இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

சேகுவேரா 92 ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 14 வெள்ளிக்கிழமை அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேகுவேரா, பெரியார், காரல்மார்க்ஸ், காமராசர், பகத்சிங், அம்பேத்கர், லெனின், புத்தர், பாரதிதாசன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் அடங்கிய நூல்கள் மற்றும் எழுதுகோல்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு பெரியார் உருவப்படம் வழங்கப்பட்டது. இராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத்தின் சார்பில் மின்விசிறி வழங்கப்பட்டது. நிகழ்விற்கு, பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க.) தலைமை வகித்தார்.  மணிமாறன், நகர செயலாளர் சி.பி.ஐ. முன்னிலை வகித்தார். சுமதி மதிவதனி (தி.வி.க) வரவேற்புரையாற்றினார். சிறப்புஅழைப்பாளர்களாக  வி.பாலு, தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். சுந்தரம், அ.தி.மு.க. மீனா, மாவட்டச் செயலாளர், தேசிய மாதர் சம்மேளன சங்கம், பூபதி, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக  ஆசிரியர் அருணகிரி நன்றியுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 20062019 இதழ்

You may also like...