கள்ள மவுனத்திலிருந்தே உருவாகின்றன வெடிகுண்டுகள் ஸர்மிளா ஸெய்யித்
இலங்கை அய்.எஸ். குண்டுவெடிப்புப் பயங்கரவாதத்திலிருந்து பாடம் பெறுவார்களா? அது 2002 என்று நினைவு. எங்கள் ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு, பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிட வில்லை. வீடு வீடாகச் சென்று ஆன்டனாக்களை உடைப்பது, சிடி விற்கும் கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது. அடுத்து, கறுப்பு ஹபாயாக்களையும் நீண்ட அங்கிகளையும் கொண்டு வந்து ‘இதுதான் இஸ்லாமிய உடை’ என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகப் படுததினார்கள். ‘எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்களெல்லாம் இதைத்தான் அணிகிறார்கள். இது எங்கள் கலாச்சாரம்’ என்று ஏற்பதற்குப் பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாது காப்பான கவுரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச் சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக் கழகம் செல்லும் மாணவி களும் கறுப்பு...