கன்யாகுமாரின் புரட்சி முழக்கம் பார்ப்பனியத்திலிருந்து விடுதலை கேட்கிறோம்!
“நாங்கள் பார்ப்பனியத் திடமிருந்து ஜாதியிலிருந்து முதலாளித்துவத்திலிருந்து விடுதலை கேட்கிறோம். எங்கள் போராட்ட உணர்வை நசுக்கிட முடியாது” என்று பிரகடனப்படுத்தினார், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார். தேசத் துரோக குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார், இப்போது நாடு முழுதும் கவனிக்கப்படும் போராளி. உச்சநீதிமன்றம், பல நிபந்தனை களோடு அவருக்கு 6 மாதம் பிணை வழங்கியிருக்கிறது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற அவருக்கு, மாணவர்கள் எழுச்சியான வரவேற்பு அளித் தார்கள். சிறை மிரட்டல் அவர் உறுதியை குலைத்துவிடவில்லை. புடம் போட்ட போராளியாக வெளியே வந்திருக்கிறார். சிறை மீண்டு மாணவர்களிடையே அவர் ஆற்றிய உரையை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வலைதளங்களில் பார்த்திருக் கிறார்கள். அதே நாளில் மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. மின்சார அதிர்வுகளை உருவாக்கியது போல் அமைந்திருந்தது. அவரது உரை என்று...
