வங்கி வேலைவாய்ப்பில் திட்டமிட்டு வஞ்சிக்கப்படும் தமிழ் நாடு ! ஆதாரங்கள் !
பாரத ஸ்டேட் வங்கியில் (state bank of india) காலியாக உள்ள பணிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்வில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை திட்டமிட்டே தடுக்கும் வேலை நடந்துள்ளது. அதனை நீரூபிக்கும் ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அநீதி குறித்து கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் 10.11.2016 இதழில் தலையங்கம் வந்துள்ளது.அதனை படிக்க :
https://www.facebook.com/dvk12/photos/a.1630398280577399.1073741828.1630392030578024/1835861566697735/?type=3
ஆதாரங்கள் :
1) முதலில் வந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் இத்தேர்வை தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் என 25.04.2016 என அறிவிக்கப்பட்டது.
2)அறிவிப்பில் திருத்தம் என இரண்டாவது ஒரு அறிவிப்பை 20.04.2016 அன்று வங்கி வெளியிடுகிறது. விண்ணப்பம் பெற கடைசி நாளாக 28.04.2016 என தேதி நீட்டிக்கப்படுகிறது.
3) திருத்தப்பட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் தமிழில் மட்டும் தேர்வு எழுதவேண்டும் என்பதை திருத்தி ஆங்கிலத்திலும் எழுதலாம் என மாற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் தேர்வு மொழியாக தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளும் அறிவிக்கப்படுகிறது.
அதே சமயம் தென்னக மாநிலங்கள் எதிலுமே ஆங்கிலம் தேர்வு மொழியாக அறிவிக்கப்படவில்லை. கேரளாவில் மலையாளத்தில் மட்டும்,கர்நாடகாவில் கன்னடத்தில் மட்டும், உ.பி.க்கு இந்தி,பாண்டியில் தமிழில் மட்டும்,ஆந்திராவில் ஆங்கிலம் அல்லாத மொழிகள் மட்டுமே எழுத அனுமதிக்கப்ட்டுள்ள நிலையில் இவ்வாறு தமிழ்நாட்டில் மட்டும் தேர்வு மொழியாக தமிழுடன் ஆங்கில மொழியை திணிப்பது என்பது பிற மாநிலத்தவர் இங்கு உள்ளே நுழைய செய்யப்பட்ட ஏற்பாடு ஆகும்.இது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கும் அப்பட்டமான செயல்.இதில் தமிழகத்தில்தான் காலியிடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை வடவருக்கு தாரை வார்க்கவே இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.