நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

தமிழர் சமுதாயத்தின் விடிவெள்ளியாம் பெரியார் கொள்கைகளுக்காக கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம்.

திராவிடர் விடுதலைக் கழகம் –

  • ஜாதி-தீண்டாமைக்கு எதிராக களமிறங்கிப் போராடுகிறது.
  • மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவெறி சக்திகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் தனியார் தொழில்துறைகளில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக இயக்கங்களை நடத்துகிறது.
  • அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றதாய் செயல்பட போராடுகிறது.
  • இராஜபக்சேயின் இனப்படுகொலை போர்க் குற்றங்களுக்கு எதிராய் நீதி கேட்டு நிற்கிறது.
  • மரணதண்டனைக்கு எதிராகவும் மக்கள் விரோத கூடங்குளம் அணுமின் திட்டங்களுக்கு எதிராகவும், பறிக்கப்படும் தமிழர் வாழ்வுரிமைகளுக்காகவும் தோழமை அமைப்புகளோடு களமிறங்கி செயலாற்றுகிறது.
  • பெண்ணடிமைக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மக்களைச் சந்தித்து கருத்துகளை பரப்புகிறது.
  • மனித உரிமைகளுக்கும் அடக்குமுறை சட்டங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கிறது.
  • ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டை 12 ஆண்டுகளாக நடத்து வதோடு, பெரியாரிய சிந்தனைகளை நூல்களாகவும் வெளியிட்டு பரப்பி வருகிறது.

தொய்வில்லா களப்பணியில் தொடர்ச்சியாக நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகம், அதன் களப்பணிகளுக்காக தோழமை சக்திகளை – ஆதரவாளர்களை – தமிழர் நலன் பேணுவோரை – நிதி கேட்டு நாடி வருகிறது! ஆதரவுக்கரம் நீட்டுங்கள்!

களப்பணிக்கு தோள் கொடுங்கள்!

– திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

You may also like...