ஜனநாயகம் என்றால்… பெரியார்
ஜனநாயகம் என்றால் மெஜாரிட்டிகள் மைனாரிட்டிகளை ஆளுவது என்றுதான் அர்த்தம். அதாவது ஒரு விஷயத்தை 51 பேர் ஆதரித்து 49 பேர் எதிர்த்தாலும் அதற்குச் ஜனநாயக வெற்றி என்றுதான் அர்த்தம்… வடநாட்டுத் தென்னாட்டு ஆட்சியை எடுத்துப் பார்த்தால் நமக்கு எப்போது வரப்போகுது மெஜாரிட்டி? நம் வாழ்வெல்லாம் இன்றைக்கு இருக்கிற அமைப்புகள் மாறாமல் இருக்கிற வரையில் மைனாரிட்டியாகத்தானே இருக்க முடியும்? (‘விடுதலை’ 20.1.1959) கட்சியின் பெயரால் அரசாங்கம் நடை பெறுகிறதென்றால் அது எப்படி ஜனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடுவதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும். (‘விடுதலை’ 12.1.1956) ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதுதான் உண்மையான...