கல்பாத்தி ‘பிராமணர்களைவிட வெள்ளைக்காரரே மேல்’

 

கல்பாத்தியில் தீண்டாத வகுப்பாரென்று சொல்லப்படும் இந்து சகோதரர்களை அந்தத் தெருவில் நடக்கக்கூடாதென்று 144 தடை உத்திரவு பிறப்பித்தது பற்றி இச்செய்கைக்கு °தல அதிகாரிகள் பொறுப்பாளிகளல்ல வென்றும், சென்னை கவர்ன்மெண்டாரே இச்செய்கையின் பெரும் பாகத் திற்குப் பொறுப்பாளிகளென்றும், அதிலும் ஸ்ரீமான். ஸர்.சி.பி. இராமசாமி ஐயர் என்கிற ஓர் பிராமண கனவான் சட்ட இலாகாத் தலைவராயில்லாமலிருந்தால், இம்மாதிரி காரியங்கள் நிகழ்ந்திருக்காதென்றும், பொதுஜனங்கள் அபிப் பிராயப்பட்டிருந்த விஷயமானது, இப்போது அடியோடு பொய்யென்று சொல்வதற்கில்லாமல், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, சென்னை சட்டசபையில் கேட்ட கேள்விகளினாலும், அதற்கு ஸர்.சி.பி. இராமசாமி அய்யர் அளித்த விடைகளினாலும் இருக்கிறது.  அதாவது:- பாலக்காடு மாஜி°திரேட் 144 உத்திரவு போடும்படி கவர்ன் மெண்டார் தூண்டவில்லையானால், கவர்ன் மெண்டுக்கும், பாலக்காடு மாஜி° திரேட்டுக்கும் நடந்த கடிதப் போக்கு வரத்துக்களை காண்பிக்கமுடியுமா என்ற கேள்விக்கு, ஸர்.சி.பி. இராமசாமி ஐயர், அக்கடிதப் போக்குவரத்துகள் இரகசியமானபடியால் காட்ட முடியா தென்று பதிலிறுத்தியிருக்கிறார்.

பாலக்காடு மாஜி°திரேட் கல்பாத்தியில் இவ்விதமான உத்திரவு போட வேண்டிய அவசியமில்லையென்று ஒரு சமயத்தில் வெளியிட்டிருக்கிறாரா? இல்லையா? என்று ஸ்ரீமான். சி.ஆர்.ரெட்டி கேட்ட கேள்விக்கு, சட்டமெம்பர், ஸர்.இராமசாமி ஐயர் தான்  பதில் சொல்லத் தயாராயில்லை யென்று சொல்லி விட்டார்.

இந்த கல்பாத்தி விஷயத்தில் என்ன செய்வதென்பதைப் பற்றி கவர்ன் மெண்டை பாலக்காடு மாஜி°திரேட் அபிப்பிராயம் கேட்டாரா? இல்லையா? என்று ஸ்ரீமான். சசிபூஷண ராவ் கேட்ட கேள்விக்கு, சட்ட மெம்பர் ஆம் என்று சொன்னதோடு, பொது நன்மையை உத்தேசித்து, வெகு காலமாக நடந்த வர்த்தமானங்களை வெளியிட தாம் தயாராயில்லையென்று சொல்லிவிட்டார்.

இந்தக் கேள்விகளும், பதில்களும் பொது ஜனங்களைச் சர்க்காரிடத் திலும், பிராமண சட்ட மெம்பரிடத்திலும் சந்தேகங் கொள்ளாமல் எப்படி இருக்கச் செய்யும்? இந்த இந்திய பிராமணர் இருந்த ஒரு °தானத்தில் ஸ்ரீமான்கள். எம்.ஸி. ராஜாவோ, ஆர். வீரையனோ இல்லாமலிருந்தாலுங்கூட ஒரு வெள்ளைக்கார மெம்பராவது இருந்திருப்பாரானால், இம்மாதிரி சம்பவங் கள் நடந்திருக்குமா வென்பதை யோசிக்கும்போது பல காரணங்களுக்கு, பிராமணர்களைவிட வெள்ளைக்காரர் கொஞ்சம் மேலென்றுதான் தோன்று கிறது.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.12.1925

 

 

 

 

 

You may also like...