* முதலாவது தீர்மானம்

 

  1. பாட்னாவில் கூடிய அகில இந்திய காங்கிர° கமிட்டி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை கதராடை எப்போதும் கட்டாயமாய் உடுத்த வேண்டும் என்ற மாறுதலுடன் காங்கிர° உறுதி செய்யவேண்டுமாய் இம் மகாநாடு சிபார்சு செய்கிறது.
  2. இப்போது சுயராஜ்யக்கட்சியார் நடத்திவரும் ராஜீயத்திட்டத்தில் குறைவுபடாமல் இன்னும் தீவிரமாக காங்கிர° ராஜீய வேலைத்திட்டத்தை நடத்தி சட்டசபை தேர்தல்களையும் நடத்தவேண்டுமென்றும் இனி சுயராஜ் யக் கட்சி என்ற பெயரே வேண்டாமென்றும் இம்மகாநாடு கான்பூர் காங்கிர சுக்கு சிபார்சு செய்கிறது.

என்ற தீர்மானத்தை ஸ்ரீமான். ளு. சீனிவாசய்யங்கார் பிரேரேபித்து பேசியதின் சுருக்கம்.

இத்தீர்மானமானது தமிழ்நாட்டிற்கே புதியது என்றும் அதனால்தான் தான் பிரேரேபிப்பதாயும் நமக்கு எதிரிகள் பலமாயிருப்பதால் காங்கிரசும், சுயராஜ்யக்கட்சியும் ஒன்றாகிவிடவேண்டும் என்றும் சுயராஜ்யக்கட்சி சட்ட சபை ஒத்துழையாமை செய்வதில்லை என்று சிலர் சொல்வதை கவனிக்கக் கூடாது என்றும் இதெல்லாம் நாம் சரிசெய்துகொள்ளக்கூடிய சிறு விஷயங் கள் என்றும் முட்டுக்கட்டை போடுவதுதான் சுயராஜ்யக்கட்சி கொள்கை யென்றும் வகுப்பு நன்மைகளைப் பற்றிக்கூட சுயராஜ்யக்கட்சியார் கவனிப் பார் என்றும் சொல்லித்தீர்மானத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like...