மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் டிசம்பர் 4 அன்று திருவாரூர் மாவட்ட செயலாளர்

இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாநில பொருளாளர் ஈரோடு ரெத்தினசாமி, செயலவை தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

கழகத் தோழர்கள் 7 பேரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததையும், இச் சம்பவங்களில் தொடர்பில்லாத கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், பாய்ச்சப்பட்டதற்கும் திருவாரூர் மாவட்ட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கழக ஒன்றிய செயலாளர்கள் மன்னை சேரன், ரமேஷ், நீடா நல்லிக் கோட்டை முருகன், வலங்கைமான் செந்தமிழன், கோட்டூர் அனுராசு, திருவாரூர் கலைவேந்தன், நகர செயலாளர்கள் கரிகாலன், பிரபாகரன், கலைவாணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக மன்னை நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். நகர அமைப்பாளர் ராகுல்ராசு நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் இதழ் 26122013

 

You may also like...