வினாக்கள்… விடைகள்…

வினா : 21 வயதுக்குட்பட்டவர்கள் திரு மணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் வேண்டும் என்று இந்து திருமணச் சட்டத்தைத் திருத்த வேண்டும். – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

விடை : நல்லது. அப்படியே 21 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்பதற்கும் பெற்றோர்கள் சம்மதம் வேண்டும் என்று தேர்தல் சட்டத் திலும் திருத்தம் கொண்டு வந்து விடலாம்.

வினா : நகரங்களில் நாளொன்றுக்கு ரூ.33.33 காசுக்கு மேல் செலவிடு வோரும், கிராமங்களில் ரூ.27.20 காசுக்கு மேல் செலவிடுவோரும் ஏழைகள் அல்ல. – திட்டக் குழு அறிவிப்பு

விடை : ஒரே ஒரு சந்தேகம்! எல்லா வற்றுக்கும் ‘டாலர்’ அடிப்படையில் கணக்குப் போடும்போது ஏழைகளை மட்டும் ஏன் ‘ரூபாய்’ அடிப்படையில் கணக்கிடுகிறீர்கள்? இந்த மக்கள் என்ன “பாவம்” செய்தார்கள்?

வினா : தேசியக் கொடி, தேசிய கீதம் பற்றிய சட்டங்களைக் கண்டிப் புடன் அமுல்படுத்த வேண்டும். – சென்னை உயர்நீதிமன்றம்

விடை : ஏற்றுக் கொள்ள வேண்டிய தீர்ப்பு. ஆனால், தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள ‘சிந்து’ இந்தியா வில் இல்லையே! பஞ்சாபில் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கு போய் விட்டதே!

வினா : தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் கட்சிகளுக்குப் பொருந் தாது. இதற்காக சட்டத்தைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. – அமைச்சர் கபில்சிபல்

விடை : ஒரு தாழ்மையான விண்ணப்பம்! கட்சிகளின் கொள்கைகளை அறியும் உரிமையையாவது மக்களுக்குத் தருவீர்களா?

வினா : அய்தராபாத்தில் தொடங்கும் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு 18 வயது முதல் 40 வயதினரை மட்டுமே அனுமதிப் போம். இந்தக் கூட்டத்துக்கு புதிய இந்தியாவின் இளைஞர் படை என்று பெயரிட்டுள்ளோம். – பெங்களூரில் வெங்கையா நாயுடு பேட்டி

விடை : அப்படியா? பழைய இந்தியாவின் முதியோர் படையினர் எல்லாம் மதம் மாறிவிட்டார்களா, நாயுடுஜி!

வினா : தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் ராமேசுவரம் கோயிலில் 17 இடங்களில் கண் காணிப்புக் காமிராக்கள் பொறுத்தப் பட்டு, காவல்துறை வளையத் துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. – செய்தி

விடை : “உலகம் கடவுளுக்கு கட்டுப் பட்டது. கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவை. மந்திரம் பிராமணர் களுக்கு கட்டுப்பட்டது. கடவுள்-மந்திரம்-பிராமணர் அனைவருமே காவல்துறையின் காமிராக்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அப்படித் தானே?”

பெரியார் முழக்கம் 08082013 இதழ்

You may also like...