங்கிட்டசாமி நாயுடு குமாரர் ஸ்ரீமான் ராமசாமி நாயுடுவினுடைய சமஸ்த்த ஐஸ்வரிய ஆரோக்கிய அபிவிருத்தியின் பொருட்டு திரிகால அனுஷ்டானத்திலும் பகவத் பிரார்த்தனையுடன் ஆசிர்வதித்து எழுதி வைத்தனுப்பிய ஸ்ரீமுகம். இங்கே ஆர்காடென்னும் சடாரண்ண nக்ஷத் திரங்களில் ஒன்றாகிய புஷ்பவனம் என்னும் புதுப்பட்டி கிராமத்திய ஸ்ரீ பரத்துவாஜ மஹாரிஷி ஆசிரத்தில் லோகத்தில் எல்லோருடைய nக்ஷமத் தைக் குறித்து தபஸ் செய்து கொண்டு இந்த மரியாதையை அனுப்பி யிருக்கிறோம். சம்பாதி – லோககுரு ஸ்தானமாகிய இதில் பரதகண்டத்திலுள்ள சனாதன தர்மத்தை கெடுக்காமலும் எல்லோருக்கும் nக்ஷமம் உண்டாகும் படிக்கும் பாரபக்ஷம் இல்லாமல் படிக்கும் சாஸ்திர எல்லைகள் கடவாமல் படிக்கும் பிபீலகாதி பிரம்மம் பரியந்தம் (எரும்பு முதல் பிரம்மாதிகளிலும்) எல்லாவற்றிலுமிருப்பது ஒரே பிரம்மமென்று எல்லோருக்கும் பிரம்மானந் தத்தை அடையச் செய்யவே ஜெகத்குரு பீடம்...

“ஸ்ரீமுகம்” 0

“ஸ்ரீமுகம்”

சிருங்கேரி மடாதிபதி உயர்திரு “ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள்” அவர்களிடமிருந்து நமக்கு வந்த “ஸ்ரீமுக;” அழைப்பை, இவ் விதழில் வேறு ஒரு பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றோம். திரு. மடாதிபதி அவர்கள் அந்த “ஸ்ரீ முகம்” நமக்கு அனுப்பியதற்காகவும் மற்றும் அதில் நம்முடையவும் நமது மனைவியாருடையவும் ஒரு சிறு தொண்டை மிகுதியும் பாராட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காகவும் நாம் நம் சார் பாகவும் நமது மனைவியாரின் சார்பாகவும் நமது மனப் பூர்த்தியான நன்றி யறிதலை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம். நிற்க அந்த “ஸ்ரீமுக”த்தில் “சனாதன தர்மத்தை கெடுக்காமல்;” “கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமைகளைச் செய்து” “சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்” என்கின்ற நிபந்தனைகள் கண்டு அதற்கு விரோதமில்லாமல் “சில சுதந்திரங்கள் அளிக்கப்படும்” என்கின்ற வாசகங்கள் காணப்படுகின்ற படியால், நாம் அங்கு செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கின்ற விஷயம் நமக்கு சந்தேகமாகவே இருக்கின்றது. ஆயினும் பொருப்புள்ள ஒரு பதவியை வகிப்பவரும் பல...

ஸ்தல ஸ்தாபன மசோதா 0

ஸ்தல ஸ்தாபன மசோதா

சென்னை சட்டசபையில் ஸ்தல ஸ்தாபன மசோதா ஒன்று ஸ்தல ஸ்தாபன மந்திரி கனம் டாக்டர். சுப்பராயன் அவர்களால் கொண்டுவரப் பட்டதானது இவ்வாரம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அநேகமாக மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் சம்மதமும் கவர்னர் ஜனரல் அவர்கள் சம்மதமும் பெற்று இவ் வருஷத்திலேயே அமுலுக்கு வந்துவிடும் என்றே நினைக்கிறோம். இந்த சட்டம் செய்யப்பட்டதின் மூலம் சில நன்மைகள் ஏற்படக் கூடும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும் பலன் கொடுக்கும் முக்கியமான நன்மைகள் எதுவும் பிரமாதமாய் ஏற்பட்டு விடும் என்பதாக நம்மால் நினைக்க முடியவில்லை. ஸ்தல சுயாட்சி போன்ற ஸ்தாபனங்களில் ஏதாவது சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அச்சீர்திருத்தங்கள் மிகுதியும் அந்த ஸ்தாபனங் களின் நல்ல ஆட்சிக்கும் நாணயத்திற்கும் வரிப்பொருளை சரியானபடி செலவழிப்பதற்கும் உபயோகப்படக்கூடியதாய் இருக்க வேண்டும். இப்போது நமது நாட்டில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இந்த மூன்று குணங்களையும் காப்பாற்றும்படியான சக்தி இல்லை என்று பல தடவை அழுத்திச் சொல்லு வோம். அதுவும்...

பூரண சுயேச்சைப் புரட்டு – II 0

பூரண சுயேச்சைப் புரட்டு – II

1929 – ம் வருஷம் காங்கிரசானது “இந்திய தேசியப் போராட்டம்” என்பதின் இரகசியத்தை வெளியாக்கி விட்டது ஒரு புறமிருக்க இப்போது ஏதோ சத்தியாக்கிரகப் போர் சமீபத்தில் தொடுக்கப் போவதாக பெரிய ஆர்ப் பாட்டங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவ்வார்ப்பாட் டங்கள் காங்கிரசுக்கோ காங்கிரஸ் அங்கத்தினர்களுக்கோ ஒரு சிறிதும் சம்மந்த மில்லாமல் திரு காந்தி அண் கோ கம்பெனியாருக்கு கன்ட்றாக்ட்டு விடப் பட்டு விட்டதாய்த் தெரிகின்றது. இதன் கருத்து என்ன வென்றால் திரு. காந்தி யால் ஏதாவது வெற்றி (ஏற்படப்போவதில்லை உறுதி உறுதி) ஏற்படு மானால் உடனே அதை தேசிய வெற்றி என்று கொட்டை எழுத்தில் போட்டு பெருமை பாராட்டிக் கொள்ளவும் தோல்வி அடைந்தால் “முன்னமேயே தெரிந்து தான் அதன் பொருப்பை காங்கிர° ஏற்றுக் கொள்ளாமல் திரு. காந்தி யின் தலையில் போட்டு விட்டது” என்று சொல்லவும் இடம் வைத்துக் கொள்ள செய்த காரியமே யாகும். அன்றியும் மேற்படி சத்தியாக்கிரகத்தையோ சட்டம் மீறுவதையோ சர்க்கார்...