Tagged: திராவிடர் விடுதலைக் கழகம்

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் மக்கள் விழா எடுக்கிறார்கள். ஆனால் காந்திக்கும் ராஜாஜிக்கும் அரசுகள் தான் விழா எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறிய தோழர் நீலவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி அடையாளமற்ற அமைப்பாக செயல்படுவதைப் பாராட்டினார். செப்.17 அன்று மந்தைவெளி சந்தைப் பகுதியில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில், வீரமரணமடைந்த தோழர் நீலவேந்தன் ஆற்றிய உரை: மனித குலத்தை பிரித்த மதத்தை அழிக்கப் பிறந்த வீரர், மனுதர்ம தத்துவத்தில் நெருப்பு வைத்த சூரர், வர்ண ஜாதி நெறி திரை கிழித்த மேதை, வரலாறு நமக்கு அளித்த புரட்சிக்கானப் பாதை புரட்சியாளர் அம்பேத்கரையும், தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் சுயநல பூமியில், தன்னைக் கூட சுத்தம் செய்யாமல் பூமியை சுத்தம் செய்ய புறப்பட்ட ஈரோட்டுக் கிழவன் தந்தை பெரியாரையும், உள்ளே கனன்றுகொண்டிருக்கிற சூடான பூமியின் குளிர்ச்சியான மேலோட்டில் கடைசி இரண்டு மனிதர்கள் வாழுகிற வரை அவர்களுக்கிடையிலான சமூக, அரசியல், பொருளாதார...

ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கையில் உறுதி மிக்கவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேடைகளிலும் தோழர்களிடத்தும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டிருந்த வருமான தோழர் நீலவேந்தன், அருந்ததியருக்கு 6 விழுக்காடு உள் ஒதுக்கீடு கோரி திருப்பூர் பார்க் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தீ வைத்து, எரித்துக் கொண்டு உயிரா யுதமானார். 26.9.2013 அதிகாலை 2 மணி யளவில் திருப்பூரில் இந்த கோர சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. ‘தீக்குளிப்பு’ என்ற ‘உயிரிழப்பு’ சமூகப் போராளிகளுக்கு உகந்தது அல்ல என்பது நமது உறுதியான கருத்து. மேடைகளில் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகளை அற்புதமாக பேசக் கூடிய ஒரு வலிமையான பேச்சாளரை செயல் வீரரை நாம் இழந்திருக்கிறோம். செய்தி அறிந்தவுடன் கழகப் பொரு ளாளர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், பல்லடம் மண்டல அமைப்புச் செயலாளர்  விஜயன், வெளியீட்டுச் செயலாளர் தமிழ்ச் செல்வி, மேட்டூர் மண்டல அமைப்புச் செயலாளர் சக்திவேல், மற்றும் கோவை திருப்பூர் சேலம்...

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

மதச் சார்பற்ற நாட்டில் மத நிகழ்வுகளுக்கு அரசு அலுவலகங்களில் இடமிருக்கக் கூடாது. ஆனால், அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டக் கூடாது என்று அண்ணா முதல்வரானவுடன் தி.மு.க. ஆட்சியில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணைகள் மீறப்பட்டு, கடவுள் படங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன. பல்வேறு மதத்தினரும், மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் பணியாற்றும் அலுவலகங்கள், கோயில்களாகவோ பஜனை மடங்களாகவோ மாற்றப்படக் கூடாது. இந்த நிகழ்வுகள் மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. போன்ற கட்சிகளின் பரப்புரைக்கு மறைமுக வழியமைக்கும் ஆபத்தும் அடங்கியுள்ளன. எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாட் டத்தை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி,அக்டோபர் 7 ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.   – தலைமைக் கழகம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 17.9.2013 காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு பால்துரை மாலை அணிவித்தார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர கழகச் செயலாளர் பால். அறிவழகன், செல்லத்துரை மற்றும் ஏராளமான கழகத்தினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முழக்கமிட்டனர். வடக்கு கோட்டையன் தோப்பில் கழகக் கொடியை பிரபாகரன் ஏற்றினார். ஏராளமான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முக்காணியில் திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் தே.சந்தனராசு கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழனிச்சாமி, சரோஜா ஆகியோரின் தாயார் கு. பாவாயம்மாள் 4.10.2013 அன்று முதிர்ந்த வயதில் முடிவெய்தினார். அவரது சொந்த கிராமமான உக்கம்பருத்திக்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, சட்டமன்ற உறுப்பினர்கள் உ. தனியரசு, எஸ் .ஆர். பார்த்திபன் (தே.மு.தி.க.), தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுச் செயலாளர் வை.காவேரி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாமரன், காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள்  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், வெளியீட்டு செயலாளர் சூலூர் தமிழ்ச் செல்வி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், செயலாளர்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

7.10.2013 அன்று அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகளை தடை அமுல்படுத்தக் கோரி காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு காலை 11 மணிக்கு கழகம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் நா.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்களித்த பொறுப்பாளர்கள் இனியன், நேரு தாஸ் , பால முரளி, அன்ரூஸ் , பாலகிருஷ்ணன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 40 தோழர்கள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசு உரையாற்றினார். வெண்பா முதலாம் ஆண்டு பிறந்த நாள் கோவை மாநகர மாவட்டக் கழகத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்–கிரிஜா இணையர் மகள் வெண்பாவின் முதலாமாண்டு பிறந்த நாள் (7.10.2013 அன்று) மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க.வும் இணைந்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது. தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும். போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க. தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கழக மாவட்ட அமைப்பாளர் காளிதாசு, ம.தி.மு.க. மன்னை ஒன்றிய செயலாளர் சேரன் குளம் செந்தில்குமார், தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூரில்...

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலத்தில் ஜாதி மத வெறி சக்திகள் தாக்க முயன்றதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலைக் கண்டித்து சென்னையில் கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பார்ப்பனிய சக்திகள், சில ஜாதி வெறியர்களை சேர்த்துக் கொண்டு மிரட்டிப் பார்க்க வேண்டாம். பெரியார் இயக்கங்கள் பல்வேறு பெயரில் இயங்கினாலும் பெரியார்  கொள்கை பரப்புதலுக்கு தடை என்று வந்தால் அதை சந்திக்க களமிறங்கும். இதை பார்ப்பன சக்திகள் புரிந்து கொள்ளட்டும்! பெரியார் முழக்கம் 10102013 இதழ்

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடியில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்திட கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 13.9.2013 அன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதி தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். நெல்லை மண்டலச் செயலாளர் கோ.அ.குமார், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகரத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பால். அறிவழகன் மற்றும் பல தோழர்களும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டனர். நாகர்கோயிலில் 13.9.2013 அன்று கழக சார்பில் கோயிலில் முடங்கிடும் தங்கத்தைப் பொருளாதார சீர்கேட்டை தடுப்பதற்குப் பயன்படுத்தக் கோரி நாகர்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வழக்குரைஞர் வே.சதா...

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

22.9.2013 அன்று உடுமலை மடத்துக்குளம் வட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரமாக நடைபெற்றது. விழாவிற்கு கழகச் செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையேற்றும், தமிழ்நாடு அறிவியல் மன்ற திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர் இரா. மோகன் முன்னிலையேற்றும் நடத்தி வைத்தனர். முதலில் பெதப்பம்பட்டியில் காலை 10 மணிக்கு கு.கவிதா கொடியேற்றினார். தொடர்ந்து நால்ரோட்டில் உடுமலை வட்ட அமைப்பாளர் ப. குணசேகரன், உடுமலை குட்டைத் திடலில் பெரியார் பிஞ்சு சு.ம. தேனிலா, சுடரொளி, உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், மடத்துக்குளம் நால் ரோட்டில் சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் முகில்ராசு, கடத்தூர் புதூரில் தமிழ்நாடு அறிவியல் மன்ற கோவை மாவட்ட பொறுப்பாளர் விஜயராகவன், கடத்தூரில் சு. துரைசாமி, காரத்தொழுவில் மாவட்டச் செயலர் அகிலன், கணியூரில் தம்பி பிரபா ஆகியோர் கொடி யேற்றினர். மாலை 3 மணிக்கு...

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரி சென்னையில் அக். 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: ஒரு மதச் சார்பற்ற நாட்டில் அரசு அமைப்புகள் மத அடையாளங்கள் இன்றி இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். எந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் மதச் சடங்குகளை தடைப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதில் அடங்கியுள்ள மூடநம்பிக்கைகளை சமுதாய இழிவை கருத்துகளாக முன் வைக்கிறோம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் உரிமை. அரசு நிறுவனங்கள் பல்வேறு மதநம்பிக்கை யாளர்களுக்கும், கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானது. அதில் ஒரு மதம் தொடர்பான சடங்குகளை நடத்துவது எப்படி நியாயமாகும்? இந்த கேள்வியை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளே கேட்டிருக்கின்றன. தாழையூத்து...

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்கள் – காவல்நிலையங்களில் ஆயுத பூஜைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்கியது. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மயிலாடு துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவோடு சரசுவதி பூஜை கொண்டாட்டம் விழாவாக நடத்தப்பட்டதை எதிர்த்து களமிறங்கிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேட்டுப் பாளையத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கிய தோழர்கள் மீது பா.ஜ.க. ஆர்.எஸ் .எஸ் . காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டம் உருவானது. கழகத்தினர் மீது காவல்துறை பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. செய்தி விவரம். மயிலாடுதுறையில்: மயிலாடுதுறையில் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்தவோ, கடவுள் படங்கள் வைப்பதோ கூடாது என்ற அரசு ஆணை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அனைத்து அலுவலகங்களுக்கும் காவல்நிலையங்களுக்கும் மாவட்ட தலைவர் மகாலிங்கம்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல்

கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி அவர்களின் தாயார் கு.பாவாயம்மாள் 4.10.2013 அன்று முடிவெய்தியதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், தோழர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க.), விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா. அதியமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோபி. வெங்கிடு (தி.மு.க.), பனமரத்துப்பட்டி இராசேந்திரன் (தி.மு.க.), மேச்சேரி காமராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி பேராசிரியர் திருநீலகண்டன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தரராஜன் முதலானோர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 23102013 இதழ்

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மதச் சடங்குகளை கொண்டாடக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கி செயல்பட்டது. ஆர்ப்பாட்டங்கள், துண்டறிக்கைகள் வழங்குதல், பரப்புரைகள் என்று பல்வேறு களங்களில் கருத்துகளைக் கொண்டு சென்றதோடு, அலுவலகங்களுக்கும் அரசு ஆணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தோழர்கள் வேண்டுகோள் கடிதங்களையும் கையளித்தனர். இந்த களச் செயல்பாடுகளுக்காக மயிலாடுதுறை, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற ஊர்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வெளி வந்துள்ளனர். மதவெறி சக்திகள் அரசியலில் தலைதூக்கக் கூடாது; அது ஆபத்தானது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பேசி வந்தாலும்கூட, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் மதச் சடங்குகள் ஊடுருவி நிற்பதைக் கண்டிக்கத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய நிகழ்வுகளின் வழியாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பு, மத உணர்வுகளோடு இணைக்கப் படுகிறது. மத உணர்வுகள் ஜாதியத்தோடு நெருங்கி நிற்கிறது. அது தலித்,...

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும் என முக்கியக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் இராமதா°, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ராமதா° : “நாட்டின் பாதுகாப்புக்காக அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணியை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து பா.ம.க. தொண்டர்கள் 134 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு 4 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது மற்ற அரசியல் கட்சிகள் இதனைக் கண்டித்திருந்தால் இப்போது கொளத்தூர் மணி மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்காது. தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். உடனடியாக கொளத்தூர்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

சேலம் வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் சாக்குகளில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை நனைத்து கொளுத்தி வீசிய குற்றச்சாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கிருஷ்ணன், அருண்குமார், அம்பிகாபதி ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இதே வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் காவல்துறை இணைத்து கைது செய்தது. 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்துடன் அனைவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ), 120(பி), 307, 285 உடன் தமிழ்நாடு பொதுச் சொத்து பாதிப்புச் சட்டப் பிரிவு 3(1), 1908 ஆம்ஆண்டின் எரிபொருளால் ஆபத்து களை உண்டாக்கக்கூடிய சட்டத்தின் பிரிவு 3, ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோர் அயராது செயலாற்றுகின்றனர். சென்னையில் மயிலை, மந்தைவெளி அஞ்சலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச் சாட்டில்  கைது...

நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகர்களில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழக அரசே! நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய், கொண்டாம் பட்டி கிராமங்களை எரித்த குற்றவாளிகள் மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று! வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப் பட்ட கிராமங்களிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து, கிராமங்கள் எரிப்பு, இளவரசன் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்! பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கு! அப்பகுதியிலேயே அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலை அமைத்திடு! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறு வாழ்வுப் பணிகளை நிறைவேற்று! அழிக்கப்பட்ட வீடுகளை உடனடியாகக் கட்டிக் கொடு! ஜாதி வெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளை விதித்து வரும் ஜாதியக் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு! வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஜாதி ஆதிக்க...

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி யிலுள்ள தபால் நிலையங்களைத் தாக்கியதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் உமாபதி, மயிலைப் பகுதித் தோழர்கள் இராவணன், மனோகரன், மாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120(பி) (குற்றவியல் சதி) மற்றும் பிரிவு 285 (அலட்சியமாக தீப் பொருளை கையாளுதல்) மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுச் சொத்தை சேதப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்த நாள் கொலை முயற்சி என்ற மற்றொரு குற்றப் பிரிவு சேர்க்கப்பட்டது. வெள்ளிக் கிழமை மாநகர ஆணையர் ஆணையின் கீழ் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இதே கோரிக்கைக்காக சேலம் வருமானவரி அலுவலக வளாகத்தில் சாக்குப் பையில் கெரசினை நனைத்து வீசினார்கள்...

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ திராவிடர் விடுதலைக் கழகம், ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்குகிறது. இத்திட்டத்தின்படி உழைக்கும் மக்களை, மாணவர்களை, பெண்களை, ஆதரவாளர்களை, தோழர்களை சந்தித்து ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடைகளைத் திரட்ட  வேண்டும். இப்படி 10 ரூபாய் நிதி திரட்டும் இயக்கத்துக்கு ஒவ்வொரு தோழருக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.10,000/-. நிதி திரட்டுவதோடு ஒவ்வொரு தோழரும் 5 புதிய தோழர்களை இயக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். ‘நண்பர்களை தோழர்களாக்குவோம்; தோழர்களை இயக்கமாக்குவோம்’ என்ற குறிக்கோளோடு 10 ரூபாய் நிதி சேர்ப்புத் திட்டம் தொடங்குகிறது. இதற்கான நன்கொடை சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. கழகத்தின் பொருளாளர் இரத்தினசாமி அவர்களுடன்  தோழர்கள் தொடர்புகொண்டு இதற்கான நன்கொடை ரசீதுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேலம் சிறையில் உள்ள நமது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இத் திட்டத்தில் தோழர்கள் முனைப்போடு களமிறங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார். தோழமை அமைப்புகளின்...

நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

தமிழர் சமுதாயத்தின் விடிவெள்ளியாம் பெரியார் கொள்கைகளுக்காக கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். திராவிடர் விடுதலைக் கழகம் – ஜாதி-தீண்டாமைக்கு எதிராக களமிறங்கிப் போராடுகிறது. மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவெறி சக்திகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தனியார் தொழில்துறைகளில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக இயக்கங்களை நடத்துகிறது. அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றதாய் செயல்பட போராடுகிறது. இராஜபக்சேயின் இனப்படுகொலை போர்க் குற்றங்களுக்கு எதிராய் நீதி கேட்டு நிற்கிறது. மரணதண்டனைக்கு எதிராகவும் மக்கள் விரோத கூடங்குளம் அணுமின் திட்டங்களுக்கு எதிராகவும், பறிக்கப்படும் தமிழர் வாழ்வுரிமைகளுக்காகவும் தோழமை அமைப்புகளோடு களமிறங்கி செயலாற்றுகிறது. பெண்ணடிமைக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மக்களைச் சந்தித்து கருத்துகளை பரப்புகிறது. மனித உரிமைகளுக்கும் அடக்குமுறை சட்டங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டை 12 ஆண்டுகளாக நடத்து வதோடு, பெரியாரிய சிந்தனைகளை நூல்களாகவும் வெளியிட்டு பரப்பி வருகிறது. தொய்வில்லா களப்பணியில் தொடர்ச்சியாக நிற்கும் திராவிடர் விடுதலைக்...

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு மனுக்கள் தயாரிப்புப் பணிகள் முடிந்துள்ளன. தமிழ்நாடு அறிவுரைக் குழுமம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உள்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட் டுள்ளன. உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் நவம்பர் 25 அன்று தாக்கல் செய்யப் பட்டது. கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் உடனிருந்து உதவி வருகிறார். காவல்துறையினரால் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட தபசி. குமரன், சேலம் டேவிட், சென்னை ஜான் ஆகிய தோழர் களுக்கு முன் பிணையை ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ளது. தோழர் கொளத்தூர் மணியை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள். பெரியார் முழக்கம்...

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை விடுதலைச் செய்யக் கோரியும், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் எழுச்சியான கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப் பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரியும், அடக்குமுறை சட்டங்களை எதிர்த் தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தங்கத் தமிழ்வேலன்,...

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 அன்று பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் அருகில் தலைவர் கொளத்தூர் மணியையும், தோழர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர் கி. திருவேங்கடம், ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பாளர் க.சொ. சிவசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட கழக அமைப்பாளர்இரா. காளிதாசு, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் கு.பாரி, நல்லக்கோட்டை ஒன்றிய செயலாளர் பெ. முருகன், வடசேரி கழகத் தோழர் அ.மா. பிரபாகரன், மன்னார்குடி கழகத் தோழர் செந்தமிழன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெரியார் முழக்கம் இதழ் 26122013

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் டிசம்பர் 4 அன்று திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாநில பொருளாளர் ஈரோடு ரெத்தினசாமி, செயலவை தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர்கள் 7 பேரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததையும், இச் சம்பவங்களில் தொடர்பில்லாத கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், பாய்ச்சப்பட்டதற்கும் திருவாரூர் மாவட்ட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கழக ஒன்றிய செயலாளர்கள் மன்னை சேரன், ரமேஷ், நீடா நல்லிக் கோட்டை முருகன், வலங்கைமான் செந்தமிழன், கோட்டூர் அனுராசு, திருவாரூர் கலைவேந்தன், நகர செயலாளர்கள் கரிகாலன், பிரபாகரன், கலைவாணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்....

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம், திருப்பூரில் அக்.20 ஆம் தேதி நிகழ்ந்த திராவிடர் வாழ்வியல் விழா, உணவு விழாவையொட்டி ‘திராவிடர் பண்பாட்டு மலர்’ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாழ்வியலின் மூலக் கூறுகளான திருமணம், மறுமணம், கல்யாண விடுதலை, குழந்தைப் பேறு, கர்ப்பத் தடை, சோதிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரியாரின் ஆழமான கட்டுரைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பது மலரின் தனிச் சிறப்பாகும். ‘வா°து’ மூடநம்பிக்கை, பெயர் சூட்டல் குறித்து – கொளத்தூர் மணி கட்டுரைகளும், சங்க இலக்கியங்களிலேயே பார்ப்பனியம் ஊடுருவியதை விளக்கும் – விடுதலை இராஜேந்திரன் கட்டுரையும் நல்ல கருத்து விளக்கங்களை முன் வைக்கின்றன. ‘திராவிடர் உடை’ என்ற கட்டுரை, வேட்டி சேலை அணிவதும், இந்து மதப் பண்பாடு என்று சங்கராச்சாரி கூறுவதை எடுத்துக்காட்டி, அதையே தமிழர்களின் அடையாளமாக தமிழ்ப் பண்பாடு பேசுவோரையும் சுட்டிக்காட்டி, தமிழர் அடையாளம் இந்துப் பண்பாடா என்ற கேள்வியை எழுப்புகிறது. உணவு மற்றும் உடையைப் பொறுத்தவரை மதம், கலாச்சாரப் பார்வையைத்...

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்கள் கிருட்டிணன், அருள்குமார், அம்பிகாபதி ஆகியோர், கடந்த 17.12.2013 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் அறிவுரைக் குழுமம் முன் நேர் நிறுத்தப்பட்டனர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலுள்ள அறிவுரைக் குழுமத்துக்கு தோழர்கள் வருவதை அறிந்த கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். தோழர்களை சந்திக்க காவல்துறை செய்த கெடுபிடி காரணமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பதட்டம் நிலவியது. தோழர் கொளத்தூர் மணி சார்பில் விடுதலை இராசேந்திரனும், ஏனைய தோழர்களுக்கு பொருளாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், குழுமத்தின் முன் வாதிட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுமார் 45 நிமிடங்கள் இந்த வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதை காவல் துறை சாட்சி யங்கள், தேசியப் பாதுகாப்புச் சட்...

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 15.12.13 அன்று காலை அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் முடித்த தோழர் இராசசேகர குமார், ஆராய்ச்சியாளர் தோழியர் சிறீதேவி ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா சிறப்புடன் நடந்தது. இராசசேகர குமார், திருநெல்வேலியையும், சிறீதேவி கோவையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து பிரான்சிலும், அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவர்கள். தமிழச்சி (பிரான்°) அவர்களின் பெரியாரின் பதிவுகளை இணையத்தில் படித்து பெரியாரை உள்வாங்கிக் கொண்ட இவர்கள், நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இரு குடும்பத்தினரின் சம்மதமும் பெற்று இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது, பெரியாரின் சுயமரியாதை திருமண வழியில் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திருமணத்தை தலைமை அலுவலகத்தில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மணமக்கள் இருவரும் பெரியாரியல் கொள்கைக்கு எப்படி வந்தோம் என்பதை அனுபவங்களின் வழியாக விளக்கி உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரி யார்...

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘இலக்கு நோக்கிய பயணத்தில் இணைய வரும் தோழர்களே, வாருங்கள்!’ என்ற அழைப்பை ஏற்று வந்த தோழர்களுடன் 2012 Aug 12 ஆம் நாள் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோட்டில் உதயமானது. 2001 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத்தில் தலைவராக இருந்த கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்த அழைப்பை ஏற்று, விலகி வந்த பெரும்பாலான பெரியார் திராவிடர் கழக மத்தியக் குழு உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட இந்த அமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தனிப் பெயரை சூட்டிக்கொண்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தது. இயக்கம் தொடங்கியதிலிருந்து – ஜாதி, தீண்டாமைக்கு எதிராக கழகத்தின் பணிகள் பெரியார் காட்டிய வழியில் தீவிரம் பெற்றன. புதிய சவால்களையும் கழகம் எதிர்கொண்டது. சமூக நீதியான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களை மீட்டெடுத்துக்கொண்ட, பிற்படுத்தப் பட்ட ஜாதிகளைச் சார்ந்த சில தலைவர்கள் ஜாதிய அமைப்புகளை ஒன்று சேர்த்துகொண்டு, தலித் மக்களுக்கு...

கரியாம்பட்டி அருந்ததியர் மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்!

கரியாம்பட்டி அருந்ததியர் மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கரியாம்பட்டி – நடுப்பட்டி. இக்கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று மாலை 3.30 மணியளவில் சுமார் 200 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, பெட்ரோல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த தலித் மக்களை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர். தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இக்கொடிய வன்முறையில் 8 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன, 27 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த தொலைக்காட்சி, பீரோ, மிக்சி உள்ளிட்ட பொருட்கள் அடித்து சூறையாடப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் பெருமாள் (36), நாகராஜ் (34), சுப்பிரமணி (28) ஆகிய 3 தலித்துகள் காயமடைந்தனர். மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் 5 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 தலித்துகளும், 51 சாதி இந்துக்களும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறை...

திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 2.12.13 மாலை 7.30 மணிக்கு சகிலா விடுதியில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செயலகத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டக் கழகத்திலிருந்து தோழர்கள் மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார், மாவட்ட அமைப்பாளர் குணராஜ், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்கம் அமைப்பாளர் அசோக், பெரியார் பெருந் தொண்டர் டாக்டர் எ°.எ°.முத்து, பொன்னு சாமி, பழனி, முருகானந்தம், தமிழ் முத்து, ஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ள தமிழக அரசை கண்டிக்கிறோம். ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் இராணி, அருந்ததியினருக்கான 6 சதவீதம் உள்ஒதுக்கீட்டை...

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 சனிக் கிழமை மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், கழகத் தலைவரை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யக் கோரியும் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் ச. பெரியார் வெங்கட் தலைமை தாங்கினார். செ. நாவாப்பிள்ளை, கா. இராமர், ந. அய்யனார் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கண்டித்தும் எந்தவித நிபந்தனையு மின்றி கழகத் தலைவரை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும்,  சங்கராபுரம் நகரத்தில் ஜாதிப் பெயர்களை தூக்கிப் பிடிக்கும் வணிகம் மற்றும் தொழிற் சாலைகள் உடனடியாக தங்கள் கடைகளிலுள்ள ஜாதிப் பெயரை அகற்றி, சமூக மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்றும், ஜாதி...

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் டிசம்பர் 6 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கர் மணி மண்டபத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மாலை அணி வித்தார். இராயப் பேட்டை பத்ரி நாராயணன் படிப் பகத்தில் வைக்கப் பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கும், மயிலை விசாலாட்சி தோட்டத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் புடை சூழ, பொதுச் செயலாளர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தார். பெரியார் முழக்கம் இதழ் 12122013

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

‘மக்கள் சந்திப்புத் திட்டம்’ – கழக சார்பில் தோழர்களின் வேலைத் திட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர், தோழர்களை மாவட்டந்தோறும் நேரில் சந்தித்து இதற்கான நன்கொடைப் படிவங்கள், துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளையும் அதன் முன்னுரிமைத் திட்டங்களையும் மக்களிடம் விளக்குவதற்கும் அவர்களின் ஆதரவை நன்கொடை வழியாக உறுதி செய்யவுமே இத்திட்டம். பெரியார் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம், தமிழ்நாட்டை வேறு மாநிலங்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக மாற்றியது. ஒப்பிட்டளவில் சமூக மாற்றத்துக்கு தமிழகத்தை பக்குவப்படுத்திய பெருமையும் சிறப்பும் பெரியாரியலுக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டை இன்று வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய ஆபத்தான முயற்சிகள் முனைப்பாக அரங்கேறி வருகின்றன. திராவிட அரசியல் கட்சிகள், பதவி அரசியல் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கான கொள்கை அடையாளங்களை கைவிட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாமல்...

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், அவர் மீதும் கழகத் தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கக் கோரியும் ம.தி.மு.க. சார்பில் 7.12.2013 மாலை புரசைவாக்கம் ‘தானா’ வீதியில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் ஜீவா தலைமையில் நடந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்தின், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், த.தே.பொ.க. சார்பில் அருண் பாரதி, கரும்பு விவசாயிகள் கழகத்தின் சார்பில் பொன்னையன், நாகை தருமன், ஈட்டிமுனை இளமாறன் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர். மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் நடந்தது. மேடையின் பின்புறத்தில் தோழர் கொளத்தூர் மணி, சிறைக் கம்பிகளுக்குள் அடைபட்டிருப்பதுபோல் வண்ணப் பதாகை நிறுவப்பட்டிருந்தது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேயை ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நேரில் சந்தித்து, கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும்...

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் 2013 டிசம்பர் 9 ஆம் தேதி அறிவுரைக் குழுமத்தின் முன் பிற்பகல் 3 மணி யளவில் நேர்நிறுத்தப்பட்டனர். உமாபதி, இராவணன் ஆகியோருக்காக பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரனும், மாரிமுத்து, மனோகரனுக்காக மருத்துவர் எழிலனும் வாதுரைத்தனர். விடுதலை இராசேந்திரன் நீதிபதிகள் முன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “நாட்டின் பாதுகாப்புக்கு, பொது ஒழுங்குக்கு, சமுதாயத்துக்கு இன்றியமையாத பொருள்களை வழங்குதலுக்கு, அதற்கு சேவை ஆற்றுவதற்கு எதிராக பாதிப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும். அத்தகைய எந்தக் குற்றமும் சாட்டப்படாத நிலையில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இந்த வழக்கில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி யதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குகளில் பிணை வழங்கப்படவில்லை. பிணை வழங்கு வதை நீதிமன்றம் நிலுவையில் வைத்துள்ளது. ஆனால்,...

கிணத்துக்கடவில் தொடரும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள்

கிணத்துக்கடவில் தொடரும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள்

கோவை மாவட்டம், கிணத்துக் கடவு அருகே பத்தனம் என்கிற கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இதையறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு படிக்கின்ற தலித் மாணவ, மாணவிகளையும் அவர்தம் பெற்றோர்களையும் அவர்களுடைய வீடுகளுக்கேச் சென்று சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். அதன்படி அவர்கள் சொன்னது, – அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஈ°வரி என்பவர், தேநீர் வாங்க, பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய பெருக்க பயன்படுத்து வாராம். ஆனால், பள்ளிக் கழிப்பறையை மட்டும் கழுவி சுத்தம் செய்ய தலித் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்துவாராம். இது பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது தற்போதுதான் வெளி வந்துள்ளது. அதாவது தற்போது அந்தப் பள்ளியில் படிக்கும் சுபாஷினி என்கிற மாணவி கழிப்பறை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வராததால் அவரை ஆசிரியர் ஈ°வரி அடித்து...

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சி மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக திருவெறும்பூர் தி.மு.க. தொழிற்சங்கக் கட்டிடத்தில் 29.12.2013 அன்று ஒரு நாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட கழக அமைப்பாளர் குணாராஜ் அறிமுக உரை யாற்றினார். திருச்சி, பெரம்பலூர் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்று, கேள்விகளை எழுப்பி, உரிய விளக்கங்களைப் பெற்றனர். முனைவர் ஜீவா, ‘உலக மயமாக்கல்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மதிமாறன், ‘பெரியார்-அம்பேத்கர்’ என்ற தலைப்பிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் இயக்கம் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முனைவர் ஜீவா உரையின் சுருக்கம்: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று உலகமெங்கும் பரவிவரும் கொள்கை, இந்தியாவில் சமஸ்கிருதமயமாக்கலையும் சேர்த்துக் கொண்டு மக்களை சுரண்டி வருகிறது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, இந்தியா ‘உலகமயமாக்கல்’  என்ற வலைக்குள் சிக்கியது. டங்கல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி, அன்னிய நாட்டு உற்பத்திகளை...

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்வு 30.12.2013 திங்கள் மாலை 6.30 மணியளவில் புத்தகச் சோலை மேல் தளத்தில் உள்ள பெரியார் அரங்கில் சிறப்புடன் நடந்தது. கழக மாவட்டத் தலைவர் மா.மகாலிங்கம் தலைமை தாங்கினார். டி.பன்னீர்செல்வம் (ம.தி.மு.க.), வழக்கறிஞர் வேலு. குபேந்திரன் (வி.சி.), சுப்பு மகேசு (தமிழர் உரிமை இயக்கம்), வழக்கறிஞர் ஜெ. சங்கர் (கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), தனவேந்திரன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), எஸ். சுந்தர் (உழைக்கும் விவசாயிகள் இயக்கம்), ந. கலிய பெருமாள் (திருக்குறள் பேரவை) ஆகியோர் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆவணப்படம் குறித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்கள் மீதான வழக்குகளின், உச்சநீதிமன்ற விசாரணைகள் குறித்தும், ராஜீவ் கொலை வழக்கில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமை குறித்தும், அரிதிலும் அரிதான வழக்குகளை தீர்மானிப்பதில் நீதிமன்றங்களில் நடக்கும் குழப்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார். தொடர்ந்து ஆவணப்...

தோழர்களின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை போடுகிறது

தோழர்களின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை போடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், மக்கள் சந்திப்புத் திட்டத்தின் கீழ் முனைப்போடு மக்களை சந்தித்து, கழகத்தின் செயல்பாடுகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, 10 ரூபாய் நன்கொடை திரட்டும் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் தோழர் சிவானந்தம்  600க்கும் அதிகமான மக்களை சந்தித்துள்ளார். மக்கள் ஆதரவு தருவதாகவும், கொடுக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாக மக்களை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். முதல் தவணையாக ரூ.5000, பொருளாளரிடம் கொடுத்துள்ளார். பவானியில் தோழர் வேல்முருகன், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றார். தி.க. தலைவர் வீரமணி தாக்கப்பட்டபோது, கண்டனம் தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறையை பாராட்டியதோடு உண்மையான பெரியாரியக்கம் என தெரிவித்து தோழர்கள் நன்கொடை அளித்தனர். கோபி கோட்டாம்பாளைய தோழர் கார்த்திக்,  திருப்பூர் பேருந்து நிலையத்தில் 1 மணி நேரத்தில் 100 பேரை சந்தித்து முடித்தார். மேலும் நன்கொடை ரசீது புத்தகம் கேட்டு பொறுப்பாளர்களிடம் தொலைபேசியில் பேசினார். திருவாரூரில் காளிதாஸ், செந்தமிழன், முருகன் ஆகிய தோழர்கள்...

2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்

2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்

ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை கைது செய்து, இரண்டு மாதங்கள் உருண் டோடி விட்டன. சேலம் சிறையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்கள் கிருஷ்ணன், அருண் குமார், அம்பிகாபதி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி விடியற்காலை தோழர் கொளத்தூர் மணி, அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 30 ஆம் தேதி மற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 29 ஆம் தேதி சென்னையில் தோழர்கள் உமாபதி, இராவணன், மாரிமுத்து, மனோகரன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதங்களாகவும் தீர்மானங்களாகவும் வலியுறுத்திய கோரிக்கையை கழகத் தோழர்கள் வலியுறுத்தினால் அது தேசப் பாதுகாப்பு என்ற குற்றமாகி விடுகிறது. இது ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்!...

‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது. சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது. தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித் தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற் கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனை யாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது....

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

பிறந்த நாள்: 6.4.1927; பிறந்த இடம் : நாகப்பட்டினம்; தி.க.வில் சேர்ந்தபோது வயது 17. அப்போதிலிருந்து திருவாரூர் வாசம். ரத்தக் கண்ணீர் நாடகம் எழுதிய போது வயது 19. இளமையில் செய்யும் தவறுகள், முதுமையில் எப்படி வாட்டும் என்பதே கதைக் கரு. இராமாயண ஆராய்ச்சி செய்து, வால்மீகி இராமாயணம் தொடங்கி, வடமொழியிலுள்ள பல்வேறு இராமாயண கதைகளையும் ஆய்வு செய்து, மலையாள இராமாயணம், கம்பராமாயணம் உள்பட ஆய்ந்து தெளிந்து எழுதிய நூல் இராமாயணம். அரசாங்கம் இந்நூலை தடைசெய்தபோது எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ என்ற பெயரில் பட்டி தொட்டி எங்கும் இந்நாடகத்தை அரங்கேற்ற, பெரும் புரட்சி செய்த நாடகம் அது. இரத்தக் கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என்ற மூன்று படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியவர். இவரது பெரிய புராண ஆராய்ச்சி நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து இவருடன் உரையாடி...

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பெரியார் கொள்கைகளை மேடைகளிலும் கலை வடிவங்களிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட திருவாரூர் தங்கராசு 5.1.2014 பிற்பகல் 3.45 மணியளவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழாமல் மரணத்தை சந்திக்கும் வரை வழமையாகவே இருந்தார். குடும்பத் துடன் உரையாடிக் கொண்டிருந்தவர், கழிப்பறைக்குச் சென்றார். அங்கேயே சாய்ந்துவிட்டார். அவரது மரணமும் சுயமரியாதையுடனேயே நிகழ்ந்துவிட்டது. 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து பெரியார் இயக்கத் தோழர்கள் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகரிலுள்ள மின் மயத்தில் உடல் வீரவணக்க முழக்கங்களுடன் எரி யூட்டப்பட்டது. முன்னதாக, ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்....

காவல்துறை தடைகளைத் தகர்த்து நடந்த தமிழர் திருநாள் விழா

காவல்துறை தடைகளைத் தகர்த்து நடந்த தமிழர் திருநாள் விழா

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 14 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்-தைப் புத்தாண்டு விழா, ஜனவரி 12 ஆம் தேதி காவல்துறை தடையைத் தகர்த்து எழுச்சியுடன் நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களையும் கொண்டுள்ள பொங்கல் விழாக் குழு, இந்த விழாவை நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் பெரியார் திராவிடர் கழகமும், கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் முன்னின்று விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண் டிருந்த போது, கடந்த 10 ஆம் தேதி காலை காவல் துறை உதவி ஆணையர் (மயிலைப் பகுதி) விழா நடத்துவதற்கு அனுமதி மறுத்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். அன்று நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள். அதற்குப் பிறகு பொங்கல் விடுமுறை. எனவே, விழாவை நடத்த விடாமல் தடுத்து விடலாம் என்று காவல்துறை திட்டமிட்டது. உடனே கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் அவசர அவசரமாக மனுக்களை தயாரித்து, அவசர...

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான வழக்கு: பிப்.12இல் இறுதி விசாரணை

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான வழக்கு: பிப்.12இல் இறுதி விசாரணை

சிறைப்படுத்தப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்கள் அம்பிகாபதி, அருண்குமார், கிருட்டிணன் ஆகியோர் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கோரும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் (4.2.2014) அன்று நீதிபதிகள் எஸ்.இராஜேசுவரன், பி.என்.பிரகாசு அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை நேர் நின்றார். அரசு வழக்கறிஞர் வராததால் வழக்கை பிப்.28 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் கேட்டார். இதற்கு மூத்த வழக்கறிஞர் வைகை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு வழக்கறிஞர் வரவில்லை என்று கூறி அரசு வழக்கைத் தள்ளிப் போட விரும்புவதற்கு நீதிமன்றம் துணை போகக் கூடாது. இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடியதாகும். 90 நாட்களாக ஒரு இயக்கத்தின் தலைவர் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு வழக்கில் சிறைபடுத்தப்பட்டுள்ளார். அவர், இன்றைக்கே விடுதலையாக வேண்டும் என்பதே எங்கள் நிலை....

பிப். 16இல் தொடங்கி, பிப்.25 வரை சுயமரியாதை சமதர்மப் பரப்புரை 2ஆம் கட்டப் பயணம்

பிப். 16இல் தொடங்கி, பிப்.25 வரை சுயமரியாதை சமதர்மப் பரப்புரை 2ஆம் கட்டப் பயணம்

ஜாதி மறுப்பு திருமணங்களை தடுக்காதே! திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் ‘சுயமரியாதை சமதர்ம’ப் பரப்புரையின் இரண்டாவது கட்ட பரப்புரைப் பயணம் பிப். 16 ஆம் தேதி சிவகங்கையில் தொடங்கி, 25 ஆம் தேதி மேட்டூரில் நிறைவடைகிறது. பயணத்தில் தமிழர் சுயமரியாதைக்கு எதிரான ஜாதியமைப்பைத் தகர்த்திட ஜாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்தி பரப்புரை நிகழும். ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களால் ஏற்படும் உடல் ரீதியிலான உளவியல் ரீதியிலான பாதிப்புகளை அறிவியல் பார்வையில் விளக்கப்படும். ஜாதியற்றோருக்கு தனி இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும். பயணத் திட்டங்களை விளக்கி பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: 16.2.2014 ஞாயிறு – பகல் 1 – சிவங்கை, மாலை 4 – காளையார் கோவில், இரவு 7 – காரைக்குடி. 17.2.2014 திங்கள் – காலை 10 – நத்தம், மாலை 4 – அஞ்சுகுழிப்பட்டி, மாலை 5.30 – கோபால்பட்டி, இரவு 7 – சாணார்பட்டி....

பிப்.25இல் மேட்டூரில் இரு பெரும் விழாக்கள்!

பிப்.25இல் மேட்டூரில் இரு பெரும் விழாக்கள்!

கொள்கை உறவுகளே!        தோழமை நெஞ்சங்களே! மேட்டூர் பெரியார் இயக்கத்தின் கொள்கைப் பாசறை; தோழர் கொளத்தூர் மணி தலைமையில் சுமார் 40 ஆண்டுகாலமாக நமது சமுதாயத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றுகிறோம்! தாங்கள் அறிவீர்கள். இது ஒரு தொடர் ஓட்டம். பெரியார் தந்த கொள்கைச் சுடரை ஏந்தி ஓடுகிறோம். திராவிடர் கழகமாக, பெரியார் திராவிடர் கழகமாக – இப்போது திராவிடர் விடுதலைக் கழகமாக பயணம் தொடருகிறது. அண்மைக் காலமாக கடந்து வந்த பாதையின் – சில சுவடுகள் இதோ: 2007இல் ஜாதி-தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம். இறுதியில் தீண்டாமையை அடையாளப்படுத்தும் தேனீர்க் கடை இரட்டைக் குவளைகளை உடைத்து – கைது. 2010இல் இரட்டை சுடுகாடுகளை இடிக்கும் போராட்டம் – கைது. 2012இல் ஜாதிய வாழ்வியலை எதிர்த்து ஊர்-சேரி பிரிவினைக்கு எதிராகப் பரப்புரைப் பயணம். 2013இல் 40 நாட்கள் சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயணம். ஜாதி மறுப்புத் திருமணத் தம்பதியினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில்...

7 தமிழர் விடுதலை: கழகம் வரவேற்று முதல்வரை பாராட்டுகிறது

7 தமிழர் விடுதலை: கழகம் வரவேற்று முதல்வரை பாராட்டுகிறது

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களைக் கைது செய்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்கு முறையை எதிர்கொண்டு வரும் திராவிடர் விடுதலைக் கழகம் – அந்த வலியையும் ஏற்றுக் கொண்டு – தமிழக முதல்வரின் 7 தமிழர் விடுதலையை ஆதரிக்கிறது.  இது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு; துணிவான அறிவிப்பு என்று உளம் திறந்து பாராட்டி வரவேற்கிறது. பெரியார் முழக்கம் 27022014 இதழ்  

மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

  எதிர்வரும் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ( நிகழ்விடம் பின்னர் அறிவிக்கப்படும்) திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்க, கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற  உள்ளது. அனைத்து செயலவை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் பொருள்: இந்துத்துவ எதிர்ப்புப் பரப்புரை பரப்புரை வாகனம் வாங்குதல் மய்ய அரசுப் பணிகளில் தென்னாட்டுக்கு வஞ்சனை பல்கலைக் கழகங்களில் சோதிடக் கல்வி பகுத்தறிவு பரப்புரை தொடர் கூட்டங்கள் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை திட்டம் எதிர்கால வேலைத் திட்டம் கொளத்தூர் மணி   விடுதலை இராசேந்திரன் (தலைவர்)    (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 20032014 இதழ்

மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

11.3.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை தலைமை நிலைய அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூடியது. கழக செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கூடிய இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்டோர் பங்கேற்றனர்: ஈரோடு ப. இரத்தினசாமி, பால். பிரபாகரன், தி.தாமரைக்கண்ணன், தபசி. குமரன், சூலூர் தமிழ்ச்செல்வி, புதுவை லோகு அய்யப்பன், அன்பு. தனசேகரன், இராம. இளங்கோவன், பல்லடம் விஜயன், மேட்டூர் அ. சக்திவேல், மயிலாடுதுறை இளையராஜா, திண்டுக்கல் இராவணன், கொளத்தூர் குமார், திருப்பூர் சிவகாமி, பேராசிரியர் இராமகிருட்டிணன். தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்: சேலம் மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் ஏற்காட்டிலும், கோவை மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று...