அருஞ்சொல் பொருள்

அசலாத        –        அகலாத

அருந்தனமாய் –        அரிய செல்வமாய்

அனுஷ்டானமாய்       –        ஒழுக்கம், வழக்கம்,

அனுஷ்டித்தல் –        கடைபிடித்தல், சடங்கு செய்தல்

அபயாஸ்தம்   –        உள்ளங்கையை உயர்த்தி                                       ஆசீர்வதித்தல்

ஆப்த   –        நம்பகமான

ஆப்காரி இலாகா       –        மதுவரித்துறை

ஆஸ்பதம்      –        இடம், பற்றுக்கோடு

இட்டேரி        –        நில எல்லைகளில் செல்லும்                            குறுகிய வழி

இதரர்கள்       –        மற்றவர்கள், பிறர்

இலங்கிக்கொண்டு      –        விளங்கிக்கொண்டு

உத்தாரணம்    –        முன்னேற்றம், ஏறுதல்

உத்ரணித்தண்ணீர்      –        கரண்டித் தண்ணீர்

கண்ணோக்கம் –        நோக்கம்

சகோதரப்பாவம்        –        சகோதர மனப்பான்மை

சந்தியா வந்தனம்       –        சூரியத் தோற்ற, மறைவு வேலை                               களில் செய்யும் சடங்கு

சம்பிரம்        –        களிப்பு, நிறைவு

சன்னது        –        (கல்விப்) பட்டம், அணி

சுதாவாய்       –        தானாக, தன்னிச்சையாக,

சுயாதினம்      –        உரிமை, தன்வசமாக்கல்

சொருபம்       –        உருவம், சாயல்

தம்மியமுடையது      –        தாழ்வானது

தர்ம பீமாதிகள்         –        தர்மன், பீமன் முதலியோர்

தார தம்மியம் –        ஏற்றத்தாழ்வு

துவேஷம்      –        வெறுப்பு

துர்லபம்        –        பெறற்கரியது

தேசோத்தாரணம்       –        நாட்டு முன்னேற்றம்

தொந்தம்       –        பந்தம், கட்டு

நிவேதனம்     –        படையல்

நிர்த்தாக்ஷண்யம்       –        கருணையில்லாமல்

நிஷ்காமிய கர்மம்      –        பயன் கருதா பணி

நிஷ்டுரம்       –        கொடுமை

படாம் –        மூடுதுணி

பராமார்த்தீகம் –        மெய்ப்பொருள் – உலகியல் அறிவின்றி

பரிலா  –       ( பரிலா, ரங்கு, பிரிட்ஜ் ) சீட்டு                           விளையாட்டு வகைகள்

பிரவாகம்       –        வெள்ளம்

புருடபாரியர்    –        கணவன் மனைவி

மஞ்ஞை       –        மயில்

மாச்சரியம்     –        பொறாமை, பகைமை

முன்னுற்பிடித்துக்கொண்டு      –        முன் நூல் பிடித்துக்கொண்டு

யத்தனம்       –        முயற்சி

ரங்கு   –        சீட்டுவிளையாட்டு வகை

வதியும்        –        வசிக்கும், குடியிருக்கும்

வதுவை        –        திருமணம்

வரம்பறுத்து    –        வரையறைத்து

வாக்குத்தத்தம் –        வாக்குறுதி

வாசாலகம்     –        பேச்சுத்திறன்

விதந்தோதிய   –        பாராட்டிப்பேசிய

வித்யார்த்தி     –        மாணவர்

வியக்தமாக    –        வெளிப்படையாக

வியாஜ்யம்     –        வழக்கு

வேடைகாலம் –        கோடை காலம்

ஜட்கா –        குதிரை வண்டி

 

 

 

 

 

You may also like...