கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும் என முக்கியக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பா... நிறுவனர் இராமதா°, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

ராமதா° : “நாட்டின் பாதுகாப்புக்காக அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணியை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து பா... தொண்டர்கள் 134 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பா... எம்.எல்.. காடுவெட்டி குரு 4 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது மற்ற அரசியல் கட்சிகள் இதனைக் கண்டித்திருந்தால் இப்போது கொளத்தூர் மணி மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்காது. தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். உடனடியாக கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும்.”

திருமாவளவன் : “தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு இயக்கத்தின் தொண்டர்கள் செய்யும் செயல்களுக்கு அவ்வியக்கத்தின் தலைவரை கைது செய்ய வேண்டும் என்றால் அனைத்து அரசியல் தலைவர்களையும் சிறைப்படுத்த வேண்டியிருக்கும். எனவே கொளத்தூர் மணி மீதான வழக்கை திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும்.”

ஜவாஹிருல்லா : “வன்முறையைத் தூண்டியதாக கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஜனநாயகப் போராட்டங்களில் நம்பிக்கைக் கொண்ட அவர், வன்முறைகளுக்கு துணைபோகக் கூடியவர் அல்ல. எனவே, வர் மீதான வழக்கை வாப° பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

 

You may also like...