பெரியார் கருத்துக்கருவூலம் மகத்தான தொகுப்புப்பணி
பழைய “ குடிஅரசு ”, “பகுத்தறிவு”, “புரட்சி” ஆகியவற்றில் 1925 முதல் அய்யா அவர்கள் எழுதிய எழுத்துக்கள், பேச்சுக்கள், குறிப்புக்கள் ஆகியவற்றை ஆண்டுவாரியாகத் தொகுக்கும் அரிய பணி திருச்சியில் துவங்கியது.
பகுத்தறிவுப் பேராசிரியர்களும், ஆசிரியர் அணி நண்பர்களும், பெரியார் நூற்றாண்டு வளாகக் கல்வி நிலையங்களின் செயலாளர் புலவர் கோ. இமயவரம்பனின் ஒத்துழைப்போடு இப்பணியை நடத்தினர். பெரியார் கருத்துக் கருவூலத் தொகுப்புப்பணியில் ஈடுபட்ட மானமிகு தோழர்கள்.
புலவர் கோ.இமயவரம்பன்,
பெரியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி
முதல்வர் கோ. கலியராஜுலு,
திருச்சி பேராசிரியர் க. நெடுஞ்செழியன்,
பேராசிரியர் திருமதி சக்குபாய் நெடுஞ்செழியன்,
பகுத்தறிவு ஆசிரியர் அணிச் செயலாளர்
நண்பர் மெ. ஆரோக்கியசாமி,
பேராசிரியர் செ.ஆ.வீரபாண்டியன்,
திருச்சி ந.வெற்றியழகன்,
புதுக்கோட்டை வீ.செல்லப்பன்,
தஞ்சை பெ.மருதவாணன்,
தஞ்சை பகுத்தறிவாளர் கழகச்
செயலாளர் இரா.இரத்தினகிரி,
தஞ்சை இரா. பாண்டியன்,
லால்குடி ப. ஆல்பர்ட்
ஆகியோர் தலைமையில், சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து) கீழ்க் கண்ட தோழர்கள் உதவியாளர்களாகப் பொறுப்பேற்றுச் செம்மையான பணியாக குடியரசிலிருந்து பெயர்த்து எழுதும் பணி நடைபெற்றது.
புதுக்கோட்டை வி.அருள்செல்வன், கு.மலர்க்கண்ணன், இரா.நட ராசன், திருச்சி தாளக்குடி ஆஃபி விக்டர், கோமாகுடி பா.இராசேந்திரன், அ.வெற்றிவேந்தன், க.இராமகிருட்டிணன், ஆறு. இராமலிங்கம், ப. சரவணன், இரா.உமாபதி, லால்குடி பேரின்பச்செல்வன், துறையூர் ஏ.ஜான், புள்ளம்பாடி ஆர்.ஜான்ராஜ், தாளக்குடி ஆர்.தனபாலன், ப.நடராசன், இர.அருள்மொழித் தேவன், அ. திருமாவளவன், பி.எம்.கரிகாலன், திருச்சி ஆர்.திருமாவளவன், தஞ்சை ஆசிரியர் ந.ஆறுமுகம், வேதாரண்யம் க. நடராசன், வேதாரண்யம் ஆசிரியர் சி.புகழேந்தி, புல்லவராயன் குடிகாடு ஆசிரியர் ச. அறவானந்தன், பாப்பாநாடு வெ.சின்னையன், தஞ்சை ம.லெனின், கடன்குடி இரா.இளங் கோவன், சின்னசேலம் கு.மாரிமுத்து, சேலம் உழவர்பட்டி ந. மதிவாணன், தெங்கிய நத்தம் ஏ. கலைமன்னன், புள்ளம்பாடி ஆசிரியை நவமணி, வேதாரண்யம் செல்லத்துரை.
( விடுதலை தந்தைபெரியார் 105 வது பிறந்தநாள் மலரில்(17.9.1983 )
கழக டைரி, திராவிடர் கழக வெளியீடு.
`குடிஅரசு` 1925 எழுத்துப்படியிலிருந்து அறிந்து கொள்ளமுடிந்த படியெழுதிய தோழர்கள் மா. அழகிரிசாமி, சோலை.இளையபாரதி, பி.மார்ட்டின், இராமலிங்கம், நடேசன், சு.நடராசன்.
பிற்சேர்க்கை II
பெரியார் கருத்துக்கருவூலம்
( தொகுப்புப்பணி )
Collected Works of Periyar E.V.Ramasamy
( Compilation Work )
நோக்கம் : தந்தை பெரியார் அவர்களின் எழுத்து, பேச்சு
முதலியபடைப்புக்கள் அனைத்தையும் ஆண்டு வாரியாகத்தொகுத்துப் பெரியார் சுயமரியாதைப்
பிரச்சாரநிறுவனம் சார்பில் வெளியிடல்.
துவக்கம் : திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்விவளாகத்தில்
2.5.1983 இல் முதல்கட்டப் பணி துவங்கிற்று.
பணிக் காலம் : முதற்கட்டப்பணி 40 நாட்கள். நாளொன்றுக்கு
ஏறத்தாழ 40 முதல் 50 வரையிலான தொண்டர்
களைக்கொண்டு நடைபெற்று இதுவரை
கிடைத்துள்ள குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு
இதழ்களில் உள்ளவை படி எடுக்கப்பட்டன.
முதற்கட்டப் ஏறத்தாழ 18 ஆயிரம் பக்கங்களில் 4 லட்சத்து
பணி : 50 ஆயிரம் வரிகள் எழுதிமுடிக்க, 22,400 மனித
மணிநேரங்கள் இதுவரை செலவாகியுள்ளன.
முழுத்தொகுப்புப்
பணியின் பக்கங்கள் : 75,000. வரிகள் : 18,75,000.
உத்தேச அளவு : தொகுதிகள் : 750 பக்கங்களைக்
கொண்ட ( டெம்மி ) 100 வால்யூம்கள்.
பதிப்பு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்
ஆசிரியர் : செயலாளர் கி.வீரமணி
தொகுப்பு
ஆசிரியர் : புலவர் கோ. இமயவரம்பன் அவர்கள்.
வேண்டுகோள் : இப்பணிக்குப் பெரியாரின் படைப்புக்கள்
(பேச்சு, கட்டுரை, நாடகம், உரையாடல் , கடிதங்
கள்,வாழ்த்துச் செய்திகள், அறிக்கைகள், பதிப்பு
ரைகள், அணிந்துரைகள் மற்றும் புகைப்படங்
கள்) முதலியன வைத்திருப்போர் அனுப்பி
உதவுக.
– பெரியார் மாளிகை, திருச்சி – 620 017
( 1984 ஆம் ஆண்டு திராவிடர்கழகம் வெளியிட்ட
பெரியார் – பகுத்தறிவு நாட்குறிப்பிலிருந்து )
பிற்சேர்க்கை III
பெரியார் கருத்துக்கருவூலம்
( தொகுப்புப்பணி )
Collected Works of Periyar E.V.Ramasamy
( Compilation Work )
நோக்கம் : தந்தை பெரியார் அவர்களின் எழுத்து, பேச்சு
முதலிய படைப்புக்கள் அனைத்தையும்
ஆண்டுவாரியாகத் தொகுத்துப் பெரியார்
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில்
வெளியிடல்.
துவக்கம் : திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்விவளாகத்தில்
2.5.1983 இல் முதல்கட்டப் பணி துவங்கிற்று.
பணிக் காலம் : முதற்கட்டப்பணி 40 நாட்கள். நாளொன்றுக்கு
ஏறத்தாழ 40 முதல் 50 வரையிலான தொண்டர்
களைக்கொண்டு நடைபெற்று இதுவரை
கிடைத்துள்ள குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு
இதழ்களில் உள்ளவை படி எடுக்கப்பட்டன.
முதற்கட்டப் ஏறத்தாழ 18 ஆயிரம் பக்கங்களில் 4 லட்சத்து
பணி : 50 ஆயிரம் வரிகள் எழுதிமுடிக்க, 22,400 மனித
மணிநேரங்கள் இதுவரை செலவாகியுள்ளன.
முழுத்தொகுப்புப்
பணியின் பக்கங்கள் : 75,000. வரிகள் : 18,75,000.
உத்தேச அளவு :தொகுதிகள் : 750 பக்கங்களைக்கொண்ட
( டெம்மி ) 100 வால்யூம்கள்.
இரண்டாவது
கட்டப்பணி : 20.5.84 முதல் 31.5.84 முடிய இருபதுக்கும்
மேற்பட்ட தோழர்கள் முனைந்து முதல்
அய்ந்தாண்டுக் கருவூலத் தொகுப்புகளை
அச்சுக்கு ஆயத்தம் செய்து வழங்கியுள்ளனர்.
பதிப்பு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்
ஆசிரியர் : செயலாளர் கி.வீரமணி
தொகுப்பு
ஆசிரியர் : புலவர் கோ. இமயவரம்பன் அவர்கள்.
வேண்டுகோள்: இப்பணிக்குப் பெரியாரின் படைப்புக்கள் ( பேச்சு,
கட்டுரை, நாடகம், உரையாடல், கடிதங்கள்,
வாழ்த்துச் செய்திகள், அறிக்கைகள், பதிப்புரை
கள், அணிந்துரைகள் மற்றும் புகைப்படங்கள் )
முதலியன வைத்திருப்போர் அனுப்பி உதவுக.
– பெரியார் மாளிகை, திருச்சி – 620 017
( 1985 ஆம் ஆண்டு திராவிடர்கழகம் வெளியிட்ட
பெரியார் – பகுத்தறிவு நாட்குறிப்பிலிருந்து )