திரு. சி. ராஜகோபாலாச்சாரியாரின் சாமர்த்தியம்
திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் சட்டத்தை மீறினாரென்று அரஸ்ட் செய்யப்பட்டு 6-மாத வெருங்காவல் தண்டனையும் 200 ரூ. அபராதமும் அடைந்தார். சிறைக்குப் போகும் போது தமது தலைமைஸ்த்தானத்தை வெகு ஜாக்கிரதையாக திரு.சந்தானஅய்யங்காரிடமே ஒப்புவித்து விட்டுப் போயி ருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் “திரு ஆச்சாரியர் சிறைசெல்லநேர்ந்தால் தான் அந்த ஸ்தானத்தை ஏற்று நடத்துகிறேன்” என்று ஒப்புக்கொண்டிருந்தும் கூட அவரிடம் தலைமை ஸ்த்தானத்தை ஒப்புவிக்காமல் ஒரு அய்யங்காரி டமே ஒப்புவித்து விட்டுப் போனது மிகவும் சாமர்த்தியமேயாகும்.
ஒத்துழையாமை காலத்திலும் கூட திரு. ஆச்சாரியார் தனது தலைமை ஸ்த்தானம் காலி செய்ய நேர்ந்தபோதெல்லாம் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரி டமோ திரு. ராஜனிடமோ தான் ஒப்புவிப்பதில் கவலையாகவே இருந்தவர்.
ஆதலால் இப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்தது பாராட்டத் தக்கதே,
குடி அரசு – செய்தி விளக்கம் – 04.05.1930