காஞ்சீபுரம் மகாநாடுகள்

காஞ்சீபுரத்தில், ராஜீய மகாநாடென்று ஒரு மகாநாடு கூடிக்  கலைந் தது. பெயர் ராஜீய மகாநாடென்று சொல்லிக்கொள்ளப் பட்டாலும்  அஃதொரு சூதாட்ட மகாநாடாகவே முடிந்தது. சூதாட்டமாட நன்கு தெரிந்த வர்கள் நல்ல லாபமடைந்தார்கள். அது தெரியாதவர்கள்  லாபமடையவில்லை. சூதாட்டத் தினால் சம்பாதித்த பொருள் எவ்வளவு காலம் நிற்குமென்பதையும் இச்சூதின் தன்மையை பொது ஜனங்கள் அறிந்து கொண்டால் பிறகு இவர்கள் யோக்கியதை என்னாகு மென்பதையும் இச்சூதாட்டக்காரர்கள் அறியாமல் போனது அவர்களுடைய பொல்லாத காலமேயல்லாமல் மற்றபடி யாருக்கும் ஒன்றும் நஷ்டமாய்ப் போய் விடவில்லை.

தலைமை உபந்யாசங்கள்

உபசரணைத் தலைவர் ஸ்ரீமான் முத்துரங்க முதலியார் வாசித்த வரவேற்பு பிரசங்கம் அவரெழுதியதல்லவென்றும் அவர் கருத்தல்ல வென்றும் அவர் வாசிக்கும் பொழுது கேட்டுக் கொண்டிருந்தவர்களுக் கெல்லாம் நன்றாய் விளங்கியிருக்கும்.

எவரோ ஒரு பிராமணர் தன்னிஷ்டம் போல் பிராமணரல்லாதாரை நன்றாய் வைது எழுதி அவர் கையில் கொடுத்து அவரை வாசிக்கச் சொல்லி அதை கேட்டுக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஐயோ பாவம்!   அவரை  வையும் படியும்,  அவரைத்  தலைகுனியும் படியும் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பிராமண சூழ்ச்சிக்கு ஒரு உதாரணமாய் விளங்கிற்று. இந்தப் பிரசங்கத்தில் சில பாகத்துக்காக ஸ்ரீமான்  முதலியார் பேரில் பலர் கொண்டு வந்த கண்டனத் தீர்மானங்களையும்  நிறுத்திக் கொள்ளும்படி சொன்னதற்கு இந்த சமாதானம்தான் சொல்லப்பட்டது.

அதாவது இந்த உபந்யாசம் அவர் எழுதியது அல்லவென்றும், இதற்காக பிறகு அவரே வருத்தப்பட்டார் என்றும், ஆதலால் கண்டனம் வேண்டியதில்லை என்றும் சில முக்கிய°தர்களால் சொல்லி நிறுத்தி விடப் பட்டது. ஆதலால் அதைப்பற்றி ஆராய்வது வீண் வேலையானாலும் அதில் பிராமணர், பிராமணரல்லாதார் பிணக்கு காங்கிரஸில் இருப்பதாய் ஒப்புக்கொண்டது மாத்திரம் குறிப்பிடத்தக்கது.

 

மகாநாட்டுத் தலைவர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் உபன்யாசம்

இது 20 பக்கம் கொண்டது. இவற்றில் ஏறக்குறைய 10 பக்கம் தமிழ் நாட்டின் பெருமையைக் காட்டு முகத்தான் தனது கல்விப் பெருமையை காட்ட, புராணங்களின் நாட்டுப்படலமாய் உபயோகித்துக் கொள்ளப்பட்டது.  அதின் பாஷையைப் பற்றியோவென்றால் கேழ்ப்போர் ஸ்ரீமான் முதலியார் என்ன பாஷையில் படிக்கிறார் என்று கவனித்து அறியாமலிருக்கும்படியான அவ்வளவு சாமர்த்தியமாயிருந்தது. கருத்தைப் பற்றியோவென்றால் “முன்னால் பார்த்தால் நாயக்கர் குதிரையைப் போல் இருக்கிறது. பின்னால் பார்த்தால் அய்யங்கார் குதிரை போலிருக்கிறது” என்கிற பழமொழிப்படி குள்ள நரி சாக்ஷியாய் இருந்தது. கண்ணோக்கமோ எப்படி நடந்து கொண் டால் பிராமணர் பிராமணரல்லாதார் இரண்டு பேரையும் ஏமாற்றலாம் என்கிற தத்துவத்திலேயே இருந்தது.

சென்னையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் கூட்டம் ஸ்ரீமான் ஆரியாவை அடித்துத் துன்புறுத்திய பிறகு நமது முதலியாரின் கதி ஸ்ரீமான் அய்யங்காரைக் கண்டால் நடுங்க வேண்டியதாய்ப் போய்விட்டது.

ஸ்ரீமான் முதலியார் அவர்கள்  தான் பயங்காளி என்றும், தான் ஒரு பெண் ஆத்மா என்றும், ஆண் ஆத்மா அல்லவென்றும் அடிக்கடி ஒளிக்காமல் சொல்லிக் கொள்வதுண்டு. அதை காஞ்சியின் தலைமைப் பதவியில் நன்றாய் காட்டி விட்டார்.

இவ்வித சந்தேகம் சிலருக்கு முன்னமேயே யிருந்திருந்தாலும், இவ்வளவு மோசமாய் கொல்லை வழியில் புகுவாரென்று அவர்கள் நினைக்க வேயில்லை. ஸ்ரீமான் முதலியார் தலைவராய் வீற்றிருந்த °தானத்தில் ஒரு  அய்யங்காரோ, ஆச்சாரியாரோ வீற்றிருப்பார்களானால் இவ்வளவு அக்கிர மம் செய்ய அவர்களுக்கு சவுகரியம் கிடைத்திருக்காது. ஸ்ரீமான் முதலியார் தலைவராயிருந்ததால் பயங்காளித் தனத்தோடு ஒரு அய்யங்கார் கையிலும் ஒரு ஆச்சாரியார் கையிலும் குழந்தைபோல் உட்கார்ந்து கொண்டதால் அவர்கள் தங்கள் இஷ்டப்படி முதலியாரை உபயோகப் படுத்திக்கொண்டு சூதில் ஜயித்து விட்டதாக நினைத்துக் கொண்டார்கள். இந்த சூது முதலியார் பெயரைக் கெடுக்கத்தான் அய்யங்கார், ஆச்சாரியார் முதலியோருக்கு உபயோகப்பட்டதே ஒழிய சூது ஆடிகளுக்கு பெரியலாபம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால் ஒன்று, முதலியார், நாயுடு, நாயக்கர் என்கிற மூவரின் ஒற்று மையைக் கெடுக்கவும் ( நாயக்கருக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும்) முதலியார், நாயுடு இவர்கள் ஆச்சாரியார் அய்யங்கார் இவர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்க போட்டி போடவும் உபயோகப்பட்டது.

எப்படி இருந்த போதிலும் ராஜீய மகாநாடுகள் என்பது ஒரு வகுப் பாரை ஏமாற்றி ஒரு வகுப்பார் ஆதிக்கம் பெறத்தான் உபயோகப்படக் கூடிய நிலைமையில் இருக்கிறதே அல்லாமல் விடுதலைக்கு இல்லை என்பது உறுதி யாய் விட்டது. பாமர ஜனங்களை யார் ஏமாற்றுவது என்பது தான் மகாநாடு களின் பெரிய கொள்கையாய் விட்டது. இனி தேசத்துக்கு உண்மையாய் உழைக்கிறவர்கள் காங்கிர° நிர்வாகத்தில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நாலணா மெம்பராய் மாத்திரம் இருந்து காங்கிரஸில் நடைபெறும்  சூழ்ச்சிகளையும் பிரட்டுகளையும் வெளியில் சொல்லிக் கொண்டிருந்தால் போதும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனி தேசத்தில் எந்தக்கட்சிக் காவது எந்தத் தலைவர்களுக்காவது சமீபத்தில் பொதுமதிப்பு ஏற்பட்டு உபயோகமான எந்தக் காரியமும் செய்யப்போவதில்லை என்பது மட்டும் உறுதியாய் விட்டது. வேண்டுமானால் தனிப்பட்ட மனிதர்களுக்கு தங்களுக் குள்ள பிறரை ஏமாற்றக்கூடிய சக்தியினாலும் சவுகரியத்தினாலும் பணத்தை வாரி தாராளமாக இரைப்பதனாலும் ஜெயம் கிடைத்தால் கிடைக்கலாம். வரப்போகும் தேர்தல்களிலும் பணச்செலவும்,  லஞ்சமும் கொடுத்து ஓட்டு வாங்குவதுமான காரியங்கள்தான் அநேகமாய் வெற்றி கொடுக்கப் போகிறது.

இவர்களின் ‘பாக்கியவசமாக’ நாட்டில் தொண்டர்கள் காங்கிர° வேலைக்காரர்கள் என்று ஒரு கூட்டத்தார் ஒத்துழையாமை வேகத்தின் போது ஆவேசத்தில் ஜெயிலுக்குப்போயும் தங்கள் தொழிலை விட்டு காங்கிரசுக்கு உழைத்து வந்தும் இப்போது ஒத்துழையாமை அடங்கி விட்டதாலும் தியாகமும் காங்கிரசுக்கு ஊக்கமான வேலையும் தேவையில்லாததாலும் பலர் வயிற்றுக்கில்லாமலும், தொழில் இல்லாமலும் சும்மா  திரிகிறார்கள். இக் கூட்டம்தான் வரப்போகும் சட்டசபை முதலிய ( எலக்ஷன் ) தேர்தல் யுத்தத்திற்கு சேனைகளாக உபயோகப்படப் போகிறார்கள்.

இவர்களுடைய தைரியத்தினால் பணக்கொழுப்புள்ள அநேக தற் குறிகள் தேர்தலுக்கு நின்று வெற்றி பெறப்போகின்றதுகள். இதுதான் மகா நாட்டு வைபவம். தொண்டர் மகாநாட்டைப்பற்றியும் வகுப்புவாரிப் பிரதிநிதித் தீர்மானத்தைப் பற்றியும் காஞ்சி மகாநாடுகளின் மற்றும் பல விஷயங்க ளையும் பின்னர் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் – 29.11.1925

 

 

 

You may also like...