கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவத்தையே தகர்த்து விடும் என்று பிரபல அரசியல் விமர்சகர் – எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி எச்சரித்திருக்கிறார். ‘டெக்கான் குரேனிக்கல்’ ஏடு (ஜூன் 30, 2019) அவரது கட்டுரையை வெளியிட் டிருக்கிறது. கட்டுரையில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள்:

பிரதமர் எந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாரோ, அப்போதே குடியரசுத் தலைவரிடம் நாடாளு மன்றத்தைக் கலைக்கச் சொன்னால், நாடு முழுதும் தேர்தல் நடத்தும் நிலை வந்துவிடும். மாநில முதல்வர்களுக்குள்ள அதிகாரங்கள் ஆளுநருக்குப் போய் விடும். குடியரசுத் தலைவர் – நாடாளுமன்றத்தைக் கலைக்கும்போது, மாநில ஆளுநர்களும் சட்டமன்றங்களைக் கலைத்து விடுவார்கள். 1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையிலேயே டாக்டர் அம்பேத்கர் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1948ஆம் ஆண்டு இது குறித்து மேலும் தெளிவான விளக்கங்களை முன் வைத்தார்.

“நமது அரசியல் சட்டத்தின் பிற மாநில அரசுகள், சட்டமியற்றுவதற்கோ, நிர்வாகத் துக்கோ, நடுவண் ஆட்சியை எந்த வகையிலும் சார்ந்திருக்கத் தேவையில்லை. இந்தப் பிரச்சினை யில் நடுவண் அரசும் மாநில அரசுகளும் சமமான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. (கூhந ளவயவநள ரனேநச டிரச உடிளேவவைரவiடிn யசந in nடி றயல னநயீநனேநவே டிn வாந உநவேசந கடிச வாநசை டநபடையவiஎந டிச நஒநஉரவiஎந யரவாடிசவைல. கூhந உநவேசந யனே வாந ளவயவநள யசந உடி-நளூரயட in வாளை அயவவநச )

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த உரிமைகள் மிகவும் முக்கியமானது; அதன் முக்கியத்துவத்தை உணரவே மறுக்கிறார்கள். பிரதமர் மோடி நினைத்தால் நாடு முழுதும் எந்த நேரத்திலும் தேர்தலை அறிவிக்கலாம். நாடாளு மன்றம் கலைக்கப்படும்போது இதன் இணைப்பு களாக மாற்றப்படும்; மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்படும். ஒரு தனி மனிதரின் விருப்பத் துக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் பணிந்து போக வேண்டும். கூட்டாட்சி முறை ஒற்றை ஆட்சி யாகவும் நாடாளுமன்ற ஜனநாயக முறை அதிபர் ஆட்சி முறையாகவும் இதன் வழியாக மாற்றப் படுகிறது. கூட்டாட்சி அமைப்பின் வலிமையே அதில் அடங்கியுள்ள மாநிலங்களின் பன்முகத் தன்மையை அங்கீகரிப்பதுதான். மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மாநில மக்களின் பிரச்சினைகள் அழுத்தம் பெறுகின்றன. ஒரே தேர்தல் முறை மாநிலங்களின் பிரச்சினை களையே காணாமல் போகச் செய்துவிடும்.

1971இல் பிரதமர் இந்திரா காந்தி மன்னர் களுக்கு தரும் மான்யங்களை ஒழிக்கும் சட்டம் கொண்டு வந்தார். உச்சநீதிமன்றம் அதை செல்லாது என்று கூறியது. உடனே உச்சநீதி மன்றத்துக்கு பாடம் புகட்டுவதற்காக நாடாளு மன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1972இல் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரித்து தனி நாடாக்க படைகள் அனுப்பினார். அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றவுடன், மாநில சட்டமன்றங் களைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தர விட்டார். காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. மாநில முதல்வர்கள் டெல்லியில் முடிவு செய்யப் பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தும் முறை இதுபோன்ற ‘அதிகாரத்தைக் கைப்பற்றும்’ அரசியல் சாணக்கியத்தனத்துக்கே வழி வகுக்கும்.

பிரதமர் மோடி இது குறித்து ஆலோசிக்க ஜூன் 19ஆம் தேதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட 11 கட்சிகள் பங்கேற்கவில்லை. 21 கட்சிகள் மட்டும் பங்கேற்றன. பங்கேற்ற கட்சிகளும் வெளிப் படையாக ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. தேசிய அளவில் இதற்கு ஆதரவாக ஒருமித்த கருத்து இல்லை என்பதையே இவை வெளிப் படுத்துகின்றன என்ற கருத்துகளை பதிவு செய்திருக்கிறது, ஏ.ஜி.நூரானியின் கட்டுரை.

பெரியார் முழக்கம் 04072019 இதழ்

You may also like...