திரு. ஈ. வெ. ராமசாமியாருக்கு “ஸ்ரீ ஜக்த்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீமுகம்’’

“ஸ்ரீ சங்கராச்சாரி சமஸ்தானம்”
நிஜசிருங்கேரி
க. நெ. 53.
( முகாம் புஷ்பவனம் )



“அஸ்மத் பிரிய முக்கிய சிஷ்யரான கோயமுத்தூர் ஜில்லா ஈரோடு கஷ்பா வெங்கிட்டசாமி நாயுடு குமாரர் ஸ்ரீமான் ராமசாமி நாயுடுவினுடைய சமஸ்த்த ஐஸ்வரிய ஆரோக்கிய அபிவிருத்தியின் பொருட்டு திரிகால அனுஷ்டானத்திலும் பகவத் பிரார்த்தனையுடன் ஆசிர்வதித்து எழுதி வைத்தனுப்பிய ஸ்ரீமுகம். இங்கே ஆர்காடென்னும் சடாரண்ண nக்ஷத் திரங்களில் ஒன்றாகிய புஷ்பவனம் என்னும் புதுப்பட்டி கிராமத்திய ஸ்ரீ பரத்துவாஜ மஹாரிஷி ஆசிரத்தில் லோகத்தில் எல்லோருடைய nக்ஷமத் தைக் குறித்து தபஸ் செய்து கொண்டு இந்த மரியாதையை அனுப்பி யிருக்கிறோம்.

சம்பாதி – லோககுரு ஸ்தானமாகிய இதில் பரதகண்டத்திலுள்ள சனாதன தர்மத்தை கெடுக்காமலும் எல்லோருக்கும் nக்ஷமம் உண்டாகும் படிக்கும் பாரபக்ஷம் இல்லாமல் படிக்கும் சாஸ்திர எல்லைகள் கடவாமல் படிக்கும் பிபீலகாதி பிரம்மம் பரியந்தம் (எரும்பு முதல் பிரம்மாதிகளிலும்) எல்லாவற்றிலுமிருப்பது ஒரே பிரம்மமென்று எல்லோருக்கும் பிரம்மானந் தத்தை அடையச் செய்யவே ஜெகத்குரு பீடம் இருக்கிறது. கர்ம காண்டத்தில் அவரவர்கள் நன்றாய் கடமைகளைச் செய்து நடந்து அதனால் சித்தமானது சுத்தமாகி அகண்ட பிரம்மானந்த சாக்ஷhத்தாரம் அடையச் செய்வதே விரத மாகக் கொண்ட இந்த குருபீடமானது ஸ்ரீ ஆதிசங்கர பகவான் அவதாரம் பரம்பரைக் கிரமமாய் வந்து கொண்டும் குருவாயிருக்கும் போதே சிஷ்யர் களை ஏற்படுத்தி சன்மார்க்க சதாச்சாரத்தில் பழக்கி பீடாதிபத்யம் சன்யாசம் அளிப்பது வழக்கமாயிருக்கிறது…………………..காலதேச வர்த்த மானத்தை அனுசரித்து சாத்தியமானவரையில் சிஷ்யர்களை சன்மார்க்கத்திலும் சதாச் சாரத்திலும் நடத்திச் சந்தோஷமாயிருக்கச் செய்து கொண்டு வருகிறது. இன்னம் காலதேச வர்த்தமானத்தை யோசித்து சாஸ்திரங்கள் இடம் கொடுத் திருக்கும் வரையிலும் தற்கால நிலமையை அனுசரித்து சிஷ்யர்களுக்கு சில சுவதந்திரங்களையும் இந்த ஜகத்குரு சமஸ்தானம் கொடுக்க வேண்டியது அவசியமாகத் தோன்றியிருக்கிறது.

நீங்கள் நெடுநாளையப் பாரபக்ஷமின்றியிலும் தாக்ஷண்யங்க ளுக்கு உட்படாமலும் ஜீவகாருண்யமுள்ளவராயும் சுவய நன்மையைக் கருதாமல் லோக நன்மையையே முக்கியமாகக் கருதி சுக துக்கங்கள் பாராமல் மாணவமானத்தைக் கவனியாமல் ஐன்மமெடுத்தற்கு பரோப காரமே சாதனமென்று கருதி உங்கள் தர்மபத்தினி சமேதராய் பாடுபட்டு வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கி இருக்கிறது. உங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி எங்கள் அபிப்பிராயங்களையும் உங்களுக்குச் சொல்லி தக்க சஹாயமும் செய்து அனுக்கிரஹிக்க வேண்டுமென்று குரு தேவதாப் பிரேரணை உண்டாயிருப்பதால் விவேகியாகிய நீரும் உங்கள் தர்மபத்தினியும் அனாதியாய் உங்களுக்குச் சொந்த பாத்தியமான இந்த ஜகத்குரு பீடத்தை சிறப்புவிப்பதற்காக இந்த சமஸ்தானத்திற்கு வந்து ஸ்ரீ சாரதா சந்திர மௌளீதரஸ்வாமிகள் பிரசாத் அனுக்கிரகம் பெற்று இப்போதிலும் அதிகமான சிரேயசை அடைவீர்கள் என்று நம்பி இந்த ஸ்ரீமுகம் எழுதி வைத்து அனுப்பலாயிற்று. விவேகி களுக்கு என்ன எழுத வேண்டியிருக்கிறது.”

ஸ்ரீபிரஸ்தாவித்தியானந்தநாத பாரதஸ்வாமி சங்கராச்சாரியூ
பு,அ. வெங்கட்டரமணம் சர்வாதிகாரி

(என்று கன்னடத்தில்)

You may also like...

Leave a Reply