இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்துவரும் உரிமைகளை மீட்போம்!
இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழி நடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம். ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும், பதவிக்கு வரவும் ‘கீழ்ஜாதி’களுக்கு உரிமை இல்லை என திமிராட்டம் போட்டது. அதை சுக்குநூறாக உடைத்தெறிந்து, அனைவருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக, இட ஒதுக்கீடு சட்டங்களை உருவாக்கிக் கொண்டோம். அந்த சமூகநீதிதான் நமக்கான...
